Sunday, April 4, 2010

நாகேஷ்-சோப்பு-சீப்பு-கண்ணாடி-சிரிப்பு

பூட்டிய தனி விட்டில்(நெ.101) “மங்கி மார்க் டாய்லெட்” அயிட்டம் சேல்ஸ்மேன் (தன் சேல்ஸ்பேக்குடன்) மாட்டிக்கொண்டு முழிப்பதுதான் கதை.இந்த “மங்கி மார்க் டாய்லெட்” அயிட்டம் சேல்ஸ்மேன் நாகேஷ்.பின்னி எடுக்கிறார்.

நாகேஷின் ஒல்லி உடல்மொழி பெரிய பலம்.

இந்த மாதிரி வித்தியாசமான கதை பார்த்ததுண்டா தமிழில்?வித்தியாசமான டைட்டில்.ஆரோக்கியமான காமெடி,டைமிங் சென்ஸ்.பூட்டிய விட்டிற்குள்ளேயே காதலும் உண்டு.லாஜிக்  சற்று உதைத்தாலும் மிகவும் ரசிக்கக்கூடிய காமெடி.பாலசந்தரின்  டிராமா நெடி அடிக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது.அடுத்து இதில் injected comedy இல்லை.இயல்பாய் இருக்கிறது.

படம் பெயர் “சோப்பு, சீப்பு,கண்ணாடி”.1968ம் ஆண்டு வெளிவந்தது. அப்போது நம் தமிழகத்தில் தம்மை அழகுப்படுத்திக்கொண்டு ஸ்டைல் காட்டும் டிரெண்ட்பெண்களிடம்  ஆரம்பித்தது.கதாநாயகன் நாகேஷ் கதாநாயகி விஜய் நிர்மலா.

இது பிளாக் அண்ட் ஒயிட்டில் வெளி வந்தஉண்மையிலேயே “முழு நீள நகைச்சுவைத் திரைப்படம்”.டைரக்‌ஷன் திருமலை மகாலிங்கம் என்பவர்.இவர் சமையல்காரன்,மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சாதுமிரண்டால்,நீலகிரி எக்ஸ்பிரஸ் போன்ற படங்களை இயக்கியவர்.

 நீலகிரி எக்ஸ்பிரஸ்ஸில் சோ புகுந்து விளையாடுவார்.

”எதிர் நீச்சல்””தில்லான மோகனாம்பாள்””கலாட்டா கல்யாணம்”படங்கள் வந்தது அதே 1968ல்.இதிலெல்லாம் நாகேஷ் காமெடி ரகளைதான்.எதிர் நீச்சல் கொஞ்சம் சீரியஸ் கம் காமெடி.


 ஆரம்ப ரயிலில் நடக்கும் காமெடி அட்டகாசம்.உச்சம்.இந்த படத்தில் இன்னொரு விசேஷம் நாகேஷ் தவிர மற்ற நடிகர்களும்  தூள் கிளப்புவார்கள்.இதில் உன்னிப்பாய் கவனிக்க வேண்டியவர் மற்றொருவர்.அவர் ஏ.கருணாநிதி.நாகேஷுடன் இருப்பவர் ஏ.கருணாநிதி.சமையல்காரராக வருபவர்.இவரின் பாத்திரப்படைப்பு கன்னாபின்னாவென்று சிரிப்பு வரும்.

இதில் அவரின்  ”அதிகார புலம்பல்” நடிப்பு அபாரம்.வீட்டின் ஒரு சாவி இவரிடம் இருப்பதால் இவர் “ஹைகிரேடாக”நடந்துக்கொள்ளும் குணச்சித்திரம்.சில இடங்களில் நாகேஷேயே மிஞ்சுவார். இவரின் உடல் மொழி அட்டகாசம். இவருக்கும் இவர் முதலாளிக்கும் இருக்கும் ” கெமிஸ்ட்ரி” புதுசு.இவரேதான் “மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி” படத்தில் டிரைவராக வருவார்.இவருக்கு சார்லி சாப்லின் ஜாடை அடிக்கும்.(அடர்த்தியான புருவம்?)

டைப்பிஸ்ட் கோபு.எஸ்.வி.சகஸ்ரநாமம்,ஏ.வீரப்பன்,உசிலை மணி, போன்றவர்களும் சிரிப்பாக வந்து போவார்கள்.இசை டி.கே.ராமூர்த்தி.

இந்த படம் ராஜ் அல்லது ராஜ்பிளஸ்ஸில்  போடுவார்கள். மிஸ்ஸே செய்ததில்லை.One of the classic film of Master Blaster Nagesh.விவரம் தெரியாத வயதில் தியேட்டரில் பார்த்து ரசித்தது.

ரயிலில் நாகேஷூம் வீரப்பனும் அடிக்கும் கூத்து மறக்கவே முடியாது.(யூ டூபில் இல்லை).படத்தின் கிளைமாக்சும் செம்ம காமெடி.சார்லி சாப்ளின் படத்தின் சாயல்.முக்கால் படம் முழுவதும் நாகேஷூக்கு வெள்ளை சட்டை,கருப்பு பேண்ட்,கருப்பு டை காஸ்ட்யூம்தான்.

நாகேஷ் எப்படி பின்னுகிறார் பாருங்கள்:

13/30 சோப்பு சீப்பு-நாகேஷ்-விஜய்நிர்மலா

17/30 ஏ.கருணாநிதி காமெடி
 
24/30 நாகேஷ -கண்ணாடி காமெடி

26/30- திருடன் நாகேஷ் காமெடி

நாகேஷின் மற்ற காமெடிப் படங்களுக்கு இணையாக இருக்கும் இந்த படம் அந்த படங்கள் போல் அவ்வளவாக பிரபலமாகவில்லை.

அதான் சோப்பு,சீப்பு, கண்ணாடியின் சோகம்.

6 comments:

 1. Am regular reader of ur blog. Once i came across the page when i was searching for Maestro. I love all ur postings. Can u provide ur email ID.

  Thanks,
  Ramanathan Sundaram.

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி.நீங்கள் விரும்பி படிப்பீர்கள் என்பது சந்தோஷம்.படித்த கையோடு பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போட்டால்...

  1.ஊக்கம் கொடுத்த மாதிரி இருக்கும்
  2.நிறை குறைகளை அறிந்து கொள்ளலாம்.

  உங்கள் மெயில் profileலில் உள்ளதுதானே.
  xpote____________ இதற்கு

  அனுப்பலாமா?

  ReplyDelete
 3. நல்ல படம். கருணாநிதி பயந்து நடுங்கும் காட்சியும், நாகேஷ் சீப்பு உடையாது என்று வளைத்துக்காட்டும் காட்சியும் அருமையாக இருக்கும்.

  இப்பொழுது டி.விக்களில் கருப்பு-வெள்ளை படங்களை பார்ப்பது அரிதாக இருக்கிறது.

  ReplyDelete
 4. நன்றி பின்னோக்கி.

  //இப்பொழுது டி.விக்களில் கருப்பு-வெள்ளை படங்களை பார்ப்பது அரிதாக இருக்கிறது//

  இல்லை.நிறைய போடுகிறார்கள்.
  நேரம்தான் வேறுபடும்.பாலிமர் டீவியில்
  போடுகிறார்கள்.

  ReplyDelete
 5. நல்ல பின்னோட்டம்.

  (இவருக்கு சார்லி சாப்லின் ஜாடை அடிக்கும்// கொஞ்சம் இரண்டாவது வாட்டி வாசிங்க. தமிழ் தலைசுத்துது)

  ReplyDelete
 6. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //நல்ல பின்னோட்டம்//

  என்னன சொல்றீங்க
  தலைசுத்துது(ஹிஹிஹிஹிஹி)

  //கொஞ்சம் இரண்டாவது வாட்டி வாசிங்க. தமிழ் தலைசுத்துது//

  சிகரெட் /பீடி ”குடிக்கறான்”?
  தம் அடிக்கறான்? மாதிரிதான் ஆதி(ஹிஹிஹிஹிஹிஹி)

  நன்றி ஆதி.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!