சிருங்கார ரசம் சொட்டும் கிடார் தீற்றல்களோடு ஆரம்பிக்கும் பாட்டு “என்னுள்ளே... என்னுள்ளே..பல மின்னல் ”. It is mind blowing & mesmerizing music.(படம்: வள்ளி-(1993).மயக்கும் பெண் குரல் ஹம்மிங்குகள்..வெஸ்டர்ன் கிளாசிகல் பின்னணியில் கீரவாணி ராகம் பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.
காற்றில் அலைப்பாயும் ”காமத்தீ”க்கு ஏற்றர்போல் கிடார் தீற்றல்களோ?
0.56 -1.01க்கு இடையில் வருகிறது ”எதுவோ மோகம்” வரிகள்.இதை மேஸ்ட்ரோ மூன்று ஸ்வரங்களாக பிரித்து அழகுப்படுத்தி,ஸ்வர்ணலதாவை பாட வைத்துள்ளார். மொன்னையாக ”எதுவோ மோகம்” என்று பாடாமல் கற்பனை வளம் சேர்த்துள்ளார்.
1.எதுவோஓ...... 2.ஓ..... 3. மோ..ஒ...கம்
இந்தப் பாட்டைப் பற்றி தனி பதிவே போடலாம்.சரி விஷயத்திற்கு வருவோம்.
இதே பாட்டு வீணையில் மீட்டப்படும்போது எப்படி இன்னும் கிறங்கடிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
( படத்தில் இருப்பவர் ராஜேஷ் வைத்யா.வீணை கலைஞர்)
ராஜேஷ் வைத்யா என்ற வீணை கலைஞர் .இவர்தான் மெய் சிலிர்க்க வீணையில் வாசித்துள்ளார் பாட்டின் ஸ்வரங்களை அழமாக உள் வாங்கி உருக்க மீட்டியுள்ளார்.
”என்னுள்ளே “என்ற பல்லவியில் ஆரம்பிக்காமல் ”கண்ணிரெண்டில் நூறு”சரணத்தின் வரிகளிலேயே மீட்டி எடுப்பது அட்டகாசம்.பின்னால் பல்லவிக்கு வருகிறார்.பாட்டின் வரிகள் கடைசியில் பார்க்க.
”என்னுள்ளே” வீணையில் மீட்டும்போது பாட்டில் இருந்த ரொமாண்டிக் உணர்ச்சிகள் போய் ஒரு வித உருக்கம் வருகிறது.
சற்று ஆழமாக கேட்கவும்.3.13
கிழ் வரும் வரிகளை மீட்டும்போது It is soul stirring!
1.எதுவோஓ...... 2.ஓ..... 3. மோ..ஒ...கம்
சரணம் -1
கண்ணிரெண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டேன்
ஏங்கினேன் நான்
பல்லவி -1
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ...ஓ.... மோ.......கம்
சரணம் -2
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட த்யானம்
ஆலிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்
ஒரிஜினல் ஆடியோ:
என்னுள்ளே...என்னுள்ளே..
இந்த லிங்கில் 1.என்னுள்ளே பாட்டு 2.என்னுள்ளே instrumental இரண்டும் இருக்கிறது.
பாட்டுக்கும் instrumentalக்கும் ஆரம்ப கிடார் தீற்றல் வேறுபடுகிறது.instrumentalல் வரும் ஹம்மிங்கைக் (0.23 - 0.33) கேளுங்கள் சிலிர்க்க வைக்கிறார்.Heavenly humming!
Stunning maestro!
இதில் வரும் ”என்ன என்ன கனவு கண்டாயோ” என்ற பாட்டும் அருமை.
ராஜேஷ் வைதயாவின் வலை http://www.rajheshvaidhya.com/
Subscribe to:
Post Comments (Atom)
ஜெயா டீவில ராஜேஷ் வைத்தியா ராஜா பாடல்களை வாசிச்சார் . அப்படியே உக்காந்துட்டேன் . அவ்வளவு அருமை
ReplyDeleteசூப்பர்! இப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறேன். நன்றி ரவி.
ReplyDeleteBlogger மீன்துள்ளியான் said...
ReplyDelete//ஜெயா டீவில ராஜேஷ் வைத்தியா ராஜா பாடல்களை வாசிச்சார் . அப்படியே உக்காந்துட்டேன். அவ்வளவு அருமை//
பழைய மற்றும் புது பாடல்களையும் வாசித்தார்.அருமை.
நன்றி.
Blogger M.S.E.R.K. said...
ReplyDelete//சூப்பர்! இப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறேன். நன்றி ரவி//
நன்றி.
tears flowing from my eyes .. thats raja .. this song especially a gem of his composition .. raja can make u laugh , cry , fly , ecstacy everything through his notes . i was confused hearing this piece .. is it a ecstasy or am feeling sad but something dominates me .. hats off Rajesh vaidhya ! u made my day ravi .
ReplyDeleteIf u got some time checkout Vaidya's interview in jaya tv (with sriram i think )
(sorry for comment in english am using mac and dont find a suitable tool for tamil typing )
Blogger Heam said...
ReplyDelete//tears flowing from my eyes .. thats raja .. this song especially a gem of his composition .. ...... hats off Rajesh vaidhya ! u made my day ravi .//
எனக்கும் அதே பீலிங் ஹேமந்த்.
முதல் வருகைக்கு நன்றி.
கருத்துக்கும் நன்றி.என்னுடைய ராஜாவின் மற்ற பதிவுகளும் முடிந்தால் பார்க்கவும்.
"Mind Blowing" முதல் முறை கேட்கிறேன் எஙகிருந்து பிடிக்கிறாய்? உட்கார்ந்து யோசிப்பீர்களோ? ஆமாம் இந்த ராஜா இப்ப எங்க இப்ப கானோம்?
ReplyDelete//என்னுடைய ராஜாவின் மற்ற பதிவுகளும் முடிந்தால் பார்க்கவும்.// Hey Ravi am a regular reader of ur blog but due to the font problem i was not posting any comments . Really u are doing a great work for the Raja Sirs die hard fans like me .Please keep going . i would like to talk to u .. if possible send me ur mob no .
ReplyDeletePlease check this entire program . The video version of the link u posted
http://tamil.techsatish.net/file/raagamalika-54/
radhu said...
ReplyDelete//"Mind Blowing" முதல் முறை கேட்கிறேன் எஙகிருந்து பிடிக்கிறாய்? உட்கார்ந்து யோசிப்பீர்களோ?//
ராஜாவின் கலெக்ஷன் நெட்டில் ரொம்ப வருடமாக வைத்திருக்கிறேன்.கேட்க கேட்க நிறைய விஷயம் பிடிபடுகிறது.
// ஆமாம் இந்த ராஜா இப்ப எங்க இப்ப கானோம்?//
எல்லா விதமான இசைகளும் போட்டு முடிச்சாச்சு.டிரெண்டு வேற மாறிப் போச்சு.
க்ளாசிக்...
ReplyDeleteஒவ்வொரு வெர்ஷனும் ஒவ்வொரு அழகு...
//”என்னுள்ளே” வீணையில் மீட்டும்போது பாட்டில் இருந்த ரொமாண்டிக் உணர்ச்சிகள் போய் ஒரு வித உருக்கம் வருகிறது.//
மிகச் சரி.அது ஸ்வர்ணக் குரலால் வந்திருக்கலாம்...இடை இசைகள் ஹைக்கூ சிம்ஃபொனிக்கள்.
ராஜேஷ் வைத்யாவைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி... கலக்கி எடுத்திருக்கிறார்...அதிலும் ‘காலமென்னும் தேரே ஆடிடாமல் நில்லு’- வரிகளில் வீணை அழகாகப் பாடுகிறது...
இன்னும் பத்து நாட்களுக்கு ‘என்னுள்ளே’ ரீங்காரம் சுற்றிக் கொண்டுதானிருக்கும் என்னுள்ளே...
Blogger தமிழ்ப்பறவை said...
ReplyDelete// க்ளாசிக்...
ஒவ்வொரு வெர்ஷனும் ஒவ்வொரு அழகு...//
instrumentalலில் ஹம்மிங் கேட்டீர்களா?
// மிகச் சரி.அது ஸ்வர்ணக் குரலால் வந்திருக்கலாம்...//
மிகச் சரி.பெண் வந்தாலே ரொமான்ஸ்தான்
//இடை இசைகள் ஹைக்கூ சிம்ஃபொனிக்கள்.//
தமிழ்ப்பறவை பின்றீங்க.
// ராஜேஷ் வைத்யாவைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி... கலக்கி எடுத்திருக்கிறார்...அதிலும் ‘காலமென்னும் தேரே ஆடிடாமல் நில்லு’- வரிகளில் வீணை அழகாகப் பாடுகிறது...//
மேல் Heam கொடுத்திருக்கும் லிங்கை பாருங்கள்.நான் ஜெயா டிவியில் நேரடியாக பார்த்தது.மற்றப் பாடல்களையும் வீணையில் கேட்கலாம்.ராஜபார்வை(அழகே) அட்டகாசம்.
//கண்ணிரெண்டில் நூறு // இந்த இடத்தை நானே ஏதோ யூகித்து எழுதினேன்.ஏன்? ஸ்.லதா பாடும்போது சரி இல்லை.
மேஸ்ட்ரோவும்கண்டுக்கொள்ளவில்லை.சரி பார்த்துச்சொல்லவும் என்ன பாடுகிறார் என்று.
/இடை இசைகள் ஹைக்கூ சிம்ஃபொனிக்கள்./ - i second u tamil paravai .. In the prelude of this song he has used mrithangam and from there the transition to the bass guitar and the chorus .its only possible by ilayaraja, he is the one used mrithangam in the romantic songs .( ex : the start of ayiram thamarai )
ReplyDeleteApril 26, 2010 6:26 PM
ReplyDeleteHeam said...
//Hey Ravi am a regular reader of ur blog but due to the font problem i was not posting any comments //
I am excited. Thanks a lot.I do not mind you commenting in english.
Pl.do to encourage me.
//Please check this entire program . The video version of the link u posted//
நான் ஜெயாவில் பார்த்தேன்.மீண்டும் ஒரு முறைப் பார்த்து ரசித்தேன். மிகவும் நன்றி.
Heam said
ReplyDelete//In the prelude of this song he has used mrithangam and from there the transition to the bass guitar and the chorus .//
சில பாடல் சைட்டுகளில் மிருதங்கம் இல்லை.
//its only possible by ilayaraja, he is the one used mrithangam in the romantic songs .( ex : the start of ayiram thamarai )//
ஆமாம்.100%.His is highly magical Heam.
உண்மையிலேயே 'என்னுள்ளே' பாட்டு மிக மிக அருமையான பாட்டு, எனக்கு மிகவிம் பிடித்தது.
ReplyDelete//”என்னுள்ளே” வீணையில் மீட்டும்போது பாட்டில் இருந்த ரொமாண்டிக் உணர்ச்சிகள் போய் ஒரு வித உருக்கம் வருகிறது.//.... ஆமாங்க.
Blogger Priya said...
ReplyDelete// உண்மையிலேயே 'என்னுள்ளே' பாட்டு மிக மிக அருமையான பாட்டு, எனக்கு மிகவிம் பிடித்தது//
முதல்(?) வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.