Monday, April 26, 2010

சென்னை சூப்பர் கிங்க்ஸ் சிங்கிள் சிங்ம்டா..

MGM சினிமா லோகோவில் வரும் சிங்கம் மாதிரி கர்ஜித்து ஐபில் கோப்பையைக் கைப்பற்றினார்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ். “நம்ம தல” சச்சின்.”நம்ம ஊரு” மும்பாய்.”மேட்ச் முடிஞ்சு கொண்டாட்டம்தான்”என்று வந்தவர்கள் நொந்து நூடூல்ஸ்.எல்லாம் சுக்கு நூறாகியது.மும்பை நகரம் சோகத்தில் முழுகியது.

Chennai Super Kings royally screwed Mumbai Indians party.


"மஞ்ச குளிச்சு...அள்ளி முடிச்சு...மெட்டி ஒலிக்க........”

இதெல்லாம் சகஜம்ப்பா என்று சவக்களையுடன் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு ஜெண்டிலாகக் களைந்தார்கள்.இவங்க நல்லவங்கப்பா...!

முதலில் ஆடிய செ.சூ.கி 168. பதில் ஆடிய மு.இ.146. 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

Catches win Matches என்று சொல்வார்கள்.

”நீ முந்திண்டா நோக்கு.. நான் முந்திண்டா நேக்கு” என்ற பாணியில்அபிஷேக்கும் தில்ஹாராவும் ஓடி வந்து இருவருமே பிடிக்காமல் ரெய்னா கிளப்பிய பானாவை பூமிக்கு வார்த்தார்கள்.பெளலிங் செய்த ஜாஹீர் முறைத்தார்.ஈயத்தைப் பார்த்து ஈளித்ததாம் பித்தளை என்ற கணக்காக ஜாஹீரும் மற்றொரு ரெய்னா கிளப்பிய பானாவை பூமிக்கு வார்த்தார்.

இதே ரெய்னா திவாரி அடித்த பந்தை அற்புதமாக பிடித்தார்.இதை ஸ்லோ மோஷனில் பார்த்தபோது தரையில் இருந்து எடுத்தமாதிரி தெரிந்தது.ரன் அவுட்டுக்கு ரூம் போட்டு replay போடுவது மாதிரி ரூம் போட்டு replay கிடையாதா? கீரென் போல்லர்ட்டு கேட்ச்சை மாத்யூ ஹைடன் பிடித்தது அட்டகாசம்.

எல்லாம் இனிதே முடியும் என்ற கட்டத்தில் ஸ்லாக் ஓவர்களில் கீரன் போல்லர்ட்டு வந்து பொளுந்துக் கட்டினார்.இவர் நம்ம ஆள் போல் வூடுகட்டி பில்டப் கொடுத்து சிக்ஸ் அடிப்பதில்லை.அலட்சியமாக அடிக்கிறார்.இவரு நாட்டுக்கட்டை மாம்ஸ்.அதே மாதிரி அபிஷேக் நய்யார் அடித்த இரண்டு சிக்சும் சூப்பர்.

நம்பிக்கை நட்சத்திரம், விடிவெள்ளி,டக் போளிங்கர் பாலாஜியே மிஞ்சும்படி பெளலிங் செய்தார். அடி வயிற்றிபுளி கரைத்தது.”பூட்ட கேஸ்” கிரிகெட்டும் வேணா ஒண்ணும் வேணாம் என முடிவு செய்து டீவியை ஆஃப் செய்து  நாளைக்கு நம்ம பொழப்ப பார்ப்போம் என்று முடிவுக்கு வந்தேன்.நல்ல வேளை மாத்யூ ஹைடன் அற்புதமாக பிடித்து அவுட் ஆக்கினார்.

டக் போளிங்கரின் பந்து வீச்சு, மாத்யூவின் தடவல்,மு.இ.காட்ச் விட்டது, அற்ப ரன் அவுட் இதெல்லாம் பார்க்கும்போது ”match fixing”கோ என்ற சநதேகம் அடிக்கடி சியா லீடர்ஸ் போல்”ஹே..ஹே” என்று ஆர்பரிக்கிறது மனதில்.காலம் அப்படி இருக்கிறது.

சச்சின் கையில் கட்டுக்களோடு வந்து பொறுப்பாக ஆடினார்.எப்படியாவது முமபைகாரர்களைகுஷிப்படுத்தி விடவேண்டும் என்ற முயற்சி வீணாகியது.
வீணாக்கியது இவரின் வீரர்களின் கச்சா முச்சா ஆட்டம் பீல்ட்டிங்... அவர் ஆட்டத்தையும் ரசித்தேன்.ஜெயித்திற்க வேண்டியதை தோற்றது.

சுரேஷ் ரெய்னாவின் 57 ரன் ஜெயித்ததில் ஒரு முக்கிய  பங்களிப்பு. தொடர் முழுவதும் இவர் ”கரக்காட்டக்காரன்” .அட்டகாசம் தல.

மு.இ. விளையாட்டு வீரர் ஒருவர் ஒரு பந்தை அடித்தார்.பவுண்டரியை நோக்கிப் போனது. கடவுளே...!சிக்சா ஆகுமா  இல்லாட்டி கேட்சா..... பதறிய ஒருவரின் முக (சுருங்கி) பாவம் குளோசப்பில் காட்டப்பட்டது. அவர் முகேஷ் அம்பானி.அதே மாதிரி தன்னை ரன் அவுட் ஆக்கிய சச்சினை பாட்டால் தரையில் அடித்து முறைப்பு காட்டினார் அபிஷேக்.

அறுபத்து மூவர்  திருவிழா போல் கோலாகலமாக  ரொமப பக்தியுடன் நடந்து முடிந்தது ஐபில். விழா முடிவில் லலித மோடி “ஹிட் அவுட்”.

 டெயில் பீஸ்:
ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் பெயர்களை தமிழில் எழுதுவதே மலிங்கவின் ஓவரில் பேட் செய்வது மாதிரி கஷ்டமாக இருக்கிறது.

10 comments:

  1. //.இவர் நம்ம ஆள் போல் வூடுகட்டி பில்டப் கொடுத்து சிக்ஸ் அடிப்பதில்லை.அலட்சியமாக அடிக்கிறார்.இவரு நாட்டுக்கட்டை மாம்ஸ்.//

    அவரு பாக்க தாங்க மனுஷன் மாதிரி இருக்கார். ஆனா அடியெல்லாம் காட்டடி மாட்டடி தான். ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆயிட்டேன். ரைனா, ஹெய்டன் பிடித்த கேட்சுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றின. ரைனா - இந்தியாவிற்கு இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம். அவரும் தோனியும் எதோ மாமன் மச்சான் போல பழகிக்கொள்கிறார்கள். Good relation. Raina - Constant performance in the whole season. Well attempted field setting by Dhoni for Pollard wicket.

    ReplyDelete
  2. "அதே மாதிரி தன்னை ரன் அவுட் ஆக்கிய சச்சினை பாட்டால் தரையில் டித்து முறைப்பு காட்டினார் அபிஷேக்".

    தூக்க கலக்கமா? வெறுப்பில் பாட்டால் தரையில் அடித்தது சச்சின்.

    ReplyDelete
  3. ரெண்டு said...


    // Raina - Constant performance in the whole season. Well attempted field setting by Dhoni for Pollard wicket//

    ஆமாம்.நன்றி ரெண்டு.

    ReplyDelete
  4. radhu said...


    //தூக்க கலக்கமா? வெறுப்பில் பாட்டால் தரையில் அடித்தது சச்சின//

    அப்படியா!தூக்கம் கலக்கம் இல்லை. மாட்ச் நல்ல இண்ட்ரஸ்டிங்காக போனதால்.போல்லார்டுதான் சற்று கவலையை கொடுத்தார்.அப்பதான் தூங்கலாம்னு நெனச்சேன்.

    ReplyDelete
  5. போலார்டை அவுட் ஆக்குவதற்கு முன் தோனியின் வியூகம் சிறப்பாக இருந்தது. ஹெய்டனின் தோள் மீது மோர்கல் கைப்போட்டுக்கொண்டு சில நொடிகள் பேசிய்தும் பின் வந்து வீசியது அது சரியாக ஹெய்டனின் கைக்குள் அடங்கியதும்... தொடர்ந்த சென்னை வெற்றியும்....சூப்பர்ப்.

    ReplyDelete
  6. மஞ்சூர் ராசா said...

    //போலார்டை அவுட் ஆக்குவதற்கு முன் தோனியின் வியூகம் சிறப்பாக இருந்தது//

    ஆமாம்.எழுத மறந்தவிட்டேன்.நன்றி மஞ்சூர் ராசா.

    ReplyDelete
  7. இன்று தான் உங்கள்
    வலைதளத்துக்கு வந்தேன்

    ReplyDelete
  8. Blogger தமிழ்ப்பறவை said...

    // :-)//
    இந்த குறிக்கு என்ன அர்த்தம்.மறந்து போய்விட்ட்து.மொழி இருக்க குறி ஏன்?
    ஓட்டு போடுங்க.நானும் குதிச்சிட்டேன்.

    ReplyDelete
  9. Blogger S Maharajan said...

    //இன்று தான் உங்கள்
    வலைதளத்துக்கு வந்தேன்//

    வாங்க மஹாராஜன். முதல் வருகைக்கு நன்றி.எல்லாம் படிங்க. மறக்காம கமெண்ட் போடுங்க்.(தவறைத் திருத்திக்கலாம் மற்றும் உங்க ரசனையும் தெரிஞ்சுக்கலாம்,
    ஊக்கம் கிடைக்கும்) அப்படியே ஓட்டும் போடுங்க.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!