ஹோம்லி கம் மார்டன் லுக்கும்,ஒரு வித குறுகுறு பார்வையும் கொண்டு எல்லோர் மனதையும் அள்ளியவர் நடிகை ஷோபா (1976-80).
இந்த வசீகரம்தான் எல்லோரையும் அவரிடம் ஈர்த்தது.
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்.....
ஷோபாவைப் பார்த்தால் நடிகை மாதிரி தெரியாது.
தெருவில் சற்று பார்க்க சூட்டிகையான பக்கத்துவீட்டு ஒண்டு குடித்தன (அப்போதைய) பெண். கையில் A4 பேப்பர் மடித்துக்கொண்டு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடீயூட்(????) செல்லும் பெண் ஞாபகம் வரும் எனக்கு எப்போதும்.
இவரின் மிடில்கிளாஸ் பின்னணி கூட காரணமாக இருக்கலாம்.
”அழகில்லாத”சாதாரண அழகி.அச்சு அசல் அப்போதைய தமிழச்சி சாயல்.ஆனால் இவர் சேச்சி. இயற் பெயர் மஹாலஷ்மி.
ஷாலினி எண்டே கூட்டுக்காரி
ஷோபாவை பிடிக்காதவர்கள் ,”அய்ய... இது பஸ் ஸ்டாண்ட் கேஸ்ஸூ மாதிரி இருக்கு” என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை.......
இவர் நடிக்க ரொம்ப சிரமபடவில்லை.
தன்னுடைய இயற்கையான மற்றும் சிம்பிளான முகபாவங்களில் சிம்பிளாக வந்து போனார்.முதன் முதலாக நடிப்பிற்கு வேறொரு பரிமாணம் கொடுத்தார்.ஒரு மாதிரி வசீகரமான நடிப்பு.உடல் மொழியும் அருமை.
இதழை வருடும் பனியின் காற்று.........
மேக்கப் போட்டாலும் அதே பக்கத்து வீட்டுப் பெண்தான்.இதுதான் இவருக்கு அதிக ரசிகர்களைப் பெற்று தந்தது.குறிப்பாக பெண் ரசிகைகள் ஏராளம் என்று சொல்லுவார்கள்.
நான்கு மொழிகளில் தன் திறமையை வெளிப்படுத்தினார்.மலையாளம்,தமிழ் கொடிக்
கட்டிப்பறந்தார்.தன் 19 வயசிலேயே “ஊர்வசி” அவார்ட் வாங்கியவர்.தேசிய விருது குப்பம்மாவாக நடித்த “பசி” படத்திற்கு கிடைத்தது.அதே 19 வயசிலேயே மரணமும் அடைந்தார்.
டைரக்டர் மகேந்திரனின் முள்ளும் மலரும் ஷோபாவுக்கு மாஸ்டர் பீஸ்.
நல்ல வேளை உயிரோடு இல்லை. இருந்திருந்தால் சினிமா இவரை அரைத்த மாவையே அரைக்க வைத்து அலுத்துப் போய் முடக்கி இருப்பார்கள்.குறைவு ஆனாலும் நிறைவு.
ஓடை தரும் வாடை காற்று வானுலகை.........
இவர் பிரியட்டில் பாலிவுட்டில் சுமிதா பாடீல் என்ற நடிகையும் இதே அடுத்தவீட்டுப் பெண் லுக்குதான்.அவரும் உயிரோடு இல்லை.இப்போதைய நந்திதா தாஸ்ஸூம், ஷோபா போன்ற சிம்பிள் அழகுதான்.
இளைய பருவம் சொர்க்கம் மலையில் வந்தால்............
அவர் நடித்த படங்கள்(தமிழ்):அச்சாணி,பசி,(தேசிய விருது)அழியாத கோலங்கள்,மூடுபனி,முள்ளும் மலரும்,நிழல் நிஜமாகிறது,ஒரு விடுகதை தொடர்கதை,ஏணிப்படிகள்,வெள்ளாடுவேங்கையாகிறது,அகல்விளக்கு,சாமந்திப்பூ,பொன்னகரம்...
இன்னும் சில
பூ வண்ணம் போல நெஞ்சம்.....(அழியாத கோலங்கள்)
மற்ற மொழிகள்:(மலையாளம்)ஒர்மகள் மரிக்குமோ, ஷாலினி எண்டே கூட்டுக்காரி...இன்னும் சில(கன்னடம்) கோகிலா,(தெலுங்கு)மனவூரி பாண்டவலு,தாரம் மாரிந்தி இன்னும் சில
கடைசியாக.......
ஷோபாவின் மரணத்திற்கு பிறகு ”லேகாயுடே மரணம் -ஒரு பிளாஷ்பேக்” என்று ஒரு மலையாள படம் வந்தது.அவரின் ஆட்டோபயாகிராபி இது.
கி்ழ் உள்ள வீடியோவில் ஷோபாவின் முக உணர்ச்சிகளை freeze செய்து பாருங்கள்.விதவிதமான உணர்ச்சிகள் ஒவ்வொரு பிரேமிலும்.மனதை அள்ளுகிறார்.
செந்தாழம் பூவில்
ஒவ்வொரு உயிரோட்டமான பிரமேக்கும் பின்னால் இருந்தவர் பாலுமகேந்திரா.இந்த பிரேமில் இருந்த நட்சத்திரம் உயிரில்லாமல் போனதற்கும் பாலுமகேந்திராதான் காரணம் என்று சொல்லப்பட்டது.
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக......
பாலுவும் அதை மறுத்தார். உண்மை கடைசி வரை தெரியவில்லை.