Sunday, July 4, 2010

செல் பேசிக்கொண்டே இருங்கள்..!



நின்றுக் கொண்டு பேசுங்கள்
ஓட்டிக் கொண்டே பேசுங்கள்
நடந்துக் கொண்டே பேசுங்கள்
உட்கார்ந்தபடி பேசுங்கள்
புணர்ந்துக் கொண்டே பேசுங்கள்
மூச்சா, ஆய் போய்க் கொண்டே பேசுங்கள்
செல் பேசிக்கொண்டே
இன்னொரு செல்லில் பேசுங்கள்
ICU வில் படுத்தப்படி பேசுங்கள்
உட்கார்ந்தப்படி பேசுங்கள்
கடன் வாங்கிப் பேசுங்கள்
தியேட்டரில் பேசுங்கள்
மீட்டிங்கில் பேசுங்கள்
சாப்பிடும் போது பேசுங்கள்
இந்தக் கவிதையை
திட்டிக் கொண்டுப் பேசுங்கள்
கியூவில் நிற்கும்போது பேசுங்கள்
லேண்ட் லைனில் பேசிக்கொண்டே
செல்லிலும் பேசுங்கள்
பிளாக் எழுதிக் கொண்டே பேசுங்கள்
பின்னூட்டம் போட்டுக்கொண்டே பேசுங்கள்
டாஸ்மாக்கில் பேசுங்கள்
பாடையை சுமந்துக் கொண்டே பேசுங்கள்
சிக்னலில் பேசுங்கள்
சார்ஜ் வைத்துக் கொண்டே பேசுங்கள்

இராவணனிடம் பத்துத் தலைகளும்
துர்க்கையிடம் சொல்லி பத்துக் கைகள்
வாங்கித் தருகிறேன்
பேசிக் கொண்டே இருங்கள்

இறந்த பிறகு நெற்றியில்
ஒரு ரூபாய்க்குப் பதிலாக
”சிம்” மை ஒட்டிக்கொள்ளுங்கள்
மூக்கில் பஞ்சுக்குப் பதிலாக
இரண்டு செல்லை நுழைத்துக்கொள்ளுங்கள்
மறு பிறப்பில் தொப்புள் கொடியில்
தொங்கியபடி பேசிக்கொண்டே வந்து
மறுபடியும் பேச ஆரம்பியுங்கள்

10 comments:

  1. //மறு பிறப்பில் தொப்புள் கொடியில்
    தொங்கியபடி பேசிக்கொண்டே வந்து
    மறுபடியும் பேச ஆரம்பியுங்கள்.//

    அருமை! இதற்கு மேலும் சொல்வதற்கு எதுவுமில்லை.. :)

    ReplyDelete
  2. ரசித்தேன் சார்...

    ReplyDelete
  3. இப்படிப் பேசுவதற்கு காசு எங்கிருந்து வருகிறது?

    ReplyDelete
  4. ஜீவி said...
    //அருமை! இதற்கு மேலும் சொல்வதற்கு எதுவுமில்லை.. :)//

    நன்றி ஜீவி சார்.

    ReplyDelete
  5. தமிழ்ப்பறவை said...

    //ரசித்தேன் சார்...//

    நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  6. DrPKandaswamyPhD said...

    //இப்படிப் பேசுவதற்கு காசு எங்கிருந்து வருகிறது?//

    நல்ல கேள்வி சார். நன்றி.

    ReplyDelete
  7. அப்போ ரோட்டை க்ராஸ் செய்து கொண்டு பேசக் கூடாதா ? :))

    நல்லாருக்கு. :))

    ReplyDelete
  8. நன்றி ஸ்ரீ

    நன்றி விதூஷ்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!