Monday, October 19, 2009

ஜகன் மோகினியும் அதிஷாவும் பின்னே ஞானும்

அதிஷாவின் பிளாக்கில் ”ஜகன்மோகினி” சினிமா விமர்சனம் எழுதிஇருக்கிறார்.அதில் அவர் ஒரு வரி எழுதி இருக்கிறார். அது திரைப்படத்தை சிறுவயதிலிருந்து ஒவ்வொருமுறைபார்க்கும் போதும் நிச்சயம் என்னை திருப்திப்படுத்தியிருக்கிறது” (பழைய ஜ.மோ)படம் மகா மொக்கையாக இருந்தாலும் IT JUST ENTERTAINING)”





என்னை இந்த பதிவு எழுத தூண்டிய அதிஷாவுக்கு நன்றி.நான் இந்த படம் பார்க்கவில்லை.”ஈரம்” படம் போனபோது ”ஜகன்மோகினி” ட்ரெய்லர் பார்த்தேன்.அப்போது என் மகன் அடித்த கமெண்டும் இந்த பதிவு எழுத காரணம்.

சும்மா ஒரு அனாலிஸிஸ். அதிஷாவைக் கவர்ந்தது போல் என்னையும்  சிறு வயதில் ஒரு மாதிரி கவர்ந்த படம்.இப்போது ஏன்அதிஷாவுக்குப்பிடிக்கவில்லை அ(ஆத்தா)திஷா வயதுக்கு(பேராண்மை) வந்து விட்டார்.யாக்கை கதை கூட எழுதுகிறார்.


படம் எடுப்பவர்கள் எடுக்கும் முன்   சுத்தமாக ஹோம் ஓர்க் செய்வதே இல்லை.







பழைய ஜகன்மோகினியின்(1978)  தெலுங்கு டப்பிங் வெற்றி பார்முலா:

1.கவர்ச்சி (கவர்ச்சி கிங்காங் ஜெயமாலினி)."பெத்தாங்களா ஆர்டர் கொடுத்து செய்தார்களா" என்று அப்போது கமெண்ட் அடிப்பார்கள்.

2.குழந்தைத்தனமான மாயஜாலம்

3.சமுகப்படங்களுக்கு ஒரு மாற்றாக வந்தது.

4.விட்டாலாசாரியருக்கு ஒரு மவுசு உண்டு இங்கே அப்போது .

5.டீவியின் ஆதிக்கம் கம்மி (எல்லா தரப்பினரும் தியேட்டர் போனார்கள்)

 
இப்போது (31 வருடங்களில்) அதே ஆர்டரில் பார்க்கலாம்:

1.கவர்ச்சி-சினிமா கதாநாயகியிலிருந்து ஆரம்பித்து ஏர்டெல்ஜுனியர் சூப்பர் சிங்கர் வரை கவர்ச்சி வந்துவிட்டது.காட்டவும் செய்கிறார்கள்.

2.மாயஜாலம் - இதற்கு தாத்தா கிராபிக்ஸ்ஸெல்லாம் வந்துவிட்டது. (டீவியிலும் சினிமாவிலும்)(அம்மன் படங்கள்,குட்டிசாத்தான்,அனகோண்டா,ஜூராசிக்,டெர்மினேட்டர் படங்கள்,ராமாயணம்,மகாபாரதம்)

3.மாற்று-ஆங்கிலம் தமிழில் எல்லாம் இது மாதிரி படங்கள் வந்து விட்டது.

4.விட்டாலாசாரியருக்கு கொள்ளுப்பேரன்கள் வந்துவிட்டார்கள்.

5.நிறைய சேனல்கள் விதவிதமான சினிமா படங்கள்/சீரியலகள் வித் மாயஜாலம்/அதிரடி ஆக்‌ஷன்.மொழிமாற்று படங்களை பாமரமக்களே பார்க்கிறார்கள்.
 

5.அப்போது தியேட்டருக்குப் போன தரப்பினரில் 50% இப்போது போவதே இல்லை.

இந்த லேட்டஸ்ட் படம் நமீதாவின் கவர்ச்சியை வைத்துதான்.


இசை?”இசை இளையராஜா.. பாவம் இவரு.. இருக்க இருக்கு ஷகிலா படத்துக்கு கூட மியுசிக் போட்டு பேர கெடுத்துக்குவாரு போலருக்கு.---அதிஷா

அடுத்து கிராபிக்ஸ்.அதுவும் கவுத்து விட்டது.”அம்மன் திரைப்படம் வெளியாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது , அதை விட கேவலமான கிராபிக்ஸ். டிஷ்னி சானலில் இதைவிட நல்ல கிராபிக்ஸ் வருகிறது”---அதிஷா

”ஜகன்மோகினி” ட்ரெய்லர் பார்த்து என் மகன் (14)அடித்த கமெண்ட்:”ரொம்ப குழந்தைத்தனமாக(childish) இருக்கு கிராபிக்ஸ்”



4 comments:

  1. //ஜகன்மோகினி” ட்ரெய்லர் பார்த்து என் மகன் (14)அடித்த கமெண்ட்:”ரொம்ப குழந்தைத்தனமாக(childish) இருக்கு கிராபிக்ஸ்”//

    :)

    ReplyDelete
  2. ஏனோ வாத்திங்க ஸ்ட்ரைக்கப்போ புரட்சித்தலைவர் சொன்னதுதான் நியாபகம் வருது...
    நம்மாளுங்களுக்கு பைப்பிருக்கற அளவுக்கு பம்பில்ல...
    அது போலத்தான்...டெக்னாலஜி வசதி இருக்கிற அளவுக்கு யோசிக்கின்ற மூளை இல்லை.

    ReplyDelete
  3. நன்றி சின்ன அம்மிணி.

    ReplyDelete
  4. நன்றி கும்க்கி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!