Wednesday, September 8, 2010

பள்ளியில் பேன்சி டிரஸ் போட்டி - குழந்தைகள்

ரொம்ப நாளாக மனதில் இருந்த விஷயம் "தி ஹிந்து" வில் பத்தியாக வந்து விட்டது.அதில் சொல்லாத விஷயங்களும்  இருக்கிறது.

மாறுவேடம் என்றால் நினைவுக்கு வருவது  அந்த கால மன்னர்கள்,மந்திரிகள் “ மாதம் மும்மாரி பொழிகிறது” “மக்கள் குற்றம்  குறையில்லாமல் சுபிட்சமாக வாழ்கிறார்கள்” என்ற பீலாவை  அப்படியே மன்னர் நமப மாட்டார். ஒரு random  checkingக்காக மாறு வேடம் அணிந்து குடி மககளி்டம் கலந்து ரேஷன்(?)கடையில் எல்லாம் கிடைக்கிறதா Express Mallலில் பார்க்கிங்  பீஸ் எவ்வளவு என்று சோதிப்பார்.அப்பறமதான் ஓகே ஆவார்.

முதல்வர்(மன்னர்) கலைஞர் மாறுவேடம் பூண்டு கோபாலபுரத்திலிருந்து பொடிநடையாக போயஸ் கார்டன் பக்கம் போய் “ எங்க சீப் செகரெட்ரி .. ஸ்ரீபதி எவரிதிங் ஓகே என்கிறாரே “ என்று சொல்ல உடனே புரட்சித் தலைவி ஜெயலலிதா “ மைனாரிடி திமுக அரசு...” என்று ஆரம்பிக்க....

சரி பதிவுக்கு வருவோம.

பள்ளி/அபார்ட்மெண்ட் விழாக்களில் குழந்தைகளின் மாறுவேடப்போட்டியை(பேன்சி டிரஸ்) பார்க்கும் போது “என்ன அரைத்த மாவையே அரைக்கிறார்கள்” என்று தோன்றும். அடுத்தக் கட்டத்திற்கு நகரவில்லையா என்று?

நாரதர்,கம்பர்,ஒளவையார்,யேசு,சரஸ்வதி,திருவள்ளுவர் மற்றும் பலர்.... லேட்டஸ்ட்டாக அப்துல் கலாம் போன்ற வேடங்களிலேயே குழந்தைகள் மேடையில்  தோன்றி சூட்டிகையாக வசனம்/ஸ்லோகம் பேசி மேடையின் அந்தப் பக்கம் மெதுவாக இறங்குவார்கள்.பெற்றொர்கள் புல்லரிப்பார்கள்.சிறந்த வேடத்திற்குப் பரிசு கிடைக்கும்.


போட்டோ உதவி நன்றி “தி ஹிந்து”

எதற்கு இந்தப் போட்டி?

1.மேடைப் பயத்தைப் போக்க
2..புனைந்த வேடங்களின் சிறப்பை அறிந்துக்கொள்ள
3.இது ஒரு கலை
4.பொறுமை (/வேர்வை/கீரிடம்/விக்/டோப்பா/அரிக்கும் உடைகளை சுமப்பது)
5.உற்சாகம்/getogether/freak out
6.போட்டி மனபான்மை
7.தன்னம்பிக்கை
8.பெற்றோர்களின் ஆர்வத்தைத் தூண்ட
9.தானும் விழாவில் பங்கெடுக்கிறேன்

இதெல்லாம் பின்பற்றப்படுகிறதா? எது எப்படியோ......சிம்பிளாக சொன்னால்

தன் செல்லக் குழந்தையை ஏதோ ஒரு வேடத்தில் அழகுப்படுத்தி ,மேடையில் ஏற்றி, தானே போட்டோ(so cute....!) எடுத்து  ரசித்து பிறகாலத்தில் பெரிசான குழந்தை ரசிப்பதற்கு என்ற காரணமும்.பொழுதுபோக்கு?

சில காலமாக பல பள்ளிகள் மாறு வேடப் போட்டிகளை ஆதரிப்பதை நிறுத்தி விட்டார்கள்.

காரணம்?

இதில் குழந்தைகளை விட பெற்றோர்களின் திறமைகள்தான் ”மாறு வேடம்” இட்டு இருப்பதாக ஆய்ந்திருக்கிறார்கள்.அவர்கள்தான் மெனக்கெட்டு எல்லாம் செயகிறார்கள்.குழந்தைகளிடம் creativity இல்லை..அடுத்து ”போங்காட்டம்”ஆடும் நிறைய பெற்றோர்கள். மாறுவேட ஒப்பனையை தொழில்முறை கலைஞர்களிடம் அவட்சோர்ஸ் செய்து பரிசு வாங்கிவிடுவது.இதில் இரண்டு பேரிடமும் creativity இல்லாமல் போய்விடுகிறது.

வாடகைக்கு எடுக்கப்படும் ஆரோக்கியமற்ற உடைகள்,அனாவசிய செலவு,தன் முறை வருவதற்குள் பிஞ்சுகள் வேர்த்து விறுவிறுத்தல்  என்று இன்னும் சில காரணங்கள்.

சில பள்ளிகள் இதை போட்டியாக இல்லாமல் ஒரு நிகழ்ச்சியாக நடத்துகிறார்கள்.இதையும் தவிர்க்கிறார்கள் சில பள்ளிகள்.

குழந்தைப் பருவத்தில் போடும்  மாறுவேடங்கள் பிற்காலத்தில் வாழ்க்கையில் போடப்போகும் வித விதமான மாறுவேடங்களுக்கு ஒருமுன்னோட்டம்?

4 comments:

  1. எதற்கு இந்தப் போட்டி?

    1.மேடைப் பயத்தைப் போக்க
    2..புனைந்த வேடங்களின் சிறப்பை அறிந்துக்கொள்ள
    3.இது ஒரு கலை
    4.பொறுமை (/வேர்வை/கீரிடம்/விக்/டோப்பா/அரிக்கும் உடைகளை சுமப்பது)
    5.உற்சாகம்/getogether/freak out
    6.போட்டி மனபான்மை
    7.தன்னம்பிக்கை
    8.பெற்றோர்களின் ஆர்வத்தைத் தூண்ட
    9.தானும் விழாவில் பங்கெடுக்கிறேன்

    ......உண்மை. அதை சரியாக புரிந்து கொள்ளாமல், இதையும் போட்டி பொறாமை உள்ள மேடையாக மாற்றி விடுகிறார்களே!

    ReplyDelete
  2. நன்றி சித்ரா.

    ReplyDelete
  3. ஆஹா... மாறுவேடப் போட்டிக்குள்ள இத்தனை இருக்கா?
    அதனை விடுத்து வெறுமனே ரசிப்பதற்காக மட்டும் பெற்றோர்கள் இருக்கும் நிலை.
    ‘ஹிந்து’ மற்றும் இப்பதிவைப் படிக்காத பெற்றோர்களுக்கு எங்ஙனம் விளக்க?

    ReplyDelete
  4. நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!