Thursday, September 9, 2010

முரளி -ஒரு ஜீவன் மறைந்தது-எனக்காக அழ வேண்டாம்

கருப்பு ஒரு அழகு.காந்தல் ஒரு ருசி. ஏதோ ஒரு தி.ஜானகிராமன் கதையில் இந்த வரிகள் வரும்.கஞ்ச கருப்பு இல்லாமல்  நடிகர் முரளி ஒரு சாதா கருப்புதான்.ரஜனியும் கருப்புதான். ஒரு வசீகரம் இருக்கும்.முரளியிடம் ஒரு இன்னசெண்ட் முகபாவம் உண்டு.ஓவர் தம்மடித்த மாதிரி உதடுகள்.



இவரை Poor man"s Rajnikant என்பார்கள்.ரஜனி மாதிரி மோசமான தமிழ் உச்சரிப்பு இவரிடம் கிடையாது.
  
”இதயம்”(1991) படத்தின் மூலம் என்னைப் பாதித்தவர் முரளி.உளவியல் ரீதியில் பார்த்தால் கிட்டத்தட்ட  மனதில் காதலை  பூட்டி வைத்து உருகும் 1980 இளைஞர்களின் மனதை பிரதிபலித்தார்.(ஸ்டெப் கட்டிங் ஹேர் ஸ்டைல்) அப்படத்தில்..காதலில் கண்ணியம் இருந்தது.அதனால் ஹிட் ஆயிற்று.

சில காலம் ” மைக்மோகன்”னிடருந்து  மைக்கைக் கடன் வாங்கி ”மைக் முரளி”  யாகப் பாடல்களை பாடினார்.மிடில் கிளாஸ் கதாநாயகனாக வந்து தாக்கத்தை ஏற்படுத்தி மறைந்து விட்டார்.வருத்தம்தான்.

இப்ப இருக்கும் காலக்கட்டத்தில் இவர் மாதிரி உருவம் உள்ளவர்களுக்கு ஏத்த மாதிரி படங்கள் இப்ப இருக்கிறதா?

8 comments:

  1. நல்ல நடிகர் நம்ப முடியாத செய்தி...!!!!!!
    அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....

    ReplyDelete
  2. எதுவும் சொல்லாமல் போகாதீங்க இப்படிதான் இருக்கணும்

    ReplyDelete
  3. நன்றி பிரவீன் மணி

    ReplyDelete
  4. malli said...

    // எதுவும் சொல்லாமல் போகாதீங்க இப்படிதான் இருக்கணும் //

    நன்றி மல்லி.

    ReplyDelete
  5. //இப்ப இருக்கும் காலக்கட்டத்தில் இவர் மாதிரி உருவம் உள்ளவர்களுக்கு ஏத்த மாதிரி படங்கள் இப்ப இருக்கிறதா? //

    எனக்கென்னமோ தோண‌ல‌

    ReplyDelete
  6. நான் சொல்ல வந்தது மெல்லிய காதல் கதைகளுக்கு ஏற்ற உருவம்.(கொஞ்சம் பாப்பா முகம்)இப்போது இவர் நடித்தமாதிரி படங்களை எடுக்கமுடியுமா?

    ReplyDelete
  7. நடிகர் முரளி மரணம் ஒரு அசாதாரண நிகழ்வு... யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்...

    ரஜினிய கம்பேர் பண்ணாம முரளியின் இரங்கற் பதிவு கூட பதிவர்களால் எழுத முடியலியேன்னு நெனச்சேன். ஆனா, ரவிஜி, நீங்கள் கூடவா?

    நான் குறிப்பாக சொன்னது இந்த வரிக்காக :

    //இவரை Poor man"s Rajnikant என்பார்கள்.ரஜனி மாதிரி மோசமான தமிழ் உச்சரிப்பு இவரிடம் கிடையாது.//

    ReplyDelete
  8. கருப்பு கலர் வெற்றி அடைஞ்சதுக்காக குறிப்பிட்டேன்.ஆனால ரஜினியின் தமிழ் கொஞ்சம்.... கஷ்டம்தான்.நானும் ரஜினி ரசிகந்தான்.

    நன்றி கோபி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!