Friday, September 24, 2010

இளையராஜா -King of Soulful Melodies

இளையராஜா, முன்னால் இசை மேதைகளிடமிருந்து அடுத்தக் கட்டத்திற்கு இசையைக் கடத்தும்  அவரின் அறிமுக வருடங்களை கவனித்தால் சில விஷயங்கள் பிடிபடும்.


அப்போது இவர் இ”ளை”யராஜா இல்லை.சொந்த கையெழுத்து.


1.அவர்கள் மாதிரி பாட்டின் ஜீவனை(soul)/இனிமையை(மெலடி?)/உணர்ச்சிகளை நிலைநிறுத்திக்கொண்டு  இன்னும் மேலே தூக்குகிறார்.அதனால் இன்னும் கூட அவர் பாடல்கள் soulful and lilting one(சுகமான/இனிமையான) அண்ட் எமோஷன்ஸ் பொங்கி வழிகிறது.

(அது என்ன soulful அல்லது soul stirring பாட்டுக்கள்? நாம் ஐந்து புலன்களின் மூலமாகத்தான் எதையும் உணர்கிறோம்.ஆனால் இந்த ஐந்து புலன்களையும் மீறி சில படைப்புக்கள் நம்மில் அல்லது நம மனதில் (ஆத்மா?)  சில ஆழமான உணர்ச்சிகளை கிளறிவிடுகிறது அல்லது படுத்தி எடுக்கிறது)

உதாரணம்: ”கண்டேன் எங்கும் பூமகள்”.It is haunting melody of S.Janaki.

2.அவரின் மிகப் பெரிய பலமான இடை இசைக் கோர்ப்புகள்(rich orchestration)
பாட்டின் ஜீவனை(soul)/இனிமையை(மெலடி?)/உணர்ச்சிகளைஅணைத்தவாறு இனிமையாக அடுக்கப்படுகிறது.

3.ஹம்மிங் மற்றும் பாட்டின் சங்கதிகளை வித விதமாக கொடுப்பது.மாத்தி யோசி கான்செப்ட்.

சங்கதிகள் என்பது ஒரு பாட்டின் ராகம் பொதிந்த ஒரு வரியை/வார்த்தையை/சொல்லை விதவிதமாக இம்புரூவைஸ் செய்து பாடுவது.இது கர்நாடக இசையில் மிகுந்து காணப்படும்.இது பாடகர்களின் கற்பனை வளத்தைப் பொருத்து அமையும்.

கிழ் உள்ள ஆடியோவில் ”பண்டூரிதீ கோலு இகவைய்யா ராமா” என்ற ஒரு பாட்டின் வரியை எப்படி கிட்டத்தட்ட 14 தடவை பாடி ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாடலில் இம்புரூவைஸ் செய்து ராகத்தின் அழகை வெளிப்
படுத்துகிறார் ஒரு பெண்மணி.ராகம் ஹம்சநாதம்.

ராஜா இதே ராகத்தில் “சொர்க்கமே என்றாலும் நம்ம”பாட்டைப் போட்டுள்ளார்.

நன்றி: ராகசுரபி


 
இதே முறையில் ஆனால் இது மாதிரி இல்லாமல் ராஜா சினிமாவில் மெட்டை விதவிதமாக போட்டு அசத்துகிறார்.பாட்டின் வரிகளில் improvisation காட்டுவது. சிம்பிளாக சொன்னால்மெட்டில் kaizen  போடுவது.


உதாரணம் நிறைய இருக்கு. 1.பொன்மானே கோபம் ஏனோ (அழகாக வளைத்துப் பாடுவது) 2. என்னுள்ளே என்னுள்ளே(இதில் ”எதுவோ மோகம்”..1.எதுவோஓ...... 2.ஓ.....  3. மோ..ஒ...கம் என்று வரும் 3.தம் தம் தனனம்
4.நான் என்பது நீ அல்லவோ 5.தும்பி வா துமபக்குடத்தில்

பின்னால் கொடுக்கப்பட்ட பாடல்கள் எல்லாம் ராஜாவின் ஆரம்ப கால பாடல்கள்.முக்கியமாக எல்லாம் லைவ் ரிக்கார்டிங்.பிட்டுகளை வைத்து  உட்கார்ந்த இடத்தில் ஒட்டுப் போடுவது அல்ல.

இந்த இசைக்கோர்ப்பெல்லாம்அப்போது பிரமிக்க வைக்கும் விஷயங்கள்.
முதல் தடவை நடக்கும் விஷயங்கள்/சோதனை முயற்சி போன்றவை.இப்போது பழக்கிவிட்டார் ராஜா.பழகியும்விட்டோம்.

(அப்போது கேட்கும் போதெல்லாம் எம் எஸ் விஸ்வநாதனிடமிருந்து( என் முன்னால் மேஸ்ட்ரோ..ஏன் இப்பவும்தான்) வெகு விரைவில்  ராஜாவால் ஹைஜாக் செய்யப்படுவேன் என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கும்)

அப்போதிருந்த புளித்துப்போன  தமிழ் இசையால் நிறைய இந்திப் பாடல் மோகம் தமிழ்நாட்டில் இருந்தது. அதில் நானும் ஒருவன்.

ஆடியோ வசதி அவ்வளவாக இல்லாத அப்போது இந்த பாடல்கள் டீக்கடைகளிலும்,
கல்யாண மண்டபங்களிலும்,திருவிழாக்களிலும் ,பிளாட்பார நரிக்குறவர் வைத்திருக்கும் டிரான்ஸிடர்களில் காற்றில் மிதந்து வந்து மனதை படுத்தும். அசர வைக்கும்.காரணம் புதுவித இசை.

ரசிப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம். இந்தப் பாடல்களில்  வைரமுத்துவின் டார்ச்சர் வரிகள் இல்லை. நான் இவரின் 80% பாடல்களை  ரசிப்பதில்லை. காரணம் தி.ராஜேந்தரின் எதுகை மோனை டைப்.இலக்கிய நயம் இல்லாமல் ஓவர் லோக்கலைஸ்டு.இதற்கு இளையராஜாவும் பொறுப்பேற்கிறார்.

பின் வரும் பாடல்களின் வரிகள் காதுக்கு இதமாக இருக்கும்.

ஒன்றை ரசிப்பதற்கு அதன் கூட வாழ வேண்டும் என்று சொல்வார்கள்.பின் வரும் பாட்டுக்கள் soulful and lilting melodies of Maestro.வாழந்துப் பாருங்கள்.

இசைக்கோர்ப்புகளில்  எல்லா வித நாதங்களும் மேல் நாடு+ நம் நாடு கலந்துக் கட்டியாக ஒரு மேதமைத் தன்மையோடு  வருகிறது. வந்தாலும் பாட்டின் மணம்/ மூட் மாறாமல் இருப்பது ஆச்சரியம்.Still it has a local flavour..!

இளையாராஜாவின் மீது அப்போதையக் குற்றசாட்டுக்கள்  “ இவர் இசைக்கோர்ப்பில் பாடலை முழ்கடித்து சிதைக்கிறார்”  “ பாடலை தேவைக்கு மேல் அழகுப் படுத்துகிறார்” என்பது.

பாடலை ஆழ்ந்துக் கேட்பவர்களுக்குத் தெரியும் எது உண்மை என்று.கிழ் வரும் பாடல்களே சாட்சி.

(சமீபத்தில் “மழையே தூவும் மழையே”(ஈரம்) நல்ல மெலடிப் பாட்டு.வித்தியாசமான இசை நாதங்கள் வரும்.ஆனால் இசைக்கருவிகள் பாட்டை ”போட்டுத் தள்ளி” விட்டது.

”ஒரு வானவில் போலே” (காற்றினிலே வரும் கீதம் -1978)

மென்மையான  இசை,சுகந்தமான  சிம்பிளான மெட்டு.ஜெயசந்திரன்/ஜானகி குரல்கள் அருமை.ஜெயசந்திரன் என்ன ஒரு அருமையான பாடகர்.


Oru vanavil pole | Music Codes

எங்கும் நிறைந்த இயற்கையில் (இது எப்படி இருக்கு -1978)

00.54-2.12 இனிமை.பெரிய பல்லவி.பெரிய பாட்டு.வித்தியாசமான மெட்டு+இசை+பாடியவர்கள் எல்லாமே சூப்பர். இனிமையான டியூன்.
அருமையான வரிகள்.It is very close to my heart.


Engum Niraintha | Musicians Available

கண்ணன் ஒரு கைகுழந்தை(பத்ரகாளி -1976)

குழந்தையின் தூளி அசைவதைப் போல ஆரம்பிக்கும் இசை.
 

கீதா.... சங்கீதா...(அன்பே சங்கீதா -1979)

ஜெயசந்திரன்  வழக்கம் போல அருமை. ஜென்ஸி இணையும் இடம் அருமை.

ஜென்ஸியின் வித்தியாசமான குரல்.ரொம்ப மூக்கால் பாடுகிறாரோ?எனக்குப்பிடித்திருக்கிறது.

அப்போதைய கனவு காதலிகளின் பேஷனான பெயர்கள் கீதா,சங்கீதா,உஷா,ராதா.......



ஏதோ நினைவுகள் நெஞ்சிலே(அகல் விளக்கு -1979)

 மேதமை பொருந்திய இசை. ஷைலஜா குரல் அருமை.



கண்டேன் எங்கும்(காற்றினிலே வரும் கீதம்-1978).
ஜானகியின் Soul stirring ஹம்மிங் முடிந்து விரட்டும் வயலின்கள் செயற்கையான கீ போர்ட் வயலின் இல்லாமல் உண்மையான வயலின்கள்.ஓவர்லாப்பிங் ஹம்மிங் புதுசு.பின் வரும் ஆடியோவில் இல்லை.

 ”வண்ணக்கிளியே ஏக்கம் ஏனோ...” கம்பி இழைக் கீச்சுக் குரல் haunting melody.Hats off  to S.Janaki . இந்த மாதிரி பாட்டுகளுக்கு  ராஜா போட்ட பிள்ளையார் சுழி இது என்று நினைக்கிறேன்.

நேரடியாக கேட்காமல் காற்றில் மிதந்து வந்து கேட்டால் ஏக்கத்தை உண்டாக்குகிறது.

நன்றி திரு.ராமசாமி:

ரசிகர் 
திரு ராமசாமிக்கு எழுதிய  ராஜா கடிதம்:




தென்னமரத்துல தென்றல் அடிக்குது (லஷ்மி -1979)

ராஜாவின் முதல் டூயட் சாங்?சுசிலா குரலில் எவ்வளவு இளமை.”பட்டு கழுத்துல முத்து தெறிக்குது ... பொண்ணு சிரிக்கையில”.அருமையான வரிகள்.யார் எழுதியது?சிலோன் ரேடியோவில் அடிக்கடிப் போடுவார்கள்.



சித்திர செவ்வானம் (காற்றினிலே வரும் கீதம்-1978)

ஒரு ஆச்சரியம் இதுவும் “புதிய பூவிது பூத்தது”ம் ஒரு ராகத்தில் போடப்பட்ட பாட்டு.  இரண்டு இசைக்கோர்ப்புகளும் வெவ்வேறானவை.



சின்ன கண்ணன் அழைக்கிறான்(கவிக்குயில் -1977)
ஏகாந்தமான புல்லாங்குழல் கிளாசிகல் இளையராஜா.அற்புதமான ஆரம்ப 0.22-0.30 சிதார்(?) வருடலுடன்  தபலாவும் புல்லாங்குழல் சேரும் ஜங்ஷன் அருமை.

பாட்டின் இசைக்கு ஏற்ற்படி பாடல் வரிகளும் இசைத்தன்மையோடு காற்றில் புல்லாங்குழல் நாதம் போல் நீந்துகிறது.வாலி?




ஒரு நாள் உன்னோடு ஒரு(1977-உறவாடும் நெஞ்சம்).

0
.39-0.54 வயலின்அட்டகாசம்.0.49 - 0.54 அதே வயலின் புல்லாங்குழலுடன் சிறு உரையாடல். அடுத்து வரும் வருடங்களில் ஒரு இசை மேதை  தமிழ் நாட்டில் விஸ்வரூபம எடுப்பதற்க்கான  “அறிகுறிகள்” காட்டிய பாட்டு.வெஸ்டர்ன் கிளாசிகல் பரிசோதனை முயற்சி?



மஞ்சள் நிலாவுக்கு ஒரே(முதல் இரவு-1977)
 

முதல் ரயில் டியூன் பாட்டு?வித்தியாசமான மெட்டு.ரயில் ஓடும் சத்தம் வருவதற்கு இரண்டு உப்புத்தாள்களை ஒன்றோடு ஒன்று தேய்ப்பார்கள் அப்போது.”ஊ ஊ ஊ ஊ ஊஊ “ வித்தியாசமான ஆனால் சிம்பிளான ஹம்மிங்.




டெயில் பீஸ்:
மேல் தொகுத்துள்ள பாட்டுக்கான படக் காட்சிகள் எப்படி? சிலது குமட்டிக்கொண்டு வருகிறது.

35 comments:

  1. சார் மறுபடியும் உங்களிடம் இருந்து ஒரு அழகான பதிவு. எனக்கு இப்போதெல்லாம் ராஜா அவர்களின் இசையினை கேட்கும் போது வரும் இன்பத்தை விட அவரை பற்றி நீங்கள் தரும் பதிவுகள் இரட்டிப்பு இன்பத்தை தருகின்றன. உங்களுக்கு ஒரு சலாம்.

    //ஒன்றை ரசிப்பதற்கு அதன் கூட வாழ வேண்டும் என்று சொல்வார்கள்.பின் வரும் பாட்டுக்கள் soulful and lilting melodies of Maestro.வாழந்துப் பாருங்கள்.//

    நீங்கள் சொல்வது உண்மைதான். ராஜா அவர்களின் சில பாடல்களை கேட்கும் போது என்னையறியாமல் ஒரு nostalgic feeling-குள் சென்றுவிடுவேன். என்னை பொறுத்த வரையில் அதுவும் ஒரு வகையான யோகநிலை தான்.

    //இளையாராஜாவின் மீது அப்போதையக் குற்றசாட்டுக்கள் “ இவர் இசைக்கோர்ப்பில் பாடலை முழ்கடித்து சிதைக்கிறார்” “ பாடலை தேவைக்கு மேல் அழகுப் படுத்துகிறார்” என்பது.//

    இப்போதுள்ள பாடல்களை கேட்டல் தெரியும் ராஜாவின் இசை எவ்வளவு அருமையானது என்று.

    பதிவு ரொம்ப அருமை, அழகு சார்.

    மறுபடியும் ஒரு சலாம்.

    ReplyDelete
  2. இளையராஜா இந்திப்பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களை த(மிழ்)ன் பாடல்களை கேட்க வைத்தவர்.அவர்களில் நானும் ஒருவன், இன்று வரை.

    ReplyDelete
  3. ரெண்டு said...

    // சார் மறுபடியும் உங்களிடம் இருந்து ஒரு அழகான பதிவு. எனக்கு இப்போதெல்லாம் ராஜா அவர்களின் இசையினை கேட்கும் போது வரும் இன்பத்தை விட அவரை பற்றி நீங்கள் தரும் பதிவுகள் இரட்டிப்பு இன்பத்தை தருகின்றன. உங்களுக்கு ஒரு சலாம்.//

    நன்றி ரெண்டு.

    //இப்போதுள்ள பாடல்களை கேட்டல் தெரியும் ராஜாவின் இசை எவ்வளவு அருமையானது என்று//

    மிக சரி.அதற்குத்தான் “மழையே” பாட்டை உதாரணம் கொடுத்தேன்.

    ReplyDelete
  4. thamizhan said...

    // இளையராஜா இந்திப்பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களை த(மிழ்)ன் பாடல்களை கேட்க வைத்தவர்.அவர்களில் நானும் ஒருவன், இன்று வரை.//

    நானும் ஒருவன். ”த(மிழ்)ன் ” சூப்பர் சார்.

    நன்றி.

    ReplyDelete
  5. அருமையான பதிவு சார்.
    நானும் ராஜாவின் தீவிர ரசிகன் தான்.

    ReplyDelete
  6. அன்பரசன் said...

    //அருமையான பதிவு சார்.//

    நன்றி.உங்கள் பின்னூட்டங்கள் என்னை எழுதும் போது சோர்வடையாமல் வைக்கின்றன.

    // நானும் ராஜாவின் தீவிர ரசிகன் தான்.//

    ராஜாவின் இசை மகுடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.

    ReplyDelete
  7. அகெய்ன் கலக்கல் பதிவு...’எங்கும் நிறைந்த இயற்கையில்’ இன்றுதான் கேட்கிறேன்.நன்றாக இருந்தது.
    ’ஏதோ நினைவுகள்’ ஷைலஜாவா பாடியது. இவர் குரல் பிரித்தறியத் தெரியாது எனக்கு.
    யார் சார் அந்த ரசிகர் ராமசாமி. எங்க இருந்து பிடிச்சீங்க ராஜாவோட கையெழுத்தை...பகிர்வுக்கு நன்றி...
    ‘ஒருநாள் உன்னோடு ஒருநாள்’ ரொம்பப் பிடிச்ச பாட்டு.(ஆனா இங்க ஆடியோ பாதிதான் வருது)
    முதல் ரயில் ட்யூன் பாட்டு என்னோட ஃபேவரைட் ஒண்ணு.. உப்புத்தாள் மேட்டர் சூப்பர்...

    ReplyDelete
  8. நண்பரே அடிக்கடி எங்கள் இசைக் கடவுளின் பாடல்களைப் போட்டு எம்மைப் புல்லரிக்கச் செய்கின்றீர்கள்.


    //சார் மறுபடியும் உங்களிடம் இருந்து ஒரு அழகான பதிவு. எனக்கு இப்போதெல்லாம் ராஜா அவர்களின் இசையினை கேட்கும் போது வரும் இன்பத்தை விட அவரை பற்றி நீங்கள் தரும் பதிவுகள் இரட்டிப்பு இன்பத்தை தருகின்றன. உங்களுக்கு ஒரு சலாம்.//

    கண்ணைமூடிக்கொண்டு வழிமொழிகின்றேன்,

    ReplyDelete
  9. ரவி ஸார்.. நீங்கள் கழுகு படத்திலிருந்து காதலேன்னும் கோவில்.. எனும் பாடலைபற்றி எழுதியிருக்கலாம் என்பது எனது எதிர்பார்ப்பு.. ஒரு அசாதரண இசையாகவும்.. அமானுஷ்யதன்மையும் அந்த பாடலில் இருப்பதாக எனக்கு படுகிறது..உங்களது நுண்மையான விபரங்களால் மேலும் அது அழகுருமே என்று எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  10. சார் சாமி போட்ட முடிச்சு என்ற படத்தில் வரும் மாதுளம் கனியே என்ற பாடலில் வரும் வயலின் மற்றும் ராகத்தை பற்றி எழுத வேண்டுகிறேன்

    வழக்கம் போல் அனைத்தும் அருமை

    ReplyDelete
  11. தமிழ்ப்பறவை said...

    // அகெய்ன் கலக்கல் பதிவு...//
    நன்றி.

    //’எங்கும் நிறைந்த இயற்கையில்’ இன்றுதான் கேட்கிறேன்.நன்றாக இருந்தது.//

    அற்புதமான வரிகள்.மெலடி.தன் இசைக்கோர்ப்புக்காக
    இந்தப் பாட்டை இழுத்திருக்கிறார்(5.51) என்று என் மனதில் படுகிறது.

    // ’ஏதோ நினைவுகள்’ ஷைலஜாவா பாடியது. இவர் குரல் பிரித்தறியத் தெரியாது எனக்கு.//

    மூக்கால பாடாத ஜென்சி.அருமையான குரல்.

    // யார் சார் அந்த ரசிகர் ராமசாமி. எங்க இருந்து பிடிச்சீங்க ராஜாவோட கையெழுத்தை...பகிர்வுக்கு நன்றி...//

    நெட்டில் பிடித்தேன்.

    // ‘ஒருநாள் உன்னோடு ஒருநாள்’ ரொம்பப் பிடிச்ச பாட்டு.(ஆனா இங்க ஆடியோ பாதிதான் வருது)//

    Div Share” ஆடியோ படுத்தி எடுத்துவிட்டது.ஏன் என்று புரியவில்லை. அதனால்தான் muzipooல் இரண்டு இருக்கும்.

    நண்பர் கோபிநாத் ஏன் இன்னும் காணவில்லை?

    ReplyDelete
  12. வந்தியத்தேவன் said...

    //நண்பரே அடிக்கடி எங்கள் இசைக் கடவுளின் பாடல்களைப் போட்டு எம்மைப் புல்லரிக்கச் செய்கின்றீர்கள்.//

    நன்றி நண்பரே.அடிக்கடி வந்து உற்சாகம் மூட்டுங்கள்.

    ReplyDelete
  13. raja said...

    // ரவி ஸார்.. நீங்கள் கழுகு படத்திலிருந்து காதலேன்னும் கோவில்.. எனும் பாடலைபற்றி எழுதியிருக்கலாம் என்பது எனது எதிர்பார்ப்பு//
    வாங்க ராஜா.இந்தப் பாடல் எப்போதோ(15 வருடங்களுக்கு முன்?)கேட்டிருக்கிறேன்.இப்போது ஞாபகப்படுத்தியத்திற்கு நன்றி.இதில் மற்ற இரண்டு பாடல்கள் ஹிட்.

    முரளி என்பவர் பாடுகிறார்.இவர் அம்மா பாடகி.அருமையான பிசிறு இல்லாத புதுக் குரல்.ம.வாசு ஜாடை.மென்மையான பாட்டு.வி்த்தியாசமான காதல் உருக்கம்.மலை வாசஸ்தலம் பாட்டு மாதிரி பாட்டை அணைத்துச் செல்லும் இசை.

    //.உங்களது நுண்மையான விபரங்களால் மேலும் அது அழகுருமே என்று எதிர்பார்க்கிறேன்..//

    எவ்வளவு பாடல்கள் கேட்பது.Cutoff 1978 ஆக எடுத்துக்கொண்டு பதிவு எழுதினேன்.அப்போது ராஜாவின் probation period. இது 1982.1982ல் ராஜா confirm ஆகிவிட்டார்.

    நன்றி ராஜா

    ReplyDelete
  14. பாலாஜி சங்கர் said...

    //வழக்கம் போல் அனைத்தும் அருமை//

    நன்றி.

    // சார் சாமி போட்ட முடிச்சு என்ற படத்தில் வரும் மாதுளம் கனியே என்ற பாடலில் வரும் வயலின்//

    எவ்வளவு பாடல்கள் கேட்பது.Cutoff 1978 ஆக எடுத்துக்கொண்டு பதிவு எழுதினேன். இதுவும்(1991) அருமையான பாடல்.ராஜாவின் வழக்கமான கிராமிய இசை.ஜானகி குரல் அட்டகாசம்.

    இதில் ஹைலைட் ஜானகியின் இளசு குரல் கெஞ்சல் ஹம்மிங்.வித்தியாசம்.மனதைக் கவ்வுகிறது.

    இதுவும் “மணியே மணி குயிலே” பாட்டும் ஒரே மெட்டு. நண்பரைக் கேட்டேன் “நட பைரவி”ராகம் என்று சொன்னார். எனக்குத் தெரியவில்லை.அடுத்து
    ”புத்தம் புது காலை” “ஓ பட்டர் பிளை” எல்லாம் இதே ராகம் என்று சொன்னார்.


    நன்றி.

    ReplyDelete
  15. நன்றி ரவி ஸார் உங்கள் பதிலுக்கு..என்னிடம் மிக அரிய இளையராஜா பாடல்கள் உள்ளன.. அவற்றிலிருந்து தினமும் 20 அல்லது 30 பாடல்கள் கேட்பேன்... அப்பொழுது கேட்டதுதான் கழுகு படத்தில் காதலேன்னும் கோவில்.. பாடல்..

    ------முரளி என்பவர் பாடுகிறார்.இவர் அம்மா பாடகி.அருமையான பிசிறு இல்லாத புதுக் குரல்.ம.வாசு ஜாடை.மென்மையான பாட்டு.வி்த்தியாசமான காதல் உருக்கம்.மலை வாசஸ்தலம் பாட்டு மாதிரி பாட்டை அணைத்துச் செல்லும் இசை.-----
    இதுபோன்றவிபரங்களே உங்களது வலைதளத்தை தொடர்ந்து என்னை பார்க்கவைக்கிறது.. விடாமல் தொடருங்கள் கலைவிருந்தை பிறருக்காக...மிக்க நன்றி ரவி ஸார். வணக்கம் .ம.வாசு ஜாடைதான் புரியவில்லை.

    ReplyDelete
  16. அழகான பதிவு.நிறைய விஷயங்களை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்.உங்கள் பதிவைப் படிக்கும் போது பழைய நிகழ்வுகள் மறுபடி ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.இந்தப் பாடல்களெல்லாம் நான் சிறு வயதில் எங்கள் வீட்டினருகில் உள்ள ஒரு கேசட் கடையில் கேட்டு மகிழ்ந்தது.அதெல்லாம் தனி இடுகையாகவே போடலாம்.மறக்க முடியாத நாட்கள்.மறுபடி உங்கள் இடுகை மூலமாக ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  17. //இதுபோன்றவிபரங்களே உங்களது வலைதளத்தை தொடர்ந்து என்னை பார்க்கவைக்கிறது..//

    நன்றி ராஜா.

    //ம.வாசு ஜாடைதான் புரியவில்லை. //
    இவர் குரல் மலேசியா வாசுதேவன் சாயல்.

    ReplyDelete
  18. ஸ்ரீ said...
    // அழகான பதிவு.நிறைய விஷயங்களை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்.உங்கள் பதிவைப் படிக்கும் போது பழைய நிகழ்வுகள் மறுபடி ஞாபகம் மறுபடி உங்கள் இடுகை மூலமாக ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.//

    நன்றி ஸ்ரீ.

    ReplyDelete
  19. i am suresh i am diehard fan of raja sir
    murali who sang in kazhugu i think is son
    of solamangalam sisters
    if wrong pl correct me
    reg raja sir music the in kovil pura film all are songs are gems
    tks for giving me an chance of hearing about
    raja sir
    t v suresh

    ReplyDelete
  20. Suresh said...

    // i am suresh i am diehard fan of raja sir//

    Thanks for visiting this blog.

    // murali who sang in kazhugu i think is son
    of solamangalam sisters//

    You are right.

    They were(Jayalakshmi &Rajalakshmi) behind that famous Kanda Shashti Kavasam
    song. They composed music for one film, but, I forgotten the name,.A.V.M.Rajan is hero.

    Thanks Suresh.

    ReplyDelete
  21. தல..முதல்ல பெரிய மாப்பு கேட்டுக்கிறேன்..எதுக்கு தெரியும் உங்களுக்கு..;))

    பதிவுல பாட்டுகள் ஒருபுறம் போட்டு கலக்கியிருந்தாலும் பதிவுல முதல் பகுதியில சொல்லியிருக்கிங்க பாருங்க தூள் தல ;))

    \\\ராஜாவின் முதல் டூயட் சாங்?\\

    இந்த மாதிரி விஷயங்களுக்கு தான் நீங்க வேணுமுங்கிறது ;))

    ReplyDelete
  22. உழைப்பு ...உழைப்பு... உழைப்பு

    உழைப்பின் மேன்மையைச் சொல்லுவதற்காக மிகவும் உழைத்திருக்கிறீர்கள் அய்யா

    வாழ்த்துகள் ..

    ReplyDelete
  23. ரெண்டு தல...சுருக்கமாக சொன்னாலும் கலக்கலாக சொல்லியிருக்கிங்க ;))

    //சார் மறுபடியும் உங்களிடம் இருந்து ஒரு அழகான பதிவு. எனக்கு இப்போதெல்லாம் ராஜா அவர்களின் இசையினை கேட்கும் போது வரும் இன்பத்தை விட அவரை பற்றி நீங்கள் தரும் பதிவுகள் இரட்டிப்பு இன்பத்தை தருகின்றன. உங்களுக்கு ஒரு சலாம்.//

    தல நானும் மீண்டும் ஒருக்க வழிமொழிஞ்சிக்கிறேன் ;))

    ReplyDelete
  24. கோபிநாத்,

    ராமாயண உபன்யாசம் எங்கு நடந்தாலும் அங்கு ஒரு அனுமார் படம் வைத்திருப்பார்கள்.அதாவது அனுமார் ராமா நாமம் எங்கு கேட்டாலும் அங்கு பிரசண்ட் ஆகி விடுவதாக ஐதீகம். அதுமாதிரி நீங்க. ராஜா பதிவு எங்கு இருந்தாலும் அங்கு பிரசெண்ட்.

    நன்றி கோபிநாத்.

    ReplyDelete
  25. September 27, 2010 9:06 PM
    துரை. ந.உ 9443337783 said...

    வருகைக்கு நன்றி.

    // உழைப்பின் மேன்மையைச் சொல்லுவதற்காக மிகவும் உழைத்திருக்கிறீர்கள் அய்யா//

    ஆமாம் சார்.ராஜாவின் இசை மேன்மை அப்படி. ஆறுதலாக இருக்கிறது உங்கள் கருத்து..

    நன்றி.

    ReplyDelete
  26. dear sir,

    please provide some of the very rare songs from the musicraja sir's sogs.

    ReplyDelete
  27. dear sir,

    do u know who is the musicdirector of the film
    KAVIKKUYIL.
    Raja sir, only composed the song chenna kannan azhaikeraan, but the music director of the film is not raja sir,

    ReplyDelete
  28. ரவிஜி...

    உங்களுடன் ராஜா சம்பந்தப்பட்ட பதிவுகளில் பயணிப்பதே ஒரு தனி சுகம்...

    இந்த ராஜா பதிவுகளில் நீங்கள் கொடுப்பது பலப்பல அரிய மற்றும் ஆச்சரியமூட்டும் தகவல்கள்...

    அதற்காக உங்களுக்கு ஒரு ஷொட்டு...

    இன்றைக்கு வரும் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத பாடல்களை பார்த்தால், அன்று ராஜா & வைரமுத்து இணைந்த எத்தனையோ பாடல்கள் ராஜகீதங்கள் அல்லவோ?? அதனால், இந்த ஒரு கருத்துக்கு ”மட்டும்” உங்களோடு நான் டூ விட்டுக்கொள்கிறேன்..

    ”கழுகு” படத்தில் வரும் காதலெனும் கோவில் பாடல் பாடியது “சாய்பாபா” என்ற பாடகர் என்று கேள்விப்பட்டதாக நினைவு....

    ReplyDelete
  29. ceeyes said...

    // please provide some of the very rare songs from the musicraja sir's sogs.//

    இண்டர் நெட்டில் கிடைக்கிறது.தயவு செய்து தேடிப் பாருங்கள்.

    முதல் வருகைக்கு நன்றி. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  30. ceeyes said...


    // KAVIKKUYIL. Raja sir, only composed the song chenna kannan azhaikeraan, but the music director of the film is not raja sir,//

    ஆஹா புதுசா இருக்கு.அவர்தாங்க MD.இதில் வரும் பாட்டுக்களின் பாணியை வைத்துக் கண்டுபிடிக்கலாம்.
    ராஜாவின் ஸ்டாம்பு இருக்கும்.

    ReplyDelete
  31. ரவிஜி...

    வாங்க கோபி. ரொம்ப நாளாச்சு.

    நம்ம ரெண்டு பேரும் இரண்டு வார்த்தைக் கதைகள் எழுதறத விட்டுட்டோம்.அதில அடிக்கடி சந்திப்போம்.

    //உங்களுடன் ராஜா சம்பந்தப்பட்ட பதிவுகளில் பயணிப்பதே ஒரு தனி சுகம்...//

    நன்றி கோபி.


    //அன்று ராஜா & வைரமுத்து இணைந்த எத்தனையோ பாடல்கள் ராஜகீதங்கள் அல்லவோ?? அதனால், இந்த ஒரு கருத்துக்கு ”மட்டும்” உங்களோடு நான் டூ விட்டுக்கொள்கிறேன்..//

    நான் அவரின் 80% பிடிக்காது என்று சொன்னேன்.மீதி 20% உங்கள் பாட்டுக்கள் அடங்கலாம்.

    அவரின்”வியர்வை/முதுகு தேய்க்கவா/இனி வரும் முனிவரும்/என்னோடு நீ பாடி வா சிந்து”/ போன்ற வரிகள் ரசிப்பதில்லை. ”ஒரு வானவில் போலே” வரிகளை வைரமுத்து எப்படி போடுவார்?

    //”கழுகு” படத்தில் வரும் காதலெனும் கோவில் பாடல் பாடியது “சாய்பாபா” என்ற பாடகர் என்று கேள்விப்பட்டதாக நினைவு...//

    இல்லை முரளி.

    நன்றி.

    ReplyDelete
  32. நல்லதொரு இசைக்கட்டுரை. இசையராஜாவின் அற்புதமான இசை. பகிர்வுக்கு நன்றி. அப்துல்லா அண்ணனும் நானும் இதை பஸ்ல உட்ருக்கோம். நன்றி.

    ReplyDelete
  33. மரா said...

    // நல்லதொரு இசைக்கட்டுரை. இசையராஜாவின் அற்புதமான இசை. பகிர்வுக்கு நன்றி. அப்துல்லா அண்ணனும் நானும் இதை பஸ்ல உட்ருக்கோம். நன்றி.//

    வருகைக்கு நன்றி. கருத்துக்கு நன்றி.

    //இதை பஸ்ல உட்ருக்கோம்.//
    நன்றி. நான் buzzக்கு அவ்வளவாக வருவதில்லை.
    அபதுல்லாவுக்கு பாளோவர் ஆக போட்டுப் பார்த்தேன்.பகிர்வு காணவில்லையே.மயில் ராவணன் பேரிலும் buzz இல்லை.

    ReplyDelete
  34. Dear ravi,

    A song composed by raja sir in just 3notes, do u hears that song, that song in telugu. If u has that song please put in to your blog

    ReplyDelete
  35. ceeyes said...

    ///A song composed by raja sir in just 3notes, do u hears that song, that song in telugu. If u has that song please put in to your blog//

    நான் கேட்டுருக்கிறேன்.It is instrumental. சந்தர்ப்பம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!