Tuesday, June 29, 2010

ஹைக்கூ....ஹைக்கூ...!

தினசரி வாழ்கையில் நாம் சந்திக்கும் சில மின்னல்/கணநேர snapshot/flash lightning அனுபவங்கள்/கணங்கள் ஏற்படுத்தும்உணர்ச்சிகளை/சலனங்களை/பிரமிப்புகளை மூன்று வரியில் காட்சிப்படுத்துவதுதான் ஹைக்கூ.மற்றும் வேறு விதிகள் கட்டாயம் (5-7-5) உண்டு.

இது ஒரு நேரடி அனுபவம்.சமுதாய சாடல்/நீதி தவிர்க்க வேண்டும்.

Haiku only describes, does not prescribe or tell or preach.




குடை மேல் மழை
குடைக்குள் தெறிக்கிறது
சாரல்

___________________________________________________






பூட்டிய வீட்டிற்க்குள்
சிணுங்கிக் கொண்டிருக்கும்
அதிர்ஷ்ட மணிகள்










___________________________________________________




புது மனைவியையே
பார்த்துக்கொண்டிருக்கும்
நிலவு
___________________________________________________


திடீர் மின்னல் ஒளியில்
ரோடை கிராஸ் செய்யும்
நீள பாம்பு


___________________________________________________


ஹாலில் தூங்குபவர்கள் மீது
ஏறிப் போகிறது
குல்ஃபி ஐஸ் வண்டி

___________________________________________________

கார் மேல் படர்ந்துள்ள
தூசியில் எழுதப்பட்டிருக்கிறது
I love you  Kavitha

___________________________________________________




Saturday, June 26, 2010

”அவதார்” ராவணன் -விமர்சனம்

”நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் ” என்ற தகவல் தொடர்பு சம்பந்தமான ஆட்டோமேடிக் குரல் ஒன்றை செல்லில் அடிக்கடி கேட்கலாம்.இந்தப் படத்தை பார்த்துக்
கொண்டிருந்த போது அப்படித்தான் தொடர்பு எல்லைக்கு வெளியே 2000 கி.மி. தூரத்தில் சுத்தமாக ஒட்டாமல் இருந்தேன்.


இத்தனைக்கும் இப்படத்தில் தமிழ்நாடு சம்பந்தமான திருநெல்வேலி,பிரபு,கார்த்திக்,ப்ரியா மணி,விக்ரம்,வையாபுரி,பரிசல்,காடு,அருவி,மலை கிராமம்,குகை, இருட்டு( மணிரதனம் அல்ல)தாவணி,மல்லிகைப்பூ,மணிரத்னம்,சுஹாசனிஎல்லாம் போட்டு அடைத்து இருக்கிறார்கள்.

ஆனால் ”அவதார்” பட கிரகவாசிகளைப் போல் படு அந்நியமாக இருக்கிறார்கள்.பேசுகிறார்கள்.கம்புயூட்டர் வடிவமைத்த டான்ஸ்ஆடுகிறார்கள்.கோனாரக் கோவில் அருகே கல்யாணம் நடக்கிறது.சுத்தமாக வட்டரத்தன்மை காணவில்லை.காட்டும் வட்டாரத் தன்மையிலும் ஒரு Hi-Fiத் தனம்.

ராமாயணத்தின் கதைதான் ஒன் லைன் ஸ்டோரியாக பெரிய கேன்வாசில் வழக்கமான மணியின் non-linearல் சொல்லப்பட்டிருக்கிறது.ஆழம் இல்லை.ஏன்? எதற்கு? என்ற அடிப்படையில்லாத சம்பவங்கள் non-linear narration ல் நீர்த்துப் போகிறது.

பழங்குடி மக்களின் தலைவன் தங்களுக்கு போலீஸ் இழைக்கும்/இழைத்த அநீதிக்கு எதிராக பழி வாங்கும் நோக்குடன் SPயின் மனைவியை (ராகினி) கடத்தி காட்டிற்கு கொண்டு சென்று 14 நாட்கள் வன வாசம் வைத்துவிட்டு திருப்பி அனுப்புகிறான்.இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை.  கடைசியில் என்ன ஆகிறது? முடிவைத்திரையில் பார்க்கவும்.

வனவாசத்தில் ராகினிக்கும் வீராவுக்கும் ஏதாவது கெமிஸ்டரி,பிசிக்ஸ்,ட்ரிக்னாமெண்டரி எப்படி இருக்கிறது என்பதை பிரேமுக்கு பிரேம் காவியத்தன்மையுடன் சொல்ல விழைகிறார்கள்.

சொன்னார்களா? சுத்தமாக இல்லை.

படத்தில் சுத்தமாக ஜீவனே இல்லை. Soul is dead.படு செயற்கையான டப்பிங் பட mismatch வசனங்கள் அண்ட் mismatch உணர்ச்சிகள்.மெயின் கதைக்கு அணைந்து வராத காட்சிகள்.மெயின் கதாபாத்திரங்களும் அவர்கள் உணர்ச்சிகளும் வெறும் பில்ட அப்தான்.சுத்தமாக ஒட்டவே இல்லை.

சாதாரண வசனங்களை ரொம்ப படுத்தி எடுத்து ஹாலிவுட் ஸ்டைல் ஆக்கி.....?வசனங்களுக்கு சுஹாசினி கோனார் நோட்ஸ் போட்டால் நல்லது.காட்சிகளை ஆழமாக உள் வாங்காமல் அசட்டுத்தனமான அச்சு பிச்சு வசனங்கள்.

அருமையான பின்னணிதான் நம்மை பரிதாமாக கெஞ்சி ஒரளவுக்கு ஒட்ட வைக்கிறது.

மூன்று மொழியில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு, தமிழ்+ஹிந்தி+தெலுங்கு மூன்றையும் கூட்டி காட்சி அமைப்பு+எமோஷன்+கதாபாத்திரங்கள்+லோகேஷன்+வசனம்+உடை போன்றவைகளுக்கு ஒரு ஆவரேஜ் எடுத்து குழம்பி,குதறி ரெண்டுங்(மூன்று?) கெட்டானாக படம் பல் இளிக்கிறது.

ஆனால் ஓவர் பிலட் அப்போடு இளிக்கிறது.

பாடலகள் ஆவரேஜ்தான். வழக்கமாகவே ரஹ்மான தமிழ்+இந்தி+குளோபல்= ஆவேரஜ் எடுத்து பாட்டைக் கம்போஸ் செய்வார்.இதிலும் அதே.அதே ரெண்டுங்கெட்டான் தனம். ”உசிரே போகுது” ”கெடக்காரி”பாடல்கள் ஓகே. “கள்வரே” பழைய எம் எஸ் விஸ்வநாதனின் பாடலை பாலிஷ் செய்து போடப்பட்டது? பின்னணி நிறைய இடங்களில் அமைதியாகவே இருக்கிறது.”கோடுபோட்டா” பாடல் அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது..

அசோகவனத்து Lux Supreme சீதாவாக ஐஸ் வருகிறார்.நடிப்பு? விக்ரம் அச்சு அசலாக வீராவாக வருகிறார். பாராட்டுக்கள்.உழைப்பு எல்லாம் வீண்.
பிருதிவிராஜ் நல்ல நடிப்பு. தலையில் கொண்டைப் போட்டு கையில் வில் கொடுத்தால் அப்படியே சாட்சாத் ராமர்பிரான்தான். மழுங்க மழித்த சாந்தமான ராமன் முகம்.

அனுமான் கார்த்திக் காமெடி தெலுங்கு டப்பிங் டைப் ஹிம்சை.

தியேட்டரில் எல்லோரையும் கலகலக்க வைத்தது ”கதவைத் திற காற்று வரட்டும்” ஹிரோயின் ரஞ்சிதா. முகம் காட்டும் போதெல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. ப்ரியா மணியும் பிரபுவும் குறுக்கும் நெடுக்கும் வந்து போகிறார்கள்.

அருமையான லோகேஷன்.அருமையான கேமரா, விக்ரம் நடிப்பு.

மொத்தத்தில் மணிரத்னம் “பிலிம்” காட்டி வா(லி)ட்டி வதம் செய்துவிட்டார்.

Friday, June 25, 2010

வாணி Honey ஜெயராம்

70வதுகளில் பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி,எஸ்.ஜானகி என்று கேட்ட குரல்களையே கேட்டு புளித்துப் போய் இருந்த காலக் கட்டத்தில் வந்தவர் வாணி ஜெயராம்.இவர்களிடமிருந்து மாறுபட்ட வித்தியாசமான குரல்."என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்” பாட்டைக் கேளுங்கள் தெரியும்.

 ஒரு மாதிரி ஜலதோஷம் பிடித்த ”தமிழ்ந்துஸ்தானி” கலவைக்குரல். மனதைக் கொள்ளை கொள்ளும் ஹோம்லி  குரல்.ஜானகியிடம் இருக்கும் வசீகரம் இவரிடம் இருந்ததா? ஆனால் இவரிடம் வேறு விதமாக இருந்தது.(தங்கத்தில் முகம் எடுத்து)



அப்போது குடும்பப் பாட்டு = சுசிலா, குடும்பம +செமிகுடும்பம் =ஜானகி,கிளப் டான்ஸ் பாட்டு =ஈஸ்வரி, என்ற பார்முலா இருந்தது. இவர் குடும்பப் பாட்டுக்கு முதலில் செட்டாகி பின்னால் பார்முலாவை மீறி சில பாடல்கள் பாடினார்.

எல்லா வித இசையும் கைப்பிடியில் வைத்திருந்ததால் எல்லா வித பாடல்களையும் சிரமமின்றிப் பாடினார்.ரூபாய் நோட்டில் உள்ள எல்லா மொழிகள் ப்ளஸ் வேறு மொழிகளிலும் பாடி நிறைய அவார்டுகள் வாங்கினார்.இவர் குரல் எல்லா மொழிக்கும் ஓரளவு பொருந்தி வந்ததுதான் காரணம்.

எல்லா மொழிப் பாடல்களைப் பாடினாலும் இவர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அச்சு அசல் தமிழ்அய்யங்கார் பெண் என்பதால உச்சரிப்பில் எந்த வித வட இந்திய சாயல் இல்லை.தமிழ் உச்சரிப்பும் அருமை.

முதல் படம் என்னவென்று தெரியவில்லை.

தமிழுக்கு வருவதற்கு முன் 1971ல் Guddi என்ற இந்தி படத்தில் இவர் பாடிய “போல் ரே பப்பிஹரா” மெகா ஹிட் பாடல். ஒரு பக்கத்து வீட்டு ஹைஸ் ஸ்கூல் பெண் ஹோம்லிகுரலில்இந்தியாவையே கிறங்கடித்தவர் வாணி ஜெயராம்.அப்போது இந்தி சினிமா மோகத்தில் இருந்த தமிழ்நாடும் பாட்டைக் கேட்டு சொக்கியது.ஆனால் தமிழிற்கு பின்னால்தான் வந்தார்.(1975ல் “ போல் ரே பப்பிஹரா” பாட்டு “என் உள்ளம் அழகான வெள்ளித்திரை” என்று தமிழில் சினிமா பைத்தியம் படத்தில் டவுன்லோட் ஆகி ”ஹிட்” ஆகியது.)

1973ல் வாணிஜெயராம் வந்தாலும் 1974ல்தான், “மல்லிகை என் மன்னன்” என்னும் தீர்க்க சுமங்கலி பட பாடல் குறிப்பாக தமிழ்நாட்டின் எல்லா ஹோம் மேக்கர்/ஹவுஸ் வைஃப்களுக்கு மிகவும் பிடித்துப்போய்  சூப்பர் ஹிட் ஆகியது.ஹோம் மேக்காதவர்களும் ரசிக்கத்தான் செய்தார்கள்.

இந்தப் பாட்டு(இசை- எம்எஸ்வி) வழக்கமான பி.சுசிலாவின் குடும்ப டைப்தான்.ஆனால் வாணி பாடியதும் வித்தியாசமாக இருந்து ரசிகர்கள் கிறங்கிப்போனார்கள்.அதற்கு பிறகு சுசிலா டைப் பாடல்கள் இவருக்குத் தாவின.வேறு டைப் பாடல்களும் பாடினார்.அடுத்து அப்போது வந்த நிறைய புது கதாநாயகிகளுக்கும் இவர் குரல் பொருந்தி வந்தது.

அப்போது தொடங்கி இவரின் கிராஃப் மேல் நோக்கிப் போக ஆரம்பித்தது.சுசிலாவும் ஜானகியும் சற்று பின் தங்கினார்கள்.

ஆனால் முதல் கட்டமாக  என்னை இவரிடம் ஈர்த்தப் பாடல்கள்:

”மண்ணுலகில் இருந்து தேவன்”(புனித அந்தோனியார் - எம் எஸ் வி)
(கேட்ட இடம்,நேரம்,தேதி இன்னும் கூட இன்னும் ஞாபகம் இருக்கிறது)

”அன்பு மேகமே” (எங்கம்மா சபதம்-விஜய பாஸ்கர்)
”ஏழு சுவரங்களில்”(அபூர்வ ராகங்கள்- எம் எஸ் வி)
(மெகா ஹிட் பாடல். புல்லரிக்கும் ஆரம்ப ஆலாபனை)
“ஆடி வெள்ளி” “வசந்த கால நதி”(மூன்று முடிச்சு -எம் எஸ் வி)
“கங்கை நதி ஓரம்”(வரப்பிரசாதம்- வி.குமார்)

“ வேறு இடம் தேடிப் போவாளோ” (சில நேரங்களில் சில மனிதர்கள்) haunting melody.கிளாசிகல் டச்சோடு வாணி அருமையாகப் பாடி இருக்கிறார். எம் எஸ் வி
தன் இசைக்கோர்வையில்(orchestration)  இன்னும் கூட சோக உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம்.தன்னுடைய புளித்துப்போன ஸ்டீரியோடைப் இசையே இதிலும் வருகிறது.

இதே காலக்கட்டத்தில் இவர் பாடிய ஹிட ஆகாத நிறைய டப்பா பாடல்களும் இருக்கிறது.எல்லாம் வீண்.




அடுத்த மெகா ஹிட் ”மேகமே..மேகமே..”(பாலைவனச்சோலை).

அடுத்தக் கட்டமாக இளையராஜா இவரை மெருகேற்றி/மேம்படுத்தி நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்தார்.அதே சமயத்தில் பல இசை அமைப்பாளரின் இசைகளிலும் பாடிக்கொண்டிருந்தார்.

வீணை சிட்டிபாபு இசையமைத்த ராஜாஜியின் “திக்கற்ற பார்வதி” படத்திலும் பாடியுள்ளார்.

ஹிட் ஆன பாடல்கள்:
1.யாரது சொல்லாமல் நெஞ்சு/இலக்கணம் மாறுதோ
2.ஒரே நாள் உனை /பாரதி கண்ணம்மா/அந்தமானைப் பாருங்கள்
3.என் உள்ளில் எங்கோ/தங்கத்தில் முகம் எடுத்து/பொங்கும் கடலோசை
4.மேடையில் ஆடிடும்/எத்தனை மலர்கள்/அமுத தமிழில் எழுதும்
5.கங்கை யமுனை/நானா பாடுவது நானா/அம்மாணை அழகு

"மண்ணுலகில் இருந்து” -புனித அந்தோனியார்-1977


"அன்பு மேகமே” - எங்கம்மா சபதம் -1974
வித்தியாசமான மெட்டு. வாணி/பாலு இருவரும் அருமை.

”அம்மாணை அழகுமிகு கண்”-அவன் ஒரு சரித்திரம்-1977
(இந்தப் பாட்டின்(எம் எஸ் வி) தாக்கத்தில்தான் “பொன்மானே சங்கீதம் பாடவா”
பாட்டை ராஜா போட்டிருப்பார் என்பது என் யூகம்.)

என்னால் என்றும் மறக்க முடியாத மற்றொரு பாடல்:

"என் கல்யாண ” -அழகே உன்னை ஆராதிக்கிறேன்-1978
வாணியின் குரலைக் கேளுங்கள்.மிகவும் வித்தியாசமாக தெரியும் அருமை.ராஜாவின் இசைக்கோர்ப்பைக் கேளுங்கள்.மகழ்ச்சிக் கொப்பளிக்கும் இளம் பெண்ணின் காதல் மனத்தை பிரதிபலிக்கும் வண்ணமயமான துள்ளிக்குதிக்கும் இசை. மத்யமாவதி ராகத்தில் போடப்பட்டுள்ளது.

குறை: கடைசியில் பல்லவி பாடி முடியும் இடத்தில் வாணிக்கு மூச்சு வாங்குவது கூட பாட்டில் கேட்கிறது.

Tuesday, June 22, 2010

அவள் அப்படி ஒன்றும் புதுசு இல்லை..!

கிழ் உள்ள  வீடியோவில் வரும் இசையின்(Together ~~ The Confluence ~~ Rahul Sharma and Richard Clayderman)  கவுண்ட்0.7-0.11 பியானோ வாசிப்பைக் கேளுங்கள். அடுத்து  0.33ல் ஆரம்பிக்கும் இசையைத் தொடர்ச்சியாகக் கேளுங்கள்.

ஏதாவது வரிகளைப்போட்டு ஒரு டுயூன் கம்போஸ் செய்ய முடியுமா என்றும் பாருங்கள்.முடியும்.ஆனால் விஜய் ஆண்டனி முந்திக்கொண்டுவிட்டார்.







கிழ் உள்ள வீடியோவில் உள்ள பாட்டைக் கேளுங்கள்.அட..! அங்காடித்தெரு!சூப்பர் டுயூன்...!கேட்டதும் 'ரேஷன்” ஆயிட்டாரு விஜய் ஆண்டனி .அதாங்க “இன்ஸ்பியரேஷன்”.விஜய் ஆண்டனி  பின்னிட்டாரு!

பாடலின் கடைசியில் வரும்  3.52 புல்லாங்குழல் ரிதம் அருமை.


நோகாமல் நோன்பு கும்பிடுவது இதுதான்.

Saturday, June 19, 2010

எம்.எஸ்.விஸ்வநாதன் - அனுபவம் புதுசு?



மேல் உள்ள வீடியோ Tino Rossi(இத்தாலி?) என்பவர் பாடிய Besame Mucho பாட்டு.இந்த விடியோவின் 0.13 - 0.19 வரும்போது கூடவே ”அந்நாளில் இல்லாத பொன்னா எண்ணங்களே...” “பொன்னான கைப்பட்டு புண்ணான கண்ணங்களே...” என்று காதலிக்க நேரமில்லை படத்தின் “அனுபவம் புதுமை “ பாட்டின் வரிகளை என்று பாடுங்கள் .

அடுத்து 0.39 -0.52ல் “தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்....சொல்லாமல் கொள்ளாமல் நான் அவளிடம் சென்றேன்...ஆஹா..அது கூடதென்றாள்... மனம் தாளாதென்றாள்..” என்றும் பாடுங்கள்.


பாடிவிட்டு கிழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.இத்தாலியில் இருந்து கோடம்பாக்கம் வந்துவிட்டது.பாட்டு போட்டாச்சு. P.B.ஸ்ரீனிவாஸ்/சுசிலா டூயட் சாங்க் ஆயாச்சு.மேல ஒருத்தர்தான் கிழே ரெண்டுபேர் பாடுறாங்க.


இது மாதிரி  தாக்கஙகளில்(????) கம்போஸ் செய்தப் பாட்டுக்கள் நிறைய இருக்கு.  அதுக்குத் தனி பதிவு போடலாம்.

எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ரொம்ப இனிமையா பண்ணி இருக்காரு.எப்படிபோட்டாரு? காரணம் ”ரேஷன்”தான். என்ன ரேஷன்? இன்ஸ்பியரேஷன்தான்.(inspiration).

 

Wednesday, June 16, 2010

Spam mail - எனக்கு ஓவராகத் தெரியவில்லை.

வயிறு என்ற ஒன்று இருந்தால் “காலைக் கடன்” என்ற ஒன்று வருவது போல் ஈமெயில் இருப்பவர்களுக்கு தவறாமல்“ஸ்பேம்” என்ற வகையில் மெயில்கள் மூன்றோ நான்கு தினமும் வந்துவிடுகிறது.97% மக்கள் கரப்பான்பூச்சி அடிப்பதைப்போல் ஒரே அடியாக அடித்து இதை அழித்துவிடுவார்கள்.

இது தவறு என்பதை என் அனுபவத்தைப் படித்த பிறகு உணர்வீர்கள்.

 நான் எல்லாவற்றையும்  படித்துவிட்டு ”சே பாவம்” என்று நினைப்பது  உண்டு. சில சுவராஸ்யமான சம்பவங்கள் இருக்கும்.முக்கால்வாசி லாட்டரி.   பரிசு கோடிகளில்.சில வெகுளி வெளி நாட்டுப் பெண்கள் சொத்துக்களோடு அனாதையாகி விடுவார்கள்.நாம் அவர்களை த்ரிஷாஅல்லது தமன்னாவாகவோ பாவித்துக்கொண்டு அவளைக் காப்பாற்றி பரிசம் போட்டு கல்யாணம் செய்து சொத்தை அடைய வேண்டி இருக்கும்.

இதை  யாரும் முயற்சி செய்வதில்லை.நீங்கள் இதை டுபாகூர் என்று அழித்துவிடுவீர்கள் .இது தவறு என்பதை என் அனுபவத்தைப் படித்த பிறகு உணர்வீர்கள்.

இவர்கள் வசிக்கும் மற்றும் பணம் முடங்கி இருக்கும் இடங்கள் "El Algibe" C.Spartivento"Ivory cape -de-demanto" போன்ற இடங்கள்.”டிஸ்கவரி” சேனல்காரர்களுக்குக் கூடத் தெரியாது. இங்கு நாலு தென்னைமரம் சேர்ந்தார் போல் இருக்க இடம் இருக்காது.ஆனால் இவர்கள், இவர்கள் வங்கி,இவர்கள் அட்டார்னி இருப்பார்கள்.இங்குதான் இவர்கள் அனாதை ஆவார்கள் என்று நினைத்து விட்டு விடுவீர்கள்.

இது தவறு என்பதை என் அனுபவத்தைப் படித்த பிறகு உணர்வீர்கள். 


ஆனால்  நேற்று எனக்கு வந்த ஸ்பேம் மெயிலை சீரியசாக எடுத்துக்கொண்டு விறுவிறுவென காரியத்தில் இறங்கினேன்.சில சமயம்  ரிஸ்க்கில்தான் ரிவார்ட் இருக்கிறது.பாசீட்டீவ்வாக நினைத்து இதில் இறங்கினேன்.

ஒரே வாரத்தில் காரியம் கச்சிதமாக  எல்லாம் முடிந்துவிட்டது.

                                                        --------

””Foggia-de-Passero" ல  Spainகிட்ட ஒரு வேல இருக்கு போயிட்டு வந்துடறேன்.  நாலு நாள் ஆகும்.செல்லுல கூப்பிட  வேண்டாம்.யாராவது கேட்ட “செம்மொழி மாநாட்டுக்கு” போய் இருக்கிறதா சொல்லு” மனைவியிடம் சொல்லிவிட்டு மீனாம்பாக்கத்தில் விமானம் ஏறுகிறேன் ”டுனீஸ் அன்னாபா” என்ற பெயரில். மூன்று விமானம் மாறி Foggia-de-Passero இறங்குகிறேன்.

முகத்தில் பொய்தாடி மீசை ஒட்டிக்கொண்டு வெளியே வருகிறேன். ஒரு மாதிரி விந்தி விந்தி நடக்கிறேன்.அப்போது இரு கருப்பர்கள் எதிர்படுகிறார்கள்.

”இன்றைக்கு மழை வருமா” கேட்கிறார்கள்
“நான் விரும்புவது ஜெல் பேனா” என்கிறேன்

இருவரும் சிரித்தப்படி நட்பாக கை குலுக்குகிறோம்.அங்கிருந்து என்னை ஒரு தீவுக்கு BMWல் அழைத்துக்கொண்டுப் போகிறார்கள்.பெரிய பங்களா வாசலில் “ராபின்சன் டேவிட் “ அட்டார்னி ஜெனரல் என்ற போர்டு மாட்டிய வீட்டின் முன் கார் நிற்கிறது.

அட்டார்னி ஜெனரல் ராபின்சன் டேவிட் என்னை வரவேற்கிறார்.

”விபத்தில் இறந்தபோனவரு கிட்டத்தட்ட 3000ஆயிரம் கோடி ரூபாய்  Bank of Foggia-de-Passero  டெபாசிட்டா விட்டுட்டு போயிட்டாரு.அவருக்கு  யாரும் வாரிசு இல்ல. நீங்கதான் வாரிச நடிக்கப்போறீங்க..அதாவது அவரோட ஒன்னு விட்ட சித்தப்பா மகன் டுனீஸ் அன்னாபா. அதுக்கு வேண்டிய லீகல் டாக்குமெண்ட் எல்லாம் ரெடி. கையெழுத்துபோட்டுட்டுக்  பேங்குக்குக் கிளம்பலாம்.”


”ஓகே டன்” என்றேன்

இறந்துப் போனவரின் சமாதியில் ஒரு மலர் வளையம் வைத்துவிட்டு வங்கிக்குக் கிளம்பினோம்.

”இவரின் சாவு ரொம்பவும் துரதிருஷ்டமானது.ஹீ இஸ் அ ஜெம்  ”என்றார் வங்கியின் மேலாளர்.(இவரும் நெட்வொர்க்கில் இருக்கிறார்)

”ஆமாம் ...” என்று “உச்சுக்கொட்டிக்கொண்டே எல்லா இடங்களிலும் கையெழுத்துபோட்டேன்.

அடுக்கப்பட்டிருந்த பணப் பெட்டிகளைப்  வாய் பிளக்கப் பார்த்தேன்.

“வேற அசைன்மெண்ட் இருந்தாலும்  ஜஸ்ட் ஒரு ஈமெயில்ல சொன்னப் போதும். உதவி செய்ய காத்திருக்கேன்”  என்றேன்

“கண்டிப்பா...”

எல்லாம் சுபமாக முடிந்தது.(ஆனால் கிளம்பும் சமயம் கொஞ்சம் பயம்தான்.) அவர்கள் கமிஷன் போக  எனக்கு 2000 கோடி கொடுத்தார்கள்.விமானத்தில்  எல்லாப்பெட்டிகளையும் சரக்கு  என்ற பேரில் பதிவு செய்து சென்னை வந்து சேர்ந்தேன்.இங்கு எந்தவித தொல்லையும் இல்லை.அவர்களின் நெட் வொர்க் கச்சிதம்.

கால் டாக்சியில் வரும்போது,பாதிப் பணத்தை நம்பிக்கையான  சுந்தரம் பைனான்சிலும் மீதி்யை வங்கியிலும் போட வேண்டும் என்று மனதில் நினைததுக்கொண்டேன்.தாடியையும் மீசையையும் கூவத்தில் எறிந்துவிட்டேன்.அந்த ஈமெயிலை அழித்துவிடவேண்டும்.


கரப்பான் பூச்சியை அடிப்பதற்கு முன் சற்று  Positiveவாக யோசியுங்கள்.

Tuesday, June 15, 2010

விழுந்த கண்ணாடியில் டீச்சரின் தூரப் பார்வை

பல மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம். பள்ளியில் படிக்கும் (9ஆம் வகுப்பு))என் மகனை அழைத்துவர பள்ளி வாசலில் காத்திருந்தேன். பள்ளி முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள்.இவனை மட்டும் காணவில்லை.

கொஞ்சம் நேரம் கழித்து வந்தான். ஆனால் முகத்தில் மூக்குக் கண்ணாடி இல்லை. வருத்தமாக இருந்தான்.மூக்குக்கண்ணாடி வகுப்பின் ஷன் ஷேடில் விழுந்துவிட்டதாகவும் அதை எடுக்க முடியாது என்றும் இந்நேரம் உடைந்திருக்கும் என்றும் சோகமாகச் சொன்னான். மேலும் அவன் கண்ணாடி இல்லாமலேயே மூன்று பிரிவு பாடங்கள் கேட்டிருக்கிறான். நானும் வருத்தமானேன்.

அந்தக் கண்ணாடியின் விலை ரூபாய் 2000/-இவன் தான் போட்டிருப்பான் என்று யூகித்தேன்.விளையாட்டுத்தனம் உள்ளவன். அவனை அழைத்துக்கொண்டு மூன்றாவது மாடியில் உள்ள இவன் வகுப்பறைக்குச் சென்றேன்.அங்கு படிப்பில் குறைந்த திறன் உள்ள மாணவ மாணவிகளுக்கான வகுப்பு நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. இரண்டு ஆசிரியைகள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

நான் உள்ள நுழைந்ததுதான் தாமதம் “ சார்...இவன் ரொம்ப வாலு. ஜன்னல் கிட்டபோய் மூக்குகண்ணாடியை தூக்கிப்போட்டுட்டான் சார் “என்று அவன் வகுப்பு ஆசிரியை புகார் படித்தார்.தொடர்ந்து  ஐந்து நிமிடம் இவருடன்  மற்றொரு டீச்சரும் சேர்ந்துக்கொண்டு ”இவன் தான்.... இவன்தான்...” என்று அவனை சிலுவையில் அறைந்தார்கள்.அப்படி ஒன்றும் பெரிய குற்றம் இல்லை அது.

”அப்பறம் பேசலாம்..முதலில் அதை எடுக்க முயற்சிக்கலாம்.மேடம் அது ரூபாய் 2000 !” என்றதும் ”அது அவனுக்கு தெரிய வேண்டாமா?” என்றார் ஆசிரியை. நான் என் கோபத்தை அடக்கிக்கொண்டு,பின்னால் பேசலாம் முதலில் விழுந்த இடத்தைக் காட்ட சொன்னேன்.
காட்டினார்கள். சரியாகத் தெரியவில்லை.


பக்கத்து பில்டிங்கிலிருந்து பார்த்தேன்.இரண்டு தடவை படிகளில் ஏறி இறங்கி்னோம்.வகுப்பு ஆசிரியையும் பொறுப்பாக எங்களுடன் ஏறி (ஒரு முறை) இறங்கினார்.பள்ளி பணியாளர் ஒருவரை தன் செல்லில் கூப்பிட்டு உடனே எடுக்கச் செய்தார்.

கண்ணாடியைப் பார்த்ததும் மகனுக்கும் எனக்கும் அளவு கடந்த மகழ்ச்சி.நல்லவேளை உடையவில்லை.(இவன் நண்பர்களோடு சேர்ந்துக்கொண்டு விளையாட்டுத்தனமாக போட்டிருக்கிறான்.அதை எடுக்கவும் பாமரத்தனமாக முயற்ச்சித்திருக்கிறார்கள்.)

அதற்குப் பிறகு வகுப்பு ஆசிரியையிடம் சற்று கோபமாக கிழ் கண்ட விஷயங்களைப் பற்றிப் பேசினேன்.(முதலில் நானும் என் பையனும் வருத்தம் தெரிவித்துவிட்டு...)

1.கொலைக் குற்றம்  செய்த மாதிரி,குழந்தைத் தனமாக  அவனைப் பற்றி புகார் பட்டியல் படித்தது
2.புகார் பட்டியல் படித்த அளவுக்கு கண்ணாடியை எடுத்துத் தருவதற்கு கடுகளவு முயற்சி கூட எடுக்காதது
3.கண்ணாடி இல்லாமல் எப்படி அடுத்த மூன்று பிரியடுகள் படிப்பான் என்று கிஞ்சித்தும் வருத்தம் இல்லாதது.
4.ஆசிரியைக்கு உண்டான அடிப்படைப் பொறுப்புணர்ச்சி இல்லாதது
5.பென்சில்,பேனா,மூடி,எரேசர்,ஸ்கேல் போன்றவைகளோடு கண்ணாடியையும்  சேர்த்து விட்டது(இதெல்லாம் குழந்தைகளால் அடிக்கடி அங்கு  விழுவது) ...பரவாயில்ல...! வேற வாங்கிக்கலாம்..!
6.Look beyond what you see



ஆசிரியை ரொம்பவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு கண்ணாடியை எடுத்துதுத்தந்ததற்கு  பாராட்டிவிட்டு கிளம்பினேன்.பேச்சினிடையே ஆசிரியைகளின் , மாணவி/மாணவர்களை மேய்ப்பதின் கஷ்ட நஷ்டங்களையும் என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

எனக்கு,  மகனுக்கு அந்த இரண்டு ஆசிரியைகளுக்கும் மறக்க முடியாத அனுபவம்.கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர அனுபவம்

முக்கியமானது: இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கும்போது பெற்றோர்கள் சோம்பேறித்தனப்படாமல் “என்ன ஏதுவென்று” தீர விசாரித்து அறிந்துக்கொள்வது மிகவும் நல்லது.


வீட்டிற்கு வந்தவுடன் பையனுக்கு அறிவுரை செய்தேன்.

ஆனால்......

கண்ணாடி இல்லாமல் பின் வந்த மூன்று வகுப்புகளில் அவன் பட்ட அவஸ்தை அவனுக்கு வண்டி வண்டியாகப் பாடத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டது.

Tuesday, June 8, 2010

SMS பல்லிகள்

தினமும் விடாமல் துரத்தி
கெளளி சொல்லிக் கொல்கிறது
செல்போன் SMS ஒலிகளில்
பழைய வீட்டை இடித்து
பிளாட் கட்டுகையில்
பரிதாபமாய இறந்தப் போன
பல  பல்லிகள்

Sunday, June 6, 2010

இளையராஜா- King of Heavenly Hummings-1

சினிமாவில் ஹம்மிங் பற்றி இந்தப் பதிவில்  சினிமா ஹம்மிங தேவதைகள் பார்த்தோம்.அதில் இளையாராஜாவுக்கு முன்/பின்/சமகாலத்திய இசை ஜாம்பவான்களின்  பாடலில் ஹம்மிங் பயன்படுத்தலைப் பற்றி பார்த்தோம்.

இளையராஜா புதுமை ஸ்பெஷலிஸ்ட் என்பதால் ஸ்பெஷலாக அவருக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு.மேஸ்ட்ரோ எதையுமே வித்தியாசமாகக் கொடுப்பவர்.ஹம்மிங்கை விட்டுவைப்பாரா?

இது தேவதைகளின் மொழி.பாடலை  உணர்ச்சிகளால் ஒப்பனைச் செய்பவை.அதிலும் புதுமை புகுத்தி இருக்கிறார்.ஹம்மிங்கை ஒரு இசைக்கருவியாக உபயோகிக்கி்றார்.

உணர்ச்சிகள் கலையாமல். எந்த வித  gimmicks இல்லாமல் அழகாக ஹம்மிங்கை spray paint செய்திருப்பார்.

முகம் தெரியாத பேர் தெரியாத பாட்டைஅழகுப்படுத்தும் ஹம்மிங் தேவதைகளுக்கு    பூங்கொத்துக்கள்.


ஜென்சி ஹம்மிங்கில் முன்னணி. பின்னுகிறார்.பிறகு ஜானகி/வாணி/சசிரேகா/ஷைலஜா/உமா/சித்ரா/சுஜாதா/ராதிகா/பூரணி/சுசிலா.
”அன்னக்கிளி உன்னத்தேடுதே”-1976-அன்னக்கிளி
முதல் படம்.முன் இருந்த ஜாம்பவான்களின் சாயல் இல்லாதலட்சணமான ஹம்மிங்.இவர் யார் என்று தெரியாமலேயே மனதில் படிந்தது.

”ராசாவே உன்னை”-1985-முதல் மரியாதை
ஜானகியின்ஆரம்ப கிராமத்து வெகுளி ஹம்மிங்.மனதில் “பச்சக்” என்று ஒட்டிக்கொள்ளும். வித்தியாசம் அன்ட் அட்டகாசம்.

 ”மஞ்சள் நிலாவுக்கு”-1979 -முதல் இரவு
Humm_manjalnilavukku.mp3

“ஊஊ......................” என்று ரயிலை கட்டி இழுத்துச்செல்வது மாதிரி ஹார்ன்  பெண் ஹம்மிங்  சூப்பர்.

”என் இனிய பொன்”-1980-"மூடுபனி”
 Humm-EnIniya Pon.mp3

கிடாரைத் தொடர்ந்து  தேவதைகள் அடுத்து புல்லாங்குழலைத் தொடர்ந்து   தேவதைகள் வேறுவிதமாக. சூப்பர்.ஸ்டைல் ஹம்மிங்.

”ராத்திரியில் பூத்திருக்கும்"”--1983-தங்கமகன்
 Humm-Rathiriyil Poo.mp3

இந்த ஹம்மிங் வருவதற்கு முன்/பின்/சேர்ந்து  இசையை வாரி இறைக்கிறார்.stunning! அடுத்ததும் அசத்தல்.

"பூவில் வந்து”-1982-காதல் ஓவியம்
 Humm_Poovilvandu.mp3

பாலுவின் ஆரம்ப  மோகனராக ஹம்மிங் அருமை.ஹம்மிங் முடிந்தவுடன் வரும் இசையில் நம்மை வேறு உலகத்தில் மிதக்க விடுகிறார்.சின்னசாமி என்றால் ராசய்யா ஸ்பெஷல் உழைப்பு?



கிழ் வரும் ஹேம் ராம் பாட்டின் ஹம்மிங்கை கேட்காமல் போகாதீர்கள். மிகவும் வித்தியாசமானது.பிரமிக்க வைக்கும் இசைக்கோர்ப்பு. Mindblowing composition by Isai Jnani Ilayaraja!

Humm - Neepaartha.mp3

 ”நீ பார்த்த பார்வை” -2000-ஹே ராம்
முன்னணியில் ராணி முகர்ஜி மனதை அள்ளும் குரலில்  ஏதோ  பெங்காலியில் பேசுகிறார்.பின்னணியில் மெலிதான பியானோ இசை. இரண்டும் இனிமையாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு தேவதை குரல் வருடிவிட்டுப் போகிறது.  பிரமிப்பு.

பின் வரும் ஹம்மிங்கை கவனி்யுங்கள். இரண்டு விதமாக வருகிறது.அடுத்த பிரமிப்பு.

"செந்தாழம் பூவில்”-முள்ளும் மலரும்-1978

Humm_SenthaPoovil.mp3
 யேசுதாசின் வித்தியாசமான hill station driving humming?. ஞானி சார் அட்டகாசம்!.என் பாட்டி(இப்போது உயிரோடு இல்லை) ஹம்மிங்கை ரசித்துக் கேட்பார்.பெண்களால் அதிக அளவில் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாட்டு.

( மென்மையானஹம்மிங்கும், இதன் காட்சியும், பாடல் இனிமையும்,இசைக்கோர்ப்பும், ஹோம்லி ஷோபா/சிவப்பு கலர் புடவைப் பெண்/சரத்பாபுவின் ஆளுமைகள் மனஇயல்ரீதியாக பெண்களை ஒன்ற வைத்தன என்று சிலோன் ரேடியோவில் சொல்லக்கேட்டிருக்கிறேன்)

"காளிதாசன் கண்ணதாசன்”-1983-சூரக்கோட்டை சிங்கக்குட்டி
 Humm-KalidasanKanna.mp3
ஆரம்பம் ஹம்மிங்.அட்டகாசம்.மேஸ்ட்ரோவின் குரலும் இழைகிறது.

 ”மெட்டி...மெட்டி”-1982-மெட்டி

Humm-Mettimetti.mp3
 அற்புதமானஆண் ஹிந்துஸ்தானி டைப் ஹம்மிங் . இதே படத்தில்”மெட்டி ஓலி” பாட்டின் ஆரம்பத்தில் “கவுண்டர் பாயிண்ட்”ஹம்மிங் ராஜா ஒரு மெட்டிலும் ஜானகி வேறொரு மெட்டிலும்  வித்தியாசமான ஹம்மிங்

"ஆனந்த தேன் காற்று”-1982-”மணிப்பூர் மாமியார்”
எஸ்.பி.ஷைலஜாவின் இந்துஸ்தானி ஹம்மிங் இனிமையோ இனிமை.
 24Humm_anandthen.mp3


"என்னுள்ளே”-1993-வள்ளி  Heavenly humming 
 Humm-ennulle ennule.mp3

"ஒரு ராகம்”-1982-ஆனந்தராகம்
 Humm_OruRagam1.mp3

வித்தியாசமானக் கற்பனை. இதன் ஆரம்ப  ஹம்மிங்கில் இதனுடன் பின்னி வரும் ”கும் கும்”தாளக்கட்டு இந்தப் பாடலுக்கு ஒரு சோக/ஏக்க effect கொடுக்கிறது.வேண்டிய இடங்களில்  ஹம்மிங்கை அழகாக spray paint செய்திருக்கிறார் மேஸ்ட்ரோ.
(ஒலிப்பதிவு சரியில்லை) இதுவரைக் கேட்காத புதுமையான மனதை வருடும் தேவதை ஹம்மிங். It is absolutely out of the world humming!.எனன ஒரு அதீத கற்பனை!ஜென்சி சூப்பர்.

0.05-0.16 ஒரு வகையும் 0.45-1.04ல் வேறு வகையும்(ஹம்மிங் மற்றும் அதன் எதிரொலி)1.05 -1.10(ரிபீட்). “நீராட்டவா”2.20-2.23ல்கொஞ்சமாக 2.30-2.35 மீண்டும் பழைய ஹம்மிங்கிற்கு திரும்பும் தேவதைகள்.3.11 -3.20 ”தந்தானான”.

”தெய்வீக ராகம்” (0.51)என்ற வரியை ஜென்சி உச்சரிக்கும்போது பின்னணியைக் கவனியுங்கள்.”தெய்வீக....” என்ற எதிரொலி வரும்.ஆனால் 2.36ல் மீண்டும் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது எதிரொலி வராது.ஆனால் மறுபடியும் 4.04ல் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது வரும்.

ரூம் போட்டு உண்மையாக இசை(யோசி)க்கிறார் ராஜா.

3.45-3.54 ல் 2.20-2.23 ஹம்மிங் ரிபீட் ஆகும் என்று நினைப்போம்.ஆனால் அதேதான் ஆனால் கால அளவு மாறுபட்டு வித்தியாசமாக வரும்.அதான் மேஸ்ட்ரோ! பாடல் முடியும் போது மீண்டும் பழைய ஹம்மிங்.வளையம் முற்றுப்பெறுகிறது.

ஆடியோ சரி இல்லாததால்.பாட்டின் வீடியோவைப் பார்க்கவும்.


”ஆயிரம் மலர்களே”-1979-நிறம் மாறாத பூக்கள்
ஜென்சியின் மனதை உருக்கும் ஹம்மிங்.நேரடியாக கேட்காமல் எங்காவது காற்றில் மிதந்து வரும்போது கேட்டால் அள்ளிக்கொண்டு போகும்.
 I love you Jency!
Humm-AayiramMalargale.mp3

”நான் ஒரு பொன்னோவியம்”--1980-கண்ணில் தெரியும் கதைகள்
 Humm-Nan oru pon.mp3

 இதில் குரூப் ஹம்மிங் இரண்டு அடுக்குகளாக வரும்.ஒரு நீண்ட அருமையான கிளாசிகல் ஹம்மிங்கும் உண்டு.

”வரைமுறை என உண்டு வாய் பொத்தி கேளு ”ஆரம்பிக்கும் முதல் சரணத்தில் வாணி/யேசுதாஸ  மாறி மாறி பாடும்போது ”ஆஆஆஆஆ”  பின்னணி ஹம்மிங்கும்,அடுத்து வரும் வரிகளில் இவர்கள்  மாறி மாறி  ஹம் செய்வார்கள்.

ஆரம்ப இசையை கவனியுங்கள்  இசையோடு இசையாக ஹம்மிங்கும் ஒரு இசைக் கருவியாக பின்னிக்கொண்டுவரும்.

”கேளடி கண்மணி”-1989-புது புது அர்த்தங்கள்
 Humm_KeladiKancom.mp3

எவ்வளவு வித்தியாசமான ஹம்மிங். அட்டகாசம்.எப்படியெல்லாம் ஹம்மிங்கு யோசிக்கிறார்.

 இன்னும் பல அவற்றில் சில
1.தம் தம் தன்னம்
2.உறவெனும் -நெஞ்சத்தைக்கிள்ளாதே
3.பொன்வானம் பன்னீர்
4.எனதுவிழியில்
5.காற்றில் எந்தன் கீதம்

ஓகே... நன்றி தேவதைகளே.. இன்னொரு நாள் சந்திப்போம்.