Tuesday, June 29, 2010

ஹைக்கூ....ஹைக்கூ...!

தினசரி வாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightning அனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும்உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப்படுத்துவதுதான் ஹைக்கூ.மற்றும் வேறு விதிகள் கட்டாயம் (5-7-5) உண்டு.

இது ஒரு நேரடி அனுபவம்.சமுதாய சாடல்/நீதி தவிர்க்க வேண்டும்.

Haiku only describes, does not prescribe or tell or preach.




குடை மேல் மழை
குடைக்குள் தெறிக்கிறது
சாரல்

___________________________________________________






பூட்டிய வீட்டிற்க்குள்
சிணுங்கிக் கொண்டிருக்கும்
அதிர்ஷ்ட மணிகள்










___________________________________________________




புது மனைவியையே
பார்த்துக்கொண்டிருக்கும்
நிலவு
___________________________________________________


திடீர் மின்னல் ஒளியில்
ரோடை கிராஸ் செய்யும்
நீள பாம்பு


___________________________________________________


ஹாலில் தூங்குபவர்கள் மீது
ஏறிப் போகிறது
குல்ஃபி ஐஸ் வண்டி

___________________________________________________

கார் மேல் படர்ந்துள்ள
தூசியில் எழுதப்பட்டிருக்கிறது
I love you  Kavitha

___________________________________________________




8 comments:

  1. ஹைக்கூவுக்கான விளக்கம் ஓகே. உங்கள் உதாரணக் கவிதைகள்தான்.. ஹிஹி..

    ReplyDelete
  2. //கார் மேல் படர்ந்துள்ள
    தூசியில் எழுதப்பட்டிருக்கிறது
    I love you Kavitha//

    i am going to the past

    ReplyDelete
  3. ஆதிமூலகிருஷ்ணன் said...
    //ஹைக்கூவுக்கான விளக்கம் ஓகே. உங்கள் உதாரணக் கவிதைகள்தான்.. ஹிஹி.//

    நன்றி ஆதி. உங்கள் பின்னூட்டமே ஹைக்கூ மாதிரி இருக்கு.

    ReplyDelete
  4. வழிப்போக்கன் said...

    //i am going to the past//

    நன்றி வழிப்போக்கன்

    ReplyDelete
  5. குடைக்குள் மழையும், புது மனைவியைப் பார்க்கும் நிலவும் ஓகே

    ReplyDelete
  6. தமிழ்ப்பறவை said...

    //குடைக்குள் மழையும், புது மனைவியைப் பார்க்கும் நிலவும் ஓகே/

    நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  7. மிகவும் உண்மையான ஹைக்கூவாக இது தெரிகிறது. அருமை.

    //திடீர் மின்னல் ஒளியில்
    ரோடை கிராஸ் செய்யும்
    நீள பாம்பு

    ReplyDelete
  8. பின்னோக்கி said...
    //மிகவும் உண்மையான ஹைக்கூவாக இது தெரிகிறது. அருமை.//

    இதை அந்தக் கணத்தில் விஷுவலாக உள்வாங்கி ரசிக்கிறீர்கள். அதே மாதிரி “ஹாலில்” “புது மனைவி”“பூட்டிய” உள்வாங்கினால் ரசிக்கலாம் உண்மையான ஹைக்கூவாகத் தெரியும்.

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!