Wednesday, June 16, 2010

Spam mail - எனக்கு ஓவராகத் தெரியவில்லை.

வயிறு என்ற ஒன்று இருந்தால் “காலைக் கடன்” என்ற ஒன்று வருவது போல் ஈமெயில் இருப்பவர்களுக்கு தவறாமல்“ஸ்பேம்” என்ற வகையில் மெயில்கள் மூன்றோ நான்கு தினமும் வந்துவிடுகிறது.97% மக்கள் கரப்பான்பூச்சி அடிப்பதைப்போல் ஒரே அடியாக அடித்து இதை அழித்துவிடுவார்கள்.

இது தவறு என்பதை என் அனுபவத்தைப் படித்த பிறகு உணர்வீர்கள்.

 நான் எல்லாவற்றையும்  படித்துவிட்டு ”சே பாவம்” என்று நினைப்பது  உண்டு. சில சுவராஸ்யமான சம்பவங்கள் இருக்கும்.முக்கால்வாசி லாட்டரி.   பரிசு கோடிகளில்.சில வெகுளி வெளி நாட்டுப் பெண்கள் சொத்துக்களோடு அனாதையாகி விடுவார்கள்.நாம் அவர்களை த்ரிஷாஅல்லது தமன்னாவாகவோ பாவித்துக்கொண்டு அவளைக் காப்பாற்றி பரிசம் போட்டு கல்யாணம் செய்து சொத்தை அடைய வேண்டி இருக்கும்.

இதை  யாரும் முயற்சி செய்வதில்லை.நீங்கள் இதை டுபாகூர் என்று அழித்துவிடுவீர்கள் .இது தவறு என்பதை என் அனுபவத்தைப் படித்த பிறகு உணர்வீர்கள்.

இவர்கள் வசிக்கும் மற்றும் பணம் முடங்கி இருக்கும் இடங்கள் "El Algibe" C.Spartivento"Ivory cape -de-demanto" போன்ற இடங்கள்.”டிஸ்கவரி” சேனல்காரர்களுக்குக் கூடத் தெரியாது. இங்கு நாலு தென்னைமரம் சேர்ந்தார் போல் இருக்க இடம் இருக்காது.ஆனால் இவர்கள், இவர்கள் வங்கி,இவர்கள் அட்டார்னி இருப்பார்கள்.இங்குதான் இவர்கள் அனாதை ஆவார்கள் என்று நினைத்து விட்டு விடுவீர்கள்.

இது தவறு என்பதை என் அனுபவத்தைப் படித்த பிறகு உணர்வீர்கள். 


ஆனால்  நேற்று எனக்கு வந்த ஸ்பேம் மெயிலை சீரியசாக எடுத்துக்கொண்டு விறுவிறுவென காரியத்தில் இறங்கினேன்.சில சமயம்  ரிஸ்க்கில்தான் ரிவார்ட் இருக்கிறது.பாசீட்டீவ்வாக நினைத்து இதில் இறங்கினேன்.

ஒரே வாரத்தில் காரியம் கச்சிதமாக  எல்லாம் முடிந்துவிட்டது.

                                                        --------

””Foggia-de-Passero" ல  Spainகிட்ட ஒரு வேல இருக்கு போயிட்டு வந்துடறேன்.  நாலு நாள் ஆகும்.செல்லுல கூப்பிட  வேண்டாம்.யாராவது கேட்ட “செம்மொழி மாநாட்டுக்கு” போய் இருக்கிறதா சொல்லு” மனைவியிடம் சொல்லிவிட்டு மீனாம்பாக்கத்தில் விமானம் ஏறுகிறேன் ”டுனீஸ் அன்னாபா” என்ற பெயரில். மூன்று விமானம் மாறி Foggia-de-Passero இறங்குகிறேன்.

முகத்தில் பொய்தாடி மீசை ஒட்டிக்கொண்டு வெளியே வருகிறேன். ஒரு மாதிரி விந்தி விந்தி நடக்கிறேன்.அப்போது இரு கருப்பர்கள் எதிர்படுகிறார்கள்.

”இன்றைக்கு மழை வருமா” கேட்கிறார்கள்
“நான் விரும்புவது ஜெல் பேனா” என்கிறேன்

இருவரும் சிரித்தப்படி நட்பாக கை குலுக்குகிறோம்.அங்கிருந்து என்னை ஒரு தீவுக்கு BMWல் அழைத்துக்கொண்டுப் போகிறார்கள்.பெரிய பங்களா வாசலில் “ராபின்சன் டேவிட் “ அட்டார்னி ஜெனரல் என்ற போர்டு மாட்டிய வீட்டின் முன் கார் நிற்கிறது.

அட்டார்னி ஜெனரல் ராபின்சன் டேவிட் என்னை வரவேற்கிறார்.

”விபத்தில் இறந்தபோனவரு கிட்டத்தட்ட 3000ஆயிரம் கோடி ரூபாய்  Bank of Foggia-de-Passero  டெபாசிட்டா விட்டுட்டு போயிட்டாரு.அவருக்கு  யாரும் வாரிசு இல்ல. நீங்கதான் வாரிச நடிக்கப்போறீங்க..அதாவது அவரோட ஒன்னு விட்ட சித்தப்பா மகன் டுனீஸ் அன்னாபா. அதுக்கு வேண்டிய லீகல் டாக்குமெண்ட் எல்லாம் ரெடி. கையெழுத்துபோட்டுட்டுக்  பேங்குக்குக் கிளம்பலாம்.”


”ஓகே டன்” என்றேன்

இறந்துப் போனவரின் சமாதியில் ஒரு மலர் வளையம் வைத்துவிட்டு வங்கிக்குக் கிளம்பினோம்.

”இவரின் சாவு ரொம்பவும் துரதிருஷ்டமானது.ஹீ இஸ் அ ஜெம்  ”என்றார் வங்கியின் மேலாளர்.(இவரும் நெட்வொர்க்கில் இருக்கிறார்)

”ஆமாம் ...” என்று “உச்சுக்கொட்டிக்கொண்டே எல்லா இடங்களிலும் கையெழுத்துபோட்டேன்.

அடுக்கப்பட்டிருந்த பணப் பெட்டிகளைப்  வாய் பிளக்கப் பார்த்தேன்.

“வேற அசைன்மெண்ட் இருந்தாலும்  ஜஸ்ட் ஒரு ஈமெயில்ல சொன்னப் போதும். உதவி செய்ய காத்திருக்கேன்”  என்றேன்

“கண்டிப்பா...”

எல்லாம் சுபமாக முடிந்தது.(ஆனால் கிளம்பும் சமயம் கொஞ்சம் பயம்தான்.) அவர்கள் கமிஷன் போக  எனக்கு 2000 கோடி கொடுத்தார்கள்.விமானத்தில்  எல்லாப்பெட்டிகளையும் சரக்கு  என்ற பேரில் பதிவு செய்து சென்னை வந்து சேர்ந்தேன்.இங்கு எந்தவித தொல்லையும் இல்லை.அவர்களின் நெட் வொர்க் கச்சிதம்.

கால் டாக்சியில் வரும்போது,பாதிப் பணத்தை நம்பிக்கையான  சுந்தரம் பைனான்சிலும் மீதி்யை வங்கியிலும் போட வேண்டும் என்று மனதில் நினைததுக்கொண்டேன்.தாடியையும் மீசையையும் கூவத்தில் எறிந்துவிட்டேன்.அந்த ஈமெயிலை அழித்துவிடவேண்டும்.


கரப்பான் பூச்சியை அடிப்பதற்கு முன் சற்று  Positiveவாக யோசியுங்கள்.

10 comments:

  1. கதை நல்ல இருக்கு.

    ReplyDelete
  2. நன்றி ராபின்.

    ReplyDelete
  3. கதை சும்மா வழுக்கிக் கொண்டு எந்த இடையூறுமில்லாமல் போகிறது. இடையிடையே புன்முறுவலிக்காமல் இருக்க முடியவில்லை என்கிற இயலாமையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முடிவில் எந்த அதிர்ச்சித் திருப்பமும் இல்லாமல் முடிப்பதும் ஒரு (ஓர்?) அழகாகத்தான் இருக்கிறது.எதைப் பற்றியும் அழகாகக் கதைபண்ணலாம் என்பதற்கு இந்தக் கதை ஓர் உதாரணம். பாராட்டுகள்.

    ReplyDelete
  4. udhaya said...

    // good thinking. but........//

    வருகைக்கு நன்றி. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. Very refreshing&original and extremely enjoyable..
    ரவி நிறைய்ய்ய்ய்ய்ய எழுதுங்கள்..
    அன்புடன்,

    ReplyDelete
  6. Blogger Ganpat said...

    // Very refreshing&original and extremely enjoyable..//

    வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி கண்பத்.
    // ரவி நிறைய்ய்ய்ய்ய்ய எழுதுங்கள்..//
    என் ப்ளாக்கில் சிறுகதைகள் நிறைய இருக்கிறது. படித்தீர்களா?இசைப் பற்றியும் இருக்கிறது.

    சில சமயம் எழுதமுடியாமல் போவதற்க்குக் காரணம் கற்பனை வறட்சிதான். ஊக்கத்திறகு நன்றி.



    அன்புடன்,

    ReplyDelete
  7. I have already bookmarked your blog,Ravi.
    It would be my plaesure to share my views here
    Best regards,
    Ganpat

    ReplyDelete
  8. Ganpat said...

    // I have already bookmarked your blog,Ravi.//

    Thanks a lot.

    // It would be my plaesure to share my views here//

    Please do not miss to give comment on my posts.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!