Thursday, September 2, 2010

ரசித்த கவிதை- ஆத்மாநாம்

 திருஷ்டி

பானைத்தலை சாய்த்து
புல் பிதுங்கும் கைகளோடு
சட்டைப் பொத்தான்  வெடிக்க
தொப்பையில் புல் தெரிய தனியாய்
யாருன்னைத் தூக்கில் போட்டார்
சணல்  கயிற்றால் கட்டிப் போட்டு
உன் காற்சட்டை தருவேன்
சென்றுன் எதிரியைத் தேடு

--------------------------------------------
நன்றி:ஆத்மா நாம்  படைப்புக்கள்  - காலச்சுவடு


படிப்பவர்களே....

" சணல்  கயிற்றால் கட்டிப் போட்டு"- இந்த இடம் புரியவில்லை .என்ன அர்த்தம்?

12 comments:

  1. தொங்கிட்டு இருக்குற உன்ன நான் கட்டிப்போட்டு விடுரேன்னு சொல்ல வர்றாரோ?

    ReplyDelete
  2. திருஷ்டி பொம்மையை சணல் கயிற்றால் கட்டிப் போட்டு இருப்பதை சொல்லி,
    வேறொன்றை சொல்ல முயல்கிறார்.

    ReplyDelete
  3. ஒரு உவமைக்காக சொல்றது தான்
    சனல்ல கட்டினாலும் உபயோகமில்ல என்பதற்காக சொல்லப்பட்டது

    ReplyDelete
  4. //செல்வராஜ் ஜெகதீசன் said...

    // திருஷ்டி பொம்மையை சணல் கயிற்றால் கட்டிப் போட்டு இருப்பதை சொல்லி,
    வேறொன்றை சொல்ல முயல்கிறார். //

    Super.Ippadiyum purinthukollalaam.

    Thanks.

    ReplyDelete
  5. பாலாஜி சங்கர் said...

    // ஒரு உவமைக்காக சொல்றது தான்
    சனல்ல கட்டினாலும் உபயோகமில்ல என்பதற்காக சொல்லப்பட்டது //

    Ithuvum OK.
    அன்பரசன் sonnathum ok.

    Thanks

    ReplyDelete
  6. அது இப்படி இருக்கவேண்டும் என்பது என் கருத்து:

    பானைத்தலை சாய்த்து
    புல் பிதுங்கும் கைகளோடு
    சட்டைப் பொத்தான் வெடிக்க,
    தொப்பையில் புல் தெரிய தனியாய்
    யாருன்னைத் தூக்கில் போட்டார்
    சணல் கயிற்றால் கட்டிப் போட்டு?
    உன் காற்சட்டை தருவேன்
    சென்றுன் எதிரியைத் தேடு

    ReplyDelete
  7. ரவிஷா... நல்லா இருக்கு இப்போ...
    ஆனா முன்னாடி இருந்ததுக்கு நான் வேற அர்த்தம் பிடிச்சிருக்கேன்.
    அந்த திருஷ்டி பொம்மையைக் கூட அடிமையாக்க நினைக்கும் மனிதன். அதனால்தான் சணல் கயிற்றால் கட்டிப் போட்டு(அப்பப்ப அவுத்து விடுவான் எதிரியைத் தேட). கால்சட்டை தர எண்ணுகிறான்.இன்னும் ஆழ்ந்து பார்த்தா நிறையப் படிமங்க்கள் தெரியுது... :-)

    ReplyDelete
  8. ரவிஷா said...
    அது இப்படி இருக்கவேண்டும் என்பது என் கருத்து:

    //பானைத்தலை சாய்த்து ......
    ......சணல் கயிற்றால் கட்டிப் போட்டு?//

    தல சூப்பர்! நன்றி! நான் முதலில் யோசித்தது இந்த பாயிண்டுதான்.

    ReplyDelete
  9. தமிழ்ப்பறவை said...

    /அந்த திருஷ்டி பொம்மையைக் கூட அடிமையாக்க நினைக்கும் மனிதன்//

    பின்னிட்டிங்க . சூப்பர்.

    //.இன்னும் ஆழ்ந்து பார்த்தா நிறையப் படிமங்க்கள் தெரியுது//

    கவிதையை படிப்பவனுக்கு நிறைய கோணங்கள் தோன்றும்.

    ReplyDelete
  10. படிக்கப் படிக்கப் பல படிமங்கள் தோன்றுகின்றன.

    எந்நேரமும் தொங்கிக் கொண்டிருக்கும் திருஷ்டிப் பொம்மையைப் பார்த்து உனக்கு நான் விடுதலை தருகிறேன் என்று கூறுவது போல உள்ளது.

    மேலும் ஒன்று தோன்றியது.

    **பானைத்தலை சாய்த்து
    புல் பிதுங்கும் கைகளோடு
    சட்டைப் பொத்தான் வெடிக்க
    தொப்பையில் புல் தெரிய தனியாய்**

    எந்த வேலையும் செய்யாமல் தனியாகச் சோம்பி இருத்தலை இது உணர்த்தலாம்.

    **யாருன்னைத் தூக்கில் போட்டார்
    சணல் கயிற்றால் கட்டிப் போட்டு
    உன் காற்சட்டை தருவேன்
    சென்றுன் எதிரியைத் தேடு**

    எவருக்கும் கட்டுப்பட்டு இப்படித் தனியே சோம்பி இருக்க வேண்டாம். நான் உனக்கு உதவுகிறேன். உன் வேலையைத் தொடங்கு.

    ReplyDelete
  11. உங்களுடைய பரிமாணமும் அருமை. இன்னும் யோசித்தால் வேறு பரிமாணமும் கிடைக்கலாம்.

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!