Sunday, September 12, 2010

மாலையில் யாரோ இனி மனதோடு?-ஸ்வர்ணலதா

கேரளாவிலிருந்து வந்து தமிழில் கூவிய குயில்களில் ஒன்று இன்று தன் இனிமையான கூவுதலை நிறுத்திவிட்டது.அறிமுகத்தில் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” பாரதியார் பாட்டைப் பாடி பாரதியைப் போலவே இளம் வயதில் மறைந்துவிட்டது. அந்த குயில் செல்வி ஸ்வர்ணலதா.

மெலடி குயினின்  உயிர் நுரையீரல் பிரச்சனையால் இன்று பிரிந்தது.

இசை மேதை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனால் முதலில்”நீதிக்குத்தண்டனை”(1987) படத்தில் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா”  பாடுவதற்கு வாய்க்களிப்பட்டார்.அப்போது அவருக்கு வயது 14.அந்தப் படத்தில் “சின்னஞ்சிறு” பாட்டை ராதிகா பாடுவதற்குப் பிளேபேக்காக இவர் பாடினார்.



பின்னர் மேஸ்ட்ரோவின் பாடல்களைப் பாடி உச்சக்கட்டத்திற்குப்போனார்.முக்கியமான பாட்டு “போவோமா ஊர்கோலம்”(சின்னத்தம்பி).”ராக்கம்மா கையத்தட்டு””ஆட்டமா நீரோட்டமா” ”மாலையில் யாரோ”என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

.அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இவருக்கு வாய்ப்பளித்து முன்னணியில் இருக்க வைத்தார்.”போறாளே பொன்னுத்தாயி”(கருத்தம்மா)”எவனோ ஒருவன் இருக்கின்றான்”(அலைப்பாயுதே) வித்தியாசமாக “அக்கடான்னு நாங்க”(இந்தியன்).

”போறாளே பொன்னுத்தாயி”ப் பாட்டுக்கு அவார்ட் வாங்கினார்.

இன்னும் நிறைய இசையமைப்பாளர்களின் பல பாட்டுக்களைப் பாடி உள்ளார்.சிலது சிறந்தது.பலது இறந்தது.

”சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” பாட்டு கேட்க:




வட இந்திய பாடகி ஷ்ரேயா கோஷலின் குரல் ஸ்வர்ணலதாவின் சாயலைக்கொண்டது.

பல  பதிவர்கள்   ஸ்வர்ணலதா வாழும் காலத்திலேயே அவரைப் பற்றி நிறைய பதிவுகள் எழுதி அவருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.


 என்னால் மறக்க முடியாத பாடல் மூன்று:

1.என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி

2. மாலையில் யாரோ - ஷத்ரியன்

3. ஊர் அடங்கும் வேளையிலே  - புதுப்பட்டி பொன்னுத்தாயி

ஸ்வர்ணலதா தன் குரலிலேயே என் அபிமான ”மாலையில் யாரோ”வை பாடுகிறார்.

14 comments:

  1. தமிழ்த் திரையிசையின் ஒரு இறகு ஒடிக்கப்பட்ட நாள் இது நண்பா :(

    ReplyDelete
  2. Puriyatha sokam nizhalena thodarvathu pol uNarvu. Neengal kurippitta 3 paadalkalum enakkum piditha 3paadalkalae. Thara varisai mattum maaRUM .en mobile ring tone .'ennullae ennullae' paadalthan. Yar azhaithalum swarnalathavaiyae ninavupaduthukirarkal :-(

    ReplyDelete
  3. I love her songs. It is sad to know that she is no more. May her soul rest in peace.

    ReplyDelete
  4. கானா பிரபா said...

    // தமிழ்த் திரையிசையின் ஒரு இறகு ஒடிக்கப்பட்ட நாள் இது நண்பா :( //

    நன்றி

    ReplyDelete
  5. தமிழ்ப்பறவை said...


    //en mobile ring tone .'ennullae ennullae' paadalthan. Yar azhaithalum swarnalathavaiyae ninavupaduthukirarkal :-( //

    ஆகா அற்புதம்.

    ReplyDelete
  6. நன்றி சித்ரா

    நன்றி கோபிநாத்

    நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  7. Ode on a Grecian Urn Poem-ல வருகிற மாதிரி கலைக்கு அழிவு என்பதே கிடையாது! கலைஞர்கள் வரலாம் போகலாம். ஆனால் அவர்கள் படைத்த படைப்புகள் அழியாதவை.

    //Chitra said...
    May her soul rest in peace.//

    Yes.

    ReplyDelete
  8. நன்றி சுபத்ரா. வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  9. சுவர்ணலதா வித்தியாசமான குரல் கொண்டவர்.. மிக இனிமையாக இருக்கும்...

    அவரின் திடீர் மறைவு எல்லாருக்கும் அதிர்ச்சி தான்... நான் உட்பட....

    எனக்கும் இவர் குரல் பிடிக்கும்... அதிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள சத்ரியன் மற்றும் தளபதி பாடல்கள்...

    ReplyDelete
  10. Chinna chiru kiliye kannama song baby sujithavuku padala Radhika avangaluku than padinar. Chinna chiru vayathile heroinenu padiaya perumai Kanakuyil SWARNALATAVAI than seerum. Athepol, Ore padaluku National award, State award and kalaimamani award vangiyathu ivaroruvarthan. Adumattum illamal yella singarukum oruthavanga track paditharuvanga anal evangaluku track kidayathu straighta music director kita kathutu ore takela padakudiya aatral petravar evar than. eduvarai evar padatha varity songes illa. Ivar padatha music director illa. evar kuda padatha singers illanu sollam. Iranthalum engal ethayathil vazhum swarngalin nayagi swarnalatha!

    ReplyDelete
  11. // baby sujithavuku padala Radhika avangaluku than padinar//

    நீங்கள் சொல்வது சரி. தவறை சரி செய்து விட்டேன். நன்றி JRR.

    ReplyDelete
  12. எதை சொல்ல. எதை சொல்லாமல் போக.. தினம் தினம் என் விழிகள் கண்ணீர் உக்குது கொண்டே இருக்கிறது குயிலின் பிரிவை நினைத்து.. அவர் பெயரில் முக நூலில் ஒரு அக்கௌன்ட் வைத்து மைண்டைன் செய்துவருகிறேன். எல்லா ரசிகர்களும் இணைந்து குயிலின் பாட்டை தினமும் ரசியுங்கள் http://www.facebook.com/Swarnalatha.Fans

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!