Saturday, July 10, 2010

வி.தக்க்ஷிணாமூர்த்தி-எஸ்.பி.பி/செளமியா-கார்த்திக்ராஜா

வி.தக்க்ஷிணா மூர்த்தி என்பவர் பழம் பெரும் இசையமைப்பாளர்.மலையாளத்தில் நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இவர் பல இசையமைப்பாளர்களுக்கு(தமிழ்/கன்னடம்/தெலுங்கு)/பாடகர்களுக்கு குரு.இளையராஜாவும் அடக்கம்.கேரளாவில் மிகவும் உன்னதமாக மதிக்கப்படுபவர்.இப்போது கேரளாவில் வசிக்கிறார்.


தமிழில் இவர் இசையமைத்தது கொஞ்சம்தான்.அவர் இசையமைத்த “நந்தா என் நிலா”(1977) என்ற படத்தில் “நந்தா என் நிலா” என்ற பாட்டு ஹிட்.மதுவந்தி ராகத்தில் போடப்பட்டுள்ளது.



இந்தப் பாட்டில் ........

1. பாலுவின் உயிர் துடிப்பான குரல்/உச்சரிப்பு. அட்டகாசம்.
2.பாடல் வரிகள்
3. சிம்பிளான கிளாசிகல் டச் இசை
4. வீணை/ புல்லாங்குழல் அழகாக பிளெண்ட் செய்யப்பட்டுள்ளது.
5. பழைய பிளாக் அண்ட் வெயிட் போட்டோ பார்ப்பது போல் ஒரு பீலிங்

2010 -1977 = 33 வருடங்கள். இன்னும் என் உணர்வில் இருக்கிறது.
__________________________________________________________

பின் வரும் பாடல் கார்த்திக் ராஜா இசையமைத்தது. பல வெட்டி/ வேகாத பாட்டு கும்பலில் காணாமல் போன அருமையான பாட்டு. படம் “அச்சமுண்டு அச்சமுண்டு”. பாடல் “கண்ணில் தாகம் ஏனோ”.பாடகி எஸ்.செளமியா.

ஷாம்பு பாக்கெட் போல் தொங்கிக்கொண்டிருக்கும் எந்த FMம்மிலும் அல்லது டீவி சேனல்களிலும் போடப்படுவிதில்லை.வருத்தம்.





இந்தப் பாடலின் சிறப்பு என்ன?. முதலில் இசையை கூர்ந்து கேளுங்கள். பாடலுக்கு வேண்டிய ஆழமான எமோஷனை கொடுக்கிறது.அடுத்து கிளாசிக்கல் டச்.செயற்கைத்தனமாக கருவிகளை உருட்டாமல் இசையை வரைந்திருக்கிறார் கார்த்திக் ராஜா. பின்னணி இசை 0 .55 -1.00 ல் ஒரு
உயிர்துடிப்புப் பெறுகிறது..

பாட்டின் மெட்டு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.ஆண்டாள் ப்ரியதர்ஷினியின் பாடல் வரிகள்.வித்தியாசமான சொற்கள்.

செளமியாவிடம்  கர்நாடக இசைத் திறமை இருப்பதால் பாட்டின் வரிகளை ஆழமாக உள் வாங்கி உருக்கமாக பாடி இருக்கிறார்.தாய் மொழி தமிழ் என்பதால் உணர்வோடு உச்சரிக்கிறார்.ஷ்ரேயா கோஷால் மற்றும் சாதனா சர்க்கம் போல் ”கிளிப்பிள்ளை” உச்சரிப்பு மற்றும் பிளாஸ்டிக் உணர்ச்சி இல்லை.

கார்த்திக் ராஜாவிறகு திறமை இருந்தும் முன்னுக்கு வரமுடியவில்லை.காரணம் கிளாசிக்கல் டச் இங்கு எடுபடுவதில்லை.

6 comments:

  1. இரு பாடல்களும் நன்றாக இருக்கிறது சார்.
    ‘நந்தா என் நிலா’ பாடல் அப்படியே இளையராஜா பாடல் கேட்பது போன்ற உணர்வு...அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  2. தமிழ்ப்பறவை said...

    ஆபிஸ் லீவா?

    //இரு பாடல்களும் நன்றாக இருக்கிறது சார்.//


    //‘நந்தா என் நிலா’ பாடல் அப்படியே இளையராஜா பாடல் கேட்பது போன்ற உணர்வு...அறிமுகத்திற்கு நன்றி//

    இது மாதிரி பழைய பாடல்கள் கேட்டுவிட்டுதான் ராஜாவிற்கு வந்தேன்.இன்னும் நிறைய இருக்கிறது.

    July 12, 2010 11:26 AM

    ReplyDelete
  3. //ஆபிஸ் லீவா//
    இல்ல சார்.. 2ண்ட் ஷிஃப்ட்.. இனிமே கிளம்ப்பணும்

    ReplyDelete
  4. Dear Ravi,
    Vandhuten.. comment solla. sorry. ipo dhan purinjadhu...........

    indha blog um padichitu, reply panna mudiyama poi iruken... hehehe.

    SPB - Uccharipu and bhavam. s. v. great one.

    Beautiful FLute. indha flute bit - idhae ilali. edho.. veru oru paatai ninaivu paduthum enaku...

    Thearter la kaetadhalaum irukalam.

    Oomai pennai pesa sonnal uravo by SJ.........
    indha paatin flute ai nyabaga paduthum ennai.

    Key board um iruko.. appavae........

    With Love,
    Usha Sankar.

    ReplyDelete
  5. Thanks for introducing me to a good song form the film Achamundu Achamundu.......! :)

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!