Thursday, October 22, 2009

காதல் அசடுகள் - கவிதை



திடீரென
ஏதோ ஒரு நாள
அசட்டுத்தனமாக காதலித்தோம்

அசட்டுத்தனமாகவே
பிரிந்து விட்டோம்
அதே திடீரென

ஆவேசமாக
அடுக்கியும் விட்டோம்
உன் பங்கு என் பங்கு என
ஆயிரம் காரணங்களை
அதே அசட்டுத்தனத்துடன்

சொச்சம் இருக்கிறது
கொஞ்சம் அசட்டுத்தனம்

வைத்துக்கொள்வோம்
புத்திசாலித்தனமாக

மீண்டும் சேர்வதற்கும்
சேராமல் இருப்பதற்கும்


படிக்க:

ஆனந்த விகடன் தீபாவளி மலர் - விமர்சனம்

15 comments:

  1. அசட்டுத்தனம் இல்லாம காதலா!!! யதார்த்தமா இருக்கு கவிதை!

    ReplyDelete
  2. நன்றி சின்ன அம்மிணி.

    ReplyDelete
  3. இளமை ஊஞ்சலாடுது சார் உங்களுக்கு

    ReplyDelete
  4. தண்டோரா ...... said...

    //இளமை ஊஞ்சலாடுது சார் உங்களுக்கு//

    அப்படியா..! கவிதை எப்படி இருக்கு மணிஜி.

    ReplyDelete
  5. வழக்கம்போல அழகான கவிதை.

    ReplyDelete
  6. உங்கள் கவிதைகள் அனைத்தும் பலே....
    அனைத்தையும் நான் ரசித்தேன் :)
    மெய் மறக்க செய்தன சில.....

    ReplyDelete
  7. நன்றி ராதாகிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  8. முதல் வருகைக்கு நன்றி Achu pk. கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. முதல் காதல் , பிரிந்த காதல் ... சேம் ஜீனர்.

    ReplyDelete
  10. நன்றி செளமியா.

    ReplyDelete
  11. நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  12. :) elaarkum purintha nadantha vishayangaLAi kavithaiya solrathum oru thani azhagu.

    Forgive me for my fonts, my unicode doesn't seem to work today.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!