Tuesday, October 6, 2009

நிறை குடத்தில் பாப்கார்ன்கள் தளும்பாது



தியேட்டருக்கு
எப்போது சென்றாலும்
காட்சியின் இடைவேளையில்
சில்லிடும் படிக்கட்டில்
உதிரி மல்லிகைப் பூக்களாய்
சிதறி கிடக்கும்
பாப்கார்ன் துண்டுகளை
பார்த்துப் பழகிவிட்டேன்
மிகை குடத்தை
நிறை குடமாக்கி
தளும்பாமல் எடுத்து வர
வாங்கியவுடன்
ஒரு கைப்பிடி
வாயில் திணித்தபடி

22 comments:

  1. ஹி..ஹி..ரசித்தேன்...

    ReplyDelete
  2. //தளும்பாமல் எடுத்து வர//

    கீழே சிந்தாமல் எடுத்து வருவது ஒரு கலை. :)

    ReplyDelete
  3. //தளும்பாமல் எடுத்து வர வாங்கியவுடன்ஒரு கைப்பிடி
    வாயில் திணித்தபடி

    ஆமாங்க. இது கரெக்ட். என் பையன் படம் பார்க்க வர்றது, பாப்கார்ன் சாப்டுறத்துக்காகவே :)

    ReplyDelete
  4. ஒரு கார்ன் கூடக் கீழே போடாமல் சாப்பிடுவது பெரிய கலைதான்..

    ReplyDelete
  5. அருமை. ரசித்தேன்.

    பதிவர்களுக்காக பாப்கார்ன். இதையும் பார்க்கவும்

    http://mynandavanam.blogspot.com/search/label/popcorn4

    ReplyDelete
  6. சிலநேரங்களில் நமக்கு ரெண்டு கையிலும் இருக்கும்... ஒரு கைப்பிடில்லாம் எடுத்துத் திணிக்க முடியாது, அப்படியே டேரக்டா வாய்தான்.

    ReplyDelete
  7. //உதிரி மல்லிகைப் பூக்களாய்
    சிதறி கிடக்கும்
    பாப்கார்ன் துண்டுகளை//
     
    நல்ல கற்பனை

    ReplyDelete
  8. நன்றி தமிழ்ப்பறவை
    நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  9. நன்றி பின்னோக்கி.

    நன்றி பாசமலர்.

    ReplyDelete
  10. அந்த ஒரு வாய் சொல்லாத ஒன்றை சொல்லும் கவித்துவம்
    மல்லிகைபூ அருமை

    ReplyDelete
  11. :)

    //உதிரி மல்லிகைப் பூக்களாய்
    சிதறி கிடக்கும்
    பாப்கார்ன் துண்டுகளை//

    அருமை அருமை

    ReplyDelete
  12. நன்றி உழவன்.
    நன்றி எவனோ ஒருவன்.

    ReplyDelete
  13. நன்றி பட்டர்ப்ளை சூர்யா.உங்கள் பாப்கார்னையும் படித்து விட்டேன்.அங்கு பார்க்கவும்.

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. நல்ல சிந்தனை

    ReplyDelete
  15. //..பழகிவிட்டேன் ..
    .. தளும்பாமல் எடுத்து வர ..//

    நானும்தான்.. :-)

    ReplyDelete
  16. நன்றி நேசமித்ரன்

    நன்றி விநாயகமுருகன்

    ReplyDelete
  17. நன்றி ஸ்ரீ.

    நன்றி Bavan.

    ReplyDelete
  18. நன்றி பட்டிக்காட்டான்.

    ReplyDelete
  19. azhagana uthiri pookalai - rasichu padikka mudinthathu, nandri :)

    ReplyDelete
  20. நன்றி அருணா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!