Monday, February 8, 2010

இளையராஜாவின் -நாத உரையாடல்கள்

மேஸ்ட்ரோவின் பாடல்கள் ஆரம்பம் முதல் முடியும் வரை மெலடியான வர்ணஜாலம்தான்.மிக முக்கியமானது இசைக்கருவிகளுக்குள் நடக்கும் இனிமையான நாத உரையாடல்கள். “கலகல” வென்று இவைகளின் இடையில் நடக்கும் பல வித ரசங்கள் படர்ந்த உரையாடல்கள் மனதை வருடும். Full of emotions and soul stirring!

சின்ன சின்ன நாதங்கள் ஆச்சரியமாக சந்தில் சிந்து பாடி கண்ணாமூச்சி ஆடும்.எலக்ட்ரானிக்சில் எழுப்பப்பட்ட செயற்கையான நாதம் கிடையாது.ஆதமார்த்தமாக பார்த்துப்பார்த்து இயற்கை இசைக்கருவிகளில் மீட்டெடுத்தது.உரையாடல்களில் மியூசிகல் சேர் இசை போல் அமெச்சூர் நெடி அடிக்காது.

இசைக்கோர்ப்புகள் இணையும் இடங்களில் அசட்டுத்தனம் இருக்காது.

எண்பதில் வந்த பாடல்களின் உரையாடல்கள் முக்கியமானவை.ஏன்? எல்லாம் நேரலை ஒலிப்பதிவுகள்.தப்பு செய்தால் மீண்டும் இசைக்க வேண்டும்.அடுத்து சிங்கிள் மைக்(?).

சில உரையாடல்கள் eternal bliss!

புதுப்பட்டி பொன்னுத்தாயி 
ஊர் அடங்கும் சாமத்திலே (உமாரமணன்-ஸ்வர்ணலதா)

இதமான தாளக்கட்டு..”யாரு அது யாரு யாரு” ஸ்வர்ணா கேட்க பதிலாக உமாவின் ஹம்மிங் அருமை.1.05 - 1.16 வரை ஹிந்தோள சாயலில் புல்லாங்குழலும் வயலினும்(செல்லோ?)நடத்தும் பேச்சுவார்த்தை பிரமிக்க வைக்கிறது.
அமானுஷ்யமாக வரும் வயலினின் மேற்கத்திய நாதம் வித்தியாசம்.

தாளத்தின் ரிதத்திலேயே ”நீ தந்த பட்டுச் சேலை” என்று உமா முதல் சரண வரிகளை எடுப்பது அருமை.

கிழே படத்தில் இருக்கும் காயத்ரி மேம்தான் ஆரம்பகாலத்தில் ராஜாவுக்கு வீணை வாசித்தவர். (மேம்..!ராஜா off the trackல் வாசிக்கச் சொல்லுவாரமே!)



படம்:பூந்தளிர் 
பாடல்-ஞான் ஞான் பாடனும்   ( ஜென்சி)

பாடல் 1979.இன்னும் கமகமவென இப்போது பறித்த கறிவேப்பிலை மணம்.இது ஒரு வித்தியாசமான கலர்புல் கம்போசிங்.ஜென்சியின் இளசான ரம்மியமான குரல்.
மலையாளமும் தமிழும் கலந்து வருவது ஒரு வசீகரம்.இந்த பாட்டில்இசை நாதங்கள் பூத்துக்குலுங்கியபடிதொங்கிக்கொண்டிருக்கும்.

ஆரம்பமே  ரொமாண்டிக் தபலா.. 00.00-0.23 முதல் 0.10ல் வயலினில் அழகு படுத்தி 0.23ல் பாடகி பல்லவி வரும் என்று நினைப்போம் ஆனால் 0.24ல் வேறு ஒரு நாதத்தில் (synth)ஒரு பைனல் டச் கொடுத்துவிட்டுதான் பல்லவியில் சேச்சி பாட்டு படிக்கும் .அடுத்து 1.10 -1.39 வர்ணஜால உரையாடலைக் கவனியுங்கள்.அதுவும் 1.31 -1.36 புல்லாங்குழல் - வயலின் உரையாடல் சுகந்தம்.அடுத்த பேச்சு வார்த்தை 2.31 -3.07

(ஓ... சேட்டா! ஜென்சி குட்டிக்கு பாட்டுப் பறையானும்?)



படம்:புதிய வார்ப்புகள்
பாடல்-தம்தனனம் (ஜென்சி/வசந்தா)



பாடகி வசந்தா(”மணமாலை வரும்..! சுப வேளை வரும்..!மண நாள் திருநாள்)



(இவங்க பேரு புண்யா ஸ்ரீனிவாஸ்.இவங்களும் ரிக்கார்டிங்கில்ராஜாவுக்கு வாசிச்சதா கேள்வி)

சின்ன சின்ன சந்தங்களில் ஒரு இனிமை கம்போசிங்.

முதலில் வீணையில் மீட்டெடுத்த ராகம் ஷண்முகப்ரியாவின் நாதங்கள் அலையாக அலையாக வரும்.இதில் குரல் உரையாடல்கள் ஒன்றை ஒன்று இனிமையாக பின்னியபடி வரும்.இதில் ஜென்சியின் மூக்கிசை சூப்பர்அடுத்து முதல் 1.08 -1.44 வரை ”ஒரு ரூம் போட்டு” நாதங்களின் வயலின்,வீணை,புல்லாங்குழல்,synth,பெலஸ்,ஹம்மிங்கலந்துரையாடலைகவனியுங்கள்.ஆச்சரியமாக மேற்கத்திய talkக்கும் வரும்.

தெலுங்கச்சி(வசந்தா) vs மலையாளச்சி (ஜென்சி)உச்சரிப்பையும் கவனியுங்கள்.

படம் -மோகமுள்பாடல் :சொல்லாயோ வாய் திறந்து -ஜானகி

”தம்தனனம்” மெட்டும் இந்தப் பாட்டின் மெட்டும் ஒரே சாயல் அடிக்கும்.காரணம் ரெண்டுமே ஷண்முகப்பிரியா ராகத்தில் கம்போஸ் செய்யப்பட்டது.”தம்தனன”பாட்டின் எமோஷன் ஒரு விதம்.

இது ஒருசோகஎமோஷன்.எப்படி?.அதான் மேஸ்ட்ரோ.

இந்த ராகம் பல உணர்ச்சிகளைப் பிரதிபலிக்ககூடியது.பிரித்து மேயலாம்?
1.08 -1.34 சோக உரையாடலில் வீணை(சிதார்?)யின் நாதத்திற்கு எக்கோவாக வயலின் நடுவே புல்லாங்குழலின் சந்தில் சிந்து. உருக்கும் பாடல் வரிகள்.

படம் வந்த போது தி.ஜானகிராமன் உயிரோடில்லை.



பாடம்: நீங்கள் கேட்டவை(ஜானகி/எஸ்பிபி)
ஒ.. வசந்த ராஜா!

ஆரம்பமே ராஜா கம்பீர ட்ரம்சில் குமுறல்.1.03 - 1.35 இந்திய இசையில்மிருதங்கம்,சிந்தசை,புல்லாங்குழல்,வயலின்,
வீணை 
(மிருதங்கம் -புல்லாங்குழல் ஸ்டைல் உரையாடல் அட்டகாசம்)உரையாடல்.

2.39 -3.14 மேற்கத்திய இசையில் உரையாடல்.ஒரு இடத்தில் நின்னு பேசுவார்.ஓ ... ராஜா சூப்பர்!


படம்: தம்பிக்கு எந்த ஊரு

0.00 -0.44  பிறகு 1.08 -1.28 தபலா vs கிடார் 1.28 -1.55 வயலின் -சிந்தசை-கிடார் வயலின் -வீணை-புல்லாங்குழல்-ட்ரம்ஸ் அடுத்து 3.33 -3.55ஊட்டி டிரெயினுக்கு உரையாடலில் ஒரு பிஜிஎம்.அசத்தல்!

படம்:தீர்த்தக்கரையினிலே

பாட்டு::விழியில் ஒரு கவிதை மனோ-சிதரா


ஆரம்பமே ஷெனாயின் நாதக் கிளர்ச்சியில் வயலினின் உரையாடல் பிறகு கிடார்....1.20 -1-29 என்ன ஒரு மங்களகரமான இசை சங்கமம்? stunning! தேஷ் ராகத்தின் ஸ்வர சாயல்கள் (?) தெறித்தப்படி .........

அடுத்த இசை அதிர்ச்சி அண்ட் கவுண்டர் பாயிண்ட்ஸ் 2.40 - 3.03 .

தபலா அசத்தல்.சித்ரா குரல் இனிமையோ இனிமை.! அட்டகாசம். 

நெருடல் “இத”ளி”ல் ஒரு அமுதம் குடித்தேன் - மனோ

சோகத்திற்கு ஷெனாய். ஆனால் இதில் மகிழ்ச்சிக்கு வாசிக்கப்பட்டிருக்கும்.  தல! லொள்ளு ஜாஸ்தி!இது மாதிரி நிறைய லொள்ளு பண்ணுவார். 

ஹெட்போனில் கேட்டால் வேறு சில கருவிகளின் நாதங்களும் கேட்கலாம்.





இவர்தான் அருண்மொழி பாடுவார்.ராஜாவுக்கு புல்லாங்குழல் வாசிப்பார்.(இது ஒரு பொன்மாலைப் பொழுதில் வரும் பீஸ் வாசிக்கிறீங்களா!)


 காதல் ஓவியம்

பூவில் வண்டு - SPB

முதலில் ரம்மியமான ஹம்மிங்கைத் தொடர்ந்து மோகன சாயலில் 0.27.....................0.56 ?.அடுத்து 2.56 ...3.10 ?

(ஹல்லோ! மிஸ்டர் Tamil bird! நீங்க சொல்லுங்க!)

 
படிக்க:
இளையராஜாவின் -கவுண்டர் பாயிண்ட்



17 comments:

  1. //படம்: தம்பிக்கு எந்த ஊரு
    பாடல்:என் வாழ்விலே வரும் அன்பே

    0.00 -0.44 பிறகு 1.08 -1.28 தபலா vs கிடார் 1.28 -1.55 வயலின் -சிந்தசை-கிடார் வயலின் -வீணை-புல்லாங்குழல்-ட்ரம்ஸ் அடுத்து 3.33 -3.55ஊட்டி டிரெயினுக்கு உரையாடலில் ஒரு பிஜிஎம்.அசத்தல்!//

    ********

    இது ஒரு அசத்தல் பாடல் ரவி... இதே பாடல் “சத்மா”வில் வரும் (யே ஸிந்தகி).. இங்கிருந்து அங்கா, அங்கிருந்து இங்கா என்று தெரியவில்லை... இரண்டுமே ராஜாதானே...

    எல்லா பாடல் தொகுப்பும் மிக மிக அருமை...

    அனைத்துமே எனக்கு பிடித்த பாடல்கள்...

    ReplyDelete
  2. // இதே பாடல் “சத்மா”வில் வரும் (யே ஸிந்தகி).. இங்கிருந்து அங்கா, அங்கிருந்து இங்கா என்று தெரியவில்லை... இரண்டுமே ராஜாதானே...//

    இரண்டுமே ராஜாதான்.ஹிந்திக்குப் போய்தான் இங்கு வந்தது. ஒரிஜனல் தமிழில் மூன்றாம் பிறை.


    //எல்லா பாடல் தொகுப்பும் மிக மிக அருமை...அனைத்துமே எனக்கு பிடித்த பாடல்கள்..//

    நன்றி கோபி. எனக்குப் பிடித்த் பாடல்
    ஞான் ஞான் பாடனும்.மறக்கவே முடியாது.

    ReplyDelete
  3. பகிர்ந்தமைக்கு நன்றி 
    நல்ல பதிவு

    ReplyDelete
  4. பாலாஜி said...

    //பகிர்ந்தமைக்கு நன்றி
    நல்ல பதிவு//

    நன்றி பாலாஜி

    ReplyDelete
  5. தல வழக்கம் போல கலக்கல் தொகுப்பு ;)))

    \\(இவங்க பேரு புண்யா ஸ்ரீனிவாஸ்.இவங்களும் ராஜாவுக்கு வாசிச்சதா கேள்வி)\\

    இவுங்க சென்னையில நடந்த (ஜெயா டிவியுடன் இணைந்து) நிகழ்ச்சியில் மேடையில் வாசிப்பாங்க.

    இந்த வார விகடனை பார்த்திங்களா.!!..உங்க மெயில் ஜடி இருந்தால் கொடுங்கள்.

    http://www.envazhi.com/?p=15951
    இதையும் பாருங்கள் நேரம் இருக்கும் போது ;)

    ReplyDelete
  6. வாங்க கோபிநாத்.

    //இவுங்க சென்னையில நடந்த (ஜெயா டிவியுடன் இணைந்து) நிகழ்ச்சியில் மேடையில் வாசிப்பாங்க//

    அதுவும் (ஜெயா)பார்த்தேன்.

    ராஜாவுக்கு இசைக் கம்போசிங்கின்
    போதும் வாசித்ததாக கேள்வி.
    காயத்ரிக்குப் பிறகு இவங்க வாசித்ததாக.

    ReplyDelete
  7. //இந்த வார விகடனை பார்த்திங்களா.!!..உங்க மெயில் ஜடி இருந்தால் கொடுங்கள்.//

    வியாழன் காலையில் 8 மணிக்கே பாத்தாச்சு.

    //http://www.envazhi.com/?p=15951
    இதையும் பாருங்கள் நேரம் இருக்கும் போது//

    பாத்துட்டேன். சூப்பர்.

    ReplyDelete
  8. நேயர் விருப்பமாக எனது விருப்பப் பாடலை முதல் பாடலாகப் பிரித்து மேய்ந்ததற்கு நன்றிகள் சார்... கடந்த சில சாதாரணப் பதிவுகளுக்குப் பின் ஒரு சூப்பர்ஹிட் பதிவு...என்னைக் கணினிமுன் ஒருமணி நேரம் உட்கார வைத்துவிட்டது பின்னூட்டமிட....இன்றைய மாலை இனிதாய்க் கழிந்து கொண்டிருக்கிறது....

    1.ஊரடங்கும் சாமத்திலே...

    ஆரம்பத்திலேயே அட்டகாசமாக வந்துவிடுகிறது குழல்...
    உமாவின் ஹம்மிங் பிரமாதம்...
    ’தூது சொல்ல துணை யாருமில்லை’க்குப் பின் வரும் ‘ஓஹோ...ஓஹோஹோ...’ அருமை...
    இருவரின் குரலுமே இனிமை...’மாமன் உன் பேர மணலில் எழுதி கை நோகுது’...
    ஸ்வர்ணா, உமா இருவரையுமே இசைக்கருவிகளாக மாற்றி விட்டிருக்கிறார் ராஜா...

    2.ஞான் ஞான் பாடணும்- நீங்கள் பலமுறை பரிந்த்ரைத்தும் இப்போதுதான் முதலில் கேட்கிறேன் சார்.
    இரண்டு உரையாடல்களுமே கலக்கல்தான். குறிப்பாக புல்லாங்குழல் & வயலின் 1.31-1.39 தூள்...
    கடைசியில் ஜென்சியின் லாலாலா கொஞ்சலும் அருமை...

    3.தம்தனதனதம்...
    ’ஒரு ரூம் போட்டு’ வந்த உரையாடல் அருமை...எனக்கென்னவோ இந்தப் பாடல் படப்பதிவு அவ்வளவாகப் பிடிக்கவில்லை(வெள்ளை நிற தேவதைகள் ஓவர்...) ரதிக்காகப் பார்க்கலாம்...

    4.சொல்லாயோ வாய் திறந்து....
    எனக்கு மிகப் பிடித்த பாடல் இது...
    //படம் வந்த போது தி.ஜானகிராமன் உயிரோடில்லை.//
    நல்லவேளை எனச் சொல்லலாமா?
    இருந்தாலும் பரவாயில்லை எனச் சொல்லலாம்... யமுனாவின் பாத்திரத்தேர்வு அருமை..(நான் படம் பார்த்தபிந்தான் நாவல் படித்தேன்...)
    3.01ல் வரும் ஒற்றைக் குழலில் சோகமும், அதற்கு ஆறுதல் சொல்வது போல் வரும் வீணை(அ) சித்தாரின் இசையும் கலக்கல்...
    ஆனால் என்னைப் பொறுத்தவரை இப்பாடலில் மகுடம் ஜானகிக்கே...

    5.ஓ வசந்த ராஜா...
    ஆரம்ப இசை மற்றும் 0.23ல் வருவது என்ன இசைக் கருவி சார்...?
    இப்பாடல் பலப்பலப்பல முறை பார்த்தும், கேட்டும் விட்டாயிற்று. இன்னும் விட்ட பாடில்லை...ராஜ இசைக்கு மிகப் பொருத்தமான பாலுவின் கேமரா...சட்டையில்லாத ஹீரோ...திராவிட நிறத்தில் அர்ச்சனா என எல்லாமே பெர்ஃபெக்ட்...கங்கை கொண்ட சோழபுரம் லொக்கேசன் என என் நண்பன் சொன்னான். சென்றமுறை ஊருக்கு வந்தபோது பார்க்க நினைத்தும் முடியவில்லை... :-(

    6.என் வாழ்விலே’’’

    0.31ல் பூங்காற்று புதிதானதை நினைவு படுத்துகிற இசைக்கோர்வை...மாலையில் பஸ் நிறுத்தத்தில் தினம் நாம் தேடும் மங்கை , நம்மைக் கண்டு கொண்ட பின் ஒரு வித சந்தோசத்தில் வீட்டுக்கு சீட்டியடித்த படி வரும் மனநிலையைப் போலவே , 1.48ல் வரும் குழலின் வருகையும்...(ராஜாவின் எல்லாப் பாடல்களிலுமே குழலின் வருகை பிரத்யேகமாக இருக்கும்)

    7.விழியில் ஒரு கவிதை படித்தேன்...
    ஏற்கெனவே கேட்டிருந்தாலும் இப்போதுதான் மனதாரக் கேட்கிறேன்...2.40-3.03ல் வரும் உரையாடலில் கருவிகளை எளிதாக இனம் காண முடியவில்லை...இரண்டாவது சரணம் முழுமையும் சித்ராவின் ராஜ்யம்.(அடக்கி வாசித்து பாடகரைத் தூக்கிவிடும் ராஜாவின் பண்பு,,,,)


    8.பூவில் வண்டு....
    1.27-2.03- உரையாடல் (1.48ல் குழல்+தபேலா) அதற்குமுன் தபேலாவுடன் உரையாடிய கருவியின் பெயர் தெரியவில்லை....
    3.01ல் வரும் வயலின் காட்டும் விரகதாபம்... பின்னர் வரும் குழல் ஈர உடலில் தென்றல் வீசும் கிளர்ச்சியை உண்டு பண்ணும் ஒரு வித மந்தகாசத்தில் ஆழ்த்திவிடுகிறது.

    ReplyDelete
  9. விகடன்ல என்ன மேட்டர்? ப்ளீஸ் சொல்லுங்க...

    ReplyDelete
  10. அருண்மொழியைப் பத்திச் சொல்ல மறந்துட்டேன்... இன்னொரு பதிவுல விவரமாப் பின்னூட்டறேன்...

    ReplyDelete
  11. http://jeevartistjeeva.blogspot.com/2010/02/blog-post.html

    மற்றும் அகியின் தளத்துக்குப் போய்ப் பாருங்க... முகவரி இப்போது கைவசமில்லை...ராஜாவின் பாடல்களுக்கு அவரிடம்தான் காப்புரிமை இருக்கிறது.. அதுபற்றிச் சொல்லி இருக்கிறார்...

    ReplyDelete
  12. Blogger தமிழ்ப்பறவை said...

    // விகடன்ல என்ன மேட்டர்? ப்ளீஸ் சொல்லுங்க..//

    பத்மபூஷன் வாங்கினதுக்குக்காக ஒரு பேட்டி அவ்வளவுதான்.விகடன் நெட்டில் படிக்கலாமா?

    ReplyDelete
  13. தமிழ்ப்பறவை,

    //8.பூவில் வண்டு....
    1.27-2.03- உரையாடல் (1.48ல் குழல்+தபேலா) அதற்குமுன் தபேலாவுடன் உரையாடிய கருவியின் பெயர் தெரியவில்லை....
    3.01ல் வரும் வயலின் காட்டும் விரகதாபம்... பின்னர் வரும் குழல் ஈர உடலில் தென்றல் வீசும் கிளர்ச்சியை உண்டு பண்ணும் ஒரு வித மந்தகாசத்தில் ஆழ்த்திவிடுகிறது//

    கலக்கல்ஸ்.

    மீதி பின்னூட்டத்திறகு பிறகு வருகிறேன்.

    ReplyDelete
  14. /படம் வந்த போது தி.ஜானகிராமன் உயிரோடில்லை.//

    //நல்லவேளை எனச் சொல்லலாமா?
    இருந்தாலும் பரவாயில்லை எனச் சொல்லலாம்... யமுனாவின் பாத்திரத்தேர்வு அருமை..(நான் படம் பார்த்தபிந்தான் நாவல் படித்தேன்...)//

    இந்தப் பாட்டை கேட்காமல் போய்விட்டாரே என்று சொல்ல வந்தேன்.

    //மற்றும் அகியின் தளத்துக்குப் போய்ப் பாருங்க... முகவரி இப்போது கைவசமில்லை...ராஜாவின் பாடல்களுக்கு அவரிடம்தான் காப்புரிமை இருக்கிறது.. அதுபற்றிச் சொல்லி இருக்கிறார்..//

    பார்த்துவிட்டேன். நல்லா இருக்கு. நமமை மாதிரி “பைத்தியங்குளிகள்” நெட்டில் விரவிக் கிடக்கிறார்கள்.

    ReplyDelete
  15. //ஓ வசந்த ராஜா...
    ஆரம்ப இசை மற்றும் 0.23ல் வருவது என்ன இசைக் கருவி சார்...?//

    எலெட்ரிக் கிடார்?

    அருண்மொழி:

    எனக்குப் பிடித்த பாடகர்.அருமையான குரல்.”நீ என்பது நான் அல்லவோ” “நீதானா/வராது வந்த” (பார்த்திபன் - ரோகிணி)

    ReplyDelete
  16. http://groups.google.com/group/sangeethamegam?lnk=gcimh

    தலைவரே.,

    க்ரூப்பில் இணைய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    இசை குறித்து மேலும் அறிய ஆசை.

    ReplyDelete
  17. கும்க்கி,

    அழைப்புக்கு நன்றி.எனக்கு ஆர்வம் இல்லை.மன்னிக்கவும்.

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!