Wednesday, March 31, 2010

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக......

கொழு கொழு கன்னமும்,திரட்சியான மார்பும்,அங்கங்கு சதைப்பிடிப்புகளும்,ஓவர் மேக்அப்பும்,கோபுர கொண்டையும் இருந்தால்தான் “நடிகை” எனறு இருந்த காலத்தில் இயற்கையான மூக்குத்தி முக சுருக்கலும்,வெகுளித்தன நமுட்டு சிரிப்பும்,விதவிதமாக வாரியிறைத்த வெட்க புன்னகைகளும்,காட்டன் புடவை உடுத்திய elegant walkக்கும்,
ஹோம்லி கம் மார்டன் லுக்கும்,ஒரு வித குறுகுறு பார்வையும் கொண்டு எல்லோர் மனதையும் அள்ளியவர் நடிகை ஷோபா (1976-80).

  இந்த வசீகரம்தான் எல்லோரையும்  அவரிடம் ஈர்த்தது.
 
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்.....


 ஷோபாவைப் பார்த்தால் நடிகை மாதிரி தெரியாது.
  
தெருவில்  சற்று பார்க்க சூட்டிகையான பக்கத்துவீட்டு ஒண்டு குடித்தன (அப்போதைய) பெண். கையில்  A4 பேப்பர் மடித்துக்கொண்டு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடீயூட்(????) செல்லும் பெண் ஞாபகம் வரும் எனக்கு எப்போதும்.

இவரின் மிடில்கிளாஸ் பின்னணி கூட காரணமாக இருக்கலாம்.

”அழகில்லாத”சாதாரண அழகி.அச்சு அசல் அப்போதைய தமிழச்சி சாயல்.ஆனால் இவர் சேச்சி. இயற் பெயர் மஹாலஷ்மி.

ஷாலினி எண்டே கூட்டுக்காரி

அப்போது கல்யாணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞர்கள் ஷோபாவைப் போல் சிம்பளாக இருந்தால் போதும் என்றும் சொல்லக் கேட்டுருக்கிறேன்.



ஷோபாவை பிடிக்காதவர்கள் ,”அய்ய... இது பஸ் ஸ்டாண்ட் கேஸ்ஸூ மாதிரி இருக்கு” என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை.......



இவர் நடிக்க ரொம்ப சிரமபடவில்லை.

தன்னுடைய இயற்கையான மற்றும் சிம்பிளான முகபாவங்களில் சிம்பிளாக வந்து போனார்.முதன் முதலாக நடிப்பிற்கு வேறொரு பரிமாணம் கொடுத்தார்.ஒரு மாதிரி வசீகரமான நடிப்பு.உடல் மொழியும் அருமை.

இதழை வருடும் பனியின் காற்று.........

மேக்கப் போட்டாலும் அதே பக்கத்து வீட்டுப் பெண்தான்.இதுதான் இவருக்கு அதிக ரசிகர்களைப் பெற்று தந்தது.குறிப்பாக பெண் ரசிகைகள் ஏராளம் என்று சொல்லுவார்கள்.

பூ வாசம் மேடை போடுதம்மா.........


நான்கு மொழிகளில் தன் திறமையை வெளிப்படுத்தினார்.மலையாளம்,தமிழ் கொடிக்
கட்டிப்பறந்தார்.தன் 19 வயசிலேயே “ஊர்வசி” அவார்ட் வாங்கியவர்.தேசிய விருது குப்பம்மாவாக நடித்த “பசி” படத்திற்கு கிடைத்தது.அதே 19 வயசிலேயே மரணமும் அடைந்தார்.

டைரக்டர் மகேந்திரனின் முள்ளும் மலரும் ஷோபாவுக்கு மாஸ்டர் பீஸ்.

நல்ல வேளை உயிரோடு இல்லை. இருந்திருந்தால் சினிமா இவரை அரைத்த மாவையே அரைக்க வைத்து அலுத்துப் போய் முடக்கி இருப்பார்கள்.குறைவு ஆனாலும் நிறைவு.

ஓடை தரும் வாடை காற்று வானுலகை.........


இவர் பிரியட்டில் பாலிவுட்டில் சுமிதா பாடீல் என்ற நடிகையும் இதே அடுத்தவீட்டுப் பெண் லுக்குதான்.அவரும் உயிரோடு இல்லை.இப்போதைய நந்திதா தாஸ்ஸூம், ஷோபா போன்ற சிம்பிள் அழகுதான்.



இளைய  பருவம் சொர்க்கம்  மலையில் வந்தால்............



அவர் நடித்த படங்கள்(தமிழ்):அச்சாணி,பசி,(தேசிய விருது)அழியாத கோலங்கள்,மூடுபனி,முள்ளும் மலரும்,நிழல் நிஜமாகிறது,ஒரு விடுகதை தொடர்கதை,ஏணிப்படிகள்,வெள்ளாடுவேங்கையாகிறது,அகல்விளக்கு,சாமந்திப்பூ,பொன்னகரம்...
இன்னும் சில

பூ வண்ணம் போல நெஞ்சம்.....(அழியாத கோலங்கள்)



மற்ற மொழிகள்:(மலையாளம்)ஒர்மகள் மரிக்குமோ, ஷாலினி எண்டே கூட்டுக்காரி...இன்னும் சில(கன்னடம்) கோகிலா,(தெலுங்கு)மனவூரி பாண்டவலு,தாரம் மாரிந்தி இன்னும் சில

கடைசியாக.......

ஷோபாவின் மரணத்திற்கு பிறகு ”லேகாயுடே மரணம் -ஒரு பிளாஷ்பேக்” என்று ஒரு  மலையாள படம் வந்தது.அவரின் ஆட்டோபயாகிராபி இது.



கி்ழ் உள்ள வீடியோவில் ஷோபாவின் முக உணர்ச்சிகளை freeze செய்து பாருங்கள்.விதவிதமான உணர்ச்சிகள் ஒவ்வொரு பிரேமிலும்.மனதை அள்ளுகிறார்.

செந்தாழம் பூவில்

ஒவ்வொரு உயிரோட்டமான பிரமேக்கும் பின்னால் இருந்தவர் பாலுமகேந்திரா.இந்த பிரேமில் இருந்த நட்சத்திரம் உயிரில்லாமல் போனதற்கும்  பாலுமகேந்திராதான்  காரணம் என்று சொல்லப்பட்டது.

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக......



பாலுவும் அதை மறுத்தார். உண்மை கடைசி வரை தெரியவில்லை.

22 comments:

  1. ஆரம்பத்தில் இவரை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது...என்னவோ இயல்பான நடிப்பே சற்று மிகைப்படுத்தப் பட்டது போலத் தோன்றும்..இவர் மறைந்த பின் மறுபடியும் இவர்
    படங்களைப் பார்க்கும் போது பிடிக்க ஆரம்பித்தது..

    ReplyDelete
  2. அருமை! ஷோபா, ஸ்மிதா பாட்டீல், நந்திதா, அழகிகள்!

    ReplyDelete
  3. இயல்பாக நடிக்கும் பெண்களில் ஒருவர். மிகப் பிடிக்கும். முள்ளும் மலருமில்தான் இவரைக் கண்டேன் முதலில். பின்னர் ’பசி’. இவர் இறக்கும்போது, நான் சிறுமி; ஆனாலும் பெரியவர்கள் பேசிக்கொண்டது, பேப்பரில் படித்தது புரிந்தது.

    ReplyDelete
  4. மிக ரசித்தேன்....
    பதிவும் அதற்கேற்ற படங்களும்... கடைசிப் படம் பிடிக்க வில்லை... மனதைப் பிசைகிறது. ஷோபாவை ஒரு கையெட்டும் தூரத் தேவதையாக மட்டுமே பார்த்துப் பழகிப் போய்விட்டது...
    //ஒவ்வொரு உயிரோட்டமான பிரமேக்கும் பின்னால் இருந்தவர் பாலுமகேந்திரா.இந்த பிரேமில் இருந்த நட்சத்திரம் உயிரில்லாமல் போனதற்கும் பாலுமகேந்திராதான் காரணம் என்று சொல்லப்பட்டது.//
    :-(

    ReplyDelete
  5. Blogger பாச மலர் said...
    //என்னவோ இயல்பான நடிப்பே சற்று மிகைப்படுத்தப் பட்டது போலத் தோன்றும்.//

    ஆமாம்.மூன்றாம் பிறை ஸ்ரீதேவி நடிப்பும் அப்படித்தான் “பாசாங்குத்தனம்”
    இருக்கும்.அதாவது சற்று செயற்கையாக.

    நன்றி.

    ReplyDelete
  6. Blogger ஷங்கி said...

    //அருமை! ஷோபா, ஸ்மிதா பாட்டீல், நந்திதா, அழகிகள்!//

    நன்றி.

    ReplyDelete
  7. Blogger ஹுஸைனம்மா said...

    // இயல்பாக நடிக்கும் பெண்களில் ஒருவர். மிகப் பிடிக்கும். முள்ளும் மலருமில்தான் இவரைக் கண்டேன் முதலில்.//

    நன்றி ஹுஸைனம்மா

    ReplyDelete
  8. தமிழ்ப்பறவை said...

    //மிக ரசித்தேன்....
    பதிவும் அதற்கேற்ற படங்களும்...//

    ஷோபாவின் பிரியட் 1980 என்பதால் வலையில் போட்டோக்கள் கிடைப்பது அரிது.வீடியோவிலிருந்து எடுத்தப் படங்கள் காணாமல் போயின.பதிவில் வைத்தால் hang ஆயிற்று.அந்த சாப்டுவேரில் பிராப்ளம். வேறு மாற்றி
    சரி ஆயிற்று.

    //கடைசிப் படம் பிடிக்க வில்லை... மனதைப் பிசைகிறது.//
    பதிவுக்கு ஒரு தாக்கம் இருக்கும் என்று வைத்தேன்.அதான் நிஜம்.

    //ஷோபாவை ஒரு கையெட்டும் தூரத் தேவதையாக மட்டுமே பார்த்துப் பழகிப் போய்விட்டது...//

    சரியே.

    நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  9. ஷோபாவின் மரணம் என்னை வேறு மாதிரி தாக்கியது! என் சிறு வயதில் நாங்கள் தி. நகரில் குடியிருந்தோம்! பக்கத்து வீட்டில் மாங்காய் அடிக்கப் போய் (அவர்கள் சம்மதத்தில்தான்) sun shade-இல் இருந்து விழுந்து கால் உடைந்து கட்டு கட்டியிருந்தது! ஒரு முறை ஆஸ்பத்திரிக்கு பஸ்சில் போகும்போது ஷோபா இறந்த செய்தியை பக்கத்தில் இருந்த ஒரு நபரின் தினத்தந்தி பேப்பர் தயவில் பார்க்க நேர்ந்தது (தூக்கில் தொங்கும் படத்துடன்)! அப்போதுதான் ”தூக்கு” பற்றி அறிந்தேன்! It was a shocking photo and experience! இப்போதும் அந்த ஃபோட்டோ நிழலாய் நிற்கிறது மனசில்!

    ReplyDelete
  10. ரவிஷா said...

    // ஷோபாவின் மரணம் என்னை வேறு மாதிரி தாக்கியது!//

    அந்த வயதில் தாக்கம் சற்று தாங்கமுடியாதுதான்.

    ReplyDelete
  11. என் இளமைக்கால தேவதை..

    மனசில் எப்போதும் நிழலாடும் துயரம் தோய்ந்த நடிப்பும் மரணமும்..

    ஆக்கியவரே அழித்தார் என்பதுதான் தாங்கவியலா சோகம்..

    ஓவ்வொரு பாடலும் காலத்தால் அழியா கலவெட்டு சுவடுகள்..

    படங்களும் அப்போதைய காலகட்டத்திற்கு அப்படித்தான்..மனதில் வெட்டிய கல்வெட்டுக்கள் போல...

    ஒரே ரசனையான பதிவுகளை தொடர்ந்து கானுகையில் உங்களுக்கு எனது அன்பு முத்தங்கள்..

    ReplyDelete
  12. Blogger கும்க்கி said...

    //என் இளமைக்கால தேவதை..//

    ஆஹா! ரசிகர்கள் இருக்காங்கப்பா வலையலயும்.

    //ஒரே ரசனையான பதிவுகளை தொடர்ந்து கானுகையில் உங்களுக்கு எனது அன்பு முத்தங்கள்..//

    போட்டு கும்க்கிட்டிங்க.

    நன்றி

    April 1, 2010 12:33 PM

    ReplyDelete
  13. எனக்கு தெரிந்த வரையில் “புதிய பறவை” உண்னமயில் நடதநததாக வதந்தி அந்த சமயத்தில் உலாவியது.

    ReplyDelete
  14. Blogger radhu said...

    // எனக்கு தெரிந்த வரையில் “புதிய பறவை” உண்னமயில் நடதநததாக வதந்தி அந்த சமயத்தில் உலாவியது//

    கருத்துக்கு நன்றி. ஆனால் கருத்து புரியவில்லை.

    ”ராது” சேட்?

    ReplyDelete
  15. "ஆமாம்". புதிய பறவை சினிமாவில் சரோஜாதேவி எப்படி இறநதாரோ அதே முறையில். அது தற்கொலையாக ஞோடிக்கப்பட்டது என்று வதந்தி உலாவியது. உதவி: எனது அக்கால சினிமா நண்பர்.

    ReplyDelete
  16. புரிந்தது.நன்றி.


    இந்த ”ஆமாம்” ”ராது” சேட்?க்கா?

    ReplyDelete
  17. அருமையான ஸ்க்ரீன்ஷாட்ஸ், ஷோபா எனக்கும் ரொம்ப பிடிக்கும். எளிமையான அழகு. பெரிய மேக்கப்பும் இவருக்கு வேண்டி இருக்காது. யதார்த்த நடிகையும் கூட.

    எனக்கு ஒண்ணு புரியலை. புதிய பறவை படத்துல செள்கார் தானே செத்து போவார்? எனக்கு அவ்ளோவா நினைவில்லை, சரோஜா தேவி ஏமாற்றும் பெண் அண்டர்கவர் போலீஸ் ஆஃபீஸரோ அப்படி என்னமோ தானே?

    ReplyDelete
  18. அநன்யா மஹாதேவன் said...

    // அருமையான ஸ்க்ரீன்ஷாட்ஸ், ஷோபா எனக்கும் ரொம்ப பிடிக்கும். எளிமையான அழகு. பெரிய மேக்கப்பும் இவருக்கு வேண்டி இருக்காது. யதார்த்த நடிகையும் கூட.//

    நன்றி.

    // எனக்கு ஒண்ணு புரியலை. புதிய பறவை படத்துல செள்கார் தானே செத்து போவார்? //

    எனக்கும் ரொம்ப நாளாச்சு படம் பார்த்து.

    ReplyDelete
  19. சாவித்திரி காலத்து புதிய பரிமாணம் ஷோபா எனலாம்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!