Sunday, June 6, 2010

இளையராஜா- King of Heavenly Hummings-1

சினிமாவில் ஹம்மிங் பற்றி இந்தப் பதிவில்  சினிமா ஹம்மிங தேவதைகள் பார்த்தோம்.அதில் இளையாராஜாவுக்கு முன்/பின்/சமகாலத்திய இசை ஜாம்பவான்களின்  பாடலில் ஹம்மிங் பயன்படுத்தலைப் பற்றி பார்த்தோம்.

இளையராஜா புதுமை ஸ்பெஷலிஸ்ட் என்பதால் ஸ்பெஷலாக அவருக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு.மேஸ்ட்ரோ எதையுமே வித்தியாசமாகக் கொடுப்பவர்.ஹம்மிங்கை விட்டுவைப்பாரா?

இது தேவதைகளின் மொழி.பாடலை  உணர்ச்சிகளால் ஒப்பனைச் செய்பவை.அதிலும் புதுமை புகுத்தி இருக்கிறார்.ஹம்மிங்கை ஒரு இசைக்கருவியாக உபயோகிக்கி்றார்.

உணர்ச்சிகள் கலையாமல். எந்த வித  gimmicks இல்லாமல் அழகாக ஹம்மிங்கை spray paint செய்திருப்பார்.

முகம் தெரியாத பேர் தெரியாத பாட்டைஅழகுப்படுத்தும் ஹம்மிங் தேவதைகளுக்கு    பூங்கொத்துக்கள்.


ஜென்சி ஹம்மிங்கில் முன்னணி. பின்னுகிறார்.பிறகு ஜானகி/வாணி/சசிரேகா/ஷைலஜா/உமா/சித்ரா/சுஜாதா/ராதிகா/பூரணி/சுசிலா.
”அன்னக்கிளி உன்னத்தேடுதே”-1976-அன்னக்கிளி
முதல் படம்.முன் இருந்த ஜாம்பவான்களின் சாயல் இல்லாதலட்சணமான ஹம்மிங்.இவர் யார் என்று தெரியாமலேயே மனதில் படிந்தது.

”ராசாவே உன்னை”-1985-முதல் மரியாதை
ஜானகியின்ஆரம்ப கிராமத்து வெகுளி ஹம்மிங்.மனதில் “பச்சக்” என்று ஒட்டிக்கொள்ளும். வித்தியாசம் அன்ட் அட்டகாசம்.

 ”மஞ்சள் நிலாவுக்கு”-1979 -முதல் இரவு
Humm_manjalnilavukku.mp3

“ஊஊ......................” என்று ரயிலை கட்டி இழுத்துச்செல்வது மாதிரி ஹார்ன்  பெண் ஹம்மிங்  சூப்பர்.

”என் இனிய பொன்”-1980-"மூடுபனி”
 Humm-EnIniya Pon.mp3

கிடாரைத் தொடர்ந்து  தேவதைகள் அடுத்து புல்லாங்குழலைத் தொடர்ந்து   தேவதைகள் வேறுவிதமாக. சூப்பர்.ஸ்டைல் ஹம்மிங்.

”ராத்திரியில் பூத்திருக்கும்"”--1983-தங்கமகன்
 Humm-Rathiriyil Poo.mp3

இந்த ஹம்மிங் வருவதற்கு முன்/பின்/சேர்ந்து  இசையை வாரி இறைக்கிறார்.stunning! அடுத்ததும் அசத்தல்.

"பூவில் வந்து”-1982-காதல் ஓவியம்
 Humm_Poovilvandu.mp3

பாலுவின் ஆரம்ப  மோகனராக ஹம்மிங் அருமை.ஹம்மிங் முடிந்தவுடன் வரும் இசையில் நம்மை வேறு உலகத்தில் மிதக்க விடுகிறார்.சின்னசாமி என்றால் ராசய்யா ஸ்பெஷல் உழைப்பு?



கிழ் வரும் ஹேம் ராம் பாட்டின் ஹம்மிங்கை கேட்காமல் போகாதீர்கள். மிகவும் வித்தியாசமானது.பிரமிக்க வைக்கும் இசைக்கோர்ப்பு. Mindblowing composition by Isai Jnani Ilayaraja!

Humm - Neepaartha.mp3

 ”நீ பார்த்த பார்வை” -2000-ஹே ராம்
முன்னணியில் ராணி முகர்ஜி மனதை அள்ளும் குரலில்  ஏதோ  பெங்காலியில் பேசுகிறார்.பின்னணியில் மெலிதான பியானோ இசை. இரண்டும் இனிமையாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு தேவதை குரல் வருடிவிட்டுப் போகிறது.  பிரமிப்பு.

பின் வரும் ஹம்மிங்கை கவனி்யுங்கள். இரண்டு விதமாக வருகிறது.அடுத்த பிரமிப்பு.

"செந்தாழம் பூவில்”-முள்ளும் மலரும்-1978

Humm_SenthaPoovil.mp3
 யேசுதாசின் வித்தியாசமான hill station driving humming?. ஞானி சார் அட்டகாசம்!.என் பாட்டி(இப்போது உயிரோடு இல்லை) ஹம்மிங்கை ரசித்துக் கேட்பார்.பெண்களால் அதிக அளவில் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாட்டு.

( மென்மையானஹம்மிங்கும், இதன் காட்சியும், பாடல் இனிமையும்,இசைக்கோர்ப்பும், ஹோம்லி ஷோபா/சிவப்பு கலர் புடவைப் பெண்/சரத்பாபுவின் ஆளுமைகள் மனஇயல்ரீதியாக பெண்களை ஒன்ற வைத்தன என்று சிலோன் ரேடியோவில் சொல்லக்கேட்டிருக்கிறேன்)

"காளிதாசன் கண்ணதாசன்”-1983-சூரக்கோட்டை சிங்கக்குட்டி
 Humm-KalidasanKanna.mp3
ஆரம்பம் ஹம்மிங்.அட்டகாசம்.மேஸ்ட்ரோவின் குரலும் இழைகிறது.

 ”மெட்டி...மெட்டி”-1982-மெட்டி

Humm-Mettimetti.mp3
 அற்புதமானஆண் ஹிந்துஸ்தானி டைப் ஹம்மிங் . இதே படத்தில்”மெட்டி ஓலி” பாட்டின் ஆரம்பத்தில் “கவுண்டர் பாயிண்ட்”ஹம்மிங் ராஜா ஒரு மெட்டிலும் ஜானகி வேறொரு மெட்டிலும்  வித்தியாசமான ஹம்மிங்

"ஆனந்த தேன் காற்று”-1982-”மணிப்பூர் மாமியார்”
எஸ்.பி.ஷைலஜாவின் இந்துஸ்தானி ஹம்மிங் இனிமையோ இனிமை.
 24Humm_anandthen.mp3


"என்னுள்ளே”-1993-வள்ளி  Heavenly humming 
 Humm-ennulle ennule.mp3

"ஒரு ராகம்”-1982-ஆனந்தராகம்
 Humm_OruRagam1.mp3

வித்தியாசமானக் கற்பனை. இதன் ஆரம்ப  ஹம்மிங்கில் இதனுடன் பின்னி வரும் ”கும் கும்”தாளக்கட்டு இந்தப் பாடலுக்கு ஒரு சோக/ஏக்க effect கொடுக்கிறது.வேண்டிய இடங்களில்  ஹம்மிங்கை அழகாக spray paint செய்திருக்கிறார் மேஸ்ட்ரோ.
(ஒலிப்பதிவு சரியில்லை) இதுவரைக் கேட்காத புதுமையான மனதை வருடும் தேவதை ஹம்மிங். It is absolutely out of the world humming!.எனன ஒரு அதீத கற்பனை!ஜென்சி சூப்பர்.

0.05-0.16 ஒரு வகையும் 0.45-1.04ல் வேறு வகையும்(ஹம்மிங் மற்றும் அதன் எதிரொலி)1.05 -1.10(ரிபீட்). “நீராட்டவா”2.20-2.23ல்கொஞ்சமாக 2.30-2.35 மீண்டும் பழைய ஹம்மிங்கிற்கு திரும்பும் தேவதைகள்.3.11 -3.20 ”தந்தானான”.

”தெய்வீக ராகம்” (0.51)என்ற வரியை ஜென்சி உச்சரிக்கும்போது பின்னணியைக் கவனியுங்கள்.”தெய்வீக....” என்ற எதிரொலி வரும்.ஆனால் 2.36ல் மீண்டும் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது எதிரொலி வராது.ஆனால் மறுபடியும் 4.04ல் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது வரும்.

ரூம் போட்டு உண்மையாக இசை(யோசி)க்கிறார் ராஜா.

3.45-3.54 ல் 2.20-2.23 ஹம்மிங் ரிபீட் ஆகும் என்று நினைப்போம்.ஆனால் அதேதான் ஆனால் கால அளவு மாறுபட்டு வித்தியாசமாக வரும்.அதான் மேஸ்ட்ரோ! பாடல் முடியும் போது மீண்டும் பழைய ஹம்மிங்.வளையம் முற்றுப்பெறுகிறது.

ஆடியோ சரி இல்லாததால்.பாட்டின் வீடியோவைப் பார்க்கவும்.


”ஆயிரம் மலர்களே”-1979-நிறம் மாறாத பூக்கள்
ஜென்சியின் மனதை உருக்கும் ஹம்மிங்.நேரடியாக கேட்காமல் எங்காவது காற்றில் மிதந்து வரும்போது கேட்டால் அள்ளிக்கொண்டு போகும்.
 I love you Jency!
Humm-AayiramMalargale.mp3

”நான் ஒரு பொன்னோவியம்”--1980-கண்ணில் தெரியும் கதைகள்
 Humm-Nan oru pon.mp3

 இதில் குரூப் ஹம்மிங் இரண்டு அடுக்குகளாக வரும்.ஒரு நீண்ட அருமையான கிளாசிகல் ஹம்மிங்கும் உண்டு.

”வரைமுறை என உண்டு வாய் பொத்தி கேளு ”ஆரம்பிக்கும் முதல் சரணத்தில் வாணி/யேசுதாஸ  மாறி மாறி பாடும்போது ”ஆஆஆஆஆ”  பின்னணி ஹம்மிங்கும்,அடுத்து வரும் வரிகளில் இவர்கள்  மாறி மாறி  ஹம் செய்வார்கள்.

ஆரம்ப இசையை கவனியுங்கள்  இசையோடு இசையாக ஹம்மிங்கும் ஒரு இசைக் கருவியாக பின்னிக்கொண்டுவரும்.

”கேளடி கண்மணி”-1989-புது புது அர்த்தங்கள்
 Humm_KeladiKancom.mp3

எவ்வளவு வித்தியாசமான ஹம்மிங். அட்டகாசம்.எப்படியெல்லாம் ஹம்மிங்கு யோசிக்கிறார்.

 இன்னும் பல அவற்றில் சில
1.தம் தம் தன்னம்
2.உறவெனும் -நெஞ்சத்தைக்கிள்ளாதே
3.பொன்வானம் பன்னீர்
4.எனதுவிழியில்
5.காற்றில் எந்தன் கீதம்

ஓகே... நன்றி தேவதைகளே.. இன்னொரு நாள் சந்திப்போம்.

63 comments:

  1. ஆயிரம் மலர்களே பாடல் தூரத்தில் கேட்கும் சமயம்.. ஏகாந்தமும்..மெல்லிய துன்பமும் தாங்காமல் அழுதிருக்கிறேன்.. உங்களுக்கு யாருக்காவது அப்படி நடந்திருக்கிறதா.....

    ReplyDelete
  2. Blogger raja said...

    // ஆயிரம் மலர்களே பாடல் தூரத்தில் கேட்கும் சமயம்.. ஏகாந்தமும்..மெல்லிய துன்பமும் தாங்காமல் அழுதிருக்கிறேன்.. உங்களுக்கு யாருக்காவது அப்படி நடந்திருக்கிறதா.....//

    எனக்கும் நடந்திருக்கிற்து.அப்படிப் பட்ட soul stirring composition.1980ல் காதல் வயப்பட்டவர்களைக் கேளுங்கள்.

    நன்றி ராஜா.

    ReplyDelete
  3. பதிலுக்கு நன்றி ரவி... இப்பொழுதைய 89% பாடல்கள்.. என்னை பெரும்பாலும் வசீகரிப்பதில்லை.. அம்மாதிரியான பாடல்கள் ஜீவன்றறு வறண்டு எந்த இனிமையும் இல்லாமல்... ஏன் பெரும்பாலான் யுவன், தேவிஸ்ரீபிரசாத், விஜய் ஆண்டனி, இன்னும் சிலரது பாடல்கள் (நபர்களின் பெயர் தெரியவில்லை.. ஆனால் மார்கெட்டில் பெரிய ஆட்கள்.. ) எந்த லயமும் இல்லாமல் இருப்பதாக எனக்கு படுகிறது.. ஆனால் தற்கால மிக சிறந்த பாடல்களை நான் ரசிக்கமால் விட்டதாகவும் தெரியவில்லை (உ.ம்.காட்டுச்சிறுக்கி.. ஜொதா அக்பர், ஹாரிஸின் சில பாடல்கள்... டெல்லி 6 அன்பே ஆருயிரே, மருதாணி,) இப்படியாக... சில.. சொல்லுங்கள் எனது ரசனையில் மாற்றம் இருக்கிறதா.. சம காலத்தில் எனது மிகப்பெரிய ஈடுபாடு.. கேஷா.. kesha முடிந்தால் டவுன்லோடு செய்து கேட்டுப்பாருங்கள் உங்களால் தலையாட்டாமல் இருக்கமுடியாது.. VERY MODERN AND EXEGETICAL. பாடல்களை இப்படிக்கூட பாடலாம் என்று கற்று கொடுக்கிறாள்.. நம்ம ஊர்ல நிறைய ரஹ்மான் போலிகள் இருக்கிறார்களோ என்று படுகிறது.. முடிந்தால் பதில் கூறுங்கள்.

    ReplyDelete
  4. //பதிலுக்கு நன்றி ரவி... இப்பொழுதைய 89% பாடல்கள்.. என்னை பெரும்பாலும் வசீகரிப்பதில்லை.......... எந்த லயமும் இல்லாமல் இருப்பதாக எனக்கு படுகிறது..//

    உண்மைதான்.சினிமாக்களும் அப்படித்தான் இருக்கிறது.
    இசையமைப்பாளர்கள் கொடுக்க ரெடியாக இருக்கிறார்கள். ஆனால் படம்?

    //ஆனால் தற்கால மிக சிறந்த பாடல்களை நான் ரசிக்கமால் விட்டதாகவும் தெரியவில்லை (உ.ம்.காட்டுச்சிறுக்கி.. ஜொதா அக்பர், ஹாரிஸின் சில பாடல்கள்... டெல்லி 6 அன்பே ஆருயிரே, மருதாணி,) இப்படியாக... சில.. சொல்லுங்கள் எனது ரசனையில் மாற்றம் இருக்கிறதா.//
    நல்ல ரசனை.ஆனால் ரசனை மாறுபடும்.
    //கேஷா.. kesha முடிந்தால்//
    கேட்க முயலுகிறேன்.

    //நம்ம ஊர்ல நிறைய ரஹ்மான்
    போலிகள் இருக்கிறார்களோ என்று படுகிறது.. முடிந்தால் பதில் கூறுங்கள்.//

    போலிகள் ரஹ்மானைக் காப்பி அடிப்பதாகத் தெரியவில்லை.அவர் trendல் பாடல்கள் வருகிறது.
    இப்போதுtrendம் அதுதான்.ரஹ்மான வெற்றி பெறுகிறார்.போலிகள் தோற்கின்றன.

    என்னை போன்ற தீவிர ராஜா ரசிகனால் ரஹ்மானை ஒரளவுக்குதான் ரசிக்க முடியும்.

    நன்றி ராஜா.

    ReplyDelete
  5. நண்பரே அடிக்கடி நம்ம ஞானியைப் பற்றீ எழுதி எம்மைப் புல்லரிக்க வைக்கிறீர்கள். சகல பாடல்களும் அருமைதான்.

    அதிலும் தெய்வீகராகம் தெய்வீகராகம் தான்.
    ஹேராம் இன்னொரு சிம்பனியின் வடிவம் ஹங்க்கேரியில் கலைஞானியும் இசைஞானியும் சென்று இசை அமைத்தது.

    ReplyDelete
  6. நன்றி வந்தியத்தேவன்.

    ReplyDelete
  7. / ஆயிரம் மலர்களே பாடல் தூரத்தில் கேட்கும் சமயம்.. ஏகாந்தமும்..மெல்லிய துன்பமும் தாங்காமல் அழுதிருக்கிறேன்.. உங்களுக்கு யாருக்காவது அப்படி நடந்திருக்கிறதா.....//
    எனக்கும் நடந்திருக்கிற்து.இன்றளவும் என்னை உணர்சிவயப்படுத்தும் பாடல் அது .

    ReplyDelete
  8. Blogger ARAN said...

    // எனக்கும்நடந்திருக்கிற்து.இன்றளவும் என்னை உணர்சிவயப்படுத்தும் பாடல் அது//

    வருகைக்கு நன்றி. கருத்துக்கு நன்றி அரன்.

    ReplyDelete
  9. Include this in the list..

    "Mazhlai endrum maaratha kiligal"...from Sethupathi IPS - Chitra and chorous....ithual Raja oru western Orchestra-ve nadathi iruppar...athuvum chorous-la....

    ReplyDelete
  10. Blogger நெருப்புச் சக்கரம் said...

    // Include this in the list..

    "Mazhlai endrum maaratha kiligal"...from Sethupathi IPS - Chitra and chorous....ithual Raja oru western Orchestra-ve nadathi iruppar...athuvum chorous-la....//

    ஆமாம்.இதுவும் ஒரு சிறப்பான ஹம்மிங் பாடல்.நன்றி நெருப்புச் சக்கரம்.எவ்வளவு பாடல்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்வது.
    இன்னும் நிறைய இருக்கிறது.

    ReplyDelete
  11. ஒரு சில தவிர நீங்கள் குறிப்பிட்டதில் பல எனக்கும் பிடித்த பாடல்களே; நல்ல தொகுப்பு நன்றி

    ReplyDelete
  12. Blogger மோகன் குமார் said...

    // ஒரு சில தவிர நீங்கள் குறிப்பிட்டதில் பல எனக்கும் பிடித்த பாடல்களே; நல்ல தொகுப்பு நன்றி//

    நன்றி மோகன் குமார்.

    ReplyDelete
  13. தர்ம யுத்தம் படத்தில் வரும் "ஆகாய கங்கை பூந்தேன் மழை தூவும்" பாடலின் ஆரம்ப ஹம்மிங்கும்,கரும்பு வில் படத்தின் "மீன் கொடி தேரில் " பாடலின் இடையில் வரும் ஹம்மிங்கும் கூட இந்த வரிசையில் வரும்.இப்போதைக்கு ஞாபகம் வந்தது இவையே.

    ReplyDelete
  14. தவறூக்கு வருந்துகிறேன், ஒரே நேரத்தில் இரு கமெண்ட்டுகள் எழுதியதால் வந்த வினை! முழுதும் படித்துவிட்டு எழுதுவேன்!

    ReplyDelete
  15. Blogger ஸ்ரீமதன் said...

    // தர்ம யுத்தம் படத்தில் வரும் "ஆகாய கங்கை பூந்தேன் மழை தூவும்" பாடலின் ஆரம்ப ஹம்மிங்கும்,கரும்பு வில் படத்தின் "மீன் கொடி தேரில் " பாடலின் இடையில் வரும் ஹம்மிங்கும் கூட இந்த வரிசையில் ரும்.இப்போதைக்கு ஞாபகம் வந்தது இவையே.//

    ஆமாம்.ஜானகி இழைவார் ஒரு இடத்தில்.பார்ட்-2 எழுதும்போது இதையெல்லாம் எழுதலாம் என்று ஏற்கனவே குறிப்பு எடுத்துள்ளேன்.

    நன்றி.

    ReplyDelete
  16. "அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம்"....ஜப்பானில் கல்யாணராமன்...பாடல்...
    எப்ப இந்த பாட்ட நெனச்சாலும் ஒரு வேகமும்....உற்சாகமும் வந்துரும்.....ஆரம்பிச்சதுல இருந்து பாலுவுக்கும்....ராஜாவுக்கும் போட்டி இருந்துகிட்டே இருக்கும்....trumpet...humming..Guitar....

    இந்த பாட்ட பத்தி மட்டும் தனியா ஒரு பதிவு போடலாம்.....

    ReplyDelete
  17. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    // தவறூக்கு வருந்துகிறேன், ஒரே நேரத்தில் இரு கமெண்ட்டுகள் எழுதியதால் வந்த வினை! முழுதும் படித்துவிட்டு எழுதுவேன்!//

    வருகைக்கு நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி. எழுதுங்கள்.

    ReplyDelete
  18. Blogger நெருப்புச் சக்கரம் said...

    // "அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம்"...........
    இந்த பாட்ட பத்தி மட்டும் தனியா ஒரு பதிவு போடலாம்.....//

    இது ”ராப்”?பாலு அவர்கள் ஹம்மிங்கில் ராஜா.விதவிதமான ஹம்மிங்.

    //இந்த பாட்ட பத்தி மட்டும் தனியா ஒரு பதிவு போடலாம்.....//
    சத்தியமா.அவ்வளவு விஷயம் இருக்கு சார்.

    ReplyDelete
  19. இவ்வளவு சிரமப்பட்டு எழுதும் ரவிக்கு எனது சிறிய பரிசு.... இசைஞானி இளையராஜாவிடமிருந்தே தருகிறேன்.. பிறர் அவ்வளவாக அறியாத ஒரு பாடலை நீங்கள் அனைவரும் கேட்டுமகிழலாம்.. படம். நான் சொன்னதே சட்டம்.. பாடல்.. அதிகாலை நேர கனவில் உன்னைப்பார்த்தேன்... பாடலைக்கேட்டுவிட்டு நண்பர்கள் கருத்தைச்சொல்லலாம்..

    ReplyDelete
  20. Blogger raja said...

    // இவ்வளவு சிரமப்பட்டு எழுதும் ரவிக்கு எனது சிறிய பரிசு.... இசைஞானி இளையராஜாவிடமிருந்தே தருகிறேன்.. பிறர் அவ்வளவாக அறியாத ஒரு பாடலை நீங்கள் அனைவரும் கேட்டுமகிழலாம்.. படம். நான் சொன்னதே சட்டம்.. பாடல்.. அதிகாலை நேர கனவில் உன்னைப்பார்த்தேன்... பாடலைக்கேட்டுவிட்டு நண்பர்கள் கருத்தைச்சொல்லலாம்..//

    ”சொல்வதே” சட்டம்.
    பாட்டைக்கேட்டிருக்கிறேன்.
    இனிமையான சிவரஞ்சனி ராகத்தில் போட்டப் பாடல்.

    //இவ்வளவு சிரமப்பட்டு எழுதும் ரவிக்கு எனது சிறிய பரிசு...//

    ராஜாவின் இசை எழுதத் தூண்டுகிறது.

    நன்றி ராஜா

    நன்றி

    ReplyDelete
  21. எனது நண்பர் ஒருவர் இப்பொழுது அவருடன் (இளையராஜா) சேர்ந்து பணிபுரிகிறார்.அவர் இப்பாடலை (அதிகாலை கனவில்...) எதற்கு அந்த குப்பை படத்தில் கொடுத்தீர்கள் என்று கேட்க ராஜா சிரித்துக்கொண்டே.. அது அப்படியே ஒரு வேகத்துல போட்டது.. மற்றபடி ஒண்ணுமில்ல.. என்று சொன்னாராம்.. இளையராஜா.

    ReplyDelete
  22. திரு. ரவிஷங்கர் அவர்களுக்கு,

    கருந்தேள் பக்கத்திலிருந்து உங்கள் தளத்திற்கு வந்தேன். அடடா! எப்படி உங்கள் வலை பக்கத்தை இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்தேன். வந்த மூச்சில் நீங்கள் எழுதிய இசை ஞானியின் அணைத்து பதிவுகளையும் படித்துவிட்டேன். மீண்டும் ஒருமுறை நிதானமாக படித்து பின்னுட்டம் இடுகிறேன். உங்கள் இசை அறிவும் மற்றும் ராஜாவின் பாடல்களை உள்சென்று அலசும் விதமும் அசரவைக்கின்றது.

    எனக்கு இசை அரசரின் இசை கேட்டு வளர்ந்த கேள்வி ஞானம் மட்டும் தான். உங்கள் பதிவுகளை படித்தபின் இன்னும் ஆழமாக போய் ராசாவை ரசிக்கலாம்.

    கமல் சொல்வது போல் "அவர் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் போதே நாமும் மூச்சு விடுகிறோம்" என்பதே பெரும் பாக்கியம். இந்தியாவின் "Prolific Creator"ருக்கு என்னால் முடிந்த சிறு காணிக்கை:
    http://members.cox.net/heyram/
    (Please see the flash page)

    அன்புடன்,
    மீனாட்சிசுந்தரம்

    ReplyDelete
  23. Blogger மீனாட்சி சுந்தரம் said...

    //வந்த மூச்சில் நீங்கள் எழுதிய இசை ஞானியின் அணைத்து பதிவுகளையும் படித்துவிட்டேன். மீண்டும் ஒருமுறை நிதானமாக படித்து பின்னுட்டம் இடுகிறேன்.//

    மனது மகிழ்ச்சி கொள்கிறது.அடுத்தப் பதிவு போட ஊக்கம் அடைகிறது.

    முதல் வருகைக்குநன்றி.கருத்துக்கும் நன்றி.

    //உங்கள் இசை அறிவும் மற்றும் ராஜாவின் பாடல்களை உள்சென்று அலசும் விதமும் அசரவைக்கின்றது//

    என்னுடையது raw knowledge.
    இதை விட நிறைய பேர் ராஜாவை R&D செய்கிறார்கள் வலையில்.இங்கு போய் பாருங்கள்.
    http://geniusraja.blogspot.com/

    நீங்கள் கொடுத்த ஹேராம் சுட்டியை கேட்டேன்.அற்புதம்.

    நன்றி.

    ReplyDelete
  24. Blogger SurveySan said...

    // beauty.//

    நன்றி சர்வேசன்.

    ReplyDelete
  25. நன்றி ரவிஷங்கர், நீங்கள் கொடுத்த "geniusraja " பக்கத்தை பார்த்திருக்கிறேன், அங்கு தான் "பேஸ் கிடாரின்" அற்புதத்தை தெரிந்து கொண்டேன். என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் படிக்கும் போது உள்ள சுவையே தனிதான்.

    ReplyDelete
  26. Nice post... came to your blog through raghavan subramaniam's blog.

    Raja has done a lot of experimentation in humming.
    The list given by you and others is very nice

    you can add
    "Ponnoviyam" from kazhugu. The song goes next level in humming where the notes normally given orchestra are given humming section. great experimentation by our thalaivar...

    ReplyDelete
  27. Blogger ஸ்ரீமதன் said...

    // தர்ம யுத்தம் படத்தில் வரும் "ஆகாய கங்கை பூந்தேன் மழை தூவும்" பாடலின் ஆரம்ப ஹம்மிங்கும்,கரும்பு வில் படத்தின் "மீன் கொடி தேரில் " பாடலின் இடையில் வரும் ஹம்மிங்கும் கூட இந்த வரிசையில் வரும்.இப்போதைக்கு ஞாபகம் வந்தது இவையே.//

    நீங்கள் சொல்வது சரியே.

    லேட்டாக பதில் பின்னூட்டம் போட்டதற்கு மன்னிக்கவும். எப்படியோ விடுபட்டுவிட்டது.

    நன்றி ஸ்ரீமதன்

    June 9, 2010 12:54 PM

    ReplyDelete
  28. blogger Muthuswamy said...

    // Nice post... came to your blog through raghavan subramaniam's blog.//

    நன்றி முத்துசாமி.raghavan subramaniam's blog எதுவென்று லிங்க் கொடுக்கமுடியுமா.

    // "Ponnoviyam" from kazhugu. The song goes next level in humming where the notes normally given orchestra are given humming section. great experimentation by our thalaivar...//

    அஹா...! மறந்தேப் போச்சு சார்..! அருமையான ஹம்மிங் உதாரணம் Yes 100% humming experiment!This is seriously different humming.
    Thanks a million.

    பார்ட்-2 வில் சேர்த்துவிடுகிறேன்.

    இசையை இவரைப் போல் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டது கொஞ்சம் பேர்தான்.

    ReplyDelete
  29. there are few more songs in which he has done similar experiment.

    Yeriyile elanthai maram, thangachi vacha maram from Karaiyellam shenbagppo

    Have you listened to the humming in "Thamtha theme tha" pagalil oru iravu.

    We can also add "Naan paada varuvai, thamizhe inimai tharuvai" from Uthiri pookal

    all have extensive humming, trying to mimic instruments

    ReplyDelete
  30. முத்துசாமி நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாம் கேட்டிருக்கிறேன்.
    தகவலுக்கு நன்றி.

    நான், பழசு+புதுசு+பாடகன்+
    பாடகி+வெஸ்டர்ன்+கிராமம்+சரித்திரம்+
    குரூப்+வித்தியாசம்+பார்ட்+புல்+வேறு சில என்ற கலவையில் பாடல்களைத் தேர்ந்தெடுத்தேன்.இல்லாவிட்டால் வெரைட்டி இருக்காது.

    புதுசு என்று நினைத்தேன். ஆனா இவரு சவுக்கடி சிங்காரம் raghusubra.blogspot.com .

    நன்றி சார்.

    ReplyDelete
  31. //raja said...
    ஆயிரம் மலர்களே பாடல் தூரத்தில் கேட்கும் சமயம்.. ஏகாந்தமும்..மெல்லிய துன்பமும் தாங்காமல் அழுதிருக்கிறேன்.. உங்களுக்கு யாருக்காவது அப்படி நடந்திருக்கிறதா.....//

    ஆமாங்க, ஏதோ ஒரு இனம்புரியாத மென்சோகம் இந்தப் பாடல்ல ஒட்டிக்கிட்டு இருக்கும், அப்படியே 80-களுக்கு கோன்டு போய் விடும்.

    ReplyDelete
  32. ரவி சார், நீங்கள் குறிப்பிட்டிருந்த பாடல்கள் எல்லாம் கேட்டேன், விவரிக்க வார்த்தைகள் ஏதும் இல்லை! ராகதேவனுக்கு எனது நன்றிகள்!

    ReplyDelete
  33. ரவிசார், உங்கள் பதிவுகளை ஒன்றுவிடாமல் படித்துக்கொண்டிருக்கிறேன். நம்மை இணைத்த மேஸ்ட்ரோவிற்கும், உங்களுக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  34. ஹும்மிங் பதிவு இரண்டாம் பாகத்திற்கு என்னுடைய தாழ்மையான சில தேர்வுகள்,
    கோழி கூவுது-ஏதோ மோகம் 80-களிலேயே வந்த அற்புதமான பர்ஃபக்ட் கோரஸ் ஹும்மிங்)
    தேவனின் கோவில் மூடிய நேரம்.....(இதில் இரண்டாவது இசைஇசையில் வரும் தந்தன நன நா.. என்ற ராஜவின் ஹம்மிங் மனதை என்னவோ செய்யும்)
    பன்னீர் புஷ்பங்கள்-பூந்தளிர் ஆட..(கோரஸ் ஹம்மிங், பாடலில் உற்சாக உணர்வை அப்படியே அள்ளிச் செல்லும்)

    செவ்வந்தி- செம்மீனே செம்மீனே (ஜெயச்சந்திரன், சுனந்தா குரலில் வந்த வெகு அருமையான பாடல் இது, இதில் வரும் கோரஸ் ஹம்மிங், எங்கோ ஒரு அற்புத உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்)

    ReplyDelete
  35. நண்பர் முத்துசாமி சொன்னதுபோல கழுகு படத்தின் பொன்னோவியம் பாடலும் ஹம்மிங்கிற்காகக் கேட்க வேண்டிய பாடல்களில் ஒன்று!

    ReplyDelete
  36. வாங்க ராம்சாமி.மறக்காமல் வந்து பின்னூட்டம் போட்டதற்கு நன்றி.இது மாதிரி ஊக்கப்படுத்தினால்தான் அடுத்த ராஜாவின் முக்கிய இசைக்கூறுகளை பிரித்து மேய உற்சாகம் வருகிறது.

    //ஆயிரம் மலர்களே ......ஆமாங்க, ஏதோ ஒரு இனம்புரியாத மென்சோகம் // ஜென்சியின் குரல் அப்படி.
    ஷ்ரேயா/சாதனா நல்ல குரல் வளம் இருந்தாலும் இது மாதிரி மனதைப் பிறாண்டவில்லை.

    ReplyDelete
  37. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    // ரவிசார், உங்கள் பதிவுகளை ஒன்றுவிடாமல்படித்துக்கொண்டிருக்கிறேன். நம்மை இணைத்த
    மேஸ்ட்ரோவிற்கும், உங்களுக்கும் நன்றிகள்!//

    உண்மை.ராஜாவினால் நிறைய பின்னூட்டம் + followers கிடைத்தார்கள்.இதனலேயே தமிழ்ப்பறவை என்பவர் எனது இரண்டாவது followersஆக வந்தவர்.

    நன்றி. நன்றி.

    ReplyDelete
  38. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி

    //இரண்டாம் பாகத்திற்கு என்னுடைய தாழ்மையான சில தேர்வுகள்,
    கோழி கூவுது-தேவனின் கோவில் மூடிய நேரம்.....//

    ”ஏதோமோகம்”அட்டகாசம்.இரண்டும்சேர்த்துடலாம்.நான் சொன்ன கலவைகளையும் கொஞ்சம் கணக்கில் எடுத்துக்கொண்டு இணைப்போம்.

    //பன்னீர் புஷ்பங்கள்-பூந்தளிர் ஆட..(கோரஸ் ஹம்மிங், பாடலில் உற்சாக உணர்வை அப்படியே அள்ளிச் செல்லும்)//

    உயிர் துடிப்பான ஹம்மிங்.

    //செவ்வந்தி- செம்மீனே செம்மீனே (ஜெயச்சந்திரன், சுனந்தா குரலில் வந்த வெகு அருமையான பாடல் இது, இதில் வரும் கோரஸ் ஹம்மிங், எங்கோ ஒரு அற்புத உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்//

    பல முறை கேட்டிருக்கிறேன்.வித்தியசமான கிராமத்துப் பாட்டு.

    நன்றி.

    ReplyDelete
  39. Anyone of you heard the semmozhi theme song composed by ARR.
    he could have avoided killing tamil in this song.

    people should listen to "amuthe thamizhe azhgiye mozhiye" from Koil pura. For me this is the semmozhi song....

    ReplyDelete
  40. Muthuswamy said...
    //Anyone of you heard the semmozhi theme song composed by ARR.
    he could have avoided killing tamil in this song.//
    நான் இதைப் பற்றி விமர்சனம் எழுதி உள்ளேன். பார்க்க:-

    http://raviaditya.blogspot.com/2010/05/blog-post_22.html

    //people should listen to "amuthe thamizhe azhgiye mozhiye" from Koil pura. //

    ஆமாம்.homely குரல்கள். அருமையானப் பாட்டு.
    நாதஸ்வரம் அட்டகாசம்.

    //For me this is the semmozhi song....//
    well said Muthuswamy.

    ReplyDelete
  41. அட கடவுளே (இசை தெய்வம் இசைஞானி) எப்படி பார்க்கமால் போனோனேன் !

    தல...மிக்க மிக்க நன்றி அருமையான தொகுப்பு (இரவு 1 மணிக்கு கேட்டுக்கிட்டு இருக்கேன்) கலக்குறிங்க தல ;)

    \\முன்னணியில் ராணி முகர்ஜி மனதை அள்ளும் குரலில் ஏதோ பெங்காலியில் பேசுகிறார்\\

    அது ராணியோட குரல் தான் தல..;)

    அப்புறம் இப்போது வந்த "பா" இந்தி படத்தை பார்த்திங்களா...அதுல முழுக்க முழுக்க குழந்தைகளோட குரலை வச்சி பாடல் வரும்.

    அப்புறம் "நீங்கள் கேட்டவை" படத்துல பிள்ளைநிலா பாடலில் தொடக்கத்தில் கூட மிக அருமையாக (எனக்கு அந்த ஹம்மிங்கை கேட்க ரொம்ப பயம்..! கண்டிப்பாக அழுதுடுவேன்) அப்படி ஒரு உணர்ச்சி அதுல.

    தேடிவந்து சுட்டி கொடுத்து என் மனசை நிறைச்சதுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி தல ;)

    ReplyDelete
  42. \\என்னை போன்ற தீவிர ராஜா ரசிகனால் ரஹ்மானை ஒரளவுக்குதான் ரசிக்க முடியும்\\

    ஒரு ரீப்பிட்டே போடலைன்னா தூக்கமே வராது எனக்கு ;)

    ReplyDelete
  43. நல்ல பதிவு..இசையின் எந்த பரிமாணத்திலும் நமது ராஜாவை வெல்ல ஆள் கிடையாது..எனினும், அவரது 'ஹம்மிங்' ஒரு தனிச் சிறப்பு..நீங்கள் கொடுத்திருக்கிற அனைத்து பாடல்களும் அருமை.எனக்குத்தோன்றும் இன்னும் சில பாடல்கள்:
    1.மகாராணி உனைத்தேடி(ஆயிரம் வாசல் இதயம்):ஆரம்பத்தில் வரும் ஜானகியின் ஹம்மிங் நம்மை வேறு ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லும்..இந்த பாடல் பற்றி இங்கு எழுதியுள்ளேன்..

    http://ragamanjari.blogspot.com/2009/03/it-is-well-known-fact-that-raaja-had.html

    2.'சந்தனக்காற்றே..' பாலு, ஜானகியின் குரல்களில் வரும் 'counterpoint' ராஜாவினால் மட்டுமே சாத்தியம்!

    3.'என் நெஞ்சம் உன்னோடு'-ஜானகி , ஹம்மிங்..பூக்களுக்கும் ,தேனுக்கும் விளம்பரம் தேவையா?இல்லை, அவற்றைப் பற்றி நாம் எழுதுவதுதான் சாத்தியமா?'பம்மல்' கமல் போல இவற்றை அனுபவிக்க வேண்டும்!

    4.'சோலைக்குயிலே'(பொண்ணு ஊருக்குப் புதுசு') ஷைலஜா ராஜாவின் இசையில் பாடிய முதல் பாடல்.சுருதி சுத்தமாக மத்தியமாவதியில் கேட்கும் ஆரம்ப ஹம்மிங்..இந்தப்பாடலைப் பற்றியும் இங்கு எழுதியுள்ளேன்:

    http://ragamanjari.blogspot.com/2009/12/poetry-is-very-beautiful-thing-indeed.html

    5.'கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்(காற்றினிலே வரும் கீதம்)-'superimposing' என்னும் யுத்தியை இந்தியாவிலேயே முதன்முதலாக நமது ராஜா கையாண்ட பாடல்.இரண்டு வடிவங்கள்-ஜானகி மற்றும் வாணி.இரண்டுமே மெய் சிலிர்க்க வைக்கும்.

    6.'ஏதோ நினைவுகள்..'(அகல் விளக்கு)யேசுதாஸ்,ஷைலஜா-நமது நினைவுகள் எங்கோ சிறகடித்துப் பறக்கும்.
    இன்னும் பல பாடல்கள் உள்ளன..அவற்றைப் பற்றியும் எழுதுங்கள்.

    நன்றி!

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. பகிர்வுக்கு நன்றி ராஜ்.

    ”ஆயிரம் வாசல் இதயம்” பட பாட்டு இப்போதுதான் கேட்டேன். அமர்க்கள ஹம்மிங்.

    ”கண்டேன் எங்கும்” வாணி பாடும் பாட்டு எங்கு கிடைக்கும்.

    ஹம்மிங் பார்ட் -2 வில் எழுதுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  46. நன்றி கோபிநாத்.

    ReplyDelete
  47. 'கண்டேன் எங்கும்' வாணியின் பாடல் என்னிடம் இருக்கிறது..தங்களுக்கு மின் அஞ்சல் செய்யலாமா?
    முகவரி தேவை..

    ReplyDelete
  48. காளிதாசன்..கண்ணதாசன் பாடல் ஆன்மாவை உருக்கும் ஓப்பனிங் ஹம்மிங் ..என் பழைய வயல் வெளி ப்யணங்களை நினைவு படுத்தி,இழந்த வயதை மீட்டுக்கொடுக்கிறது ரவி சார். நன்றி

    ReplyDelete
  49. நன்றி அனானி அவர்களே

    ReplyDelete
  50. கண்டிப்பாக இந்த ஹம்மிங் எதையும் நாம் ஹம் பண்ணாமல் போக இயலாது.பாடல் கேட்டு முடிந்தால் கூட அந்த ஹம்மிங் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கும்.மற்ற பதிவுகளை பார்க்கும் பொழுது இந்த ஹம்மிங் பற்றியும் பதிவு செய்திருப்பீர்களா என்று ஐயப்பட்டுகொண்டே இருந்தேன்.ஆனால் என்னை ஏமாற்றாமல் பதிவு செய்து இருக்கின்றீர்கள்.மிக்க மகிழ்ச்சி.ராஜாவிற்கு இணை ராஜாவே.ராஜா என்ற பொருத்தமான பெயர்.
    பொன்வானம் பன்னீர் தூவும் பாடலில் வருகின்ற ஹம்மிங் என்னுடய favourite.பெண்ணின் மோகத்தை அப்படியே பதிவு செய்து இருக்கும்.அதுவும் எடுத்தவுடன் ஜானகி ஆ.ஆ..அ.அ..அ..ஆஎன்று ஏற்ற இறக்கத்துடன் காற்று வீசுகிறதாம் அந்த காற்றுவீச்சின் ஊடே யே பாட ஆரம்பிக்கின்ற காரணம் என்று கண்கள் மூடி கேட்டால் கூட அப்படியே காட்சிகள் தோன்றும்.அவ்வளவு அருமை'
    தெய்வீக ராகம் ஒருவேளை இசையை கேட்ட பின்பு எழுதப்பட்ட மெட்டாக இருக்குமோ என்று சந்தேகம்.ஏனென்றால் அப்படியே தெய்வீக ராகத்தை உணர்த்துகின்றதே .கமல் மட்டும் அல்ல நாமும் அந்த பெண்ணின் பின்னால் தான் செல்வோம்.

    ReplyDelete
  51. முதல் வருகைக்கு நன்றி உமா.
    கருத்துக்கும் நன்றி.

    ஹம்மிங் பகுதி -2 பார்த்து விட்டீர்களா?

    ReplyDelete
  52. So far I just listened to the song and gone. After reading yours, I feel ashame of myself. Hats off to U friend. Thanks for tuning my music knowledge.

    ReplyDelete
  53. நன்றி அருணகிரி.

    ReplyDelete
  54. yaaru thalaivaa nee pinni pirichi edukkure..??

    ReplyDelete
  55. yaaru thalaiva nee pinni pirichi edukkira..???

    ReplyDelete
  56. //yaaru thalaiva nee pinni pirichi edukkira..???//

    ஒரு சாதாரண ராஜா ரசிகன்தான்.

    ReplyDelete
  57. அ அ அ அ ஆ....
    அ அ அ அ ஆ....
    கால் சலங்கை ஓசை இட்டாள்
    காட்டில் ஒரு பாட்டு வரும்
    கை வளை தாளங்கள்
    தன்தனனா தானனா..
    ""மானாடும் குயில்.."முதல் வசந்தம்''

    ReplyDelete
  58. அ அ அ அ ஆ....
    அ அ அ அ ஆ....
    கால் சலங்கை ஓசை இட்டாள் காட்டில் ஒரு பாட்டு வரும்
    கை வளை தாளங்கள் தன்தனனா தானனா..""மானாடும் குயில்.."முதல் வசந்தம்''

    ReplyDelete
  59. //முதல் வசந்தம்//

    ஆமாங்க ரமேஷ் சூப்பரா இருக்கும்.பார்ட்-4 போடும்போது பார்க்கலாம். நன்றி.

    ReplyDelete
  60. அற்புதமான தொகுப்பு எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத இசை ஞாநியின் அருமையான HUMMINGS .மிக்க நன்றி ரவிஷங்கர் சார்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!