Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்

 ரொம்ப வருஷத்திற்கு முன் தாலி செண்டிமெண்ட், பண்ணையார், துண்டுப்போடுத் தாண்டுதல்,அம்மன் கோவில், தூண் மறைவில் நின்று எட்டிப்பார்த்துக் காதல்,வயல், கற்பழிப்பு, வில்லன் குடோன்,மலை அடிவாரம், அம்பாசிடர் கார் என அரைத்தமாவையே அரைத்தோம்.பிறகு அதிலிருந்து வெளிவந்தோம்.

வெளிவந்து இப்போது மீண்டும் காதல்,எதிர்ப்பு,காட்டும் கதாநாயகி,பில்ட்அப்ஏய்..ஏய்..பஞ்ச்டயலாக்,டாடா சுமோ, காதில்கடுக்கன்,எனவேறுமாதிரிகிரைண்டரில் அரைத்துக்கொண்டிருக்கிறோம்.நடுநடுவே நல்ல படங்களும்வருகிறது.அதிலும் சில படங்கள் வன்முறையை அழகுப் படுத்தலாக இருக்கிறது.

இப்போது ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு படம்.
ஒரு வித்தியாசமான முயற்சிக்கு செல்வராகவனுக்குப் பாராட்டுக்கள்.அடுத்தக்கட்டத்திற்கான முயற்சி என்று பாராட்டலாம்.

பிரம்மாண்டம் என்றாலே பலமான கதைக்களம் வேண்டும்.அதிலும் நம்ம சேர,சோழ,பாண்டிய, பல்லவ,களப்பிர,ஆர்ய வழி வந்த நம் தமிழ் மக்களுக்கு
எல்லாவிதமான ரசமும் இருக்கவேண்டும். அதனால் நம் டைரக்டர் செல்வராகவப்பெருந்தகை ”ரா”வாகக்கொடுக்காமல்  சரித்திரம்+மாயாஜாலம் சரித்திரம்+மாயஜாலம்+திரில்லார்+அமானுஷ்யம்+குழப்பம்+குத்தாட்டம் என மிக்சிங்கில் கொடுத்திருக்கிறார்.இது உண்மை கிடையாது.ஆனால் உண்மை மாதிரி ஒரு பாவனை பில்ட அப் வேறு கொடுக்கவேண்டும்.செம்ம செம்ம பொறுப்பு டைரக்டருக்கு.

இதில் ஜெயித்தாரா? பார்ப்போம் பின்னால்.

10ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களோடு நடந்த போரில் சோழர்கள் தங்கள் மன்னர் வாரிசு ஒருவரையும்,குலதெய்வ சிலையையும் எடுத்துக்கொண்டு கண்காணாத ஒரு தேசத்தில் போய் ஒளிந்துக்கொள்கிறார்கள்.ரொம்ப வருடத்திற்குப் பிறகு இதைத்தேடிப்போன ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்(பிரதாப் போத்தன்) காணாமல் போகிறார்.

அவரைத் தேடிக்கொண்டு அவள் மகள் லாவண்யா (ஆண்ட்ரியா)தொல்பொருள் ஆராய்ச்சியாளர்/டாக்டர்,மற்றும் இன்னோரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வனிதா பாண்டியன்(ரீமா சென்), கூலி கார்த்திக் என்று இவர்களோடு ஒருபட்டாளம் புறப்படுகிறது அந்த தீவை நோக்கி.ஆனால் அங்கு வேறு ஒரு கதை நடக்கிறது.

கூட வந்தவர்கள் எல்லோரும் இறந்து  மற்றும் காணாமல் போய்விட இவர்கள் மூவரும்(கார்த்திக்,ஆண்ட்ரியா,ரீமா) சளைக்காமல் எஸ்.ராமகிருஷ்ணன் போல் அந்த இடத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என நடக்கிறார்கள்.

முதல் பாதி விறுவிறுவென போகிறது.கேமரா,லொகேஷன்,
இசை என அசத்துகிறார்கள்.தெளிவான கதை சொல்லல்.ஆர்ட்,மூட் லைட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. போகும் வழியில் சந்திக்கும் ஆபத்துகளும் அதை எதிர்ப்பதும் பல ஹாலிவுட் படங்களை நினைவுப்படுத்துகிறது.

கார்த்திக் பருத்திவீரன் கணக்காக வந்து பின் நவீனத்துமாக கட்டுடைக்கிறார்.ஆண்டிரியா,ரீமாவைப்பார்தது பாலியல் கமெண்டுகளை அடிக்கிறார். பின்னால் நீங்க அக்கா மாதிரி என்கிறார்.கட்டிங் போடுகிறார்.ஆயிரத்தில் ஒருவன் பெயர் வைத்ததின் காரணமாகவே எல்லா கூலி இளைஞ்ர்களும் எம்ஜியார் ரசிகரர்களாக (சங்க கால இளைஞ்ர்கள்?)ஆக்கப்பட்டு “அதோ அந்த பறவைப்போல”பாட்டுப் பாடுகிறார்கள். மேதகு தொல்பொருள் ஆராய்ச்சியாளரும்(ரீமா சென்) இவர்களுடன் கட்டிங்ப் போட்டு குத்தாட்டம் போடுகிறார்.முதல் பாதியில் இவர்கள்தான் கதையை நகர்த்திக்கொண்டுப் போகிறார்கள்.ஆண்ட்ரியாவும் சிடுசிடுவென ஒரு பாத்திரம்.இவர்தான் இந்த டீம்மின் லீட்.

போகும் வழியில் ரீமாவுக்கும்,ஆண்ட்ரியாவுக்கும் ஒருவித பாலியல் ஈர்ப்பு அல்லது ஒரு வித love & hate கார்த்திக் மேல் ஏற்படுவது நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.இது சம்பந்தமாக மூவரும் சண்டைப்போடுகிறார்கள் போகும் வழியெல்லாம். கார்த்திக் ரெண்டு பொண்டாட்டி கதையாய் டார்ச்சாரகிறார்.அதனால் கட்சி உடைகிறது.ஆண்ட்ரியாவும்,
கார்த்திக்கும் ஒரு கட்சியும்  ரீமா சென் ஒரு கட்சியுமாக பிரிகிறார்கள். இங்கேயே சோழர் vs பாண்டியர்களாக பிரிகிறார்கள்  என கோடிட்டுக்காட்டப்படுகிறது.

Reema Sen  is bold and beautiful. அவருக்கு ஒரு வாழ் நாள் ரோல்.கத்தாழைக்கண்ணாலே(அவருக்கு இருக்கா?) கார்த்திக்கை  மட்டும் இல்லாமல் எல்லோரையும் குத்துகிறார்.சூப்பர்.அவரின் டப்பிங் அருமையான் குரல்.ஆண்டிரியாவும் நன்றாக செய்திருக்கிறார்.ஓலைச்சுவடிகள் படிக்கும்போது நல்ல தமிழிலும், பேசும்போது ஆங்கிலோ இந்திய தமிழ் ஏன்?கார்த்திக்கும் அச்சு அசலாக சால்ட் குவார்ட்டர்ஸ் கூலியாக.நல்ல பாத்திரம்.அருமையாக செய்திருக்கிறார்.

இருவரின் தோரணையை (ஆன் & ரீமா) பார்க்கும்போது ஹாலிவுட் படம் பார்ப்பது போல்வே ஒரு உணர்வு.அடுத்து கட்டுடைத்தல் செய்கிறார்கள். இருவரும் கட்டிங் போட்டுகிறார்கள்.ஒட்டகக் கறி (10 நாள் பட்டினி)
சாப்பிடுகிறார்கள்.கார்த்திக் மேல் உப்புமூட்டை ஏறி சுமக்க வைக்கிறார்கள்.அவர் சுமை கூலிதானே! தூக்குகிறார்.குளிருக்குக் கட்டிக்கொள்கிறார்கள்.”fuck you " "fuck you" என்று சண்டைப் போடுகிறார்கள்.

இப்படிக் கட்டுடையும்போது  நம்ம சேர,சோழ,பாண்டிய, பல்லவ,களப்பிர,ஆர்ய வழி பொதுப் புத்தி ரசிகர்கள் விசில் அடித்து வெறியாகிறார்கள்.


படத்தில் வரும் புதைகுழிப்போல் படத்தின் பின்பாதியில் ரசிகர்களும் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.பின் பாதியை செல்வராகவன் சரியாக ஹோம் செய்யவில்லை.முன்பாதி போல் தெளிவாக இல்லை.குழப்பம்

ஆனா குழப்பம் இல்லாமல் எடுத்திருக்கலாம்.அங்கிருக்கும் மக்கள் சோழ மன்னரின் அடிமைகளா? எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள்? ஏன் அடிமை? அல்லது பாண்டியர்களா? ஏன் நரமாமிசம்? என்று வேறு ஆங்கிளில் சிந்தனைப் போகிறது.நானே சிறிது நேரம் கழித்துதான் விளங்கிக்
கொண்டேன் இவர்கள் எல்லாம் ஒன்றுதான் என்று.


(அடுத்து அவர்கள் அதை எடுத்து விடுவார்கள்.எடுக்கப்போகும்போது ஏற்படும் இன்னல்கள்தான் இனி என்று எல்லோரும் எதிர்ப்பார்க்க,ஆனால் அங்கு வேறு கதை நடக்கிறது)

சோழனாக வரும் பார்த்திபன் ஒகே.கருப்பு நிறத்தால் அவர் செட்டாகிறார்.ஆனால்சோழன் ஹிட்லராக காட்சியளிப்பது அபத்தம்.சீமா திடீர் பாண்டிய பாசம் வந்து திடீரென உக்கிரமாகிறார்.கட்சி மாறுகிறார்கள்.கார்த்திக் விபூதி பூசி திடீரென தேவர்மகனாகிறார்.ஆட்சிப்பொறுப்பேர்க்கிறார்.சண்டை நடக்கிறது. நான் எந்த கட்சி என்றே புரியவில்லை.(ரீமா சென் கட்சி?)

தனித்தீவில் இருக்கும் சோழர்களுக்கு உலகத்தொடர்பு இல்லாததால் பஞ்சம் என்று ஒத்துக்கொள்ளலாம் ஆனால் எல்லோரும் “குணா கமல்” போல் கருப்பாக எதையோ பூசிக்கொண்டு மெண்டலாக இருக்கிறார்கள்.நர மாமிசம் சாப்பிடுகிறார்கள்.Kingkong படம் ஞாபகம் வருகிறது.

பெண்டசி/சர்ரியலிசம்/யதார்த்தம் என ஒரே கிறுக்கல் பாண்டியாக இருக்கிறது.அழுகிறார்கள்/சிரிக்கிறார்கள்/ரத்தம் தெறிக்கிறார்கள்.எவ்வளவு ரசிகர்களுக்குப் புரிந்ததோ?இதன் நடுவே மிருகத்தனமான sports வேறு.எது உண்மை எது பெண்டசி எனப் புரியாமல் தலைச்சுற்றுகிறது.இவர்கள் இப்படி இருப்பது கதைக்கு வசதியாக இருப்பதற்காகவா?

 Operation success but patient died என்ற கதையாகிவிட்டது பின்பாதி.

இசை உறுத்தாமல் நன்றாக இருக்கிறது.பின்னணி ராஜாவின் சாயல்.பாட்டில் ரஹமானின் சாயல்.ஜி.வீ.பிரகாஷ்க்கு இந்த படம் ஒரு புல் மீல்ஸ்.நன்றாக செய்திருக்கிறார்.கப்பலில் ஆடும் நடனமும் ,(இந்தப் பாட்டிற்கு விசில் பறக்கிறது தியேட்டரில்)கோவிந்த கோவிந்த என்ற பாட்டின் நடனமும் வித்தியசமாக அற்புதமாக செய்யப்பட்டிருக்கிறது.Here also Reema Sen  is bold and beautiful.

ஹாலிவுட் படங்களில் தொடர்ச்சியாக பரபரப்பு காட்சி வந்து முடியும்போது “பச்சக்” என ஒரு "frozen shot" ஏதாவது ஒரு ஆங்கிளில் அட்டகாசமாக அமைதியாக காட்டப்படு்ம்.உறுத்தாமல் படத்தோடு ஒட்டி இருக்கும். இதிலும் வருகிறது.ஆனால் ஒரு pattern தெரிந்து உறுத்துகிறது.

அடுத்தக் களத்திற்கு சினிமாவை நகர்த்தியதற்கு செல்வராகவனுக்குப் பாராட்டுக்கள்.அடுத்த தடவை நிறைய ஹோம் வொர்க் செய்யுங்கள்.

.

33 comments:

 1. // Operation success but patient died என்ற கதையாகிவிட்டது பின்பாதி.//

  :)naccnu irukku.

  ReplyDelete
 2. பின்நவீனத்துவம், கட்டுடைத்தளை (புரியும்படி) விளக்கியதற்கு நன்றி.

  //சளைக்காமல் எஸ்.ராமகிருஷ்ணன் போல் அந்த

  :-)

  ReplyDelete
 3. இடுகை ஓகே. ஆனா, அக்மார்க் ரவிஷங்கர் பன்ச் குறைச்சலா இருக்கே பாஸ்...

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  ReplyDelete
 4. ரவி
  தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். முதல் முதலாகப் பின்னூட்டம் இடுகிறேன்.

  ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு நல்ல விமர்சனம். நன்றி. பின்பாதியில் நமக்குப் பிரச்சினை வருவதற்குக் காரணம், மன்னர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நம்முடைய பொதுப் புத்தியில் பதிந்து போனதாக இருக்கலாம்.
  அல்லது நம்முடைய சோழனை இப்படி பார்க்க நாம் விரும்பாமல் இருக்கலாம்.

  எதுவானால் அந்தப் படத்தைப் போலவே உங்கள் விமர்சனமும் சிறப்பாக இருக்கிறது.

  ReplyDelete
 5. இப்படி ஒரு படம் கொடுத்ததற்கு செல்வராகவனை பாராட்டியே தீர வேண்டும்

  ReplyDelete
 6. Blogger சின்ன அம்மிணி said...

  // Operation success but patient died என்ற கதையாகிவிட்டது பின்பாதி.//

  :)naccnu irukku.

  நன்றி.

  ReplyDelete
 7. Blogger பின்னோக்கி said...

  //பின்நவீனத்துவம், கட்டுடைத்தளை (புரியும்படி) விளக்கியதற்கு நன்றி.//

  ஆகா!பின்நவீனத்துவமா? நக்கல் விட்டேங்க.அது பெரிய விஷயங்க.
  அதுக்கு ஒரு பெரிய புக்கே இருக்கு.

  ReplyDelete
 8. Blogger பைத்தியக்காரன் said...

  // இடுகை ஓகே. ஆனா, அக்மார்க் ரவிஷங்கர் பன்ச் குறைச்சலா இருக்கே பாஸ்...//

  வாங்க சிவராமன்.ரொம்ப நாள் ஆயிடுச்சு.ஏதோ எழுதினேன்.
  அவ்வளவுதான்.

  ஒரு சுவாராசியமான விஷயம்.படம் முடிந்ததும் மம்மி ரிட்டர்ன்ஸ் சாரு ஞாபகம் வந்தது.அவருக்கு இந்தப் படம் புல் மீல்ஸ்.

  நன்றி.

  ReplyDelete
 9. ரவி,

  தங்களின் விமர்சனம் நன்று! நானும் ஒரு விமர்சனம் கிறுக்கியுள்ளேன், தாங்கள் அதை படித்தால் மகிழ்வேன்... (http://vijayanarasimhan.blogspot.com/2010/01/blog-post.html)

  நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. //சளைக்காமல் எஸ்.ராமகிருஷ்ணன் போல் //

  ;-))

  ReplyDelete
 11. பொன்னுசாமி said...

  // பின்பாதியில் நமக்குப் பிரச்சினை வருவதற்குக் காரணம், மன்னர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நம்முடைய பொதுப் புத்தியில் பதிந்து போனதாக இருக்கலாம்.
  அல்லது நம்முடைய சோழனை இப்படி பார்க்க நாம் விரும்பாமல் இருக்கலாம்.//

  வருகைக்கு நன்று.பின்னூட்டத்திற்கு நன்றி.தவறு இருந்தால் பின்னூட்டம் போட்டு சுட்டிக் காட்டுங்கள்.


  உண்மையிலேயே பின் பகுதி வித்தியாசமா இருக்கு.அவர்கள் நிறம் பற்றியும் தெரியும்.

  ஆனா குழப்பம் இல்லாமல் எடுத்திருக்கலாம்.அங்கிருக்கும் மக்கள் சோழ மன்னரின் அடிமைகளா? எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள்? ஏன் அடிமை? அல்லது பாண்டியர்களா? ஏன் நரமாமிசம்? என்று வேறு ஆங்கிளில் சிந்தனைப் போகிறது.நானே சிறிது நேரம் கழித்துதான் விளங்கிக்
  கொண்டேன் இவர்கள் எல்லாம் ஒன்றுதான் என்று.

  நீங்கள் சொன்ன மாதிரி பொதுபுத்தியில் சினிமா பார்த்த அனுபவம்.

  அடுத்து அவர்கள் அதை எடுத்து
  விடுவார்கள்.எடுக்கப்போகும்போது ஏற்படும் இன்னல்கள்தான் இனி என்று எதிர்ப்பார்க்க,ஆனால் அங்கு வேறு கதை நடக்கிறது.

  இதைப் பதிவில் சேர்த்துவிடுகிறேன்.

  ReplyDelete
 12. 'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...

  //சளைக்காமல் எஸ்.ராமகிருஷ்ணன் போல் //

  ;-))

  ஆமாங்க.சும்மா ஒரு காமெடிதான்.
  நன்றி.

  ReplyDelete
 13. நன்றி விஜய்.

  நன்றி குப்பன் யாஹூ.

  ReplyDelete
 14. வாங்க அஷோக்.பின்னூட்டத்திற்கு நன்றி.ஆனா “:)” இதுதான் புரியல.

  இதற்கு எனன அர்த்தம்.நிறைய பேர் இது மாதிரி போடறாங்க.

  மீண்டும் நன்றி.

  ReplyDelete
 15. நம்மளுக்கெல்லாம் சோழ மன்னர்கள்னா நம்ம சிவாஜி சார்தான் ஞாபகம் வரார். அவர ராஜராஜசோழன் படத்துல செவப்பா காமிச்சதுனால இப்பவும் அப்படியெ இருக்கனுமா என்ன. கத கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் செல்வாவின் இந்த முயற்சிய நம்ம பாரட்டனும். ஒங்க விமர்சனம் நல்லா இருக்கு.

  ReplyDelete
 16. ramasamy kannan said...

  //நம்மளுக்கெல்லாம் சோழ மன்னர்கள்னா நம்ம சிவாஜி சார்தான் ஞாபகம் வரார். அவர ராஜராஜசோழன//

  அதத்தான் பொதுபுத்தி என்று நாம் சொல்கிறோம்.நாம் ஒரு வகையான அரைத்த மாவுக்கே பழக்கப
  பட்டுவிட்டோம.அதைத்தான் பதிவின் முதலில் சொன்னேன்.

  நன்றி நணபரே!்

  ReplyDelete
 17. இன்னும் பார்க்கவில்லை.

  ReplyDelete
 18. //சளைக்காமல் எஸ்.ராமகிருஷ்ணன் போல் அந்த//

  சூப்பர்..

  //அடுத்த தடவை நிறைய ஹோம் வொர்க் செய்யுங்கள்.//

  இது அநியாயம்... இந்த படத்திற்கே எக்க சக்க ஹோம் வொர்க் பண்ணி இருக்கிறார் செல்வா ராகவன்.

  மொத்தத்தில் இந்த படம் ப்ளாக்கர்களை ரொம்ப பாதித்து இருப்பதாக தெரிகிறது.. என்னையும் சேர்த்து :-)

  ReplyDelete
 19. Blogger ஸ்ரீ said...

  //இன்னும் பார்க்கவில்லை//

  பாருங்கள்.பார்க்க வேண்டிய படம்.

  ReplyDelete
 20. Gokul said...

  // இது அநியாயம்... இந்த படத்திற்கே எக்க சக்க ஹோம் வொர்க் பண்ணி இருக்கிறார் செல்வா ராகவன்.//

  எக்க சக்க ஹோம் வொர்க் பண்ணி இருக்கிறார் செல்வா ராகவன்.சத்தியமாங்க.நான் சொன்னது ஹோம் வொர்க் இண்டர்வெல்லுக்குப் பிறகு வரும் காட்சிகளை.

  //மொத்தத்தில் இந்த படம் ப்ளாக்கர்களை ரொம்ப பாதித்து இருப்பதாக தெரிகிறது.. என்னையும் சேர்த்து //

  ஆமாம் கோகுல்.ஒரு கிளாஸ் இருக்கு.

  ReplyDelete
 21. //அடுத்தக் களத்திற்கு சினிமாவை நகர்த்தியதற்கு செல்வராகவனுக்குப் பாராட்டுக்கள்//


  அடுத்து இனிமே அவர் ஆ.ஒ மாதிரி படம்
  எடுப்பாரா???.....
  அவர் வேதனை பிரஸ் மீட்டில் புரிந்தது....

  ReplyDelete
 22. இதுவரைக்கும் 10 விமர்சனம் படிச்சிட்டேன். ஒவ்வொண்ணும் படிச்சிட்டு கண்ணாமுழி திருகிடுச்சு..!
  படம் இன்னும் பாக்கலே! எப்படியும் பாத்துடுவேன்.. 1000ல் ஒருவன் (என்னைச் சொல்லிக்கிட்டேன்)!

  ReplyDelete
 23. Blogger ஜெட்லி said...
  // அடுத்து இனிமே அவர் ஆ.ஒ மாதிரி படம் எடுப்பாரா???.....
  அவர் வேதனை பிரஸ் மீட்டில் புரிந்தது....//

  இந்தப் படம் லேட் ஹிட்டுங்க. படம் எடுப்பார்.

  நன்றி.

  ReplyDelete
 24. Blogger ஜெகநாதன் said...

  //இதுவரைக்கும் 10 விமர்சனம் படிச்சிட்டேன். ஒவ்வொண்ணும் படிச்சிட்டு கண்ணாமுழிதிருகிடுச்சு..!//

  நான் என் விமர்சனம் எழுதி போஸ்ட் செய்தவுடந்தான் மற்ற விமர்சனங்களைப் படித்தேன்.
  // படம் இன்னும் பாக்கலே! எப்படியும் பாத்துடுவேன்.. 1000ல் ஒருவன் (என்னைச் சொல்லிக்கிட்டேன்//

  பாத்துடுங்க. நன்றி.

  ReplyDelete
 25. :--)))))))))))))))))

  தலைவரே..,
  இந்த படம் எடுத்ததே சில அ.ஜீ ப்லாகர்ஸ்க்கு மட்டும்தான். அவர்கள் பார்த்து ஓ.கே மட்டுமில்லை எக்ஸ்” ஸலெண்டுன்னே சொல்லிட்டாங்க.

  படத்த பொது புத்தியோடவோ, தனி புத்தியோடவோ பார்த்து தலய பிச்சுக்காம தப்பிச்சுக்கறது பொது ஜனங்களோட தலையெழுத்து.

  வந்த வேகத்துல பொட்டிக்குள்ள போறதப்பத்தி தயாரிப்பு கோஷ்டிதான் கவலைப்படனும்..நமக்கென்ன.

  டைட்டில் கார்டு போட்டுட்டு எப்படி வேணாலும் படம் எடுக்கலாம் அப்படீங்கறதுதான் இந்த படத்தோட மெசேஜ்..

  நீங்களும் டைட்டில் கார்டை கவனிக்காம பதிவு வேற போட்டுட்டிங்க...

  நானும் தெரியாத்தனமா பதிவு போட்டு வாங்கிகட்டிக்கிட்டேன்:
  http://kumky.blogspot.com/


  அட்லீஸ்ட் என்னய மாதிரி பெரிய ஸ்மைலியாவது போட்டு தப்பிச்சுக்கபாருங்க....

  அது வருது..நம்மள நோக்கித்தான் வருது...ஓடுங்க...ஓடுங்க எல்லாரும் தப்பிச்சு ஓடுங்க.

  ReplyDelete
 26. எனக்குப் பிடிச்சுருந்தது அதான் பதிவு போட்டேன். அதில என்ன தப்பு இருக்கு.

  ReplyDelete
 27. பதிவு போட்டது தப்பென்று எங்கேயும் சொல்லவில்லை....

  உ.ஓ.போ தொடர்பான பதிவுகளை நீங்கள் வாசிக்கவில்லையா..?

  ஏற்பட்ட சர்ச்சைகளை சொன்னேன்.

  ReplyDelete
 28. கும்க்கி அண்ணே! யாரும் ஒண்ணும் சொல்ல முடியாது.எந்த சர்ச்சையும் வராது.இதுவும் கடந்துப் போகும்.

  ReplyDelete
 29. விமர்சனம் கொஞ்சம் நீளளம் சார்...
  படம் பார்த்தேன்.. மொத்தமாகப் பிடிக்காவிடிலும், ஆங்காங்கு ரசிக்க வைத்த படம்...

  ReplyDelete
 30. தமிழ்ப்பறவை said...

  //விமர்சனம் கொஞ்சம் நீளளம் சார்...//

  ஆமாம்.
  //படம் பார்த்தேன்.. மொத்தமாகப் பிடிக்காவிடிலும், ஆங்காங்கு ரசிக்க வைத்த படம்...//

  இதுகெல்லாம் கொஞ்சம் அலை
  வரிசையை tuneசெய்துக்கொண்டுப்போகனும்.அப்பத்தான்
  ரசிக்க முடியும்.

  ReplyDelete
 31. . பார்க்க வேண்டிய படம் தான்.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!