Saturday, June 26, 2010

”அவதார்” ராவணன் -விமர்சனம்

”நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் ” என்ற தகவல் தொடர்பு சம்பந்தமான ஆட்டோமேடிக் குரல் ஒன்றை செல்லில் அடிக்கடி கேட்கலாம்.இந்தப் படத்தை பார்த்துக்
கொண்டிருந்த போது அப்படித்தான் தொடர்பு எல்லைக்கு வெளியே 2000 கி.மி. தூரத்தில் சுத்தமாக ஒட்டாமல் இருந்தேன்.


இத்தனைக்கும் இப்படத்தில் தமிழ்நாடு சம்பந்தமான திருநெல்வேலி,பிரபு,கார்த்திக்,ப்ரியா மணி,விக்ரம்,வையாபுரி,பரிசல்,காடு,அருவி,மலை கிராமம்,குகை, இருட்டு( மணிரதனம் அல்ல)தாவணி,மல்லிகைப்பூ,மணிரத்னம்,சுஹாசனிஎல்லாம் போட்டு அடைத்து இருக்கிறார்கள்.

ஆனால் ”அவதார்” பட கிரகவாசிகளைப் போல் படு அந்நியமாக இருக்கிறார்கள்.பேசுகிறார்கள்.கம்புயூட்டர் வடிவமைத்த டான்ஸ்ஆடுகிறார்கள்.கோனாரக் கோவில் அருகே கல்யாணம் நடக்கிறது.சுத்தமாக வட்டரத்தன்மை காணவில்லை.காட்டும் வட்டாரத் தன்மையிலும் ஒரு Hi-Fiத் தனம்.

ராமாயணத்தின் கதைதான் ஒன் லைன் ஸ்டோரியாக பெரிய கேன்வாசில் வழக்கமான மணியின் non-linearல் சொல்லப்பட்டிருக்கிறது.ஆழம் இல்லை.ஏன்? எதற்கு? என்ற அடிப்படையில்லாத சம்பவங்கள் non-linear narration ல் நீர்த்துப் போகிறது.

பழங்குடி மக்களின் தலைவன் தங்களுக்கு போலீஸ் இழைக்கும்/இழைத்த அநீதிக்கு எதிராக பழி வாங்கும் நோக்குடன் SPயின் மனைவியை (ராகினி) கடத்தி காட்டிற்கு கொண்டு சென்று 14 நாட்கள் வன வாசம் வைத்துவிட்டு திருப்பி அனுப்புகிறான்.இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை.  கடைசியில் என்ன ஆகிறது? முடிவைத்திரையில் பார்க்கவும்.

வனவாசத்தில் ராகினிக்கும் வீராவுக்கும் ஏதாவது கெமிஸ்டரி,பிசிக்ஸ்,ட்ரிக்னாமெண்டரி எப்படி இருக்கிறது என்பதை பிரேமுக்கு பிரேம் காவியத்தன்மையுடன் சொல்ல விழைகிறார்கள்.

சொன்னார்களா? சுத்தமாக இல்லை.

படத்தில் சுத்தமாக ஜீவனே இல்லை. Soul is dead.படு செயற்கையான டப்பிங் பட mismatch வசனங்கள் அண்ட் mismatch உணர்ச்சிகள்.மெயின் கதைக்கு அணைந்து வராத காட்சிகள்.மெயின் கதாபாத்திரங்களும் அவர்கள் உணர்ச்சிகளும் வெறும் பில்ட அப்தான்.சுத்தமாக ஒட்டவே இல்லை.

சாதாரண வசனங்களை ரொம்ப படுத்தி எடுத்து ஹாலிவுட் ஸ்டைல் ஆக்கி.....?வசனங்களுக்கு சுஹாசினி கோனார் நோட்ஸ் போட்டால் நல்லது.காட்சிகளை ஆழமாக உள் வாங்காமல் அசட்டுத்தனமான அச்சு பிச்சு வசனங்கள்.

அருமையான பின்னணிதான் நம்மை பரிதாமாக கெஞ்சி ஒரளவுக்கு ஒட்ட வைக்கிறது.

மூன்று மொழியில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு, தமிழ்+ஹிந்தி+தெலுங்கு மூன்றையும் கூட்டி காட்சி அமைப்பு+எமோஷன்+கதாபாத்திரங்கள்+லோகேஷன்+வசனம்+உடை போன்றவைகளுக்கு ஒரு ஆவரேஜ் எடுத்து குழம்பி,குதறி ரெண்டுங்(மூன்று?) கெட்டானாக படம் பல் இளிக்கிறது.

ஆனால் ஓவர் பிலட் அப்போடு இளிக்கிறது.

பாடலகள் ஆவரேஜ்தான். வழக்கமாகவே ரஹ்மான தமிழ்+இந்தி+குளோபல்= ஆவேரஜ் எடுத்து பாட்டைக் கம்போஸ் செய்வார்.இதிலும் அதே.அதே ரெண்டுங்கெட்டான் தனம். ”உசிரே போகுது” ”கெடக்காரி”பாடல்கள் ஓகே. “கள்வரே” பழைய எம் எஸ் விஸ்வநாதனின் பாடலை பாலிஷ் செய்து போடப்பட்டது? பின்னணி நிறைய இடங்களில் அமைதியாகவே இருக்கிறது.”கோடுபோட்டா” பாடல் அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது..

அசோகவனத்து Lux Supreme சீதாவாக ஐஸ் வருகிறார்.நடிப்பு? விக்ரம் அச்சு அசலாக வீராவாக வருகிறார். பாராட்டுக்கள்.உழைப்பு எல்லாம் வீண்.
பிருதிவிராஜ் நல்ல நடிப்பு. தலையில் கொண்டைப் போட்டு கையில் வில் கொடுத்தால் அப்படியே சாட்சாத் ராமர்பிரான்தான். மழுங்க மழித்த சாந்தமான ராமன் முகம்.

அனுமான் கார்த்திக் காமெடி தெலுங்கு டப்பிங் டைப் ஹிம்சை.

தியேட்டரில் எல்லோரையும் கலகலக்க வைத்தது ”கதவைத் திற காற்று வரட்டும்” ஹிரோயின் ரஞ்சிதா. முகம் காட்டும் போதெல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. ப்ரியா மணியும் பிரபுவும் குறுக்கும் நெடுக்கும் வந்து போகிறார்கள்.

அருமையான லோகேஷன்.அருமையான கேமரா, விக்ரம் நடிப்பு.

மொத்தத்தில் மணிரத்னம் “பிலிம்” காட்டி வா(லி)ட்டி வதம் செய்துவிட்டார்.

9 comments:

 1. இந்த படத்தோட கான்செப்டே தப்பு நண்பா, சீதை ராவணன் மீது ஆசை படுவது போல் காட்டி இருக்கிறார்கள்

  ReplyDelete
 2. Sasikumar., that is true in story Ramayam ., Because of RAavan did loved with Seetha and seetha also falled into that love with Raavan due to that reasons every year we burn Raavan efigue on Deepavali did you know that

  dont worry sasi all these kind of Raamayan, mahabarath and these kind of stories are myths just epics.

  ReplyDelete
 3. சசிகுமார் said...

  //இந்த படத்தோட கான்செப்டே தப்பு நண்பா, சீதை ராவணன் மீது ஆசை படுவது போல் காட்டி இருக்கிறார்கள்//

  நண்பரே நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்.சினிமாவில் எல்லாம் நடக்கும்.

  நன்றி.

  ReplyDelete
 4. வருகைக்கு நன்றி அட... கொய்யால.
  கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 5. தங்கள் சுவாரஸ்யமான விமரிசனம் படத்தை உடனே பார்க்கத் தூண்டுவதாக இருக்கிறது - டிவிடியில்.

  ReplyDelete
 6. சித்ரன் said...
  //தங்கள் சுவாரஸ்யமான விமரிசனம் படத்தை உடனே பார்க்கத் தூண்டுவதாக இருக்கிறது - டிவிடியில்//

  டிவிடில பாக்கலாம்.

  ReplyDelete
 7. vimarsanam nalla irukku.Indhi raavan
  is worst.Fans are very angry on Mani.

  ReplyDelete
 8. கிழித்திருக்கிறீர்கள். அதற்குரிய படம்தான்.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!