Monday, August 30, 2010

நாளைய இயக்குனர் - குறும்பட விமர்சனம்-29-8-10

இந்த வாரக் குறும்பட விமர்சனம்: 29-8-10 ( போனவாரம்-22-8-10 )

சிறப்பு நடுவர் டைரக்டர் சுசீந்திரன் (நான் மகான் அல்ல).முதன் முதலாகவெண்ணிலா என்கிற ஒரு பெண் இயக்குனர் இதில் கலந்துக்கொண்டுள்ளார்.


எல்லாமே காதல் கதைகள்(?).எல்லாம் சுமார் ரகம்.

படம்:தேவதை  இயக்குனர்: முருகப்பன்

காதலன் காதலி சந்திக்கிறார்கள்.பேச்சு இயல்பான நகைச்சுவையோடு ஆரம்பிக்கிறது.படிப்படியாக சீரியஸ்ஸாகி காதலியைச் சுட்டுக்கொல்கிறான் காதலன்.தேவதை "வதை" செய்யப்படுகிறாள்.காரணம் காதலி தன்னிடம் உண்மையாக இல்லை.கொஞ்சம் நேரம் கழித்து அவன்  நண்பன் அவனைப் பார்க்க  வருகிறான். “ஏண்டா இப்படி” பதறுகிறான். அவனையும்  தலையில் சுட்டுக்கொல்கிறான்.

நண்பன் அவளின் கள்ளக்காதலன்.இருவருரையும் அருகருகில் கிடத்தி விட்டுப்போய்விடுகிறான். மறு நாள் செய்தித்தாளில் “காதலன் காதலியை சுட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை” என்று தலைப்புச்செய்தி.

துரோகம் செய்யும் நண்பனையும் காதலியும் மாட்டாமல் எப்படி கொலைச்செய்வது என்று திரில்லர் வகையில்கொண்டுப் போய் இருக்கலாம். சம்திங் மிஸ்ஸிங்.தொழில் முறை கொலையாளிபோல் .....ஓவர் ஸ்டைல்.

படம்:இப்படியும் சொல்லலாம் இயக்குனர்:சந்திரன்

தன் காதலியை (பார்க்கில் உட்கார்ந்திருக்கும்) முதன் முதலில் எப்படி பிரபோஸ் செய்தேன் என்று நண்பனிடம் விவரிக்கும்போது  காட்சியாக விரிந்து காதலி ஓகே ஆவதுதான் கதை.

 குழந்தைகள் விளையாட்டுப் போல் “நான்தான் காதலனாம்.நீ பார்க்கில் புக்கு படிச்சிட்டு உட்கார்ந்திருப்பயாம். நான் உன்ன பிரபோஸ் செய்வேனாம்” என்பது போல் டிராமத்தனம். பாரதியார் கவிதைகள்(?) வேறு சொல்லி பிரபோஸ் செய்கிறார்.பழைய காலத்துப்படம் போல காதலி ரொம்பவும் தனியாக பார்க் பெஞ்சில் உட்கார்ந்து  புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார்.

பிரபோஸ் ஓகே ஆக   அவள் கழுத்தில் கேமராவை மாலையாகப் போடுவது நச்.ரசிக்க முடிந்தது.

படம்:அந்த மூன்று நாட்கள் இயக்குனர்:வெண்ணிலா

ஒரு இளைஞன் மூன்று நாட்கள் நண்பர்களோடு குட்டிச்சுவரில் உட்கார்ந்துக்கொண்டு ரோடில் போகும் பிகரை “கரெட்”(காதல்!)  செய்ய நம்பிக்கையோடு பாடுபடுகிறான்.கடைசியில் அந்த பிகர் நண்பனுக்கு ”கரெக்”டாகிறது இவனுக்கு ஆகவில்லை.யூகித்துவிடலாம்.

இளைஞர்களின் உருவத்தை முதலில் பார்க்கும்போது இங்கும் “மதுரை”யா? பகீர் என்றது.படம் ஒரு இடத்தில் முடிந்துவிடுகிறது.அதற்குப்பின்னும்  எதற்கு கோனார் நோட்ஸ்?

இளையராஜாவின் பாடல் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. Self confidence தானே வேண்டும்? ஏன்  confidence என்கிறார் நாயகன்(?).வசனங்களில் உயிரே இல்லை.

படம்:WOO ...WOOOOO இயக்குனர்:பாலா

இதுவும் அதே ரகம்தான். ஆனால் கடைசியில் சற்று தேவலை.

___________________________

இயக்குனர்கள் தங்களுக்கு பிடித்த “பிகர்” சப்ஜெக்டயே இயக்குவதை முதலில் நிறுத்த வேண்டும்.அப்படி இயக்கினால் வித்தியாசமாக இருக்க வேண்டும்.

கிழ் வரும் குறும்படத்தில்(பழையது)நகைச்சுவை அருமையாக கையாளப்பட்டுள்ளது.எல்லா பாத்திரங்களும் அருமை.





7 comments:

  1. இயக்குனர்கள் தங்களுக்கு பிடித்த “பிகர்” சப்ஜெக்டயே இயக்குவதை முதலில் நிறுத்த வேண்டும்.அப்படி இயக்கினால் வித்தியாசமாக இருக்க வேண்டும்.

    ... good advice.

    ReplyDelete
  2. மத்த படங்கள் பார்க்கலை..உங்க புண்ணியத்துல ‘துரு’ பார்த்தேன்... கலக்கல்... இண்ட்ரெஸ்ட்டிங்...
    நன்றி சார்.

    ReplyDelete
  3. நன்றி சித்ரா

    நன்றி தமிழ்ப்பறவை

    ReplyDelete
  4. mr ravishankar,your reviews are so simple and interesting.keep it up

    ReplyDelete
  5. சி.பி.செந்தில்குமார் said...

    முதல் வருகைக்கு நன்றி.

    //mr ravishankar,your reviews are so simple and interesting.keep it up//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  6. Posting my comments,

    ethaiyavathu solitu tan poven.

    Samuthaya Akkaraiyudan nalla kurumpadathai eduthal yetrukolvarkala? Pathilum ennidathil.
    Illai. Inthiya allavil parisu petra enadu kurumpadathai anupinen. Yetrukolavillai.1 week time koduthu commerciala(athavadu பிகர்” சப்ஜெக்L) Konduvanga enrarkal. Sorndhupona Naan
    Ippadiyum ennal edukka mudiyam yena 2 nallil(pre & post)shoot muditu koduten. Andhra Moonru Naatkal.


    Elloradu vimarsanathirku Nanri. Ennai meruketri kolla uthaviyadu

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி வெண்ணிலா.

    //Samuthaya Akkaraiyudan nalla kurumpadathai eduthal yetrukolvarkala? Pathilum ennidathil//

    டாக்குமெண்டரி ஆகிவிடும்.சத்தியமாக என்னால் ரசிக்க முடியாது.

    //Inthiya allavil parisu petra enadu kurumpadathai anupinen. Yetrukolavillai.1 week time koduthu commerciala(athavadu பிகர்” சப்ஜெக்L) Konduvanga enrarkal. Sorndhupona Naan//

    உங்கள் வருத்தம் கஷ்டம் புரிகிறது.
    பார்வையாளனுக்கு இதெல்லாம் தெரிவதில்லை.

    மீண்டும் நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!