பத்திரிக்கை உலகம் “டல்” அடிக்கும் சமயங்களில் பத்திரிக்கையாளர்கள் சில விவகாரமான ஆட்களைப் பேட்டிக் கண்டு நிமிண்டி விடுவார்கள்.ஆட்கள் காரமாகவோ அல்லது லூசுத்தனமாகவோஅல்லதுஅரைவேக்காட்டுத்தனமாகவோ அல்லது புத்திசாலித்தனமாகவோ பேசி விவகாரமாகி அது ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் ஓடும்.வாசகர்களுக்கும் பொழுதுபோகும்.
அந்த லிஸ்டில்.....
T.ராஜேந்தர்,இளையராஜா,சு.சாமி,சோ,இளங்கோவன்,
ஜெயகாந்தன்,விவேக்,கலைஞர் மற்றும் சிலர் இதில் அடங்குவார்கள்.இப்போது T.ராஜேந்தர்.
அவர் விகடனுக்கு அளித்த பேட்டியில்வழக்கமாக “நான் எம்.ஜி.யார்,கலைஞர்,ஜெயலலிதான்னு மூணு பேரோடு மோதினவன்” என்று 1,00,008 தடவையாகச் சொல்லிவிட்டு “தமிழ் நாடே மிரளும்,காதல்ல உருளும்.காதல்தான் கதை.படத்தில் ஏ டு இசட் இசை மழை.அதில் வரும் ஏழு பாடல்கள் தான் இனிமே இளைஞர்களோட சொத்து.” என்று தன்னுடைய அடுத்தப்படத்தைப் பற்றி தன்னம்பிக்கையோடு சொல்கிறார்.
அண்ணா இதெல்லாம் ஒவரா தெரியலீங்களாண்ணா?
T.ராஜேந்தர் என்றாலே தன்னம்பிக்கையின் பிரதிநிதி என்று
சொல்லுவார்கள்.அவர் முதலில் தன்னையும் பிறகு சாகா வரம் பெற்றக் காதலையும்,(எகிப்து மம்மி செட் போட்டு டூயட்டில் பின்னுவார்) மீதியில் தங்கச்சிகளையும் நம்பி படம் எடுத்து வெற்றிப்பெற்றவர்.
ஆனால் அது முன்னொரு காலத்தில்.Once upon a time.அவர் காலத்திய ”காதல் அழிவதில்லை” தாடி இளைஞர் ரசிர்களுக்கு ரிட்டையர்மெண்டுக்கு நாலோ அல்லது ஐந்து வருடம்தான் இருக்கிறது.ஒரு வேளைஅவர்களை மிரள வைப்பாரோ?
லேட்டஸ்ட் இளைஞர்கள் இவரின் ”வீராசாமி” (14 பாடல்கள்) என்ற படத்தைப் பார்த்துவிட்டு மிரண்டு போய் வீட்டை விட்டு வெளியே ஒரு வாரம் வராமல் இருந்தார்கள்.
அண்ணா ஏற்கனவே எடுத்த “சொன்னால்தான் காதலா” ”காதல் அழிவதில்லை”தமிழகம் மிரண்டதான்னா..? காதலில் புரண்டதான்னா?"ஏழு பாடல்கள் தான் இனிமே இளைஞர்களோட சொத்து " இதுவரை போட்டதெல்லாம் செத்தச்சா சொத்தச்சான்னா?
போங்கண்ணா,,, தட்டிப் பார்த்த கொட்டாங்குச்சிண்ணா! நீங்க ரொம்ப குறும்புங்கண்ணா.இது மாதிரி பேசின ஜனங்க ஒத்துக்க மாட்டாங்கண்ணா..!
Subscribe to:
Post Comments (Atom)
ஹிஹி..
ReplyDelete:-) :-)
ReplyDeleteபோங்கண்ணா,,, தட்டிப் பார்த்த கொட்டாங்குச்சிண்ணா! நீங்க ரொம்ப குறும்புங்கண்ணா.இது மாதிரி பேசின ஜனங்க ஒத்துக்க மாட்டாங்கண்ணா..!
ReplyDelete.....அவர் "கலை சேவை" இன்னும் தொடருதே...... எப்படி?????? எப்படி???? எப்படி????
நன்றி ஆதி(ஹிஹி டெம்பிளேட் பின்னூட்டத்த மாத்துங்கன்னா?)
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை
நன்றி சித்ரா