Friday, April 16, 2010

பூபாளம் இசைக்கும் -இளையராஜா-BGM

மேஸ்ட்ரோ கிராமம்,மாந்தோப்பு,குடத்துடன் தாவணிப் பெண்,காதல் அரும்பும் தருணம்,காலில் முள் எடுத்தல்,ஸ்லோ மோஷன்,பூக்கள்,வயல், மண்டபம் ஒளிந்து ஒளிந்து தலை நீட்டுதல்போன்ற திரையில் தெரியும் காட்சிப் படிமங்களுக்கென்றே ஒரு ஸ்பெஷல்(வெரைட்டியான) பின்னணி இசைப்பார்.

அது  ”தூறல் நின்னு போச்சு”லும் உண்டு.

”தூறல் நின்னு போச்சு”படம் (1982) ரிலீசாகி கிட்டதட்ட 28 வருடம் ஆகிவிட்டது.படத்தில் வரும் ஒரு அற்புத மெலடி “பூபாளம் இசைக்கும்” பாடல்.இன்னும் பிரஷ்ஷாக காதில் /மனதில் இசைப்படுகிறது. காரணம் கிளாசிகல் மெலடி டச். கிளாசிகலாகப் பாடியவர்கள் ஜேசுதாஸ்-சுனந்தா.

அடுத்து முக்கியமான காரணம் (எனக்கு) பாட்டுக்கு முன் வரும் இன்னதென்று அறியமுடியாத எல்லா இசை மணமும் கலந்து வருடும் இசை.மேஸ்ட்ரோவை தவிர யாரால் கொடுக்க முடியும்.

இதில் நடித்த நடிகை சுலக்‌ஷணா அப்போதைய த்ரிஷாவாக இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். பாக்யராஜ்ஜைப் பார்த்து ”மச்சம்டா” என்று வெம்பி வெதும்பி(னான்)னார்கள்.

பின் வரும் வீடியோ“பூபாளம் இசைக்கும்”பாடலுக்கு முன் வரும் வருடும் பின்னணியோடு கொடுக்கப்பட்டிருக்கிறது.sharanKayக்கு நன்றி.

முதலில்  0.24-0.33 சிலிர்க்கும் இசைத் துளிகள். அடுத்து 0.38 - 0.55 லீடில் சிந்த்ஸைசர் அதைத்தொடரும் கிளாசிகல் மிருதங்கம்.பொதுவாகதோல் கருவிகள் ரொமான்ஸூக்கு இசைக்க மாட்டார்கள். மேஸ்ட்ரோ அதிலேயே காதலை குமுறுகிறார். அட்டகாசம். 1.38ல் புல்லாங்குழல் ரொமான்ஸைக் கூட்டுவது அருமை.

பாட்டின் 2.56 -3.03 ராஜாவின் வழக்கமான பிரமிக்க வைக்கும் இசை.பிறகு வருவது பாக்கியராஜுக்கு.

”நெஞ்சத்தைக் கிள்ளாதே” வரும் ஒரு BGM.Yowan 1977 நன்றி.”தூ.நி.போ”கொடுத்தவர்தான் இதையும் கொடுக்கிறார்.
இதற்கு ( you tube)வந்த கமெண்டை கிழே கொடுத்துள்ளேன்.

Comment - 1

krishnbimanagar Brush rhythm is good in the first half...And of course, lovely Pizzicato of the Double Bass making...Lovely Bass for the flute in the start of this BGM...
There is a Guitar(is it a Classical Guitar? Its difficult to make out the difference between Classical and the conventional metal stringed Acoustic guitar) at 00:12 which reminds me of one of Bach's fugue works...This guitar plays parallel to the flute..
from 00:38 onwards, there are Counterpoints between the Double Bass..
9 months ago

 Comment -2
 krishnbimanagar The second half, along with the piano, the Phaser effect pedal is used to bring about the Wah Wah effect on the guitar...01:17, another Phaser effect Guitar replies to the piano with the wah effect as rhythm!Funk music! 01:22 to 01:34, I simply love that Phaser effect lead and I can mimic that guitar sound!
 

All good things in music and Good music comes from Maestro's studio only!

 

12 comments:

 1. இந்த பாடலை அடிக்கடி கேட்டுயிருக்கிறேன் ஆனால் இம்புட்டு உணர்ந்து கேட்னோனா என்பது தெரியவில்லை. நன்றி தல ;))

  நேத்து சிப்பிக்குள் முத்து பார்த்தேன்...ஒன்னும் சொல்லிக்க முடியல....அந்த லாலீ லாலீ..எத்தனை முறை கேட்டாலும் சளிக்கவேல்ல...

  நேரம் கிடைக்கும் போது அதை பத்தியும் எழுதுங்கள் தல ;)

  ReplyDelete
 2. வாங்க கோபிநாத்.முதல் பின்னூட்டம் போட்டு விளக்க ஏத்தி வச்சீங்க.

  //இந்த பாடலை அடிக்கடி கேட்டுயிருக்கிறேன் ஆனால் இம்புட்டு உணர்ந்து கேட்னோனா என்பது தெரியவில்லை. நன்றி தல ;))//

  முதலில் வரும் இசை ரொம்ப படுத்தியது பாட்டை விட.

  //அந்த லாலீ லாலீ..எத்தனை முறை கேட்டாலும் சளிக்கவேல்ல...//

  ஆமாம் நல்ல மெலடி.

  நன்றி.

  ReplyDelete
 3. அருகை அருமை, எத்தனை கேட்டாலும் சலிக்காத ராஜாங்கம்

  ReplyDelete
 4. வாங்க கான பிரபா.

  //எத்தனை கேட்டாலும் சலிக்காத ராஜாங்கம்//

  சத்தியமா.மெலடி...மெலடி...மெலடி அதுதான் கடைசிவரை நிற்கும்.

  நன்றி.

  ReplyDelete
 5. சூப்பர்... பூபாளம் இசைக்கிறப்போ யாராச்சும் கேட்காம இருப்பாங்களா..? 5:40 க்கு அப்புறம் வரும் குழலிசை எனது ஃபேவரைட்...பாடலுக்கு முன் வந்த காதல் குறுந்தொகைக்கான இசையும் கலக்கல்...
  நெஞ்சத்தைக் கிள்ளாதே பிஜிஎம் முன்பே கேட்டிருந்தாலும் இன்றும் ரசித்தேன்...கிட்டாரின் நரம்புகளில் வழிந்தது இளமை... நல்ல படமும் கூட...ம்கேந்திரன் போன்றவர்கள் எக்ஸ்ஹாஸ்ட் ஆனதில் இசைப்பிரியர்களுக்கும் வருத்தமே...
  சார்... முள்ளும்மலரும் பிஜிஎம்கள் யூ ட்யூப்ல இருக்கு... அதைப் பத்திப் பதிவு போடுங்க...(நீங்க போட்டா என்னன்னு கேட்டுடாதீங்க...) சில விசயங்களை சில பேர் சொல்லக் கேட்டாத்தான் திருப்தி...(கானாப்ரபாவுக்கும் சேர்த்துத்தான்)

  ReplyDelete
 6. //சூப்பர்... பூபாளம் இசைக்கிறப்போ யாராச்சும் கேட்காம இருப்பாங்களா..? 5:40 க்கு அப்புறம் வரும் குழலிசை எனது ஃபேவரைட்...பாடலுக்கு முன் வந்த காதல் குறுந்தொகைக்கான இசையும் கலக்கல்...//

  நன்றி தமிழ்ப்பறவை.

  //சார்... முள்ளும்மலரும் பிஜிஎம்கள் யூ ட்யூப்ல இருக்கு... //
  டைம் கொடுங்க.போடலாம்.

  ReplyDelete
 7. சார் கடைக்கு இன்னிக்கு தான் வரமுடிஞ்சது. தூறல் நின்னு போச்சு பாடல்கள் எல்லாமே சூப்பர் சார். எனக்கு ரொம்ப பிடிச்சது "ஏரிக்கரை பூங்காத்தே......". அதை கேட்டா எனக்கு ஒரு Nostalgic பீலிங் வந்துரும் சார்.

  Thanks for the post.

  ReplyDelete
 8. Blogger ரெண்டு said...

  //எனக்கு ரொம்ப பிடிச்சது "ஏரிக்கரை பூங்காத்தே......". அதை கேட்டா எனக்கு ஒரு Nostalgic பீலிங் வந்துரும் சார்//

  சரிதான்.நல்ல கம்போசிங்.நன்றி.

  ReplyDelete
 9. நானும் எனது பதிவில் இளையராஜாவின் பின்னணி இசை பற்றியே பதிவிட்டேன்.அதே தலைப்பில் நீங்கள் அமர்க்களப்படுத்திவிட்டீர்கள்.

  ReplyDelete
 10. மால்குடி உங்கள் பதிவும் பார்த்தேன்.
  நல்லா இருக்கு. முதல் வருகைக்கு நன்றி, கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 11. இளைய ராஜாவுக்கு ஜே! அருமையான அலசல்!

  ReplyDelete
 12. Blogger அநன்யா மஹாதேவன் said...

  // இளைய ராஜாவுக்கு ஜே! அருமையான அலசல்!//

  வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!