மேஸ்ட்ரோ இளையராஜாவின் பாடல்களின் ஒவ்வொரு இசைத்துளியும் ரசிக்கத்தக்கவை. முக்கியமாக பிரமிப்புக்கள் (stunners) பொதிந்தது.வழக்கமான ”சாதா” பிரமிப்புகளிடையே ஒரு ”ஸ்பெஷல்” இசை பிரமிப்பு ஒன்று பாட்டின் இடையே இசைப்பார். எதிர்பார்க்கவே மாட்டோம்.அப்படியே வாயடைத்து stun ஆகிவிடுவோம..
இப்படி இவரை இசைப் பேய் பிடித்து ஒரு உலு உலுக்கும்.மழையாய் பொழிவார்.சாரல்தெறிக்கும். தென்றல் வீசும். கீழ் வானில் மின்னல் வெட்டும்.
வானவில் ஜில்லிடும்.வண்ண மத்தாப்பு பொறிகள் உதிரும்.மொட்டுகள் மலரும்.
இப்படி மேதமையை “ஒரு காட்டு காட்டுதல்”லுக்கு காரணம்.
யாருப்பா இவரு? ஆளே இல்லாத டீக்கடையில பியானோ வாசிக்கிறாரு?
1.புது முயற்சி
2.இசையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துதல்
3.அமானுஷ்ய இசைக் கற்பனை
4.பாட்டின் உணர்ச்சிகளை வேறு கருவிகளில் முயல்தல்
5.பல வித இசைகளை இணைத்தல்
6.இசையை உன்னதப்படுத்துதல்
கிழ் வரும் உதாரணப் பாடல்களோடு வாழ்ந்திருந்தால் இந்த இசை ஜாலங்களை மற்றும் பிரமிப்பு மேதமையை அனுபவிக்கலாம்.
படம்: இவன் பாடல்: அப்படி பாக்கிரதுன்னா- 2002
3.44 - 4.00 வயலின் இசை ராக்கெட் ஒன்று நெளிந்து நெளிந்து வண்ணங்களை உதிர்த்தபடி.மேல் நோக்கி போய் அந்தரத்தில் நிற்கிறது.ராஜா “பில்ட் அப்” கொடுக்கவில்லை.பாடலின் எமோஷன் கலையாமல் இசையோடு ஒட்டிப்போகிறது.Real Stunner!
படம்:அவள் அப்படித்தான் பாடல்:வாழ்க்கை ஓடம் - 1978
1.48 - 2.03 நடுவில் இரண்டு வயலின்கள் வாசிக்கப்படவில்லை.ஒரு வித வலியோடுஉரையாடுகிறது.இடையில் வேறு ஒரு இசையும்(தண்ணீரில் முழுகுவது போல்) மனதை பிழிகிறது.புது கருவியில் உணர்ச்சி.புது முயற்சி.
முதல் இடை இசையில் புல்லாங்குழலில் வலி.ஆனால் இரண்டாவது இடை இசையில்புல்லாங்குழலை தவிர்த்து வித்தியாசமாக வயலினின் வலியைகொடுக்கிறார்.அவருக்கு அவரே சவால் விட்டுக்கொண்டு கம்போஸ் செய்கிறார். ரத்தமும் சதையுமாக பாடலைக் கண் முன் விட்டிருக்கிறார்.
படம்:தர்மத்தின் தலைவன் பாடல்:முத்தமிழ் கவியே - 1988
0.16-0.27 இடையில் ஐந்து தடவை “விக்கல்” வந்த மாதிரி இசை வருகிறது.வேறு இடத்திலும் வருகிறது. சில்லரைத்தனமாக இல்லாமல் அழகுணர்ச்சி பொதிந்த கற்பனை இசைத் துளி.உன்னிப்பாகக் கேட்டு பிரமிக்கலாம்.
படம்:உதய கீதம் பாடல்:சங்கீத மேகம் - 1985
0.07 -0.34 பிரமிப்பு. இதில் Trombone (0.17-0.34 )என்னும் இசைக் கருவி வாசிக்கப்பட்டிருக்கிறது.இதை முழுவதும் வாசிக்காமல் 0.07 -0.16ல் வேறு ஒரு மென்மையான ரிதம் கொடுத்துவிட்டு அதுவும்வித்தியாசமாக
/மேதமைத்தன்மையுடன். அப்புறம் Tromboneல் பட்டையைக் கிளப்புகிறார்.ராஜ(ஜா) கம்பீரத்துடன் பாட்டு திறக்கிறது.பத்தோடு ஒன்று பதினொன்றாக மேடைப் பாட்டை இசைக்கவில்லை.
மைக் மோகனுக்கு எட்டுல குரு.
Trombone
படம்: ஷத்ரியன் பாடல்:மாலையில் யாரோ-1991
0.00-0.16 இசையைப் பாருங்கள். ரீபிட் செய்து பார்த்தால் ஒரு காட்சியில் நெருப்புப் பூச்சியும் மற்றும் பச்சை சிவப்பு கலந்த ஒரு விரிப்பு விரிந்துக்கொண்டே போகும்.
படம்: ராஜாபார்வை பாடல்: வயலின் சோலோ -1981
ஆரம்பம் சிலிர்ப்பு/பிரமிப்பு.இரண்டு(1.09 & 1.15) இடங்களில் புல்லாங்குழல் நாதம் மொட்டு அவிழ்கிறது.
படம்:விருமாண்டி - பாடல்: உன்னைவிட-2004
3.52 - 4.02 ல் வரும் இசை உச்சக்கட்ட பிரமிப்பு. 3.519999999ல் கூட இசைக் கடவுள் கலைவாணிக்குக் கூட தெரியாது. அடுத்து என்ன பிரமிப்பு வரப்போகிறது என்று.ஒரு காட்டு காட்டுகிறார்.
சாதாரண ஒரு டூயட்டை சிம்பனி லெவலுக்கு இசையமைத்து இருக்கிறார்.
படம்:பூந்தளிர்: பாடல்: ஞான் ஞான் பாடனும்- 1979
இந்தப் பாடல் முழுவதும் எனக்கு பிரமிப்பு.இசை பூத்து குலுங்கும். முகர்ந்தால் மணக்கும்.இந்தப் பாடலுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் நான்தான் Life Member.இதன் இசையை உற்று கவனியுங்கள்.
Out of the world இசைக் கற்பனை.Kaleidoscope view composition.
படம்: வைதேகி காத்திருந்தாள் பாடல்:ராசாத்தி உன்ன -1982
0.16 - 0.20 ”அவள் அப்படித்தான்” வலி வயலின் இங்கு ”செல்லோ”வுடன் சேர்ந்து மேற்கத்திய சாயலை மழுப்பி “கிராமிய” மணம் கொடுக்கப்படுகிறது.அடுத்து 2.44 - 3.05 இதில் 2.44 - 2-51 அண்ட் 2.52 - 3.05 இடையில் கசியும் உணர்ச்சிகளை கவனியுங்கள்.
படம்: விக்ரம் பாடல்: வனிதா மணி -1986
1.08 - 1.26 ஸ்டைலோ ஸ்டைல் பிரமிப்பு.
படம்:நினைவெல்லாம் நித்யா பாடல்: பனிவிழும்- 1982
1.11ல் ஆரம்பித்து பு.குழலும் வீணையும் பேசுவதை பிரமித்துக்கொண்டே வருகையில் 1.29 ல்இரண்டையும் சுத்தமாக ஓரம் கட்டிவிட்டு1.30 - 1.38 வயலின்களைப் காதலிக்க (பிரமிக்க)விடுகிறார்.அட்டகாசம்.
பாட்டிற்க்குள் பலவித இசைக்கருவிளைக்கொண்டு வந்து உன்னதப்படுத்துகிறார். வருடம் 1982.இன்னும் பசுமையாக இருக்கிறது.
பாலுகாரு இல்லாமல் இந்தப் பாடலை கற்பனைச் செய்ய முடியுமா?இந்தப் பாடலை “இசை புயல்” ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெடிகேட் செய்கிறேன்.
இப்படி இவரை இசைப் பேய் பிடித்து ஒரு உலு உலுக்கும்.மழையாய் பொழிவார்.சாரல்தெறிக்கும். தென்றல் வீசும். கீழ் வானில் மின்னல் வெட்டும்.
வானவில் ஜில்லிடும்.வண்ண மத்தாப்பு பொறிகள் உதிரும்.மொட்டுகள் மலரும்.
இப்படி மேதமையை “ஒரு காட்டு காட்டுதல்”லுக்கு காரணம்.
யாருப்பா இவரு? ஆளே இல்லாத டீக்கடையில பியானோ வாசிக்கிறாரு?
1.புது முயற்சி
2.இசையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துதல்
3.அமானுஷ்ய இசைக் கற்பனை
4.பாட்டின் உணர்ச்சிகளை வேறு கருவிகளில் முயல்தல்
5.பல வித இசைகளை இணைத்தல்
6.இசையை உன்னதப்படுத்துதல்
கிழ் வரும் உதாரணப் பாடல்களோடு வாழ்ந்திருந்தால் இந்த இசை ஜாலங்களை மற்றும் பிரமிப்பு மேதமையை அனுபவிக்கலாம்.
படம்: இவன் பாடல்: அப்படி பாக்கிரதுன்னா- 2002
3.44 - 4.00 வயலின் இசை ராக்கெட் ஒன்று நெளிந்து நெளிந்து வண்ணங்களை உதிர்த்தபடி.மேல் நோக்கி போய் அந்தரத்தில் நிற்கிறது.ராஜா “பில்ட் அப்” கொடுக்கவில்லை.பாடலின் எமோஷன் கலையாமல் இசையோடு ஒட்டிப்போகிறது.Real Stunner!
படம்:அவள் அப்படித்தான் பாடல்:வாழ்க்கை ஓடம் - 1978
1.48 - 2.03 நடுவில் இரண்டு வயலின்கள் வாசிக்கப்படவில்லை.ஒரு வித வலியோடுஉரையாடுகிறது.இடையில் வேறு ஒரு இசையும்(தண்ணீரில் முழுகுவது போல்) மனதை பிழிகிறது.புது கருவியில் உணர்ச்சி.புது முயற்சி.
முதல் இடை இசையில் புல்லாங்குழலில் வலி.ஆனால் இரண்டாவது இடை இசையில்புல்லாங்குழலை தவிர்த்து வித்தியாசமாக வயலினின் வலியைகொடுக்கிறார்.அவருக்கு அவரே சவால் விட்டுக்கொண்டு கம்போஸ் செய்கிறார். ரத்தமும் சதையுமாக பாடலைக் கண் முன் விட்டிருக்கிறார்.
படம்:தர்மத்தின் தலைவன் பாடல்:முத்தமிழ் கவியே - 1988
0.16-0.27 இடையில் ஐந்து தடவை “விக்கல்” வந்த மாதிரி இசை வருகிறது.வேறு இடத்திலும் வருகிறது. சில்லரைத்தனமாக இல்லாமல் அழகுணர்ச்சி பொதிந்த கற்பனை இசைத் துளி.உன்னிப்பாகக் கேட்டு பிரமிக்கலாம்.
படம்:உதய கீதம் பாடல்:சங்கீத மேகம் - 1985
0.07 -0.34 பிரமிப்பு. இதில் Trombone (0.17-0.34 )என்னும் இசைக் கருவி வாசிக்கப்பட்டிருக்கிறது.இதை முழுவதும் வாசிக்காமல் 0.07 -0.16ல் வேறு ஒரு மென்மையான ரிதம் கொடுத்துவிட்டு அதுவும்வித்தியாசமாக
/மேதமைத்தன்மையுடன். அப்புறம் Tromboneல் பட்டையைக் கிளப்புகிறார்.ராஜ(ஜா) கம்பீரத்துடன் பாட்டு திறக்கிறது.பத்தோடு ஒன்று பதினொன்றாக மேடைப் பாட்டை இசைக்கவில்லை.
மைக் மோகனுக்கு எட்டுல குரு.
Trombone
படம்: ஷத்ரியன் பாடல்:மாலையில் யாரோ-1991
0.00-0.16 இசையைப் பாருங்கள். ரீபிட் செய்து பார்த்தால் ஒரு காட்சியில் நெருப்புப் பூச்சியும் மற்றும் பச்சை சிவப்பு கலந்த ஒரு விரிப்பு விரிந்துக்கொண்டே போகும்.
படம்: ராஜாபார்வை பாடல்: வயலின் சோலோ -1981
ஆரம்பம் சிலிர்ப்பு/பிரமிப்பு.இரண்டு(1.09 & 1.15) இடங்களில் புல்லாங்குழல் நாதம் மொட்டு அவிழ்கிறது.
படம்:விருமாண்டி - பாடல்: உன்னைவிட-2004
3.52 - 4.02 ல் வரும் இசை உச்சக்கட்ட பிரமிப்பு. 3.519999999ல் கூட இசைக் கடவுள் கலைவாணிக்குக் கூட தெரியாது. அடுத்து என்ன பிரமிப்பு வரப்போகிறது என்று.ஒரு காட்டு காட்டுகிறார்.
சாதாரண ஒரு டூயட்டை சிம்பனி லெவலுக்கு இசையமைத்து இருக்கிறார்.
படம்:பூந்தளிர்: பாடல்: ஞான் ஞான் பாடனும்- 1979
இந்தப் பாடல் முழுவதும் எனக்கு பிரமிப்பு.இசை பூத்து குலுங்கும். முகர்ந்தால் மணக்கும்.இந்தப் பாடலுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் நான்தான் Life Member.இதன் இசையை உற்று கவனியுங்கள்.
Out of the world இசைக் கற்பனை.Kaleidoscope view composition.
படம்: வைதேகி காத்திருந்தாள் பாடல்:ராசாத்தி உன்ன -1982
0.16 - 0.20 ”அவள் அப்படித்தான்” வலி வயலின் இங்கு ”செல்லோ”வுடன் சேர்ந்து மேற்கத்திய சாயலை மழுப்பி “கிராமிய” மணம் கொடுக்கப்படுகிறது.அடுத்து 2.44 - 3.05 இதில் 2.44 - 2-51 அண்ட் 2.52 - 3.05 இடையில் கசியும் உணர்ச்சிகளை கவனியுங்கள்.
காட்சியில் இவ்வளவு உக்கிரம் வெளிப்படுகிறதா? படுகிறது.பாடலின் இசைக்கோர்ப்பு பாமரர்களை அறியாமல் காட்சியில் ஒன்ற வைக்கிறது.
வழக்கமாக ”டொய்ங்க்...டொய்ங்க்” சோக ஷெனாய்/வயலின் இசைத்துவிட்டுப் மூட்டையைக் கட்டி இருக்கலாம். செய்யாமல் அடுத்தக் கட்டத்திறக்கு நகர்த்தி இருக்கிறார்.
படம்: விக்ரம் பாடல்: வனிதா மணி -1986
1.08 - 1.26 ஸ்டைலோ ஸ்டைல் பிரமிப்பு.
படம்:நினைவெல்லாம் நித்யா பாடல்: பனிவிழும்- 1982
1.11ல் ஆரம்பித்து பு.குழலும் வீணையும் பேசுவதை பிரமித்துக்கொண்டே வருகையில் 1.29 ல்இரண்டையும் சுத்தமாக ஓரம் கட்டிவிட்டு1.30 - 1.38 வயலின்களைப் காதலிக்க (பிரமிக்க)விடுகிறார்.அட்டகாசம்.
பாட்டிற்க்குள் பலவித இசைக்கருவிளைக்கொண்டு வந்து உன்னதப்படுத்துகிறார். வருடம் 1982.இன்னும் பசுமையாக இருக்கிறது.
பாலுகாரு இல்லாமல் இந்தப் பாடலை கற்பனைச் செய்ய முடியுமா?இந்தப் பாடலை “இசை புயல்” ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெடிகேட் செய்கிறேன்.
//3.519999999ல் கூட இசைக் கடவுள் கலைவாணிக்குக் கூட தெரியாது.//
ReplyDelete:-)
நல்லாயிருக்கு...
நன்றி சரவணகுமரன்.
ReplyDeleteகையக் குடுங்க சார்...
ReplyDeleteஆஃபிஸ் முடிஞ்சு வீடு நுழையுறப்பவே தலைவலி.வழக்கம்போல சாதாரணமாத்தான் ப்ளாக்கர் ஓப்பன் பண்ணி,உங்க பதிவுக்கு வந்தேன்.பதிவோட,ரெண்டு மூணு பாட்டு கேட்டதுக்கப்புறம்தான் பதிவோட பிரமிப்பு உறைக்க ஆரம்பிச்சுது.
க்ரேட் ஒன்..
இவன்: எனக்குப் பிடிச்ச பாடல்.நீங்கள் சொன்ன பிரமிப்பு க்ளாஸ்..
அவள் அப்படித்தான்: அவர்(ராஜா) அப்படித்தான்.புல்லாங்குழலின் சோகம் தைக்கிறது.
தர்மத்தின் தலைவன்: ரசித்தேன்...
உதயகீதம்: ட்ராமஃபோன் அறிமுகத்திற்கு நன்றி. பலநாள் சந்தேகம் தீர்ந்தது.இதன் ஆரம்ப இசையை விட அமர்க்களமுண்டோ...??
சத்ரியன்: எ.பி.பாடலும் கூட. அசத்தல்.பூ விரிவது போன்ற சுகம்.
ராஜ பார்வை: ராஜ (இசைக்) கோர்வை.
விருமாண்டி: சுகமோ சுகம்...இதே போல ‘சொல்ல மறந்த கதை’ படத்தில் வரும் பாடலிலும் பிரமிப்பு இருக்கும்.(’குண்டுமல்லி’)
நினைவெல்லாம் நித்யா: ச்ச்ச்ச்சான்ஸ்லெஸ்....
பூந்தளிர்: உங்கள் புண்ணியத்தில் இரண்டாவது முறையாகக் கேட்கிறேன். இன்னும் ‘ஞான் ஞான் கேட்கணும்’ முழுதும் ரசிக்க...
வைதேகி காத்திருந்தாள்:- ரசித்தேன்...
காக்கி சட்டை:-கலக்கல்...
ஒரு மணி நேரம் இனிதாய்க் கழிந்தது...நன்றி சார்...
என்ன சொல்றது - இசைக் கடவுள்!
ReplyDeleteநம்ம பதிவுல புது(????)தொழில் நுட்பம் பதிச்சிருக்கேன் பாத்தீங்களா சார்?
ReplyDeleteதமிழ்ப்பறவை ரெஸ்ட் எடுங்க. அப்புறம் விரிவாக பின்னூட்டுகிறேன்.
அதப் பத்தி சொல்ல வந்தேன்.. ராஜா கண்ணையும், காதையும் மறைச்சிட்டாரு..
ReplyDeleteசூப்பரா இருக்கு.. சிம்ப்ளாவும் இருக்கு சார்...
எனக்கும் அந்த தொழில் நுட்பம் கொடுங்க..பதிவு போடணும்.. ப்ளீஸ்
செல்வ கருப்பையா said...
ReplyDelete//என்ன சொல்றது - இசைக் கடவுள்!//
வருகைக்கு நன்றி செல்வ கருப்பையா. கருத்துக்கும் நன்றி.
என்ன சொல்றதுன்னே தெரியல...அம்புட்டும் அட்டகாசம் ;) தொகுத்து கொடுத்தமைக்கு "நன்றி" நாங்க சொல்லிக்கிட்டே தான் இருப்போம் நீங்க கொடுத்துக்கிட்டே இருங்க தல ;))
ReplyDelete\\இப்படி இவரை இசைப் பேய் பிடித்து ஒரு உலு உலுக்கும்.மழையாய் பொழிவார்.சாரல்தெறிக்கும். தென்றல் வீசும். கீழ் வானில் மின்னல் வெட்டும்.
வானவில் ஜில்லிடும்.வண்ண மத்தாப்பு பொறிகள் உதிரும்.மொட்டுகள் மலரும்\\
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் தல..."நந்தலாலா" படம் இன்னும் வரல..அதை பத்தி ஒரு நிகழ்ச்சி இயக்குனர் மிஸ்கின்கிட்ட கேட்டாங்க
கேள்வி - ஏன் நீங்க படத்துல சில பாட்டை எல்லாம் எடுத்துட்டிங்க?
மிஸ்கின் - அது தவறு தான் ஆனால் சூழ்நிலை அப்படி அந்த பாட்டை எடுத்தால் முழுபடமே முடிஞ்சிடும். நான் என்ன சொல்லவரேன்னு நினைக்கிறதை அவரு பாட்டுலியே சொல்லிட்டாரு. அதான் ;))
ஒவ்வொரு படத்துக்கும் அவரு போடும் பாடலை எப்படி படமாக்கியிருப்பாங்க என்பதை நமக்கு படம் பார்ப்பதுக்கு முன்னாடியே அந்த இசை மூலமாக கதையும் காட்சியும் சொல்லகூடியவர் நம்ம இசை தெய்வம் ;))
அந்த கதாபாத்திரம் என்ன நினைக்குது நடக்குதா ஓடுதா சோகமாக இருக்கா இல்லை மகிழ்ச்சியா எப்படின்னு அந்த இசை மூலமாகவே நமக்கு தெரிஞ்சிடும் ;)
\\0.07 -0.34 பிரமிப்பு. இதில் Trombone (0.17-0.34 )என்னும் இசைக் கருவி வாசிக்கப்பட்டிருக்கிறது.இதை முழுவதும் வாசிக்காமல் 0.07 -0.16ல் வேறு ஒரு மென்மையான ரிதம் கொடுத்துவிட்டு அதுவும் வித்தியாசமாக/மேதமைத் தன்மையுடன். அப்புறம் Tromboneல் பட்டையைக் கிளப்புகிறார்.ராஜ(ஜா) கம்பீரத்துடன் பாட்டு திறக்கிறது.பத்தோடு ஒன்று பதினொன்றாக மேடைப் பாட்டை இசைக்கவில்லை.
ReplyDeleteமைக் மோகனுக்கு எட்டுல குரு\\
தல trombon இசையை அவரு ஈசியாக வாசித்துவிட்டாரு படத்துல.. ஆனா இன்னும் இசை மேடைகளில் அதை வாசிக்கும் போது தின்டாருராங்க ;))
அதோ போல இந்த பாடலில் அந்த லா லா லாஆஆ வருமே அதை பாடவே எங்க கூருப்புல போட்டி வரும் ;))
\\படம்: ராஜாபார்வை பாடல்: வயலின் சோலோ -1981
ReplyDeleteஆரம்பம் சிலிர்ப்பு/பிரமிப்பு.இரண்டு(1.09 & 1.15) இடங்களில் புல்லாங்குழல் நாதம் மொட்டு அவிழ்கிறது.\\
என்னாத்த சொல்ல...அந்த காட்டிசியிலியே அந்த நடிகையை கைதட்டவச்சிட்டாங்க ;)) அப்படி ஒரு இசை ;))
\
ReplyDeleteபடம்:விருமாண்டி - பாடல்: உன்னைவிட-2004
3.52 - 4.02 ல் வரும் இசை உச்சக்கட்ட பிரமிப்பு. 3.519999999ல் கூட இசைக் கடவுள் கலைவாணிக்குக் கூட தெரியாது. அடுத்து என்ன பிரமிப்பு வரப்போகிறது என்று.ஒரு காட்டு காட்டுகிறார்.\\
இதொல்லாம் ஓவரு ஆமா..நீங்களே இப்படி கமெண்டு கொடுத்துட்டா நாங்க என்னாத்த சொல்றது ;)))
ஆனாலும் அந்த இசையில் நான் அப்படி உள்ளுக்குள்ள மேலும் கீழுமாக போயிட்டு வந்தேன்.
கலைஞானி எப்படி சொல்லியிருந்தா இசைஞானி அவுங்க போற பாதை மேலும் கீழுமாக இருக்கும் அதுக்கு ஒரு இசையும் கொடுத்து அதோ போலவே கலைஞானியும் வண்டியை ஒரு மேலும் கீழுமாக ஒட்டிக்கிட்டு போவாரு அந்த இடத்துல.
இது முட்டையில் இருந்து கோழியா கோழியில் இருந்து முட்டையா கதை தான் ;))
அருமை அருமை கேட்டுக் கொண்டே வாசித்துக் கொண்டிருக்கிறேன்
ReplyDelete\\“இசை புயல்” ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெடிகேட் செய்கிறேன்.\\
ReplyDeleteஇந்த உள்குத்துக்கு என்ன காரணம்? சொல்லுங்க தல ;))
\\படம்:பூந்தளிர்: பாடல்: ஞான் ஞான் பாடனும்- 1979\\
செம பாட்டு தல ;)) உண்மையில் இப்போது தான் கேட்கிறேன் ;))
\\படம்: வைதேகி காத்திருந்தாள் பாடல்:ராசாத்தி உன்ன -1982
0.16 - 0.20 ”அவள் அப்படித்தான்” வலி வயலின் இங்கு ”செல்லோ”வுடன் சேர்ந்து மேற்கத்திய சாயலை மழுப்பி “கிராமிய” மணம் கொடுக்கப்படுகிறது.அடுத்து 2.44 - 3.05 இதில் 2.44 - 2-51 அண்ட் 2.52 - 3.05 இடையில் கசியும் உணர்ச்சிகளை கவனியுங்கள்.\\
எத்தனை முறை கேட்டாலும் அப்படியே மனசு டக்குன்னு மண்டி போட்டு உட்கார்ந்துடும் அந்த இடத்துலியே...அப்படி ஒரு இசை இந்த பாடலில். அதுவும் ராத்திரி சொல்லவேனாம் ;))
அவரு அப்படி தான் நம்மளை கவனிக்கவச்சிட்டு அடுத்த வேலைக்கு போயிடுவாரு ;))
\\\\காட்சியில் இவ்வளவு உக்கிரம் வெளிப்படுகிறதா? படுகிறது.பாடலின் இசைக்கோர்ப்பு பாமரர்களை அறியாமல் காட்சியில் ஒன்ற வைக்கிறது. அதுதான் மேஸ்ட்ரோ\\\
உண்மையில் இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்களுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். மிக அருமையாக எடுத்திருப்பாரு. !
\\பகுதி -2ல் பார்க்க வேண்டியது\\
ReplyDeleteஎப்போ!? அடுத்த வாரம் தானே...;))
தல அப்படியே முதல் மரியாதை, கடலோரகவிதை...அதுல ஒரு இசை வரும். அப்படியே கூடு கூடுன்னு ஒடிக்கிட்டே இருக்கும் நம்ம மனசு ;)
முதல் மரியாதையில் இந்த நிலாவையாச்சும் பாருய்யான்னு செவிலி சொல்லியுடன். அந்த ஹூரோ செவிலின்னு அப்படின்னு கூப்பிடவுடன் ஒரு இசை வரும் பாருங்க...யப்பா...ஒடும் நம்ம மனசு ;))
இசை தெய்வத்தின் அடுத்த அட்டகாசத்துக்கு காத்துக்கிட்டு இருக்கோம் ;))
This comment has been removed by the author.
ReplyDeleteதமிழ்பறவை மாதிரி பின்னூட்டம் போட முடியல...;)) கொஞ்சம் பொங்கிட்டேன் ;))
ReplyDeleteஅப்படியே நேரம் கிடைக்கும் போது இதையும் பாருங்கள்
இசைஞானியின் இந்தி படம் - Illayaraja in "Happi" - Bavna Talwar's Venture
http://7swara.blogspot.com/2010/06/illayaraja-in-happi-bavna-talwars.html
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நன்றி - வீடியோவில் 3.42 to 4.22 பாருங்கள்
http://www.youtube.com/watch?v=Zy4JVPadCUQ&feature=player_embedded
;))
இந்த பாட்டை இன்னிக்குதான் முதல்முறை கேட்டேன்
ReplyDeleteபடம்:பூந்தளிர்: பாடல்: ஞான் ஞான் பாடனும்- 1979
நீங்க சொன்னது ரொம்ப சரி. இது பாட்டே இல்ல ஒரு திகில் படம், அடுத்து என்ன வரும்னு மூச்ச புடிச்சிகிட்டுதான் கேக்க முடியும், இந்த பாட்டின் இசை போல ஒரு பிளென்ட் நான் இதுவரை கேட்ட நினைவு இல்லை பல ஸ்டைகள், நோட்ஸ் ஒரு மேதமேடிகல் ஜீனியஸ்னா மூடு அமானுஷ்ய தேடல்.. பல உணர்ச்சிகளை தோற்றுவித்தது அறிமுகத்துக்கு நன்றி.. நானும் லைஃப் மெம்பர்தான்..
இந்த பாட்டை இன்னிக்குதான் முழுசா கேட்டேன்
ReplyDeleteபடம்: இவன் பாடல்: அப்படி பாக்கிரதுன்னா- 2002
எக்ஸ்டசி எப்படிஇருக்கும், ஆர்கேசம் எப்படி இருக்கும்... அந்த மியூசிக் பீசை மறுபடி கேட்கவும். பிரெத்டேகிங். எ ரியல் ஸ்டன்னர்.
மற்ற பாடல்கள் எல்லாம் நல்ல தேர்வு, அருமையான அவதானிப்பு.. வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
ReplyDelete//ராஜா கண்ணையும், காதையும் மறைச்சிட்டாரு.//
அப்படிப் போடு!
//சூப்பரா இருக்கு.. சிம்ப்ளாவும் இருக்கு சார்...
எனக்கும் அந்த தொழில் நுட்பம் கொடுங்க..பதிவு போடணும்.. ப்ளீஸ்//
மெயில் பார்க்கவும்.
//இன்னும் ‘ஞான் ஞான் கேட்கணும்’ முழுதும் ரசிக்க...//
ராஜா ரொம்ப வித்தியாசமா பண்ணி இருக்கார்.
பிகில் பதிவரின் பின்னூட்டம் சொல்வது: “இந்த பாட்டின் இசை போல ஒரு பிளென்ட் நான் இதுவரை கேட்ட நினைவு இல்லை”
பிகில் சொல்வது மாதிரி அட்டகாசமான பிளெண்ட்.சத்தியம்.
கோபிநாத் சொன்னது:
ReplyDelete//"நன்றி" நாங்க சொல்லிக்கிட்டே தான் இருப்போம் நீங்க கொடுத்துக்கிட்டே இருங்க தல ;))//
ஊக்கம் தெம்பைக் கொடுக்கிறது.
மிஷ்கின் பேட்டியை ரசித்தேன்.
//இன்னும் இசை மேடைகளில் அதை வாசிக்கும் போது தின்டாருராங்க ;))//
இன்னும் நிறையப் பாட்டும் இதே பாடுதான்.
//அந்த காட்டிசியிலியே அந்த நடிகையை கைதட்டவச்சிட்டாங்க //
பின்னீட்டீங்க கோபிநாத்.சே.. நான் எழுத மிஸ் பண்ணிட்டேன்.
//உண்மையில் இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்களுக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். //
அதனால்தான் ஊஞ்சல் போட்டோவைப் போட்டேன்.
//எப்போ!? அடுத்த வாரம் தானே...;))//
ReplyDeleteகொஞ்சம் டைம் கொடுங்க.
ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ரசிக்கிறீர்கள்.
நீங்கள் கொடுத்த லிங்குகளைப் பார்க்கிறேன்.
கானா பிரபா said...
ReplyDelete//அருமை அருமை கேட்டுக் கொண்டே வாசித்துக் கொண்டிருக்கிறேன்//
வாங்க கானா பிரபா.அடிக்கடி நம்ம கடைப்பக்கம் வாங்க.
July 10, 2010 2:30 AM
BIGLE ! பிகில் said...
ReplyDelete//இந்த பாட்டின் இசை போல ஒரு பிளென்ட் நான் இதுவரை கேட்ட நினைவு இல்லை//
சூப்பர் பாஸ்..! கரெக்டா புடிச்சீட்டீங்க.
ஒரு மாதிரி Out of the world music.
Highly Romanticized song.
//பல ஸ்டைகள், நோட்ஸ் ஒரு மேதமேடிகல் ஜீனியஸ்னா மூடு அமானுஷ்ய தேடல்.. பல உணர்ச்சிகளை தோற்றுவித்தது//
ஜென்சியின் மலையாளம் பாட்டுக்குப் பொருந்துகிறது.
//எக்ஸ்டசி எப்படிஇருக்கும், ஆர்கேசம் எப்படி இருக்கும்... அந்த மியூசிக் பீசை மறுபடி கேட்கவும். பிரெத்டேகிங். எ ரியல் ஸ்டன்னர்//
ReplyDeleteசரியான வார்த்தைகள்.
பாஸ் நம்ம மற்ற இளையராஜா பதிவுகளை டைம் இருந்தால் படிக்கவும். கருத்து சொல்லவும்.
அவள் அப்படித்தானே மற்றும் பூந்தளிர் இன்று தான் கேட்டேன்
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றிகள் பல பல
தொடருங்கள் வாழ்த்துக்கள்
பாலாஜி said...
ReplyDelete//அவள் அப்படித்தானே மற்றும் பூந்தளிர் இன்று தான் கேட்டேன்
பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல பல
தொடருங்கள் வாழ்த்துக்கள்//
பாட்டு கேட்டீங்களா? நான் சொன்ன மாதிரி பீலிங் வருதா?
நன்றி.
July 10, 2010 5:30 PM
எல்லாமே சூப்பர் சார். அதிலும் வைதேகி காத்திருந்தாள் -ல் வரும் ராசாத்தி உன்ன....பாட்டின் ஆரம்பத்தில் வரும் அந்த வயலின் இசையினை கேட்கும்போது அந்த கதாநாயகி போல நாமும் அந்த அருவியில் சறுக்கிய உணர்வு. சத்தியமா ஞானிக்கு மட்டும் தான் இது சாத்தியம்.
ReplyDeleteரொம்ப சூப்பரான பதிவு சார்.பாகம் ரெண்டும் போட்ருங்க
ரெண்டு said...
ReplyDelete//பாட்டின் ஆரம்பத்தில் வரும் அந்த வயலின் இசையினை கேட்கும்போது அந்த கதாநாயகி போல நாமும் அந்த அருவியில் சறுக்கிய உணர்வு. சத்தியமா ஞானிக்கு மட்டும் தான் இது சாத்தியம்.//
நன்றி ரெண்டு.
//ரொம்ப சூப்பரான பதிவு சார்.பாகம் ரெண்டும் போட்ருங்க//
போடுகிறேன்.
ஒரு வேண்டுகோள்:
என்னுடைய லேட்டஸ்ட் பதிவுல பாலு,செளமியா,பாடல்கள் பற்றி உங்கள் feed back கொடுங்களேன்.
தைப்பொங்கல் எனும் படத்தில் உள்ள கண் மலர்களின் அழைப்பிதழ் எனும் பாடலை பற்றி சற்று விரிவாக நீங்கள் எழுதவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.. அப்படியே பழைய இந்தி பாடல்கள் பற்றியும் விரிவான அறிமுகம் தேவை..(எனக்காக..)
ReplyDeleteraja said...
ReplyDelete// தைப்பொங்கல் எனும் படத்தில் உள்ள கண் மலர்களின் அழைப்பிதழ் எனும் பாடலை பற்றி சற்று விரிவாக நீங்கள் எழுதவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்//
1980ல் இந்த காம்போஷிஷன் பெரிய விஷயம்.பல பதிவர்கள் ஆர்வத்தில் பல பாடல்களைப் பற்றி எழுதச் சொல்கிறார்கள். என்னால் முடிந்த மட்டும் தலைப்புக்கு ஏற்றாற் போல் கவர் செய்கிறேன்.ஒவ்வொரு பாடலையும் R&D செய்து எழுத வேண்டி இருக்கிறது.
//.. அப்படியே பழைய இந்தி பாடல்கள் பற்றியும் விரிவான அறிமுகம் தேவை..(எனக்காக..)//
பழைய பாடல்கள் கொஞ்சம்தான் தெரியும். அடுத்து இதெல்லாம் ரொம்ப உன்னிப்பாகக் கேட்பதில்லை.
அவ்வளவு ஆர்வமும் காட்டுவதில்லை.மன்னிக்கவும் ராஜா.
நன்றி.
July 13, 2010 10:16 PM
வாணி ஜெயராம் பாடிய முதல் பாடல் பற்றி (இந்தியில்) எழுதியதால்.. நான் பழைய இந்தி பாடல்கள் பற்றி எழுதச்சொல்லி கேட்டிருந்தேன்.. மற்றபடி மன்னிப்பு அது தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை ( சொல்றதுக்கே எனக்கு கடுப்பாத்தான் இருக்கு) ... we are just musical friends dont ask again sorry plz.. உங்களது இசைப்பணித்தொடர எல்லாவல்ல இறைவன் பூரண உடல் அரோக்கியத்துடன் தங்களையும் தங்களது குடும்பத்தாரையும் அருள்பாலித்து இருக்க எனது பிரார்த்தனைகள்.
ReplyDeleteஅற்புதம்,பாராட்ட வார்த்தைகளே இல்லை,ராஜா இசையமைத்த காலத்தில் வாழ்ந்தோம் என பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்,சமீபத்தில் ராஜாசார் இசை தவிர எந்த இசையம்ப்பாளரின் பாடலும் கேட்க பிடிக்கவே இல்லை,என் ரசனை மாறிவிட்டதா? அல்லது வருபவை மட்டமாக உள்ளதா தெரியவில்லை 80,90கள் பொற்காலம்.மீண்டும் அதுபோல படங்கள் செய்ய்வேண்டும்.
ReplyDeleteஎன்னைகேட்டால ராஜாசாரின் பாடலகளை அப்ப்டியே கூட புதிய படங்களில் பழமையை சிதைகாமல் பயன்படுத்தலாம்,செம ஹிட் கொடுக்கும்.
//ராஜாசார் இசை தவிர எந்த இசையம்ப்பாளரின் பாடலும் கேட்க பிடிக்கவே இல்லை,என் ரசனை மாறிவிட்டதா? அல்லது வருபவை மட்டமாக உள்ளதா தெரியவில்லை 80,90கள் பொற்காலம்.மீண்டும் அதுபோல படங்கள் செய்ய்வேண்டும்.
ReplyDelete//
காரணம் இப்போதைய பாடல்களில் ஆன்மா இல்லை.காட்சிகள் மூலம் படம் சொல்லப்படுகிறது.
//என்னைகேட்டால ராஜாசாரின் பாடலகளை அப்ப்டியே கூட புதிய படங்களில் பழமையை சிதைகாமல் பயன்படுத்தலாம்,செம ஹிட் கொடுக்கும்.//
செம்ம ஐடியா!
July 21, 2010 10:55 AM
ReplyDeleteshabi said...
//சூரக்கோட்டை சிங்ககுட்டி PADATHIL வரும் ஒண்ணும் THERIYATHA பாப்பா பாடலைப் பற்றிய விமர்சனம் SPB/SJ பாடிய பாடல் நான்கு சரணம் வரும் மிகவும் THUள்ளால் இசை பாடல்.........//
//மீ்ரா PADATHIL வரும் லவ்வுன்னா லவ்வு பாடலைப் பற்றி்யும் விமர்சனமும் போடுங்கள்...//
நீங்கள் இந்த பதிவிறகுப் போட வேண்டிய பின்னூட்டம் கலைஞர் பற்றிய பதிவில் போட்டுவிட்டிர்கள் என்று நினைக்கிறேன்.
உங்கள் ரசனைக்கு நன்றி. முடிந்தால் செய்கிறேன்.கருத்துக்கும் நன்றி.
July 23, 2010 1:32 PM
அன்புள்ள ரவிஷங்கர்
ReplyDeleteநல்ல பதிவு. ராஜாவின் இசையமைப்பு பற்றிய கட்டுரைகள் எப்பொழுதும் படிக்க மிகவும் ஸ்வாரசியமானது. நீங்கள் சொன்னதில் குறை ஏதுமில்லை. சில இசையமைப்பு சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதே என் நோக்கம்.
முதலில் ஆர்கஸ்ட்ரேஷனில், Call and Response என்ற ஒரு நுட்பம் உண்டு. ராஜாவைப் போல இதை யாரும் உபயோகித்ததாக என்க்கு தெரியவில்லை. சுறுக்கமாக சொல்லப் போனால் இசைக்கருவி உரையாடல். நீங்கள் சொன்ன ’அவள் அப்படித்தான்’ பாடல் அந்த வகை தான். உரையாடல் ஒரே மாதிரி இருந்தால் நமக்கு அலுப்பு தட்டுகிறது அல்லவா? ராஜா இதை நன்றாக புரிந்து கொண்டவர். இசைக்கருவி உரையாடல்களை ஒரு தேர்ந்த எழுத்தாளர் கையாள்வதைப் போல மாறி மாறி மிகவும் சுவாரசியம் குறையாமல் அமைப்பதில் வல்லவர். அவருடைய பின்னணி இசையில் எங்கு கேட்டாலும் புதிய புதிய உரையாடல்கள்தான்!
பல ஆயிரம் இசை உரையாடல்களை கொஞ்சமும் தெவிட்டாமல் கொடுப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அத்தோடு, எழுத்தாளர், சுஜாதாவின் பாணி என்று சொல்வதைப் போல, ராஜாவின் உரையாடல் பாணி என்ற ஒன்று நம்மை அறியாமலே நம் மனங்களில் தோன்றிய ஒன்று. உதாரணத்திற்கு, ‘என்னுள்ளில் எங்கோ’ என்ற ரோ.ரவிக்கைக்காரி பாடலின் இரண்டாவது இடையிசையைக் கேட்டால் அவ்வளவு அழகான புல்லாங்குழல் உரையாடல் திரையிசையில் எங்கு கேட்டுள்ளோம்?
அதிகமாகவும் உரையாடல்கள் இருக்கக் கூடாது. அத்துடன் மற்ற இசை விஷயங்களும் உரையாடல்களுடன் சேர்ந்து அழகுபடுத்த வேண்டும். இதையே ராஜாவின் ஹார்மனி சாதிக்கிறது. சில கர்னாடக உரையாடல்கள் மேற்கத்திய உரையாடல்கள் இரண்டும் அழகாக, அமைதியாக வசிப்பது ராஜாவின் இசையில் மட்டுமே.
வாழ்த்துக்கள்.
ரவி நடராஜன்
http://geniusraja.blogspot.com
வாங்க..! இசைஞானியின் இசையை ஆராய்ச்சி செய்யும் இசை ஆராய்ச்சி விஞ்ஞானி ரவி நடராஜன் அவர்களே..!
ReplyDeleteமனசிற்குள் ரொம்ப ரசித்துக்கொண்டு எழுத சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு இருந்தபோது
உங்கள் கட்டுரைகள் எனக்கு நிறைய எழுத ஊக்கம் கொடுத்துள்ளது.அதற்கு நன்றி.
ravinat said...
// முதலில் ஆர்கஸ்ட்ரேஷனில், Call and Response என்ற ஒரு நுட்பம் உண்டு. ராஜாவைப் போல இதை யாரும் உபயோகித்ததாக என்க்கு தெரியவில்லை. சுறுக்கமாக சொல்லப் போனால் இசைக்கருவி உரையாடல். நீங்கள் சொன்ன ’அவள் அப்படித்தான்’ பாடல் அந்த வகை தான். உரையாடல் ஒரே மாதிரி இருந்தால் நமக்கு அலுப்பு தட்டுகிறது அல்லவா? ராஜா இதை நன்றாக புரிந்து கொண்டவர். இசைக்கருவி உரையாடல்களை ஒரு தேர்ந்த எழுத்தாளர் கையாள்வதைப் போல மாறி மாறி மிகவும் சுவாரசியம் குறையாமல் அமைப்பதில் வல்லவர். அவருடைய பின்னணி இசையில் எங்கு கேட்டாலும் புதிய புதிய உரையாடல்கள்தான்!//
அருமை.நீங்கள் ரொம்ப டெக்னிக்கல்(Call and Response)நான் உணர்வுபூர்வமாக(உரையாடல்) ரசித்து புளாங்கிதம் அடைகிறேன்.நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
//பல ஆயிரம் இசை உரையாடல்களை கொஞ்சமும் தெவிட்டாமல் கொடுப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல.//
நான் அடிக்கடி வியக்கும் விஷயம்.
//அத்தோடு, எழுத்தாளர், சுஜாதாவின் பாணி என்று சொல்வதைப் போல, ராஜாவின் உரையாடல் பாணி என்ற ஒன்று நம்மை அறியாமலே நம் மனங்களில் தோன்றிய ஒன்று. உதாரணத்திற்கு, ‘என்னுள்ளில் எங்கோ’ என்ற ரோ.ரவிக்கைக்காரி பாடலின் இரண்டாவது இடையிசையைக் கேட்டால் அவ்வளவு அழகான புல்லாங்குழல் உரையாடல் திரையிசையில் எங்கு கேட்டுள்ளோம்?//
”என்னுள்ளில் எங்கோ”இளையராஜாவின் தவம் என்று சொல்லுவேன்.இதைப் பற்றி பதிவு-2 எழுதி உள்ளேன்.
//அதிகமாகவும் உரையாடல்கள் இருக்கக் கூடாது. அத்துடன் மற்ற இசை விஷயங்களும் உரையாடல்களுடன் சேர்ந்து அழகுபடுத்த வேண்டும். இதையே ராஜாவின் ஹார்மனி சாதிக்கிறது. சில கர்னாடக உரையாடல்கள் மேற்கத்திய உரையாடல்கள் இரண்டும் அழகாக, அமைதியாக வசிப்பது ராஜாவின் இசையில் மட்டுமே.//
எல்லாவற்றையும் விரல்நுனியில் வைத்திருக்கிறார்.
அதனால் சிரமப்படாமல் இசைக்கிறார்.
King of Musical Stunnersஇன் பகுதி -2 படித்தீர்களா?
நன்றி.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete