Wednesday, July 28, 2010

இளையராஜா - -King of Musical Stunners-2

 இது (இளையராஜா King of Musical Stunners) பாகம்-2.  இங்கே பாகம் -1.

முன் பதிவு சுருக்கம்(பாகம்-1):

மேஸ்ட்ரோவின் பாடல்கள்  பிரமிப்புக்கள் (stunners) பொதிந்தது.வழக்கமான ”சாதா” பிரமிப்புகளிடையே ஒரு ”ஸ்பெஷல்” இசை பிரமிப்பு ஒன்று பாட்டின் இடையே இசைப்பார். எதிர்பார்க்கவே மாட்டோம்.அப்படியே வாயடைத்து stun ஆகிவிடுவோம.அதைப்பற்றி மேலும் பார்ப்போம்.

படங்கள் வெளியான வருடம் கொடுக்கக் காரணம்  இதெல்லாம் எப்பவோ செய்துவிட்டார் ஞானி என்பதாக.
  
பாடல்: அந்திவரும் நேரம் படம்: முந்தானை முடிச்சு-1983
 
ஆரம்ப இசை முடிந்து 0.36-0.47  “அந்தி வரும் நேரம்” என ஜானகி பாட்டை (பின்னணியில் மிருதங்கம்) எடுக்கும் இடம்  அற்புதம். ராஜாவால் ஆழப்படுத்தப்பட்டு  மனதில் தாக்கத்தைக் கொடுக்கிறது.
  
பாடல்: உனக்கெனதானே படம்:பொண்ணு ஊருக்குப் புதுசு-1979

இந்தப் பாட்டில் பிரமிப்பு,இளையராஜா-சரளா(ஷைலஜா?) குரல்கள் காற்றில் அலைந்து அலைந்து (காட்சி அப்படி) வருகிறது.பெண் குரல் வசீகரமாக இருக்கிறது.பாட்டின் பேச்சுத் தமிழ் மெட்டு அருமை.1.02-1.16லும் பி்ரமிப்பு.

நடுவில் வரும் மாட்டு வண்டி டயலக் அருமை.இதில் சில விஷயங்கள் புதைந்து இருக்கு.கண்டுப் பிடியுங்கள்.


பாடல்: பாரதி படம்: எதிலும்  இங்கு-2000

தெய்வீக மணம் கமழும் இசை.0.58ல் பாட்டின் போக்கில் ஒத்தப்படும்  புல்லாங்குழல் நாதம் பாட்டை  ஒரு தூக்கு தூக்குகிறது.ஊதுவத்தி  மணம். 2.23 மற்றும் 4.08 ல் கருணை சுரக்கும் வயலின் நாதம் eternal bliss! கிளாசிகல் நாதத்தை மெல்லிசையில் இணைப்பது அபாரம்.

எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா!

1.19ல் பாட்டின் தாளம்  வேறு ஒரு தாளத்திற்கு கவித்துவமாக நழுவுகிறது.

வரி வடிவத்தில் குறிப்புக்கள் எழுதினாலும் ஒலி வடிவத்தில் இப்படி இசைக்கப்போகிறது என்று எப்படி விஷுவலைஸ் செய்கிறார்?

பாடல்: நிலா காயுது நேரம் படம்: சகலகலாவல்லவன்-1982


பாட்டு கிராமிய மணம் என்றுதான் வெளியே தோன்றும்.கிராமிய போர்வையில் வெஸ்டர்ன் கிளாசிகல் 00.00-0.11 & 1.17-1.23 & 1.35-1.40 வாசிக்கப்பட்டு இருக்கிறது.1.23-1.31  வயலின் அருமை.

கிராமிய மெட்டு+மத்யமாவதி ராகம்+வெஸ்டர்ன் கிளாசிகல் கலவை.

”நான் ஒரு பொன்னோவியம் ” - கண்ணில் தெரியும் கதைகள் -1980
பாட்டின் லட்சணமே பிரமிப்பு.அடுத்து பிரமிப்பு .-2.49 - -2.23.இடையில் வரும் இனிமை ஹம்மிங் நீளம்.இது மாதிரி நீள ஹம்மிங் வேறு பாட்டில் உண்டா.

கோரஸ் வித்தியாசமாக கையாளப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசை ஜி.கே.வெங்கடேஷ்,டி.ஆர்.பாப்பா,கே.வி.மகாதேவன்,சங்கர்-கணேஷ் , இளையராஜா என்ற அஞ்சு பேர்.கணேஷ் , இளையராஜா தவிர எல்லோரும் இறந்துவிட்டார்கள்.


பாடல்: அந்தரங்கம் யாவுமே படம்:ஆயிரம் நிலவே வா-1983


1.04-1.16ல் மேல் உள்ள drums மற்றும் வட்டவடிமான தட்டுக்களில்(cymbals) ரொம்பவும்  நளினமாக அறையப்பட்டு (slapping).நாதம் ரம்யமாக இருக்கிறது. ஒரு மினி பிரமிப்பு 1.07-1.09.மேற்கத்திய இசைதான். வேறு ஒரு மணத்தில் கொடுக்கிறார்.

பாடல்: கோயில்புறா படம்:அழகே தமிழே -1981

ஆனால் 1.45-1.58ல் முன்னணி மற்றும் பின்னணி என இரண்டு நாதஸ்வரங்கள் இரண்டு வித நாதங்களை இசைக்கிறது.மேற்கத்திய (lead/base) என்ற ரீதியில் இசைத்துள்ளார்.கவுண்டர்பாயிண்ட் டெக்னிக்கும் தெரிகிறது.

உள்ளே இவ்வளவு .ஆனால் வெளியே
“ஹோம்லி”அண்ட்”கிளாசிகல்”.நாதஸ்வரத்தின் மங்களகரத்தையும் மெயிண்டெயின் செய்கிறார்.

பாடல்: யாரைக் கேட்டு நீர் படம்: என் உயிர் கண்ணம்மா-1988


1.11 - 1.17.  இசை மிகவும் காதல்படுத்தப்படுகிறது(romanticize).அடுத்த பிரமிப்பு சிவரஞ்சனி ராகம் வித்தியாசமான இசைக்கோர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

 பாடல்: மேகம் கொட்டட்டும் படம்: எனக்குள் ஒருவன்-1984



1.08 -1.28 அட்டகாசம். 1.08-1.12ஐ கூர்ந்து கவனியுங்கள்."பாரதி” பாட்டில் வரும்  அதே புல்லாங்குழல்(?) இங்கு எப்படி இசைக்கப்படுகிறது! The real stunner.

பாடல்: மலர்களே படம்: கிழக்கே போகும் ரயில்-1978

பாட்டில் அழகு சொட்டுகிறது.இசைக் கருவிகளின் கலவை பிரமிப்பு.சற்று உற்று கவனித்தால் மலேசியா வாசுதேவன் சில இடங்களில் சுருதி விலகி பாடுவது தெரியும்.


பாடல்: மாலை சூடும் வேளை படம்: நான் மகான் அல்ல-1984


1.07-1.21.
இதெல்லாம் என்ன மாதிரியான இசை?இதையெல்லாம் எதில் வகைப்படுத்த முடியும்?உச்சக்கட்ட பிரமிப்பு.


பாடல்:எங்கெங்கோ செல்லும் படம்:பட்டாகத்தி பைரவன்


Engenkosellem | Music Codes

31 வருடங்களுக்கு முன்பு கம்போஸ் செய்தது.இதற்கு இணையாக ராஜாவைத் தவிர வேறு பாட்டு இருக்கிறதா?சத்தியமாகக் கிடையாது

ஜானகியின் மூன்று ஹம்மிங்கும் அதன் எதிரொலியும் 1.39 - 1.46
1அங்கும்ம்...........ம்ம்ம்ம்ம்ம் 

2.இங்கும்ம்..........ம்ம்ம்ம்ம்ம் 

3.எங்கும்......ம்ம்ம்ம்ம்
மூன்றும் ஒரே மாதிரி ஹம்மவில்லை.பாட்டின் இண்டு இடுக்கெல்லாம்  அழகுப் படுத்தி பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ!

பாடலின் காட்சியில் 56 வயது யுவனும் 26 வயது யுவதியும் தோன்றுகிறார்கள்.Real stunner!

பாடல்: ராமனின் மோகனம் படம்: நெற்றிகண்-1981

ஆடியோ “ராமனின் மோக” என்று இடத்தில் நின்று விடுகிறது. இண்டிகேட்டர் வட்டத்தை மவுசால் இழுத்து கேட்க வேண்டிய கவுண்டில் வைத்து ஆன் செய்யவும்.



0.16-0.29ல் ஊமை மொழியில் ஒரு நாதம் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. என்ன இசைக்கருவி?சிந்த்? 1.32க்கு பிறகு 1.33-1.43 பாட்டின் emotion அப்படியே தலைகிழாய் மாறுகிறது.பாட்டே அற்புதமான கம்போசிங்.

பாடல்: மணமாலையும் படம்: வாத்தியார் வீட்டுப் பிள்ளை-1989


சிவாஜி நடித்த “பாசமலர்” படத்தின் “”மலர்களைப்போல் தங்கை” பாட்டின் 1989 வெர்ஷன் என்று சொல்லலாம்.அண்ணனின் தங்கை பாசத்தை அற்புதமான இசைக்கோர்ப்பில் குழைத்துக் கொடுத்துள்ளார்.1.21-1.47இசையில் அன்பு வழிகிறது.


பாடல்: என்னுள்ளில் எங்கோ படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி-1979

ராஜாவின் இசை வானில்  மினுமினுத்துக்கொண்டே இருக்கும் நட்சத்திரம்.
2.24 - 2.49 புதுவிதமான இசை.2.50ல்  அடுத்த இசைக்கு மாறுவது அபாரம்.
இசையின் ஒவ்வொரு துளியும்  fully emotion packed.

39 comments:

  1. very nice , keep it up your article will help fpr PHd students

    ReplyDelete
  2. VANDHIYAN said...

    // very nice , keep it up your article will help fpr PHd students//

    உற்சாகம் அளிக்கிறது.மிகவும் நன்றி.

    ReplyDelete
  3. வா.....வ்வ்.... கலக்கிட்டீங்க... இளையராஜாவை அடிக்க, அவரே பிறந்துவந்தாத்தான் உண்டு!!! பதிவும், அதில் உங்கள் நுண்ணிய பார்வையும் மிக அருமை

    ReplyDelete
  4. ரவியண்ணே..

    பாடல்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்..!

    அனைத்தையும் கேட்டேன்..! ஒரு மணி நேரம் பொழுது போனது..!

    இளையராஜா இளையராஜாதான்..!

    ReplyDelete
  5. //சற்று உற்று கவனித்தால் மலேசியா வாசுதேவன் சில இடங்களில் சுருதி விலகி பாடுவது தெரியும்.
    //

    Could you explain this in layman term?
    May be with this song as example.

    When Chitra/Mano/Subha talk about சுருதி விலகல் thing in super-singer contest, how do they decide that?

    ReplyDelete
  6. //சிவாஜி நடித்த “பாசமலர்” படத்தின் “”மலர்களைப்போல் தங்கை” பாட்டின் 1989 வெர்ஷன் என்று சொல்லலாம்.அண்ணனின் தங்கை பாசத்தை அற்புதமான இசைக்கோர்ப்பில் குழைத்துக் கொடுத்துள்ளார்.1.21-1.47இசையில் அன்பு வழிகிறது.
    //

    One of my favorite.

    No place for 'poo maalaiye' from poovilangu in this collection?

    ReplyDelete
  7. Great collection.
    You are a true connoisseur of music!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ஆதவா said...

    // வா.....வ்வ்.... கலக்கிட்டீங்க... இளையராஜாவை அடிக்க, அவரே பிறந்துவந்தாத்தான் உண்டு!!! பதிவும், அதில் உங்கள் நுண்ணிய பார்வையும் மிக அருமை//

    நன்றி ஆதவா. மத்த ராஜா பதிவு படிச்சீங்களா?

    ReplyDelete
  10. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    // அனைத்தையும் கேட்டேன்..! ஒரு மணி நேரம் பொழுது போனது..! இளையராஜா இளையராஜாதான்..! //

    நம்ம கடைக்கு அடிக்கடி வந்து உற்சாகப்படுத்துங்க.

    ReplyDelete
  11. Indian said...

    / Could you explain this in layman term?
    May be with this song as example.//

    பாடல் என்றால் பாடும்போது பாடலில் “ஏற்றம்” ”இறக்கம்””சமம்” இருக்கும்.அப்படிப் பாடினால் இனிமை வரும்.உணர்ச்சிகள்/பாவம் இருக்கும்.
    இல்லாவிட்டால் “ஒப்பிப்பது”(reciting or chanting?) போல் இருக்கும்.

    நன்றி இந்தியன்.

    ReplyDelete
  12. அட நிஜமாகவே வித்தியாசமான தொகுப்பு, நல்ல ரசனை. வாழ்த்துக்கள் ரவி.

    ReplyDelete
  13. raman- Pages said...

    // அட நிஜமாகவே வித்தியாசமான தொகுப்பு, நல்ல ரசனை. வாழ்த்துக்கள் ரவி//

    முதல் வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  14. மிக்க நன்றியை முதல்லிலேயே சொல்லிக்கிறேன் ;-))

    \\அந்திவரும் நேரம்\\ - தொடக்க இசைக்கும் பாடல் வரி தொடங்கும் போது வரும் இசைக்கும்...யப்பா..!!

    \\உனக்கெனதானே\\ - இப்போது தான் கேட்கிறேன். அருமையான, அமைதியான ஒரு பயணம் போனது மாதிரி இருக்கு. ஆமாம் இதுல எதை கண்டுபிடிப்பது. என்னை கேட்டிங்கன்னா இந்த பாடலையே நான் இப்பதான் கண்டுபிடித்தேன்னு சொல்லுவேன் ;)))

    பாரதி - அந்த படத்தில் வரும் பாடல்கள் பத்தி என்ன சொல்றது...இசைஞானியை தவிர வேற யாரு அந்த படத்துக்கு அப்படி ஒரு பாடலும் இசையும் தர முடியும்.!

    \\வரி வடிவத்தில் குறிப்புக்கள் எழுதினாலும் ஒலி வடிவத்தில் இப்படி இசைக்கப்போகிறது என்று எப்படி விஷுவலைஸ் செய்கிறார்?\\\

    இப்படி சொல்லியிருங்க நீங்களே..நடுவுல இப்படி சொல்லியிருக்கிங்க

    \\எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா!\\

    அதான் இறைவான்னு சொல்லிட்டோமே...இறைவனுக்கு தெரியாதா! ;))

    \\சகலகலாவல்லவன்-1982\\ - எனக்கு ஒரு வயசு ;)) கேட்டுக்கிட்டு அமைதியாக போயிடுறேன் ;)

    \\அந்தரங்கம் யாவுமே\\ - அற்புதம் ;)

    \\கோயில்புறா படம்:அழகே தமிழே -1981\\

    தல எம்புட்டு நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு..யப்பா...ரொம்ப மகிழ்ச்சி...இந்த பாடல் உங்கிட்ட இருந்தா என்னோட மெயிலுக்கு தயவு செய்து அனுப்பிடுங்க ;))

    ReplyDelete
  15. கலக்கல்...
    ‘அந்தி வரும் நேரத்திலும்’,’எதிலும் இங்கு’ பாடலிலும் ஸ்டன்னர்ஸ் பிரமாதம். ரசித்தேன்...
    ‘எதிலும் இங்கு’ பாடலில் 2.41ல் ஆரம்பிக்கும் வயலினை விட்டுவிட்டீர்களே...க்ளாஸ்...

    ‘உனக்கெனதானே’ பாடல் இன்னொரு முறை தெளிவாகக் கேட்க வேண்டும்.. கேட்டு விட்டுச் சொல்கிறேன் சார்...
    2 user online காட்டுச்சு... கமெண்ட் வரவும்தான் தெரிஞ்சது இன்னொரு ஆண்line நம்ம மாப்பி கோபிதான்னு...

    ReplyDelete
  16. ’பட்டாக்கத்தி பைரவன்’ பாடல்- ச்சான்ஸ்லெஸ் சாங்...இதைக்கேட்டா தனி உற்சாகம்தான்.. அதே உற்சாகத்தோட யூட்யூப்ல் பார்த்தா....
    நீங்க சொன்ன ‘real stunner'thaan...ஒரு அளவு வேணாம்... ம்ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்

    மற்றப்பாடல்களை விரைவில் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்....

    ReplyDelete
  17. \\யாரைக் கேட்டு நீர்\\ - இப்பதான் கேட்கிறேன்..அட்டகாசம் ;)

    \\மேகம் கொட்டட்டும்\\- தூள்..அனுபவிச்சியிருப்பாரு தனியாக மழையில...எப்படி உணர்ந்து இப்படி ஒரு பாடல்!!!! அந்த பாடலை எப்படி காட்சி படுத்த வேண்டும் என்பது கூட பாடலிலேயே சொல்லிடுறாரு. அதான் ஞானி ;)

    தல 3.38 இருந்து 3.55 வரை கேளுங்க அவரே நமக்கு ஒரு செய்தி சொல்றாரு ;)

    \\மலர்களே \\ - சூப்பரு ;)

    \\மாலை சூடும் வேளை\\ - நீங்களே எல்லாத்தையும் சொல்லிட்டிங்க. புது நான் மகான் அல்ல பாட்டை கேட்டிங்களா? அவரோட மகன்..ம்ஹூம் அவர் நிழலை கூட தொட முடியாது !;)

    \\எங்கெங்கோ செல்லும் \\ - சூப்பரு ;)

    \\ராமனின் மோகனம் \\ - நீங்க சொன்னது போலவே செய்து பாட்டை கேட்டாச்சி ;)

    \\மணமாலையும் \\ - என்னதான் சொல்லுங்க தல இசைஞானியோட இசையில் தபலே கேட்குறதே தனிசுகம் தான் ;)

    அம்புட்டு சூப்பர் தொகுப்பு தல..வழக்கம் போல ;))

    உங்க மாதிரி ஆளு எங்களுக்கு தேவை தான். எதுக்குன்னு எல்லாம் சொல்ல தேவையே இல்லை ;)

    மிக்க நன்றி ;)

    ReplyDelete
  18. தல \\”நான் ஒரு பொன்னோவியம் ” - கண்ணில் தெரியும் கதைகள் -1980\\ பாட்டு error வருது!

    ReplyDelete
  19. கோபிநாத் said...

    // தல \\”நான் ஒரு பொன்னோவியம் ” - கண்ணில் தெரியும் கதைகள் -1980\\ பாட்டு error வருது!//

    இது MusicIndiaonline சுட்டி.என்னுடைய ஆடியோ பைல் அல்ல.

    மற்ற பின்னூட்டங்களுக்கு அப்புறம் வருகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  20. கோபிநாத் சொன்னது:
    //தல எம்புட்டு நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு..யப்பா...ரொம்ப மகிழ்ச்சி...இந்த பாடல் உங்கிட்ட இருந்தா என்னோட மெயிலுக்கு தயவு செய்து அனுப்பிடுங்க ;))//

    அனுப்பியாச்சு.

    ReplyDelete
  21. இவ்வளவு உழைப்பை கொடுத்துள்ள பதிவை எதுவும் சொல்லாம எப்படி போக முடியும்

    ReplyDelete
  22. தமிழ்ப்பறவை said...
    //‘எதிலும் இங்கு’ பாடலில் 2.41ல் ஆரம்பிக்கும் வயலினை விட்டுவிட்டீர்களே...க்ளாஸ்...//

    கரெக்ட்தான்.ஆனால் பிரமிப்புகளை பிரிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கிறது.

    ”உனக்கெனதானே இன்னே” காற்றில் அலையும் எபெக்ட் வருகிறதா? ராஜாவின் உச்சரிப்பு அச்சு கிராமத்தான் உச்சரிப்பு.


    நன்றி.

    ReplyDelete
  23. பாலாஜி சங்கர் said...

    // இவ்வளவு உழைப்பை கொடுத்துள்ள பதிவை எதுவும் சொல்லாம எப்படி போக முடியும் //

    நன்றி.

    ReplyDelete
  24. மிக மிக அருமையும் இனிமையுமான தொகுப்பு ஜி.
    அறுவடை நாளில் நான் எப்போதும் கேட்கும் தேவனின் கோவில் மூடிய நேரம் இடையில் ஏஏஏதந்தான,தந்தான,தனனா.என்று ஒரு ஆலாபனை வரும்,பின்னர் வயலின்,பியானோவின் துணையுடன் முடியும்,மிகச்சிறந்த ஆர்கெஸ்ட்ரேஷன் கொண்ட பாடல்,ஆனந்த கண்ணீர் துளிர்த்தாலும் துளிக்கும்,

    ReplyDelete
  25. எனக்கு தெரிந்து ராஜா சார் படத்தின் பாடல் வரிகளுக்கு பாடலாசிரியருடன் அமர்கையில் அமர்க்களமான உற்சாகமும்,அந்த படத்தின் கதைகேற்ப பாடல் அமைப்பதையும் பாடல் வரிகளில் காணலாம்.உம்:-கதைகேளு கதைகேளு-மை,மதன காமராஜன்.-ஐந்துநிமிடத்தில் முன்னோட்ட கதையையே பதிவு செய்திருப்பார்.

    ஆலோசனைகளும் கேட்டு பெற்றதால் தான் நமக்கு பல பொக்கிஷங்கள் கிடைத்துள்ளது,
    ஒருவன் கீதை படிக்கவேண்டா,நீதிக்கதை படிக்கவேண்டாம்,குறள் படிக்க வேண்டாம்,ராஜாசார் பாடல்களை ஆழ்ந்து கேட்டு உள்வாங்கினாலே போதும் என்பேன்.
    இவர் இயங்காத பிரிவுகளே இல்லை எனலாம்.
    இவரின் அம்மா என்னும் வார்த்தை தான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்,என்னும் தாலாட்டுகேட்குதம்மா பாடல் போல பெண்ணின் பெருமையை சொன்ன பாடல் சினிமாவில் எங்கும் இல்லை.

    ReplyDelete
  26. இங்க 50டிகிரி வெயில் இருந்தாலும் சாலையில் போகையில் ராஜாசாரின் பாடலகளை கேட்டுக்கொண்டே நடந்தால் எதோ கோடைமழையில் நனைவது போல இருக்கும்.ஆனால் வியர்வையில் குளித்திருப்போம்,ஆனால் கஷ்டம் தெரியாது.

    ReplyDelete
  27. //இப்படத்திற்கு இசை ஜி.கே.வெங்கடேஷ்,டி.ஆர்.பாப்பா,கே.வி.மகாதேவன்,சங்கர்-கணேஷ் , இளையராஜா என்ற அஞ்சு பேர்.கணேஷ் , இளையராஜா தவிர எல்லோரும் இறந்துவிட்டார்கள்.//

    ஜி,இதுல வரிகள் மிகவும் கொடுமைங்க,நினைத்துகூட பார்க்க முடியல,

    ReplyDelete
  28. |கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

    //ஜி,இதுல வரிகள் மிகவும் கொடுமைங்க,நினைத்துகூட பார்க்க முடியல, //

    ரசிக்கும்படிதானே இருக்கு சார்.ரசனை வேறுபடும்.

    //அறுவடை நாளில் நான் எப்போதும் கேட்கும் தேவனின் கோவில் மூடிய நேரம் இடையில் என்று ஒரு ஆலாபனை வரும்,பின்ஏஏஏதந்தான,தந்தான,தனனா.னர் வயலின்,பியானோவின் துணையுடன் //

    ஆமாம் சார்.சித்ரா ரொம்ப அருமையாக பாடுவார்.”வயலின்,பியானோவின் துணையுடன” சூப்பர்.
    ”நான் ஒரு சோக சுமைதாங்கி” அருமையாக எடுப்பார்.

    //பின்ஏஏஏதந்தான,தந்தான,தனனா.னர்//
    அருமையான இடம்.

    //-கதைகேளு கதைகேளு-மை,மதன காமராஜன்.-ஐந்துநிமிடத்தில் முன்னோட்ட கதையையே பதிவு செய்திருப்பார்.//

    ஆமாம்.

    நன்றி சார்.

    ReplyDelete
  29. அருமை அருமை, ரசித்தேன் தல

    ReplyDelete
  30. கானா பிரபா said...

    //அருமை அருமை, ரசித்தேன் தல //

    ஆஹா..! தல வாங்க. சந்தோஷம்.

    நன்றி.

    ReplyDelete
  31. தலைவா... அழகு அழகு.... எல்லாப் பாட்டுமே செம... உங்க அனாலிசிஸ் கூட...

    அண்ணன் தமிழ்ப்பறவை கூட சேட் பண்ணிட்டேப் படிச்சேன்..... :) நச் போஸ்ட்

    ReplyDelete
  32. ’கோயில் புறா’ பாடலில் நாதஸ்வரங்களின் செல்லச் சிணுங்கள் அருமை. ரசித்தேன்..’
    ‘அந்தரங்கம் யாவுமே’- எப்டி எப்டி எனக் கேட்கவே வேண்டாம், அப்டி அப்டி பாடல் அது. வட்டவடிவ தட்டின் இசையை உணரவைத்ததற்கு நன்றி...ரியல் ஸ்டன்னர்... வைரமுத்துவா? குட்..பக்கா காக்டெயில் இந்தப் பாடல்...
    ‘யாரைக் கேட்டு நீர்’- ஃப்ளூட்டும், வயலினும் ராஜாவின் உத்தரவுப்படி காதல் செய்தால் romantic வராம வேற என்ன வரும்...இந்தப்பாடல் அறிமுகம் செய்த வகையில் உங்களுக்குத் தனி நன்றியே சொல்லணும்..(உன் எண்ணம் இங்கே பாடலும்)
    ’உனக்கெனதானே’ பாடல் கேட்டேன் சார்.. சரணங்களில் ஒவ்வொரு வரியிலும் இரண்டாம் பகுதி ஏதோ ஒலிப்பதிவுக் கோளாறு போல்தான் தெரிகிறது.(சரியாக அமைக்கப்படாத எக்கோ).ராஜாவின் குரல் கனகச்சிதம்..(உங்களுக்குத்தான் ராஜா பாடினா பிடிக்காதே :-) )
    இதே வரிசையில் ‘சக்களத்தி’ படத்தில் ‘வாட வாட்டுது’ பாடல் வரும். ஸ்டன்னர்ஸ் வருமா எனத் தெரியாது...ஆனா அட்டகாசமான எளிமையான மெட்டு..
    ‘மேகம் கொட்டட்டும்’ 1.08-1.12 ல வர்றாது ஃப்ளூட்டா? நம்பவே முடிய்லை..க்ரேட் ராஜா...

    ‘மாலை சூடும் வேளை’ நீங்கள் சொன்ன பிரம்கிப்பு கேட்டேன். அதே நேரம் எனக்கு மிகப் பிடித்தது 2.45-3.08 இந்த இடம்தான்...
    மீதி நாளைக்குக் கேட்டுச் சொல்கிறேன் சார்...

    ReplyDelete
  33. மகேஷ் : ரசிகன் said...

    // தலைவா... அழகு அழகு.... எல்லாப் பாட்டுமே செம... உங்க அனாலிசிஸ் கூட...//

    முதல் வருகைக்கு நன்றி. பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  34. தமிழ்ப்பறவை said...
    //.. வைரமுத்துவா? குட்..பக்கா காக்டெயில் இந்தப் பாடல்...//

    வைரமுத்துவின் 85% பாடல்களை நான் ரசிப்பத்தில்லை.
    மெட்டுக்காக வரிகளை அடைத்து வைப்பார்.

    //வயலினும் ராஜாவின் உத்தரவுப்படி காதல் செய்தால் romantic வராம வேற என்ன வரும்...//
    ஆஹா..ராஜாவா ஒரு தூக்கு தூக்குறாரு.

    //ஒவ்வொரு வரியிலும் இரண்டாம் பகுதி ஏதோ ஒலிப்பதிவுக் கோளாறு போல்தான் தெரிகிறது.//
    பெண் பாடும் வரிகள் புரியவில்லை.
    காட்சியின் அமைப்புப்படி பாட்டிலும் “வாய் குழறினேன்” என்றே குழறியபடி பாடுகிறார்.

    ஊன்றி கவனித்துக் கேட்டுச சொல்லுங்கள்.போனில் கூட இதைச் சொன்னேன்.

    //(சரியாக அமைக்கப்படாத எக்கோ).//

    நண்பரே நன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது.கூர்ந்துக் கேளுங்கள்.

    //(உங்களுக்குத்தான் ராஜா பாடினா பிடிக்காதே :-)//

    சார்.. டூயட்(”காதல் ஓவியம்” “ஒரு கணம் ஒரு யுகமாக) பாடினால்தான் பிடிக்காது.அவருக்கேற்ற பாடல்கள் பாடலாம்.

    ReplyDelete
  35. இளையராஜா பற்றி ஷாஜி எழுதிய கட்டுரை
    "இளையராஜா: நேற்றும் இன்றும்
    மிகு​கொண்டாட்ட, பக்தி விகிதத்தில் ஒரு கலைஞரை அணுகுவது நம் விரிவான ரசனையை தடுத்து நிறுத்திவிடும் என்பதே ஐயம்.
    ஒரு கலைஞரை முன்னிறுத்தி பிற கலைஞரை 'மதிப்பீட்டு / விமர்சன ரசனையாக' மட்டும் அணுகுவது கலா மனோபாவத்தைக் குறிக்கும்.

    ReplyDelete
  36. ஜெகநாதன் said...

    // இளையராஜா பற்றி ஷாஜி எழுதிய கட்டுரை
    "இளையராஜா: நேற்றும் இன்றும்//
    ஷாஜி எழுதி வரும் எல்லா கட்டுரைகளும் உயிர்மை
    மற்றும் வேறு தளங்களில் படித்து உள்ளேன்.
    விமர்சகர் என்ற அளவில் அவர் முழுமையான விமர்சகர் அல்லர்.ஏன் என்றால் அவருக்கு கர்நாடக இசையை எப்படி ராஜா ஹாண்டில் செய்திருக்கிறார் என்பது எந்த கட்டுரையிலும் எங்கும் வெளிப்படுத்தவில்லை.அடுத்து ராஜாவின் ஒரு பாட்டையாவது drilled down பண்ணி விமர்சனம் பண்ணியது கிடையாது.எல்லாம் நுனிப்புல் ரகம்.

    //மிகு​கொண்டாட்ட, பக்தி விகிதத்தில் ஒரு கலைஞரை அணுகுவது நம் விரிவான ரசனையை தடுத்து நிறுத்திவிடும் என்பதே ஐயம்.//

    உண்மை.ராஜாவிடமும் குறைகள் உண்டு.ஆனால் விரிவான ரசனையை உயர்த்தியவர்.நுனிப்புல் மேயாமல் கேட்க வேண்டும்.

    அடுத்து நான் எஸ்.வி.வெங்கட்ராம்,எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆரம்பித்து இன்றைய சதிஷ் சக்கரவர்த்தி(படம்: கனிமொழி) வரை கேட்பதுண்டு.

    ஜெகன் என்னுடைய மற்ற இசையமைப்பாளர்கள் பற்றிய பதிவுகளைப் படித்ததுண்டா?


    // ஒரு கலைஞரை முன்னிறுத்தி பிற கலைஞரை 'மதிப்பீட்டு / விமர்சன ரசனையாக' மட்டும் அணுகுவது கலா மனோபாவத்தைக் குறிக்கும்//

    உண்மை.

    ReplyDelete
  37. சொல்லில் அடங்காத இசை புத்தகம் வாயிலாகவே ஷாஜி அறிமுகம். படித்ததிலிருந்து அவரது விமர்சக ​நேர்த்தி மற்றும் அனுபவ அறிவு மேல் ஒரு நம்பிக்கை. அவ்வளவே. புத்தகத்தில் ​ஜெயமோகனின் பங்கு ​மொழிப்பெயர்ப்பையும் தாண்டியது என்பதை வாசிக்கும்​போது உணர்ந்தேன்.

    இருந்தும் சில சீரிய படைப்பு விமர்சன முறைகளுக்காக ஷாஜியை குறிப்பிட்டிருந்தேன். இசைப் பற்றி எழுதுவது நம் ஆன்மாவை ​வெளிப்படுத்தும் யுக்தி மட்டுமல்ல ஒரு சமூகத்தின் மரபு அடையாளத்தை ஆராயும் ஒரு முயற்சியும் கூட. இதை முயல உங்களுக்குச் சாத்தியமுண்டு என்பதை இப்பதிவு அறிவிக்கிறது.

    மற்ற இசைக்கலைஞர்கள் பற்றிய உங்கள் எழுத்தைப் படித்துவிடுகிறேன். நன்றி!

    ReplyDelete
  38. senthilramana@gmail.com

    பொழுது போனதாக சொன்னார்கள். பொழுது நின்றதை உணர்ந்தார்களா என்று தெரியவில்லை. It is not only a musical stunner, his musics are a time stunner.I appreciate your hard work. Thanks for the experience.

    ReplyDelete
  39. செந்தில் சொன்னது:
    // It is not only a musical stunner, his musics are a time stunner.//

    ஆமாம். சரியாகச் சொன்னீர்கள்.

    //பொழுது நின்றதை உணர்ந்தார்களா என்று தெரியவில்லை. //

    இதுவும் சூப்பர்.

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!