ஒரு மாதிரி ஜலதோஷம் பிடித்த ”தமிழ்ந்துஸ்தானி” கலவைக்குரல். மனதைக் கொள்ளை கொள்ளும் ஹோம்லி குரல்.ஜானகியிடம் இருக்கும் வசீகரம் இவரிடம் இருந்ததா? ஆனால் இவரிடம் வேறு விதமாக இருந்தது.(தங்கத்தில் முகம் எடுத்து)
அப்போது குடும்பப் பாட்டு = சுசிலா, குடும்பம +செமிகுடும்பம் =ஜானகி,கிளப் டான்ஸ் பாட்டு =ஈஸ்வரி, என்ற பார்முலா இருந்தது. இவர் குடும்பப் பாட்டுக்கு முதலில் செட்டாகி பின்னால் பார்முலாவை மீறி சில பாடல்கள் பாடினார்.
எல்லா வித இசையும் கைப்பிடியில் வைத்திருந்ததால் எல்லா வித பாடல்களையும் சிரமமின்றிப் பாடினார்.ரூபாய் நோட்டில் உள்ள எல்லா மொழிகள் ப்ளஸ் வேறு மொழிகளிலும் பாடி நிறைய அவார்டுகள் வாங்கினார்.இவர் குரல் எல்லா மொழிக்கும் ஓரளவு பொருந்தி வந்ததுதான் காரணம்.
எல்லா மொழிப் பாடல்களைப் பாடினாலும் இவர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அச்சு அசல் தமிழ்அய்யங்கார் பெண் என்பதால உச்சரிப்பில் எந்த வித வட இந்திய சாயல் இல்லை.தமிழ் உச்சரிப்பும் அருமை.
தமிழுக்கு வருவதற்கு முன் 1971ல் Guddi என்ற இந்தி படத்தில் இவர் பாடிய “போல் ரே பப்பிஹரா” மெகா ஹிட் பாடல். ஒரு பக்கத்து வீட்டு ஹைஸ் ஸ்கூல் பெண் ஹோம்லிகுரலில்இந்தியாவையே கிறங்கடித்தவர் வாணி ஜெயராம்.அப்போது இந்தி சினிமா மோகத்தில் இருந்த தமிழ்நாடும் பாட்டைக் கேட்டு சொக்கியது.ஆனால் தமிழிற்கு பின்னால்தான் வந்தார்.(1975ல் “ போல் ரே பப்பிஹரா” பாட்டு “என் உள்ளம் அழகான வெள்ளித்திரை” என்று தமிழில் சினிமா பைத்தியம் படத்தில் டவுன்லோட் ஆகி ”ஹிட்” ஆகியது.)
1973ல் வாணிஜெயராம் வந்தாலும் 1974ல்தான், “மல்லிகை என் மன்னன்” என்னும் தீர்க்க சுமங்கலி பட பாடல் குறிப்பாக தமிழ்நாட்டின் எல்லா ஹோம் மேக்கர்/ஹவுஸ் வைஃப்களுக்கு மிகவும் பிடித்துப்போய் சூப்பர் ஹிட் ஆகியது.ஹோம் மேக்காதவர்களும் ரசிக்கத்தான் செய்தார்கள்.இந்தப் பாட்டு(இசை- எம்எஸ்வி) வழக்கமான பி.சுசிலாவின் குடும்ப டைப்தான்.ஆனால் வாணி பாடியதும் வித்தியாசமாக இருந்து ரசிகர்கள் கிறங்கிப்போனார்கள்.அதற்கு பிறகு சுசிலா டைப் பாடல்கள் இவருக்குத் தாவின.வேறு டைப் பாடல்களும் பாடினார்.அடுத்து அப்போது வந்த நிறைய புது கதாநாயகிகளுக்கும் இவர் குரல் பொருந்தி வந்தது.
அப்போது தொடங்கி இவரின் கிராஃப் மேல் நோக்கிப் போக ஆரம்பித்தது.சுசிலாவும் ஜானகியும் சற்று பின் தங்கினார்கள்.
ஆனால் முதல் கட்டமாக என்னை இவரிடம் ஈர்த்தப் பாடல்கள்:
”மண்ணுலகில் இருந்து தேவன்”(புனித அந்தோனியார் - எம் எஸ் வி)
(கேட்ட இடம்,நேரம்,தேதி இன்னும் கூட இன்னும் ஞாபகம் இருக்கிறது)
”அன்பு மேகமே” (எங்கம்மா சபதம்-விஜய பாஸ்கர்)
”ஏழு சுவரங்களில்”(அபூர்வ ராகங்கள்- எம் எஸ் வி)
(மெகா ஹிட் பாடல். புல்லரிக்கும் ஆரம்ப ஆலாபனை)
“ஆடி வெள்ளி” “வசந்த கால நதி”(மூன்று முடிச்சு -எம் எஸ் வி)
“கங்கை நதி ஓரம்”(வரப்பிரசாதம்- வி.குமார்)
“ வேறு இடம் தேடிப் போவாளோ” (சில நேரங்களில் சில மனிதர்கள்) haunting melody.கிளாசிகல் டச்சோடு வாணி அருமையாகப் பாடி இருக்கிறார். எம் எஸ் வி
தன் இசைக்கோர்வையில்(orchestration) இன்னும் கூட சோக உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம்.தன்னுடைய புளித்துப்போன ஸ்டீரியோடைப் இசையே இதிலும் வருகிறது.
இதே காலக்கட்டத்தில் இவர் பாடிய ஹிட ஆகாத நிறைய டப்பா பாடல்களும் இருக்கிறது.எல்லாம் வீண்.
அடுத்த மெகா ஹிட் ”மேகமே..மேகமே..”(பாலைவனச்சோலை).
அடுத்தக் கட்டமாக இளையராஜா இவரை மெருகேற்றி/மேம்படுத்தி நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்தார்.அதே சமயத்தில் பல இசை அமைப்பாளரின் இசைகளிலும் பாடிக்கொண்டிருந்தார்.
வீணை சிட்டிபாபு இசையமைத்த ராஜாஜியின் “திக்கற்ற பார்வதி” படத்திலும் பாடியுள்ளார்.
ஹிட் ஆன பாடல்கள்:
1.யாரது சொல்லாமல் நெஞ்சு/இலக்கணம் மாறுதோ
2.ஒரே நாள் உனை /பாரதி கண்ணம்மா/அந்தமானைப் பாருங்கள்
3.என் உள்ளில் எங்கோ/தங்கத்தில் முகம் எடுத்து/பொங்கும் கடலோசை
4.மேடையில் ஆடிடும்/எத்தனை மலர்கள்/அமுத தமிழில் எழுதும்
5.கங்கை யமுனை/நானா பாடுவது நானா/அம்மாணை அழகு
"மண்ணுலகில் இருந்து” -புனித அந்தோனியார்-1977
"அன்பு மேகமே” - எங்கம்மா சபதம் -1974
வித்தியாசமான மெட்டு. வாணி/பாலு இருவரும் அருமை.
”அம்மாணை அழகுமிகு கண்”-அவன் ஒரு சரித்திரம்-1977
(இந்தப் பாட்டின்(எம் எஸ் வி) தாக்கத்தில்தான் “பொன்மானே சங்கீதம் பாடவா”
பாட்டை ராஜா போட்டிருப்பார் என்பது என் யூகம்.)
"என் கல்யாண ” -அழகே உன்னை ஆராதிக்கிறேன்-1978
வாணியின் குரலைக் கேளுங்கள்.மிகவும் வித்தியாசமாக தெரியும் அருமை.ராஜாவின் இசைக்கோர்ப்பைக் கேளுங்கள்.மகழ்ச்சிக் கொப்பளிக்கும் இளம் பெண்ணின் காதல் மனத்தை பிரதிபலிக்கும் வண்ணமயமான துள்ளிக்குதிக்கும் இசை. மத்யமாவதி ராகத்தில் போடப்பட்டுள்ளது.
குறை: கடைசியில் பல்லவி பாடி முடியும் இடத்தில் வாணிக்கு மூச்சு வாங்குவது கூட பாட்டில் கேட்கிறது.
வாணிஜெயராம் குரல் வீணையின் நாதம் போல் ரீங்காரமிடும் குரல். ஆண்பாடகர்களில் அது போன்ற குரல் ஹரிகரனுக்குத்தான் இருக்கிறது.
ReplyDeleteஒரே வானம் ஒரே பூமி படத்தில் ஒரு பாடல்
ReplyDelete'மலைராணி முந்தானை சரிய சரிய' இனிமையான பாடல்.
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ பாட்டு கூட அருமையான பாட்டு
ReplyDelete”நானே நானா”வை மிஸ் பண்ணிட்டீங்களே? அப்போது எல்லா லைட் ம்யூஸிக் கச்சேரிகளிலும் அந்தப் பாடல்தான் பாடுவார்களாம், என் சித்தப்பா சொல்வார்!
ReplyDeleteபாட்டும் அருமையாக இருக்கும்! “மெல்ல மெல்ல மாறினேனா” என்று கீழ்ஸ்தாயியில் கேட்டால் அற்புதமாக இருக்கும்!
அது சரி, உங்க “ரேஷன்” கடைக்கு லீவு விட்டுட்டீங்களா? ரஹ்மானின் ‘ரேஷன்” பத்தி சொல்ல ஆரம்பிச்சா மெகா மாலே தேவைப்படுமே?
நானே நானா பாடல் சிறு வயதில் நான் பார்த்த ஒரு சர்க்கஸில் கூட வாசிக்கக் கேட்டது ஞாபகம் வருகிறது. (ஆனால் அது இன்ஸ்ட்ருமெண்டல் மட்டுமே). எனது ஃபேவரிட் வாணி ஜெயராம் பாடல் ’பாரதி கண்ணம்மா’ அப்புறம் ’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது..’
ReplyDeleteதிரை இசையில் எங்களுக்குத் தெரியாத விஷயங்களை தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
கோவி.கண்ணன் said...
ReplyDelete//வாணிஜெயராம் குரல் வீணையின் நாதம் போல் ரீங்காரமிடும் குரல். ஆண்பாடகர்களில் அது போன்ற குரல் ஹரிகரனுக்குத்தான் இருக்கிறது//
வாங்க கோவி.கண்ணன்.”வீணை” நூறு சதவீதம் சரி.அதை நான்”ஜலதோஷம்” போன்ற குரல் என்று சொல்லிவிட்டேன்.ஹ்ரிஹரன் குரலும் நீங்கள் சொல்வது மாதிரிதான்.ஆழமாக உள் வாங்கினால் இது மாதிரி எல்லோரையும் பிரித்து மேய்யலாம்.
நன்றி.
கோவி.கண்ணன் said...
ReplyDelete//ஒரே வானம் ஒரே பூமி படத்தில் ஒரு பாடல்.'மலைராணி முந்தானை சரிய சரிய' இனிமையான பாடல்.//
ஆமாம்.நயாகரா நீர்விழ்ச்சியைப் பார்த்துப் பாடுவது?
சின்ன அம்மிணி said...
ReplyDelete//இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ பாட்டு கூட அருமையான பாட்டு//
சூப்பர் பாட்டு.காட்சி அமைப்பும் அருமை.
ரவிஷா said...
ReplyDelete//”நானே நானா”வை மிஸ் பண்ணிட்டீங்களே? அப்போது எல்லா லைட் ம்யூஸிக் கச்சேரிகளிலும் அந்தப் பாடல்தான் பாடுவார்களாம், என் சித்தப்பா சொல்வார்!//
சில பாடல்கள் என் சொந்த ரசனையின் மூலம் தேர்வு செய்வதால் இது பின்னால் போய்விட்டது.
இதுவும் அருமையான பாடல்.
//பாட்டும் அருமையாக இருக்கும்! “மெல்ல மெல்ல மாறினேனா” என்று கீழ்ஸ்தாயியில் கேட்டால் அற்புதமாக இருக்கும்!//
ஆமாம்.ஜாஸ் டைப் இசை.
”கீழ்ஸ்தாயியில்”நானும் ரசித்திருக்கிறேன். ஆல் இந்தியா ரேடியோவில் விரும்பிக் கேட்டவர்கள் என கிட்டத்தட்ட 100 பேரைப் படிப்பார்கள் இந்தப் பாட்டிற்கு.
//அது சரி, உங்க “ரேஷன்” கடைக்கு லீவு விட்டுட்டீங்களா? ரஹ்மானின் ‘ரேஷன்” பத்தி சொல்ல ஆரம்பிச்சா மெகா மாலே தேவைப்படுமே?//
அஹா...!வேண்டாம் தல.
சொல்லலாம்.ஆனா அனானி பின்னூட்டம் போட்டு படுத்துவார்கள். யூ டூப்பில் பார்க்கிறீர்களா.”டமால் டூமில்” இந்த மாதிரி சண்டைகள்.
June 25, 2010 9:40 PM
சித்ரன் said...
ReplyDelete//நானே நானா பாடல் சிறு வயதில் நான் பார்த்த ஒரு சர்க்கஸில் கூட வாசிக்கக் கேட்டது ஞாபகம் வருகிறது. (ஆனால் அது இன்ஸ்ட்ருமெண்டல் மட்டுமே). எனது ஃபேவரிட் வாணி ஜெயராம் பாடல் ’பாரதி கண்ணம்மா’ அப்புறம் ’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது..’//
சரியே.
//திரை இசையில் எங்களுக்குத் தெரியாத விஷயங்களை தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.//
செய்கிறேன் நன்றி.நான் சொன்னற்போல் சில வலைகளைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது.
வாணி எனக்கு மிகவும் பிடித்த பாடகர். ரொம்ப நன்றி ரவி.
ReplyDeleteKrishnan said...
ReplyDelete//வாணி எனக்கு மிகவும் பிடித்த பாடகர். ரொம்ப நன்றி ரவி//
நன்றி கிருஷ்ணன்.
வாணி ஜெயராமின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம் அல்ல..வேலூர்.அவர் பாடிய முதல் தமிழ்ப்பாடல் 'தாயும் சேயும்' என்ற படத்திற்காக.எனினும், 'மல்லிகை..' பாடல் மூலம்தான் தமிழில் பிரபலமாகினார்.
ReplyDeleteநல்ல பதிவு.சில அருமையான பாடல்கள் விட்டுப்போயிருக்கின்றன.
'சுகம் சுகமே', 'மயக்கமா ஒரு தயக்கமா'-இதுபோன்று பல பாடல்கள் ராஜா இசையில் அவர் பாடியுள்ளார்.
மற்றபடி, 'அம்மானை..' பாடல் தர்மவதி ராகத்தில் அமைந்தது.'பொன் மானே..' பாடல் சங்கராபரணம்(அதாவது தாங்கள் குறிப்பிடும் பாடல் 'நான் சிவப்பு மனிதன் ' படப்பாடலாக இருக்கும் பட்சத்தில்..).இரண்டு ராகங்களுக்கும் தொடர்பு இல்லை..
நன்றி!
Raj said...
ReplyDelete//வாணி ஜெயராமின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம் அல்ல..வேலூர்.அவர் பாடிய முதல் தமிழ்ப்பாடல் 'தாயும் சேயும்'//
தகவலுக்கு நன்றி சார்.
//'சுகம் சுகமே', 'மயக்கமா ஒரு தயக்கமா'-இதுபோன்று பல பாடல்கள் ராஜா இசையில் அவர் பாடியுள்ளார்//.
'சுகம் சுகமே'.1980களில் பாட்டோடு பாட்டாக போனது. சிலோனில் போடுவார்கள். வித்தியாசமான இசை. ஆரபி ராகம்? ”ஏரிகரையின் மேல் போறவளே” பாட்டின் மெட்டை உபயோகித்துள்ளார்.
//மற்றபடி, 'அம்மானை..' பாடல் தர்மவதி ராகத்தில் அமைந்தது.'பொன் மானே..' பாடல் சங்கராபரணம்(அதாவது தாங்கள் குறிப்பிடும் பாடல் 'நான் சிவப்பு மனிதன் ' படப்பாடலாக இருக்கும் பட்சத்தில்..).இரண்டு ராகங்களுக்கும் தொடர்பு இல்லை.//
நான் யூகித்தது ராகத்தின் அடிப்படையில் அல்ல. ஒரு common senseல் பட்ட சாயல்.தபலா based என்பதால்.
இதே மாதிரி “ கண்ணாலே பேசி பேசி கொல்லாதே” (அடுத்த வீட்டுப் பெண்)
பாட்டின் தாக்கத்தில் “ராஜா ராஜா சோழன்” பாட்டுப் போட்ட்தாக இசை வட்டாரத்தில் சொல்லுவார்கள்.
aanaal ”ராஜா ராஜா சோழன்” stunning composition.
நன்றி ராஜ்.
June 29, 2010 9:26 PM
'சுகம் சுகமே' சுத்த சாவேரியில் அமைந்தது..
ReplyDeleteதாள அடிப்படையில் வைத்துப் பார்த்தாலும் எனக்கு 'அம்மானையும்' 'பொன்மானேயும்' வித்தியாசமாகவே கேட்கிறது..
வாணி ஜெயராம் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு:
ReplyDeletehttp://ragamanjari.blogspot.com/2010/03/power-of-music.html
முடிந்தால் படிக்கவும்.நன்றி!
Raj said...
ReplyDelete//'சுகம் சுகமே' சுத்த சாவேரியில் அமைந்தது..//
தகவலுக்கு நன்றி.
//தாள அடிப்படையில் வைத்துப் பார்த்தாலும் எனக்கு 'அம்மானையும்' 'பொன்மானேயும்' வித்தியாசமாகவே கேட்கிறது..//
ஓகே.ஆனால் இரண்டுக்கும் ஏதோ ஒரு
distance cousin உறவு இருக்கிறது போல “எனக்கு” ஒரு உணர்வு.
நன்றி.
உங்கள் வலைக்கு(வாணிஜெயராம்) வந்து படித்துவிட்டு கருத்துச்
சொல்கிறேன்.
நன்றி ராஜ்.
இவர் பாடிய பல பாடல்கள் இவர் பாடியதுதான் எனத் தெரியாமலே ரசித்திருக்கிறேன் .. எனது ஃபேவரைட் ‘நானே நானா’வும், ‘மல்லிகை’யும்தான்...
ReplyDelete‘ராமனின் மோகனம்’ இவர்தானே...???
வீணை ஒப்பீடு அருமை... சொல்ல நினைத்து முட்டிக் கொண்டிருந்ததை கோவியார் சொல்லிவிட்டார்...
’உதிடிப்பூக்களில்’ வரும் ‘கல்யாணம் பாரு’ பாடியது யார்?
தமிழ்ப்பறவை said...
ReplyDeleteவாங்க தல. நலமா?
//‘ராமனின் மோகனம்’//
ராமனின் மோகனம் ”ஜானகி” மந்திரம் ஆச்சே.
//வீணை ஒப்பீடு அருமை... சொல்ல நினைத்து முட்டிக் கொண்டிருந்ததை கோவியார் சொல்லிவிட்டார்..//
கரெக்ட்.
//’உதிடிப்பூக்களில்’ வரும் ‘கல்யாணம் பாரு’ பாடியது யார்?//
எஸ்.பி.ஷைலஜா.இவருக்கு வாணியின் ஒரு தூரத்து கசின் குரல் உண்டு.
திரையிசையில் வாணிஜெயராமின் சங்கீதக்குரலுக்குத் தனி முத்திரை உண்டு அதே போல் இந்தக் குரலை அப்படியே மாற்றி எங்கள் ராகதேவன் படைத்த தங்க மகன் படத்து இசையில் ஒரு பாப் பாடகியின் குரலிலும், நானே நானா பாடலிலும் வித்தியாசப்பட்டு வெளுத்துக் கட்டுவார். உங்கள் தொகுப்பு அருமை தல
ReplyDeleteநன்றி கானா பிரபா.
ReplyDelete//1973ல் வாணிஜெயராம் வந்தாலும் 1974ல்தான், “மல்லிகை என் மன்னன்” என்னும் தீர்க்க சுமங்கலி பட பாடல் //
ReplyDeleteஇதே டைப்பில் இன்னொரு பாடல், படம் மன்னவன் வந்தானடி என்று நினைக்கிறேன்... அந்த பாடல் “மல்லிகை முல்லை பூப்பந்தல்”... இதுவும் கிறங்கடிக்கும் பாட்டு ரவிஜி...
//இதே டைப்பில் இன்னொரு பாடல், படம் மன்னவன் வந்தானடி என்று நினைக்கிறேன்... அந்த பாடல் “மல்லிகை முல்லை பூப்பந்தல்”... இதுவும் கிறங்கடிக்கும் பாட்டு ரவிஜி... //
ReplyDeleteஆமாம் கோபி. சொல்லிக்கொண்டே போகலாம்.எனக்குப் பிடித்தது என் கல்யாண வைபோகம்.
நன்றி.