Tuesday, July 20, 2010

கலைஞர்ஜி -குமுதம் கேள்வி-பதில்

முதலமைச்சர் கலைஞரின்  87வது பிறந்த நாள் தொட்டு கலைஞரிடம் 87 கேள்விகள் கேட்டு அவரின் பதிலை குமுதம் பிரசுரித்திருந்தது. ரொம்ப வருடம் முன்பு வேறு ஒரு ஊடகமும் 60/70 வயது பிறந்த நாள் போது 60/70 கேள்விகள் கேட்டு பிரசுரித்திருந்தது.

அப்போதும் சரி இப்போதும் சரி அவரின் சில பிடித்த விஷயங்கள் மாறவில்லை. வங்கத்தில் உறங்கும் அண்ணா-தாய் காவியம்-பொன்னர் சங்கர்-திருக்குவளை-அய்யன் வள்ளுவர்-கண்ணகி-பெரியார்-முரசொலி மாறன்.எல்லா கால கட்ட பதில்களிலும் இருக்கும்.

சில பதில்கள் சொல்லும்போது கேள்வியையே திருப்பிப் போட்டு “வெடுக்” என்று பதில் அளிக்கிறார். சில பதில்களில் நகைச்சுவை உணர்வோடு இருக்கிறது.வழக்கமாக ஜெயலலிதாவை ஒரு வாரு வாரும் பதில்களும் உண்டு.

கேள்விகளும் அதற்கென்றேஉருவாக்கப்பட்டிருக்கும்.

வழக்கமாக அவரைச் செல்லம் கொஞ்சும் கேள்விகளும் உண்டு. உதாரணமாக..” நினைவாற்றல்” “இந்த வயதிலும் சுறுசுறுப்பு”  “நகைச்சுவை டைமிங்”.

ஆனால் அவரின்  90% ரசனைகள் சமகால சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதில்லை.  அது ஏன்? உதாரணமாக அவரின் பதில்கள்:

பிடித்த நடிகை அப்போது “அஸ்வத்தம்மா”. இப்போது “அங்க முத்து”(இடுப்பை வளைத்து நடப்பது இவரின் ஸ்டைல்). இவர்களுக்குப் பிறகு  எவ்வளவு நடிகைகள் இருக்கிறார்கள்.ரஹ்மானின் ”செம்மொழியாம் தமிழ் மொழியாம்” பிறகு  பிடித்த இன்னோரு ரஹ்மான் பாடல் “வந்தே மாதரம்”. ரஹ்மானின் சினிமா  மெலடி பாடல்களில் ஒன்றைக் குறிப்பிடலாமே.அஸ்வத்தாம்மா(கன்னட நடிகை)

”வடிவேலின்  காமெடி ரசிப்பீர்களாமே?” என்றால் ”காமெடி என்றால் ரசித்துதானே ஆக வேண்டும்” என்கிறார். வடிவேலின் ஏதாவொரு படத்தின் காமெடியை சொல்லலாமே.

சிவாஜிதான் இன்று வரையில் எனக்குப் பிடிக்கும் என்கிறார். முன்னும்,அவரின் காலத்திலும், அவருக்கு பிறகும் நிறைய நடிகை நடிகர்கள் தங்கள் ஸ்டைலில் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள்.

அடுத்து கம்புயூட்டர்,பிரெளசிங் போன்ற ஆன்லைன் விஷயங்களில் சுத்தமாக ஆர்வம் இல்லை என்கிறார். வம்பு வராமல் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் ரெய்னா என்கிறார்.

கட்டபொம்மன்,மனோகரா, பராசக்தி போன்ற படங்ளை இப்போது பார்ப்பது அபூர்வம் என்கிறார்.இந்த பதில் அதிர்ச்சி!

 இலக்கிய விஷயங்களில் புதுமை பித்தன் முதல் இமயம் வரை யாரையுமே குறிப்பிட்டதில்லை.எல்லாமே சங்க காலம் அல்லது வேறு ஏதாவது  இவர் எழுதிய சரித்திர நாவல்கள்.அவரின் கோபாலபுரம் வரவேற்பறையில் கண்ணாடி கேசில் நிறைய புத்தகங்கள் தென்படும்.
 
ரசித்த பதில்:
 கேள்வி: உங்கள் வீட்டில் மதுரை ஆட்சியா சிதம்பரம் ஆட்சியா?
பதில்: கலைஞர் ஆட்சி

(இதை விட  இவர் அடித்த சூப்பர் ஜோக்: வட இந்திய சாமியார் ஒருவர் கலைஞரின் தலையை சீவி விடுவேன் என்று உறுமியதற்கு இவர் பதில்:”நானும் பல வருடமாய் என் தலையை சீவ கஷ்டப் படுகிறேன் முடியவில்லை. அவனாவது அதைச் செய்யட்டும்” )

அதிர்ச்சி அடைந்த பதில்:

கேள்வி:கலைஞர் டி.வி.யில் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி?

பதில்: செய்திகள்!அவரின் சம கால மகிழ்ச்சி “பிறப்பொக்கும்’ பாடலை எழுதி அதை சிறப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கேட்டதுதான் என்கிறார் ஒரு கேள்விக்கு.

எப்போதும் மக்கள் தொடர்பில் இருக்கவே விரும்பும் கலைஞர்  தன்னுடைய சமகாலத்திய ரசனைகளைப் பகிர்ந்துக்கொள்ளாதது ஆச்சரியமான விஷயம்.பொது மக்கள் விரும்புவதைத்தான் நானும் விரும்புகிறேன் என்று காட்டிக்கொள்வதும் இல்லை.

8 comments:

 1. எங்களுக்கு அவர் என்ன சொன்னாலும் பிடிக்கும்.உங்களுக்கு பிடிச்சுதா?

  ReplyDelete
 2. கண்ணதாசன் எல்லா கட்சிகளுக்கும் போய் கடைசியில் அண்ணா திமுகவில் இருந்து தமிழக அரசவை கவிஞராய் இருந்து மறைந்தார். கலைஞர் அவர்கள் கண்ணதாசனின் மறைவை அடுத்து கடற்கரையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் உரையாற்றும் போது, அன்பு நண்பா! கண்ணதாசா! யார் கூப்பிட்டாலும் கண்ணதாசன் எல்லா கட்சிகளுக்கும் போய் கடைசியில் அண்ணா திமுகவில் இருந்து தமிழக அரசவை கவிஞராய் இருந்து மறைந்தார். கலைஞர் அவர்கள் கண்ணதாசனின் மறைவை அடுத்து கடற்கரையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் உரையாற்றும் போது, அன்பு நண்பா! கண்ணதாசா! யார் கூப்பிட்டாலும் (எல்லா கட்சிகளுக்கும்)சென்று விடுவாயே? கூப்பிட்டது எமன் என்று தெரிந்துமா சென்றுவிட்டாய்? என சொன்னதும் ஒட்டுமொத்த கூட்டமும் கலைஞரின் நகைச்சுவை உணர்வில் அது இரங்கல் கூட்டம் என்பதை மறந்தும் சிரித்து சுமார் ஐந்து நிமிடமாயிற்றாம் கைதட்டல் அடங்க! இன்றும் சிலர் அவரின் இந்த ''டைமிங்" கமெண்ட்ஸ் பற்றி சிலாகிப்பதுண்டு. இப்படி பல நகைச்சுவை ததும்பும் பதில்களை அவரின் பழைய சட்ட மன்ற கேள்வி பதில் உரைகளில் கேட்கலாம்

  ReplyDelete
 3. குமுதம்,விகடன் எல்லாம் முன்ன தினத்தந்தி செய்த வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டன(ஜிங் சக் தான்)...
  ஆனாலும் கருணாநிதியின் டைமிங் மெச்சத்தக்க ஒன்றுதான்.. என்ன சில நேரங்களில் விவகாரத்தில் முடிந்துவிடுகிறது..(கட்சிக்காரர் ஒருவர் நெற்றியிலிருந்த குங்குமத்தைப் பார்த்து ‘என்னய்யா ரத்தம் வருது’ என்றது, சட்டசபையில் கேள்வி கேட்ட பெண் உறுப்பினரின் நாடாவை அவிழ்த்துப் பார்க்கச் சொன்னது உட்பட...)

  ReplyDelete
 4. Blogger chinnasamy said...

  // எங்களுக்கு அவர் என்ன சொன்னாலும் பிடிக்கும்.உங்களுக்கு பிடிச்சுதா?//

  பிடிக்கும் பிடிக்காதது ரெண்டுமே கலந்துதான் இருக்கும்.

  நன்றி சின்னசாமி

  ReplyDelete
 5. Sai Gokula Krishna

  கலைஞரின் நகைச்சுவையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.ரசித்தேன் அய்யா.

  ReplyDelete
 6. தமிழ்ப்பறவை said...

  நீங்கள் சொன்ன சம்பங்களை நானும் படித்திருக்கிறேன்.காமெடி டைமிங் சென்ஸ் ரொம்ப அதிகம்.

  நன்றி

  ReplyDelete
 7. சூரக்கோட்டை சிங்ககுட்டி PADATHIL வரும் ஒண்ணும் THERIYATHA பாப்பா பாடலைப் பற்றிய விமர்சனம் SPB/SJ பாடிய பாடல் நான்கு சரணம் வரும் மிகவும் THUள்ளால் இசை பாடல்.........

  மீ்ரா PADATHIL வரும் லவ்வுன்னா லவ்வு பாடலைப் பற்றி்யும் விமர்சனமும் போடுங்கள்...

  ReplyDelete
 8. வருகைக்கு நன்றி ஷாபி.இதற்கான பதிலை “இளையராஜா -King of Musical
  STunners" பதிவில் போட்டுள்ளேன்.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!