Sunday, February 28, 2010

நானும் சுஜாதாவும்


 போட்டோவில் எஸ்.ரங்கராஜனும் (நீல வட்டத்தில்)ஜெ.அப்துல் கலாமும்(சிவப்பு)

 சுஜாதாவின் மரணம் பற்றிய செய்தியை(27-02-2008) டீவியில் பார்த்துக்கொண்டிந்தேன். என் முகவாட்டத்தைப் பார்த்து விட்டு என் மகன் கேட்டான்” ஏம்ப்பா... இப்படி பீல் பண்ற....?”

அடுத்த நிமிடம் அவனை அழைத்துக் கொண்டுபோய் மர பீரோவில் அடுக்கப்பட்டிருந்த புத்தங்களை காட்டி “ இவ்வளவு புக்ஸ் படிக்க வைச்சது..இவருதான்” என்றேன். “அவருதான் எழுதவும் வச்சாரு இல்ல” முடித்தான்.

கணையாழியின் கடைசிப் பக்கம், பத்தி எழுத்து,சிறுகதை,
பெருங்கதை,கட்டுரைகளில்........ “புதுமைப் பித்தனைப் படித்துவிட்டுதான்..பேனாவை எடுக்க வேண்டும் “ உடனே பு.பி.படித்தேன். ஞானக்கூத்தனின் “அன்று வேறு கிழமை.”என்பார். படித்தேன்.”மாபசான் கதைகளில் வரும் வசீகரம்”என்பார். படித்தேன். இது போல“அந்த பாரில் மோசார்ட்டின "The Magic Flute"”. கேட்டேன்.இது போல் நிறைய ”ன்பார்” நான் “டித்தேன்”.

 சுஜாதாவையும் படித்தேன் அடுத்தக் கட்டமாக சுஜாதா மேற்கோள் காட்டியதையும் வாசித்து  அதற்கடுத்த கட்டமாக சுயமாக தேர்ந்தெடுத்து வாசிக்கவும் ஆரம்பித்தேன்.


இன்னும் பல பேர் சுஜாதாவை விட்டு வெளிவரவில்லை.

மேல் உள்ள போட்டோ சரியாக தெரிய:

போட்டோ   இங்கு போனவுடன் இதன் மேல் டபுள் கிளிக்குங்கள். தெளிவாகத் தெரியும்


22 comments:

  1. //இன்னும் பல பேர் சுஜாதாவை விட்டு வெளிவரவில்லை.//

    ஆமாம் தல உண்மை தான்..

    ReplyDelete
  2. அம்புட்டு பெர்ர்ர்ரீய ஆளா நீங்க???

    வயசுல கேட்டேன்:)

    ReplyDelete
  3. சுஜாதாவுக்கு ஈடு இணையாரும் இல்லை. உங்கள் கருத்து உண்மை பலர் சுஜாதவை விட்டு வெளிவரவில்லை.

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள்

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  5. //மர பீரோவில் அடுக்கப்பட்டிருந்த புத்தங்களை காட்டி “ இவ்வளவு புக்ஸ் படிக்க வைச்சது..இவருதான்” என்றேன். “அவருதான் எழுதவும் வச்சாரு இல்ல” முடித்தான்.//

    இந்த வரிகளே கவிதையா இருக்கே ரவிசங்கர்... சூப்பர்....

    //இது போல“அந்த பாரில் மோசார்ட்டின "The Magic Flute"”. கேட்டேன்.இது போல் நிறைய ”ன்பார்” நான் “டித்தேன்”.//

    ரவியில் நிறைய சுஜாதா எட்டி க்கிறார்...

    //இன்னும் பல பேர் சுஜாதாவை விட்டு வெளிவரவில்லை.//

    நானும் அந்த பல பேரில் ஒருவன்..

    ReplyDelete
  6. சுஜாதாவுக்கு நினைவு நாள் என்பது போய் நினைவு வாரமாகவே ஆகிவிட்டதை இணையத்தில் பார்க்கிறேன். அவர் ஒரு Legend தான்.

    2004-ல் சுஜாதா பற்றி நானெழுதியது http://chithran.blogspot.com/2004/04/blog-post_29.html

    ReplyDelete
  7. வினோத்கெளதம் said...

    //ஆமாம் தல உண்மை தான்//

    நன்றி

    ReplyDelete
  8. கும்க்கி said...

    //:-))//

    நன்றி கும்க்கி.

    ReplyDelete
  9. கண்மணி/kanmani said...

    //அம்புட்டு பெர்ர்ர்ரீய ஆளா நீங்க???
    வயசுல கேட்டேன்:)//

    அந்த குரூப் போட்டல நான் இல்லீங்க.
    பையன் இருந்தால் பெர்ர்ர்ரீய ஆளா.

    நன்றி.

    February 28, 2010 10:05 PM

    ReplyDelete
  10. அருமையான பதிவு சார்...

    சுஜாதா அவர்கள் நிறைய பேரை வாசகனாகவும் எழுத்தாளனாகவும் மாற்றியுள்ளார் என்பதில் துளியும் சந்தேகமில்லை...

    எனது PHOTO COLLECTIONக்கு உங்கள் பதிவு மூலமாக ஒரு அருமையான புகைப்படம் கிடைத்துள்ளது. மிக்க நன்றி...

    -
    DREAMER

    ReplyDelete
  11. Madurai Saravanan said...

    //சுஜாதாவுக்கு ஈடு இணையாரும் இல்லை. உங்கள் கருத்து உண்மை பலர் சுஜாதவை விட்டு வெளிவரவில்லை//

    அவர் மற்ற எழுத்துகளையும் படிக்க “நிமிண்டி” விட்டார் அவர் எழுத்துக்கள் மூலம்.ஆனால் பலர் சுஜாதவை விட்டு வெளிவரவில்லை என்பது உண்மைதான்.

    நன்றி சரவணன்.

    ReplyDelete
  12. சித்ரன் said...
    //சுஜாதாவுக்கு நினைவு நாள் என்பது போய் நினைவு வாரமாகவே ஆகிவிட்டதை இணையத்தில் பார்க்கிறேன். அவர் ஒரு Legend தான்//

    சூப்பர்.

    //2004-ல் சுஜாதா பற்றி நானெழுதியது http://chithran.blogspot.com/2004/04/blog-post_29.html//

    படித்து அங்கேயே கமெண்டிட்டேன்(சுஜாதா!)

    நன்றி.

    ReplyDelete
  13. DREAMER said...

    //அருமையான பதிவு சார்...//

    நன்றி.

    ReplyDelete
  14. சுஜாதாவை இன்னும் பல வருஷம் ஆனாலும் யாரும் மறந்துட முடியாது.

    ReplyDelete
  15. கே.ரவிஷங்கர் சார்,
    நீங்கள் கொடுத்த லிங்கிலுள்ள தெளிவான ஃபோட்டோவை டவுண்லோடு செய்துக் கொண்டேன். மீண்டும் நன்றி.

    -
    DREAMER

    ReplyDelete
  16. சின்ன அம்மிணி said...

    //சுஜாதாவை இன்னும் பல வருஷம் ஆனாலும் யாரும் மறந்துட முடியாது//

    ஆமாம்.

    ReplyDelete
  17. சுஜாதாவையும் படித்து அவர் பரிந்துரைத்ததையும் படித்தேன் நானும்,நல்ல பகிர்வு.

    ReplyDelete
  18. KarthigaVasudevan said...

    //சுஜாதாவையும் படித்து அவர் பரிந்துரைத்ததையும் படித்தேன் நானும்,நல்ல பகிர்வு//

    உங்கள் வித்தியாசமான கதையையும்
    படிக்கும் ரசனையும் வந்தது அவரால்.

    நன்றி.

    ReplyDelete
  19. //இன்னும் பல பேர் சுஜாதாவை விட்டு வெளிவரவில்லை.//

    list ல் நானும் இருக்கிறேன்.

    ReplyDelete
  20. ஸ்ரீ said...

    //list ல் நானும் இருக்கிறேன்//

    சீக்கிரம் வெளில வந்துருங்க.

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!