Saturday, August 1, 2009

கவிதை எதைப் பற்றி.... சஸ்பென்ஸ்






























இந்த கவிதை எதைப் பற்றி. அதுதான் சஸ்பென்ஸ்... கண்டுபிடியுங்கள்


கவிதைக்கு போவதற்கு முன்

இரவு.கரு மேகங்களில் தோன்றி மறைந்து திரியும் நிலவு.ஒரு பாழடைந்த வீடு. வீட்டின் பக்கவாட்டில் உடைந்த கருங்கல் படிகளால் செய்த மாடி . செடிகளும் கொடிகளும் படர்ந்து..... வாசலில் தலை விரித்த மரம். அதன் பெரிய நிழல் வீட்டின் முன். வீட்டிலிருந்து புறப்பட்ட ஒரு ஒத்தையடிப் பாதை, எங்கோ வளைந்து போய் மறைகிறது. நாய் குரைக்கும் சத்தம்.

இனி கவிதை...........


குதிரை வீரன்

கொளக்.... கொளக்... கொளக்......

குளம்பொலி சத்தம்

ஒரு குதிரை வீரன்

அந்த வீட்டின் முன்

வந்து நிற்கிறான்

குதிரை திமிறுகிறது

லகானன பிடிக்ககனைக்கிறது

முன்னம் கால்களை தூக்கி

யாராது வீட்டில் இருக்கிறீர்களா

கேட்கிறான் குதிரை வீரன்

யாராது வீட்டில் இருக்கிறீர்களா

காற்றில் எதிரொலி

மயான அமைதிக்கு - பிறகு

ஏதோ கிசு கிசுப்புகள்....

குறுக்கும் நெடுக்குமாக

அலையும் கால் ஒலிகள்

செல்லரித்தக் கதவு துளைகளிள்

தெரியும் கண்கள்

பின் கதவு தாளிடப்படும்

ஒசைகள் - வீட்டினுள்ளே

நிலவு மறைந்து போய்

உலகமே இருண்டது போல்

ஆக......................

வீட்டின் பக்கவாட்டில்

வருகிறான் குதிரை வீரன்

யாராவது வீட்டில் இருக்கிறீர்களா

பதில் இல்லை

எதிரொலியும் இல்லை

உங்களைத்தான்....உங்களுக்காக

ஒரு பரிசு பொருள் - மன்னர்

அன்பாக கொடுத்துள்ளார்

வாங்கிக்கொள்ளுங்கள்

உலகமே ஒடுங்கின அமைதி

தயவு செய்து கதவைத்திறங்கள்

................................................

................................................

மன்னித்து விடுங்கள்

கிளம்புகிறேன் நேரமாகிவிட்டது

வெகு தூரத்தில்.............

கொளக்.... கொளக்... கொளக்

.

என்ன சஸ்பென்ஸ்?


இந்த கவிதை குதிரை வீரன் அல்லது வீட்டில் உள்ள கதாபாத்திரங்களைப் பற்றியோ மற்ற பொருள்களை பற்றியோ அல்ல.



அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்ற ஒரு மூன்று அல்லது நான்கு நிமிட திகில் மட்டும். இதை உணர்ந்தால் கவிதைக்கு வெற்றி. .

.

இது VI th std. (CBSE) English lessonஇல் வரும் poem.சில மாற்றங்களுடன் எழுதியுள்ளேன்


இது ஒரு மறுபிரசுரம்


11 comments:

  1. /இது ஒரு மறுபிரசுரம்//

    எங்கயோ படிச்சுருக்கோமேன்னு யோசனையிலேயே படிச்சேன் :-)))

    ReplyDelete
  2. The Listeners by Walter De La Mare...

    சரியா? :)

    ReplyDelete
  3. ஆமாம்..Listeners ..தான்..இங்கே ரியாத் பள்ளிகளில் CBSE 8வது வகுப்புக்கு...

    ReplyDelete
  4. பெரிய சஸ்பென்ஸ் இருக்கே

    ReplyDelete
  5. அட ...நான் கூட படிச்சுருக்கேனே!!!

    ReplyDelete
  6. சென்ஷி கருத்துக்கு நன்றி.

    ______________

    வாங்க கார்த்திக்.நன்றி.இருக்கலாம்,ஞாபகம் இல்ல.என் பையனுக்காக இதைச் சொல்லிக்
    கொடுக்கும்போது இது எதைப் பற்றியது என்று விழித்தேன்.”அமானுஷ்யம்” என்றுதான் நினைத்தேன். இப்படி ஒரு what is next என்று ஒரு suspense thriller போல் போவது ஒரு அற்புதம்.

    ReplyDelete
  7. பாச மலர் said...
    // ஆமாம்..Listeners ..தான்..இங்கே ரியாத் பள்ளிகளில் CBSE 8வது வகுப்புக்கு...//

    நன்றி பாசமலர்.
    Suresh Kumar said...

    //பெரிய சஸ்பென்ஸ் இருக்கே//

    ஆமாங்க நன்றி.

    ReplyDelete
  8. அன்புடன் அருணா said...

    //அட ...நான் கூட படிச்சுருக்கேனே!!!//

    நன்றி அருணா.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. நா அஞ்சோட நிறுத்திட்டேன்..கவிதை நல்லா இருக்கு..கதை கைப்புல்,கோவிந்தா கொள்ளி..கடன் வச்சிட்டு போயிருந்தா??

    ReplyDelete
  11. நன்றி தண்டோரா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!