Saturday, January 30, 2010

மயிலிறகு - கவிதை





















வருடா வருடம் ஆசையுடன்
பிரிப்பதுண்டு குட்டியைக் காண 

இந்த வருடமும்
புத்தகத்தைப் பிரிக்கையில்
வைத்த மயில் இறகு
அப்படியே இருக்கிறது
குட்டி எதுவும் போடவில்லை

வெண்மையாகவே விட்டுவைத்திருந்தாள்
இறகு பக்கம் எதுவும் எழுதாமல்

மையினால் எழுதினால்
பிரசவத்திற்கு இடையூறாகி
குட்டிப் போடாமலாகிவிடும் என
என் மகள்

அப்படியும் குட்டிப்போடவில்லை

குட்டிப்போட்டு விட்டதாகவும்
குட்டிப் பெரிசாகி அதன் குட்டிதான்
இது என்றேன் நான்

மகள் முகத்தில் வருத்தம்தான்

ஒரு வார்த்தைத் தன்னிடம்
சொல்லாமல் இது நிகழ்த்திய
மயிலிறகு மேல்

11 comments:

  1. வருடிய மென்மை. அருமை.

    ReplyDelete
  2. /வருடா வருடம் ஆசையுடன்
    பிரிப்பதுண்டு குட்டியைக் காண /
    நானும்தான்.

    ReplyDelete
  3. தல..,

    ஒரு வரி மட்டும் துறுத்திக்கொண்டிருக்கிறது.

    அது இரண்டாம் பாரா பாவாவிலேயே சொல்லப்பட்டு ,
    மறுபடியும்

    அப்படியும் குட்டிப்போடவில்லை” என்று வருகிறது.

    ReplyDelete
  4. அருமையான கவிதை

    ReplyDelete
  5. பின்னோக்கி & அன்புடன் அருணா

    நன்றி.

    ReplyDelete
  6. கும்க்கி said...

    தல..,

    //ஒரு வரி மட்டும் துறுத்திக்கொண்டிருக்கிறது//

    அப்ப்டி தெரியவில்லை.

    ReplyDelete
  7. நன்றி ஸ்ரீ. நன்றி க.இராமசாமி.

    ReplyDelete
  8. எனக்கு மிகப் பிடித்திருந்தது சார்...ரசித்தேன்...

    ReplyDelete
  9. நன்றி தமிழ்ப்பறவை.

    நன்றி டிவிஆர் சார்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!