முடிந்தவரை வாரவாரம் கலைஞர் தொலைக்காட்சியில்
“நாளைய இயக்குனர்”நிகழ்ச்சியில் திரையிடப்படும் படங்களை பதிவில் விமர்சிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
ஒரு பாமரன் பார்வையில்தான் விமர்சனம்.டெக்னிகல் தெரியாது.
குறும்படங்கள் எனக்குப் பிடித்தமான ஒன்று. காரணம் சற்று வித்தியாசமாக ஒரு மாதிரி “கு(து)று கு(து)று”வென்று இருக்கும்.முழு நீளப் படங்கள் போல் அரைத்த மாவையே அரைப்பது கிடையாது.
இதைப் பற்றிய முந்தைய பதிவு:குறும்படம்
முந்திய பதிவில் விட்டுப்போனது. வசனங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.இங்கும் “சுடுதல்”உண்டு.வருத்தமான ஒன்று.
வாரம் 22-08-10:
தலைப்பு:ஆயுதம் - இயக்குனர்: ராம்
கதை: பல பேருக்கு டென்ஷன் கொடுக்கும் கட்டப் பஞ்சாயத்து ரவுடி தலைவனுக்கு டென்ஷன் கொடுக்கும் ஆஸ்துமா வீசிங் படுத்துவதுதான்.இவனுக்கு துப்பாக்கி எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம Nebulizer.ரவுடி கையில் எப்போதும் குவார்ட்டர் கட்டிங் இருக்கும். இதில் Nebulizer.
வித்தியாசமான சூப்பர் கரு. முடிவை முதலிலேயே யூகித்து விடலாம்.
இசை மற்றும் எடுத்த விதம் அற்புதம்.முடிவில் ஆஸ்துமா வந்த டென்ஷனில துப்பாக்கிக்குப் பதிலாக Nebulizer வைத்து சுட்டுக்கொண்டுவிடுகிறார்.
எனக்கு ரொமப் பிடித்தது.
தலைப்பு:மகுடி- இயக்குனர்: பாலா
கதை:கார் திருடன் ஒருவன் காரில் போகும் ஒருவரை பைக்கில் அடிக்கடி தொடர்ந்து போக்குக்காட்டி(மகுடி ஊதுவது மாதிரி) அவரின் காரைத் திருடுகிறான்.
நிறைய அவுட்டோர்.இன்னும் கூட விறுவிறுப்பு & லாஜிக் கொண்டு வந்திருக்கலாம்.கடைசியில் காரில் திருடன் பாட்டுப்போடுவது படத்தின் தீவிரத்தை நீர்க்க வைக்கிறது.
காட்டில் தொடரும் போது வரும் காட்சிகள் ஹாலிவுட் திகில் படத்தை நினைவூட்டுகின்றன.
தலைப்பு:Short Film - இயக்குனர்: மணிவண்ணன்
கதை:சிடியில்(நெட்டில்?) படம் பார்க்கும் ஒருவன் இறந்துவிடுகிறான்.அவனின் ஒரு கண் டீபாயில் விழுந்துக்கிடக்கிறது.போலீஸ் துப்பறிகிறது.துப்பறியும் போலீசும் ஒரு கண் வெளியே வந்து இறந்துவிடுகிறார்.
ஒரு முறைப் பார்த்தால் மறுமுறை பார்க்கக் கூடாத படமாம்.இப்படி ஆரம்பிக்கும்போது திகிலாக இருந்தது.(பார்த்தால் கண் வெளியே வந்துவிடுமாம்).திகில் ஏற்படுத்தியதே இயக்குனரின் வெற்றிதான்.
குறை ஒன்றும் இல்லை.எனக்குப் பிடித்திருந்தது.ஆனால் ஏதோ ஜப்பானியப் படம் பாதிப்பு என்று நடுவர் பிரதாப் சொன்னார்.
தலைப்பு:அன்று ஜாலி.இன்று காலி - இயக்குனர்:ஷரத்
கதை:வீட்டில் கொடுத்த பணத்தை((EB கட்டணம்) ”ஜாலி” செய்துவிட்டுபோலீசுக்கு மாமூல் கொடுத்ததாக பொய் சொல்கிறான்.நம்பிய பெற்றோர்கள் மறுநாள்கொடுத்த பணம் உண்மையாக (இன்றும் ஜாலி செய்ய கிளம்பும் போது)டிராபிக் போலீசில் மாட்டி மாமூல் கொடுத்துக் ”காலி” ஆகிறான்.
அட... நம்ம கதை! பிடித்திருந்தது.
நகைச்சுவை படம்.பையன் விடியா மூஞ்சியாகவே இருப்பது அற்புதம்.ஆனால் அப்பா பொருத்தமாகவே இல்ல்லை.அதுவும் அம்மாவிற்கு ஏற்ற அப்பாவாக.
போலீஸ்-பையன் மோதல் யதார்த்தமாக இருந்தது.ஆனால் பணம் கிடைத்ததும் தன் மனைவிக்கு போலீஸ் போன் செய்வது செயற்கை.
நடுவர்கள் ரசிக்காதது ஆச்சரியம்!
என்னிடம் குறும்படத்திற்குண்டான இரண்டுகதைகள் உள்ளன. அவை:
1. பேய் வீட்டில் விழுந்த செல்போன்
2.சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி
என்னை அணுகலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
என்னது எல்லாப் படமுமே பாராட்டுற அளவுக்கு நல்லா இருந்ததா? நான் பாக்கலை ரெண்டு வாரமா.
ReplyDeleteஅடுத்த வாரம் பார்க்கலாம்.
நல்ல வேளை இந்தப் பதிவினால் ஒரு நல்ல கதை கிடைத்தது.
'சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி'. படித்தேன்.(eppadiyoo vittup poi vittathu)
நல்ல சுவாரஸ்யம். கதைக்களன் அழகு.ரசித்தேன்.
இன்னொரு விசயம், கதையில் 'புது மனைவி' என வரும்போது நான் குறித்துக் கொண்டேன். பரவாயில்லை நல்ல நாட் கிடைச்சிருக்கு. இதத் திருப்பமா வச்சு ஒரு கதை பண்ணலாமேனு. ஆனா நீங்களே அதே திருப்பத்தை வச்சு முடிச்சது என்னை ஏமாற்றி விட்டது. :-) :-(
தமிழ்ப்பறவை said...
ReplyDelete// என்னது எல்லாப் படமுமே பாராட்டுற அளவுக்கு நல்லா இருந்ததா? நான் பாக்கலை ரெண்டு வாரமா.
அடுத்த வாரம் பார்க்கலாம்.//
ஆமாங்க.பையன் கிளாசுக்கு போறதனால என்னால பாக்க முடியுது.
// 'சாந்தி சலூனுக்கு வந்த மகேஸ்வரி'. படித்தேன்.(eppadiyoo vittup poi vittathu)
நல்ல சுவாரஸ்யம். கதைக்களன் அழகு.ரசித்தேன்.//
இதை ஒருவாட்டி recycle கூட செய்தேன். நன்றி. குறும்படத்திற்கு ஏதுவான கதை.
// இன்னொரு விசயம், கதையில் 'புது மனைவி' என வரும்போது நான் குறித்துக் கொண்டேன். பரவாயில்லை நல்ல நாட் கிடைச்சிருக்கு. இதத் திருப்பமா வச்சு ஒரு கதை பண்ணலாமேனு. ஆனா நீங்களே அதே திருப்பத்தை வச்சு முடிச்சது என்னை ஏமாற்றி விட்டது.//
வேறு ஐடியா வைத்து எழுதுங்க.
நன்றி.