Monday, September 6, 2010

குறும்பட விமர்சனம் - கலைஞர் டிவி - 05-09-10

குறும்பட விமர்சனம் - கலைஞர் டிவி - 05-09-10

                            
இந்த வார சிறப்பு விருந்தினர் - ஆர்.கே.செல்வமணி

இந்த வாரமும் ஓகே ரகம்தான்.

 போன வாரம்

1.படம்:"கானல்"  இயக்குனர்: சுப்பராஜு - காதல் கதை

இளம் புகைப்படக் கலைஞனின் காதல் தோல்வியடைந்து (காதலியின் அப்பா எதிர்ப்பு)தற்கொலை செய்துகொள்வதுதான் கதை.

புகைப்படக் கலைஞன் கேமரா மூலம் மென்மையாக சொல்லப்பட்டது. காதலன் காதலி நடிப்பு அருமை.வழக்கமாக ஸ்டைலான குர்தி சல்வாருடன் தலையை கலைத்து விட்டுக்கொண்டு காதில் பேஷன் நகைகள் கையில் செல்போன் இல்லாத புடவைக் காதலி வித்தியாசம்.

அடுத்த வித்தியாசம் கரும்பு சாப்பிட்டபடி காதலியுடன் உரையாடல்.பாடல் கூட உண்டு.வித்தியாசமாக "குட் நைட்" மஸ்கிட்டோ விஷம் குடித்து சாகிறார்.அதையே தன் காமிராவில் எடுத்துக்கொள்கிறார்.

எனக்குப்பிடித்திருந்தது.

"நீ கோபத்துல கூட அழகா இருக்க". ஈஸ்ட் இண்டியா கம்பெனி காலத்திலிருந்து காதலன் சொல்லும்  இத்துப்போன வசனம். மாத்தி யோசிங்கப்பா..?

2.படம்:"என் உயிர் சக்தி"  இயக்குனர்: ராகேஷ் - காதல் கதை

அம்மா இல்லாத வளர்ப்பு மகனின் முதலாம் ஆண்டு திருமண நிறைவு.அன்று எப்படி தன் காதலை ஜெயித்து அப்பாவிடம் சம்மதம் வாங்கிக் காதலி சக்தியை (பக்கத்து வீடு) திருமணம் செய்துக் கொண்டேன் என்பதுதான் கதை.

காதலியை யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்து கடைசியில் காதலி ஒரு ஆண்.இது ஒரு ஒரினப்புணர்ச்சிக் காதல்.ரொம்ப போல்டு தீம்.இயக்குனரின் முதல் குறும்படம்.

என்னால் ரசிக்க முடியவில்லை.காரணம் ஒரு அதிர்ச்சி மதிப்பு(shock value)மற்றும் டிவிஸ்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.

அப்பாவிற்கும் மகனுக்கும் நடக்கும் உரையாடலில் பின்னணியில் ஏன் காந்தி படம் fade outல்  காட்டப்படுகிறது.

3. படம்:"ரவ்லெட்"(Roulette) இயக்குனர்:ஸ்ரீகாந்த் - பொது

ஒருவன் தன்னைப் புத்திசாலியாக நினைத்துக்கொண்டு ஏமாறுவதுதான் கதை.இது பிரிட்டிஷ்
எழுத்தாளர் சகியின் சிறுகதை. நான் சிறுவயதில் படித்தக் கதை.

பார்க்கில் ஒரு இளைஞன் உட்கார்ந்துக்கொண்டு பேப்பரில் கிராஸ் வேர்டு புதிர் போட்டுக்கொண்டிருக்கிறான்.பக்கத்தில் ஒரு வயதானவர்.சிறிது நேரத்தில் அவர் எழுந்துப் போய்விடுகிறார்.

அந்த இடத்திறகு வேறு ஒரு இளைஞன் வந்து "ஊருக்குப் புதுசு" என்றும், லாட்ஜில் தங்கி இருந்து சோப் வாங்க வெளியே வந்து லாட்ஜின் அட்ரசை மறந்துவிட்டதாக சொல்லி நூறு ரூபாய் பணம் கேட்கிறான். நம்ப முடியாமல் சில கேள்விகள் கேட்டு கடைசியில் வாங்கிய சோப்பைக் காட்டினால் நூறு ரூபாய் பணம் தருவதாக சொலகிறான்.

அதையும் தொலைத்துவிட்டதாகச் சொல்கிறான். பணம் தர முடியாது என்று சொல்ல அவன் போய் விடுகிறான்.அவன் போனதும் அவன் உட்கார்ந்த இடத்தின் பெஞ்சுக்குக் கிழே ஒரு கேரி பாக்கில் ஒரு லைப்பாய் சோப்பு கிடக்கிறது.

ஆஹா... இவனைத் தவறாக நினைத்துவிட்டோமே வருத்தப்பட்டு  அவனைத் தேடிக் கண்டுபிடித்து சோப்பை கொடுத்து நூறு ரூபாய் பணமும் கொடுக்கிறான்.

கொஞ்ச நேரம் கழித்து அந்த வயதானவர்  வருகிறார்.அவன் அருகில் வந்து எதையோ தேடிவிட்டு, அவனைப் பார்த்து " லைப்பாய் சோப்பு ஒன்னு கேரி பாக்கல வச்சுருந்தேன்.."

நன்றாக எடுக்கப்பட்டு இருந்தது. குறும்படத்தைச் சொந்த கதையில் எடுப்பது நல்லது.

4. படம்:"சிக்கிக்கு சிக்கிக்கிச்சு"  இயக்குனர்: ராஜேஷ்குமார்  -காதல் கதை

கதை அழகில்லாத இளைஞன் ஒருவனுக்கு ஒருத்தியை  காதலித்து தன் பைக்  பில்லியனில் அவளை உட்கார வைத்துக் கொண்டு ஊர் சுற்ற வேண்டும் என்பது லட்சியம்.

எந்தப் பெண்ணும் சிக்கவில்லை...ஒரு நாள் ICICI கிரெடிட் கார்ட் விறகும் பெண் பூஜா போனில் பேச அவளையே காதலிப்பதாக சொல்கிறான்.அவளும் ஒகே என்கிறாள்..இரண்டு நாள் கழித்து அவளை ஆவலோடு ச்சந்திக்கிறான்.ஆனால் அவள் கருப்பாக கண்ணாடி அணிந்து அவலட்சணமாக இருக்கிறாள்.

நொந்துப் போகிறான்.இருந்தும் ஓகே என்கிறான்.பூஜா தன் அழகைப்  பல முறைச்சொல்லிஉண்மையாக காதலிக்கிறாயா என்று கேட்கிறாள்.ஆமாம் என்கிறான்.

அவனின் நேர்மையில் மகிழ்ந்துப் போய் "நான்  பூஜா அல்ல..!" என்று சொல்ல பின்னால் உண்மையான பூஜா (முதல் பூஜாவே பெட்டர்)) வருகிறாள்.உன் காதலின் நேர்மையை டெஸ்ட் செய்யத்தான் இது மாதிரி நாடகம் என்கிறாள்."நீ பாஸ் செய்துவிட்டாய் அதனால் உன்னைக் காதலிக்கிறேன்" என்கிறாள்.

நீதி???

சிக்கி "திடீர்" நேர்மை செட்டாகவில்லை.சுமார் படம்.

சிறப்புப  படமாக  என் உயிர் சக்தி தேர்ந்த்தெடுக்கப்பட்டது.

7 comments:

  1. நான் தவறாமல் பார்க்கும் நிகழ்ச்சி "நாளைய இயக்குனர்"

    //"ரவ்லெட்"(Roulette)- இது பிரிட்டிஷ்
    எழுத்தாளர் சகியின் சிறுகதை.//

    இது எனக்கு தெரியாத கதை...

    விமர்சனம் நன்று நண்பரே...

    --
    அன்புடன்
    கவிநா...காயத்ரி...
    "Every little smile can touch somebodies heart"
    என் எண்ணங்களைக் காண.. - http://www.kavina-gaya.blogspot.com/
    என் வண்ணங்களைக் காண. - http://www.kavi-oviyam.blogspot.com/

    ReplyDelete
  2. நன்றி கவிநா. படிக்கிறேன். பின்னூட்டம் போடுகிறேன்.

    ReplyDelete
  3. இந்த வாரமும் பார்க்கலை சார்...:-(

    ReplyDelete
  4. தமிழ்ப்பறவை said...

    // இந்த வாரமும் பார்க்கலை சார்...:-( //

    இதே கதைய ஒவ்வொரு வாரமும் விடாதீங்க.இத வச்சே ஒரு குறும்படம் எடுக்கலாம்.

    NHM Writer சாப்டுவேர் சரியாடிச்சுங்க சார் இன்னிக்கு.ரீஇன்ஸடால் பண்ணினேன்.

    ReplyDelete
  5. மிக்க நன்றி தலைவரே.. உடனே அழகியை வீட்டை விட்டுத் தொரத்திடுறேன்... :-)

    ReplyDelete
  6. ஹையா... NHM writer சரியாயிடுச்சு..
    யாரோட முயற்சின்னு தெரியலை.. இருந்தாலும் உங்க பங்கும் இருக்கதால உங்களுக்கும் நன்றிகள்...:-)

    ReplyDelete
  7. நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!