Friday, August 20, 2010

புது மாப்பிள்ளை இஸ்திரிக்காரர்

முடியை சீவிப் பார்த்தேன்
காஸ்ட்லி  பாரின் வர்ண சீப்பில்
ஒரு பல்லும் உடையவில்லை

வாஷிங்மிஷினும்
கண்டுகொள்ளவில்லை

பேண்டின் பின் பாக்கெட்டில்
குறுக்கு வாட்டில்
வைத்தது வைத்தப்படி
தோய்த்துவிட்டது

அதே  குறுக்கு வாட்டில்
வைத்தது வைத்தப்படி
உலர்த்தியாகியும் விட்டது

அதே குறுக்குவாட்டில்
இஸ்திரி செய்தும் வந்துவிட்டது

 வாரி முடித்து பின் பாக்கெட்டில்
 குறுக்காக வைக்கையில்
 இஸ்திரிக்காரார் சற்று உறுத்தினார்

இஸ்திரிக்காரரைப் பார்த்து
 ”பர்ஸ்ட் டைம் இது மாதிரி”
என்று சொல்ல நினைத்த நான்
திரும்பிவிட்டேன்

இஸ்திரிக்காரர் முடியை
அழகாக சீவி புது மாப்பிள்ளை
கணக்காக இருந்தார்

4 comments:

  1. நான் ஞான சூனியம் சார் :-(

    ReplyDelete
  2. தமிழ்ப்பறவை said...
    //நான் ஞான சூனியம் சார்//

    ரொமப தீவிரமா யோசிக்காதீங்க.லைட்டா பாருங்க.

    ReplyDelete
  3. மன்னிக்கனும்ங்க... புரியல.. விளக்கம் தர முடியுமா..? நீங்க விரும்பினால்....

    ReplyDelete
  4. காஸ்ட்லி சீப்பு தோய்த்ததிலிருந்து இஸ்திரி செய்யும் வரை பாக்கெட்டிலேயே இருந்திருக்கிறது. இஸ்திரிகாரரும் அதை எடுத்து ஒரு வாரு வாரிவிட்டு
    பாக்கெட்டில் வைத்து இஸ்திரி செய்து கொடுத்துவிட்டார்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!