Wednesday, August 11, 2010

சில யதார்த்தங்களும் ஏர்டெல் சிங்கர்களும்

ஒளி வட்டம் மேல் விழ, கைத்தட்டல் விண்ணைப் பிளக்க, உள்ளங்கையில் மெடல்களை இருக்கிப்பிடித்தபடி இரு கைகளையும்  மேல் தூக்கி ”எல்லா புகழும் இறைவனுக்கே”  என்று  ஒரு நாள்  சொல்ல வேண்டும்  என்ற Inception கனவுடன் யுவதிகள்/யுவன்கள்  சூப்பர் சிங்கர் போட்டிகளில  அடைஅடையாக தேனீக்கள் போல் கலந்துக் கொள்(ல்)கிறார்கள்.

ஆனால் முக்கால்வாசி பேர் “கிர்ர்ர்ர்ர்ர்ர்”  ரெட் லைட் அடித்து “rejected".சில பேர் பாடுவதைக் கேட்கும்போது “போட்டுதள்ளுed" என்று நான்காவது ஆப்ஷன் வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பாடுவது என்பது ஒரு நாள் கூத்திற்கு மீசை வைக்கும் வேலை இல்லை.பாடு பட வேண்டும்.பாடுவதற்கு முன் பாட்டைஆறு மாதம் ஆழ்ந்துக்கேட்க வேண்டும்.புதுசு/பழசு எல்லா பாடல்களயும் கேட்க வேண்டும்.முக்கியமாக பழைய பாடல்களைக் கேட்க வேண்டும்.

கேட்டால் மட்டும் போதுமா?

உள் வாங்க வேண்டும்.பிறகு பாட ஆரம்பிக்க வேண்டும். நிறைய பயிற்சி செய்ய வேண்டும்.முக்கியமாக தன்னுடைய குரலின் வகையை தெரிந்துக்கொள்ள வேண்டும்.மிகமுக்கியமாக தாளம் என்ற ஒன்று இருப்பதை கண்டுகொள்ள வேண்டும்.

மிகமிகமிக முக்கியமாக மேடை பயத்தை விட வேண்டும்.

இதையெல்லாம்  சிங்கர்கள் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை.

பெண்கள் எல்லோரும் “ வான்மேகம்” அல்லது “என் மேல் விழுந்த மழை” அல்லது “குழலூதும் கண்ணனுக்கு” அல்லது “வசீகரா” அல்லது “ஜீலை வந்தால்” போன்ற ஸ்டைல் பாடல்களையே பயிற்சி செய்து  பாட  விரும்புவதாக டிவி நண்பர் ஒருவர்  சொன்னார்.
  
நடுவர்கள்  இதை அனுமதிப்பதில்லை.வேறு பாடல்களைப் பாட சொல்லி டெஸ்ட் செய்கிறார்கள்.பாடும் போது சில அடிப்படைகளை கூர்ந்து கவனித்து தேர்வு செய்கிறார்கள.

சரி.. யதார்த்தத்திற்கு வருவோம்.

தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஆனவர் சினிமாவில் நம்பர் ஒன்  ஆக முடியுமா?ஆகவில்லை.

அதே டிவியில் மைக்கை வைத்துக்கொண்டு சீசன் -2/3/4 போட்டியாளர்களை பேட்டி எடுக்கிறார்கள் அல்லது அடிக்கடி(அதே டிவியில்) இசை நிகழ்ச்சிகளில்  தோன்றுகிறார்கள்.வேறு டிவிக்கு ஒப்பந்தம் முடிந்தவுடன்தான் போகலாம்.


ஏ.ஆர்.ரஹமான் இசையில் பாடும் கனவு நிறைவேறாமல் போகிறது.சரி..அவரின் பாடலை மெல்லிசை நிகழ்ச்சியிலும் பாட முடிகிறதா? பாடிய பிரபலங்களே மெல்லிசையிலும் பாடுகிறார்கள்.இவர்களுக்கு வாய்ப்பு அம்பேல்.
 
முன்னால்”சூப்பர் சிங்கர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள்?எவ்வளவு பாட்டு பாடி இருக்கிறார்கள்?

ஆனால் உடை ஹேர்  ஸ்டைல் எல்லாம் மாறி அழகாகிவிடுகிறார்கள்.
 

திரைப்படங்கள் மாறிவிட்டதால் திரைப்பட இசை சூழல் தலைகிழாக மாறிவிட்டது.ஒவ்வொரு படத்திற்கும் தினக்கூலி மாதிரி ஒவ்வொரு புது
இசையமைப்பாளர்கள்.கும்பல் கும்பலாக  புதுப் பாடகர்கள்.

இந்தப் பாடகர்கள் டிவியில் அடிக்கடித் தோன்றி பார்க்க முடிகிறது. பாடிய பாடலை கேட்க முடியவில்லை.

கிழே இருப்பவர்கள் சூப்பர் சிங்கர் ஆகாத பிரபலங்கள்.பாடிய பாடல்களைச் சொல்ல முடியுமா?

சைந்தவி,பிரசன்னா,ரோஷினி,ஹரினி சுதாகர்,மதுமிதா,மகாலஷ்மி ஐயர்,மாலதி
லக்‌ஷமண்,மாதங்கி,பிரஷாந்தி,ராதிகா,ராஜல‌ஷ்மி,ஸ்ரீவர்தினி,உஜ்ஜய்னி,வினயா,சுனிதா சாரதி,தன்வி,சங்கீதா ராஜேஸ்வரன்,காயத்ரி,ஜெயதேவ்,ஷில்பா ராவ் எவ்வளவு பாட்டு பாடி இருக்கிறார்கள்?
 

சூப்பர் சிங்கர்கள் இவர்களோடு முன்னணி சாதனா,ஷிரேயா கோஷால்,மதுஸ்ரீ,கிரிஷ்,ரஞ்சித், மற்றும் பலரோடு போட்டிப் போட வேண்டும்.

இங்கு ஆரம்பிப்பது........


இங்கு முடிந்து விடுகிறது.......


இந்தப் போதைக்குத்தான் நிறைய பேர் அடிமையாகி விடுகிறார்கள்.

12 comments:

 1. eye opener.. but deaf ears :-( blame the mothers.

  parallely, they also loose their precious academic studies on this :(

  ReplyDelete
 2. இன்ஸ்டன்ட் காப்பி மாதிரி, இன்ஸ்டன்ட் புகழ் தேடி அலையும் அவசர யுகத்து மக்கள். என்றுதான் திருந்தப் போகிறார்களோ...

  ReplyDelete
 3. முன்பு சினிமா மட்டுமே ‘மஞ்சள் ஒளி’ அளிக்கும் மேடையாக இருந்தது. மேடையில் பாடுபவர்கள் வெறும் மலிவு நகல்களாக இருந்தார்கள். ஆனால் இப்பொழுது அந்த வேறுபாடுகள் வெகுவாக குறைந்துவிட்டன. எஸ்பிபி பாடுவது போலவே எல்லோரும் பாடிக் கொண்டிருந்த காலம் போய் இப்பொழுது திரையிசையில் பல புதிய குரல்களும் அவர்கள் பல இசை மேடையில் பங்கேற்பதையும் பார்க்கிறோம். இது ஆரோக்கியமானது.


  அதே போல் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் ஒரு பெரிய ப்ளாட்ஃபார்ம் அமைத்துக் கொடுக்கிறது என்பது உண்மைதான். அதன் பலன் சினிமாவில் பாடுவது மட்டும் என்றில்லை. அஜீஷ் என்றால் யார் என்று தெரியாத மக்களுக்கு அவரை பெரிய அளவில் அறிமுகம் செய்து வைத்தது போல பல இளம்பாடகர்களுக்கு வெகு ஜனஙக்ளிடையே பரிச்சயம் உண்டாக்கியிருக்கிறது. இம்மாதிரி போட்டிகள் இல்லாமல் அது சாத்தியம் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டியதுதான்.

  சினிமா இசையைத் தவிர, தனிப்பட்ட இசை ஆல்பங்கள் நிறைய வெளிவந்தால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கான சந்தை நிறைய இருக்கிறது.

  ReplyDelete
 4. Vidhoosh(விதூஷ்) said...
  // eye opener.. but deaf ears :-( blame the mothers.

  parallely, they also loose their precious academic studies on this :(//

  நன்றி Vidhoosh(விதூஷ்)

  ReplyDelete
 5. தஞ்சாவூரான் said...

  // இன்ஸ்டன்ட் காப்பி மாதிரி, இன்ஸ்டன்ட் புகழ் தேடி அலையும் அவசர யுகத்து மக்கள். என்றுதான் திருந்தப் போகிறார்களோ...//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 6. ஸ்ரீதர் நாராயணன் said...

  // முன்பு சினிமா மட்டுமே ‘மஞ்சள் ஒளி’ அளிக்கும் மேடையாக இருந்தது.மேடையில் பாடுபவர்கள் வெறும் மலிவு நகல்களாக இருந்தார்கள். ஆனால் இப்பொழுது அந்த வேறுபாடுகள் வெகுவாக குறைந்துவிட்டன.
  எஸ்பிபி பாடுவது போலவே எல்லோரும் பாடிக் கொண்டிருந்த காலம் போய் இப்பொழுது திரையிசையில் பல புதிய குரல்களும்//

  உண்மை.ஆனால் திரை இசையை அடிப்படையாக வைத்துதான் போட்டி.தனிப் பாடல்களை பாட அனுமதிபபதில்லை.அதனால் நகல் எடுக்கிறார்கள்.

  // அவர்கள் பல இசை மேடையில் பங்கேற்பதையும் பார்க்கிறோம். இது ஆரோக்கியமானது//

  ”பல இசை மேடை” எவ்வளவு இசை மேடைகள் இருக்கிறது? இரண்டுதான்.திரை இசை அல்லது மெல்லிசை(இங்கும் சினிமா பாடினவர்களை நகல் எடுக்கும் வேலைதான்).தனியாக பேண்ட் ஆரம்பித்து தமிழ் பாடல்கள் பாடுவது உசிதமில்லை.

  //அதே போல் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் ஒரு பெரிய ப்ளாட்ஃபார்ம் அமைத்துக் கொடுக்கிறது என்பது உண்மைதான்.//

  உண்மை.உடன்படுகிறேன்.

  // அதன் பலன் சினிமாவில் பாடுவது மட்டும் என்றில்லை. அஜீஷ் என்றால் யார் என்று தெரியாத மக்களுக்கு அவரை பெரிய அளவில் அறிமுகம் செய்து வைத்தது போல பல இளம்பாடகர்களுக்கு வெகு ஜனஙக்ளிடையே பரிச்சயம் உண்டாக்கியிருக்கிறது. இம்மாதிரி போட்டிகள் இல்லாமல் அது சாத்தியம் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டியதுதான்.//

  ஆனால் வெகுஜனங்கள் இந்த மாதிரி ஷோக்களை ஒரு சினிமா மாதிரி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
  "இவர் வின் பண்ண வேண்டும் என்று”கோவிலில் விளக்கு ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள்.

  இவர்”கோவா” படத்தில் ஆண்டிரியாவுடன் பாடிய பாடலை எவ்வளவு பேர் ஆர்வத்துடன் கேட்டிருப்பார்கள்?

  // தனிப்பட்ட இசை ஆல்பங்கள் நிறைய வெளிவந்தால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கான சந்தை நிறைய இருக்கிறது.//

  எனக்கும் ஆசைதான் தனி ஆல்பம் கேட்பதற்கு.
  ஆனால் இது தமிழ்நாட்டில் மிகப்பெரிய தோல்வி. பக்திப்பாடல்கள்தான் சுமாராக போகின்றன்.

  நன்றி ஸ்ரீதர் நாராயணன்.

  ReplyDelete
 7. பாடகர்கள் ஓரிரு பாடல்களில் ஓடி விடுவதற்குக் காரணம், இங்கு இசையமைப்பாளர்களுக்கே நிரந்தர இடம் இல்லை..தொடர்ந்து ஹிட் அடித்த வித்யாசாகர் இப்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.ரகுமானே தனிப்பாணி போய், யுவன், ஹாரிஸ்,பரத்வாஜ்களுடன் போட்டியிடும் அளவுக்கே இசை தருகிறார்.. புதிய இசையமைப்பாளர்களின் வருகை. அவர்களும் புதுப்புது சிங்கர்களுக்கும் வாய்ப்பளிக்கிறார்கள்..இசையமைப்பாளர்களே ஒன்றரைப் பாடலும் பாடி விடுகிறார்கள்.
  நிலவரப்படி தினக்கூலி மாதிரிதான் இசைக் கலைஞர்கள் இப்போது இருக்கிறார்கள்.இதில் ‘புதியன புகுதலும், பழையன கழிதலும்’ நித்தமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன...

  இந்நிலையில் ;ஏர்டெல் சூப்பர் சிங்கர்’ ஒரு நல்ல பொழுது போக்கு என்ற அடிப்படையில் பார்க்கலாம்.(அதிலும் அழுவது போன்ற காட்சிகளைத் தவிர்த்து).போலவே அவ்வளவு விளம்பரங்களுக்கிடையில் நிகழ்ச்சியினைத் தேடிக் கண்டுபிடித்துப் பார்ப்பதை விட ‘யூ ட்யூப்’ எவ்வளவோ மேல்.
  போன சீசன்ல ராகினி ந்னு ஒரு அம்மிணி பாடும் பார்த்திருக்கீங்களா? :-P

  ReplyDelete
 8. தமிழ்ப்பறவை முதல் பாராவில் சொன்னது முற்றிலும் உண்மை.

  //அவ்வளவு விளம்பரங்களுக்கிடையில் நிகழ்ச்சியினைத் தேடிக் கண்டுபிடித்துப் பார்ப்பதை விட ‘யூ ட்யூப்’ எவ்வளவோ மேல்.//
  ஆனால் லேட்டாக வருகிறது.நான் பார்ப்பது மத்தியான வேளையில் ரிப்பீட் ஆகும்போது.

  //போன சீசன்ல ராகினி ந்னு ஒரு அம்மிணி பாடும் பார்த்திருக்கீங்களா? :-P //

  பார்த்தமாதிரி ஞாபகம்.

  ReplyDelete
 9. அத்தனையும் உண்மைதான். அதுவும் அந்தச் சின்னக் குழந்தை பெயர் மறந்துவிட்டது. வயதுக்கு மீறிய பாடல்கள். குரல் வளம் இருந்தாலும், கடைசியில் கிடைத்தது சில லட்சங்கள். இதற்காK படிக்கிற வயதில் வருடங்களைத் தொலைக்கிறார்கள். எத்தனை டென்ஷன்:(
  சைல்ட் லேபர் ..வேற யாருக்காவது அப்ப்ளை ஆகுமான்னு தெரியலை.
  இந்தத் தடவை வெற்றிபெற்றவர்களுக்கு 50 லக்ஷமாமே!

  ReplyDelete
 10. நன்றி வல்லிசிம்ஹன்.

  //இந்தத் தடவை வெற்றிபெற்றவர்களுக்கு 50 லக்ஷமாமே! //
  அப்படியா.இப்பவே நானும் கிளம்புகிறேன்.

  //அத்தனையும் உண்மைதான். அதுவும் அந்தச் சின்னக் குழந்தை பெயர் மறந்துவிட்டது. வயதுக்கு மீறிய பாடல்கள்.//

  இவர்களுக்கு TRP எகிறும்.

  நன்றி.

  ReplyDelete
 11. Dear Ravishankar,

  My name is Raj Sadagopan and I follow your blog regularly and quite often find your views and interests match with mine (except majorly one...that is I love ARR equally as well and also Illayaraja). I have started a blog recently and wrote 2 short stories. I would love your reivew, suggestion, feedback ....my email id is rajsadagopan@hotmail.com and please reply me when you get chance. My blog is

  pesavanthen.blogspot.com

  Best Regards,
  Raj

  ReplyDelete
 12. Saveena said...

  // My name is Raj Sadagopan and I follow your blog regularly and quite often find your views and interests match with mine//

  நன்றி.

  //(except majorly one...that is I love ARR equally as well and also Illayaraja).//

  ராஜாவை ஆழ்ந்து கேட்கவும்
  // I have started a blog recently and wrote 2 short stories. I would love your reivew, suggestion, feedback ...//

  உங்கள் பதிவிலேயே பதில் போட்டுள்ளேன்.
  நன்றி.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!