Wednesday, February 17, 2010

சுதா- ராஜேஷ் பத்து ரூபாய் நோட்டில்

கேனரா பேங்க் கேஷ் கவுண்டரில்
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று அலசப்பட்டு
என் கைக்கு வந்த நோட்டில்
ராஜேஷ் சுதாவைக் காதலிப்பதாக 
சொல்கிறார்


















 புத்தம் புது காதல்

பழசாகிவிடலாம்
காட்டாங்குளத்தூர் வருவதற்கு முன்பே

காஷ்மீர் முதல் கன்யாகுமரி
ராஜேஷ் சுதாவை காதலித்தபடிதான்
போவார்

மகாத்மாவும் புன்னகையுடன்
தொடர்வார்

சுதாவிடம் இது போகுமா
என்று தெரியாது

ஆனால் இந்த கவிதை எழுதி
முடித்தவுடன்
ஆவின் பால் போடும்
கிருஷ்ணகுமாரிடம்
போய்விடுவார்கள்


15 comments:

  1. அருமையான கவிதை. நமது மக்கள் நமது ரூபாய் நோட்டின் மேல் வைத்திருக்கும் மதிப்பு ரொம்ப கம்மி.

    ReplyDelete
  2. காதலின் போது தெரியாத மதிப்பு
    மணமான பின் தெரியும்.

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. நன்றி க.இராமசாமி.கவிதைக்கு வேறு ஒரு பரிமாணமும் இருக்கிறது என்று உண்ர்ந்தேன்.

    ReplyDelete
  4. நன்றி அக்பர்.வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  5. அக்பர்/ராமசாமி,

    கவிதை வரிகளை மாற்றி விட்டேன்.மன்னிக்க.முதல் எழுதிய சில வரிகள் திருப்தி அளிக்கவில்லை.

    முடிந்தால் கருத்துச்சொல்லவும்.

    ReplyDelete
  6. இப்போ இருக்கற வரிகள் பழசை விட நல்லாயிருக்குங்க...:)

    ReplyDelete
  7. TKB காந்தி said...
    //இப்போ இருக்கற வரிகள் பழசை விட நல்லாயிருக்குங்க...:)//

    கரெட்டுங்க.ரெண்டு தடவை அப்லோடு ஆகி டெலிட் செய்து மறுபடியும் அப்லோட் செய்தேன்.

    நன்றி.

    ReplyDelete
  8. ம்ம் ரூபாய் நோட்டோடு போச்சே ன்னு சந்தோஷப் படுங்க.பிரம்மச்சாரியா உட்கார்ந்திருக்கும் பிள்ளையார் கோயில் மண்டபத்திலும்னா எழுதறதுகள்.

    'ஜே ஜே 'படம் பாக்கலயோ இரவிஷங்கர்

    ReplyDelete
  9. கண்மணி/kanmani said...
    //ம்ம் ரூபாய் நோட்டோடு போச்சே ன்னு சந்தோஷப் படுங்க.பிரம்மச்சாரியா உட்கார்ந்திருக்கும் பிள்ளையார் கோயில் மண்டபத்திலும்னா எழுதறதுகள்//

    கண்மணி பின்வரும் பதிவு படியுங்கள்.கமெண்ட் போடுங்கள்.

    அனானி கிறுக்கல்கள்/கிறுக்கன்கள்
    http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_19.html

    //'ஜே ஜே 'படம் பாக்கலயோ இரவிஷங்கர்//

    இல்லை.

    நன்றி.

    ஒரு குட் நியூஸ். என் பாலோவர்கள்
    இப்போது தெரிகிறார்கள். திவ்ய தரிசனம்.கூகுள் சரி செய்துவிட்டது.

    ReplyDelete
  10. :))))))

    ஜூப்பர்...ரசித்து படித்தேன்

    ReplyDelete
  11. வாங்க வசந்த்,

    வருகைக்கு நன்றி. இதன் ஒரிஜனல் கவிதையைப் படித்தீர்களா? இன்று போட்டது.
    இந்த கவிதை திருத்தி திருத்தி ஒரு மாதிரியாகிவிட்டது.

    நன்றி.

    ReplyDelete
  12. நன்றி ராதாகிருஷ்ணன் சார்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!