Monday, August 24, 2009

"டிஸ்கி” போடாமல் விட்ட கமலா













காலையில் எழுந்ததிலிருந்து கமலாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை.போன் அருகில் போவாள்.ரிசீவரை எடுப்பாள்.போன் எதுவும் செய்யாமல் வைத்து விடுவாள்.சற்று நேரம் கழித்து மறுபடியும் ரிசீவரை எடுப்பாள்.அதே போல் எதுவும் செய்யாமல் வைத்து விடுவாள். எதுவும் ஒடவில்லை.ஒன்றும் புரியாமல் பைத்தியமாய் ஆனாள். அதே நினைவு சுழற்றி சுழற்றி அடித்தது.


சே! பட்டும் படாமல் சொல்லி இருக்கலாம்.எல்லாம் தெரிந்தாற் போல் சொன்னது மகா அசட்டுத்தனம். இப்போது போன் செய்தால் அதை விட அபத்தம் வேறு இல்லை.மனது கனக்க பல் தேய்க்கக் கிளம்பினாள்.


இரண்டு நாளாக இப்படித்தான் இருக்கிறாள்.அவளுக்கே அவள் மீது கோபம் கோபமாக வந்தது. இரண்டாவது நாளிலிருந்து தன் நிலையை குடும்பத்தார் கவனிக்கத்தொடங்கி விட்டார்கள் என்பதை உணர்ந்தாள்.


ஏனோதானோவென குளித்துவிட்டு பூஜை ரூமுக்கு வந்து உட்கார்ந்தாள்.


”அம்மா !அம்மா !.....என்னாச்சு உனக்கு?”


”ம்” கமலாவிடம் சுரத்தில்லை.


ஸ்வேதா அம்மாவிடமிருந்து தீக்குச்சியைப் பிடிங்கினாள்.


“மாட்ச் ஸ்டிக்க உரசமாலேயே குத்து விளக்குத்திரிகிட்ட காட்டிட்டிருக்க ”சம்திங் பேசிகல்லி மிஸ்ஸிங்ம்மா...” என்று சொல்லிக்கொண்டே குத்துவிளக்கைப் பற்ற வைத்தாள் ஸ்வேதா.


”ஒண்ணுமில்லடி.... ஏதோ ஒரு மூட்ல” எழுந்து கிச்சனுக்குள் சென்றாள்.


”சத்தியமா சம்திங் மிஸ்ஸிங்ம்மா.... நா இடது கைல விளக்கப் பத்த வச்சேன்...கண்டுக்கவேயில்லை. மத்த நாள்ன போட்டுத் தள்ளிடுவ.....”


”ஒண்ணுமில்லடி...”என்றாள் அம்மா மறுபடியும்.



ஸ்வேதா அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.


“ஓ...கடவுளே! எவரிதிங் மிஸ்ஸிங்ம்மா..! நா குளிக்காம உன்ன கட்டிக்கிட்டேன்.நீ வள்ளுன்னு விழலயே ?” பெரிதாகச் சத்தம் போட்டுச் சிரித்தாள் ஸ்வேதா.


கமலா எதுவும் பேசவில்லை. உணர்ச்சியற்று ஸ்வேதாவைப் பார்த்து புன்னகைப் புரிந்தாள்.அதில் சவக்களைத் தட்டியது.


மகள் தன்னை கவனிக்கத் தொடங்கியதும் ,இயல்பு நிலைக்கு பிடிவாதமாக தன்னைத் தள்ள தள்ள ,ஆனால் அந்த நினைவு வேறு பக்கம் தரதரவென பிடித்து இழுத்தது.


கமலா நேற்று தன்னுடைய பழைய காலேஜ் மேட் கீதாவை ஏதேச்சையாக தன் பிளாட் காம்பளக்சில் பார்த்தாள்.தொடர்பெல்லாம் விட்டுப்போய் எவ்வளவு வருடம் கழித்துப் பார்க்கிறார்கள். இருவருக்கும் பூரிப்புத் தாங்கவில்லை.இருவரும் கட்டிக்கொண்டார்கள்.
வீட்டிற்கு அழைத்துப் போனாள் கமலா.


‘என் பொண்ணு அகல்யாக்கு...மாப்பிள்ளைப் பார்த்திருக்கேன்...உங்க பிளாட் “சி” பிளாக்ல எட்டாம் நம்பர் இருக்கிற பையன்....ஆனந்த்...எம்.பி.ஏ...”


"நல்ல தங்கமான பையன்.தைரியமா சம்பந்தம் பண்ணிக்கலாம்.டீசண்டான குடும்பம்.”சட்டென்று பதிலளித்தாள் கமலா.


கொஞ்சம் நேரம் பேசி விட்டு கீதா கிளம்பிவிட்டாள்.


இதுதான் இரண்டு நாளாய் கமலாவைப் போட்டு பிறாண்டி எடுத்தது.ஆனந்தைப் பற்றி என்ன தெரியும் எனக்கு?ஏதோ போகும் போதும் வரும் போதும் எப்போவாவது கண்ணில் படுவான். ”தைரியமா சம்பந்தம் பண்ணிக்கலாம்” இதை வேறு குடுகுடுவென முந்திரிக்கொட்டையாய் சொல்லித் தொலைத்து விட்டோம். கீதா போனவுடன்தான் இந்த முந்திரிக்கொட்டைத்தனம் உறைத்தது.பையன் குடும்பமும் அவ்வளவாக பரிச்சியம் கிடையாது.


பட்டும் படாமலும் “எனக்குத் தெரிஞ்சவரை’ நல்ல குடும்பம் என பொத்தம் பொதுவாக சொல்லியிருக்கலாம்.அதுதானே உண்மை?கீதா வேறு அவள் வார்த்தையை நம்பித்தான் பாக்கு வெத்தலை மாற்றப்போவதாகச் சொன்னாள்.
இதைத்தான் கமலாவால் தாஙகவே முடியவில்லை.படுத்தி எடுத்தது.


அந்த பெண்ணின் நல்ல வாழ்க்கைக்கு நான் தான் பொறுப்பா?சரியாக இல்லாவிட்டால்...?வாழ்க்கையில் எதற்கெல்லாம் பயந்து நடுங்குவது.அவரவர் தலைவிதிப் படிதான் எல்லாம் என்றாலும் தன் ரூபத்தில்தான் அந்த பெண்ணின் தலவிதி நிச்சியக்கப்பட்டுவிட்டதாக மனது பிசைய ஆரம்பித்தது.


ஆனால் அப்போது வெகுளித்தனமாகத்தான் சொன்னோம் என்று நினைத்தவுடன் மனது அழுதது.இது யாருக்குத் தெரியப்போகிறது.


வீட்டில் மகளிடம் மட்டும் சொல்லி தன் பாரத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டாள் கமலா .ஸ்வேதா “இந்த சில்லி மேட்டருக்குப் போயா...இதையெல்லாம் போட்டுக்குழப்பிக்காத”என்று அம்மாவை முறைத்தாள்.


திருமண நாளும் வந்தது.மண்டபத்தில்முதல் வரிசையில் உட்கார்ந்துக்கொண்டு ஆனந்தை அடிக்கடி உற்று பார்த்து “நல்ல பையன்” மாதிரிதான் தெரிகிறது என்று மனதை சமதானப்படுத்திக்கொண்டாள்.மறுபக்கம் அகல்யா-ஆனந்த் பெயர் பொருத்தத்தில் ஆரம்பித்து களையான முகம்,உயரம்,நிறம்,உடம்பு வாகு,...அப்படிப் பொருந்தியிருந்தது.சே! தன் கண்ணே பட்டு விடும் போல் இருந்தது. அபூவர்மான ஜோடி!இப்படி பொருந்திவருவதில் திருஷ்டி விழாமல் இருக்க வேண்டுமே! மனசு படபடத்தது.


தாலிக்கட்டும் சமயத்தில் தான் ஆசிர்வதித்த மாதிரி இந்த உலகத்தில் யாரும் மணமக்களை இப்படி ஆசிர்வதித்திருக்க மாட்டார்கள் என்று நினைத்துக்
கொண்டாள்.வீடு திரும்பினாள்.


மாலை வீட்டில் -


“என்னம்மா!முகம் பிரைட்டா..ஆ.!இப்பத்தான் என் ஒரிஜனல் அம்மா..கல்யாணம் எப்படி? ஆனந்த கால்ல விழுந்திட்டயா..!“ மகள் காலேஜ் விட்டு வந்ததும் எதுவும் செய்யாமல் முதல் வேலையாக அம்மாவிடம்தான் பேசினாள்.


“முஹுர்த்த ஆசிர்வாதம் செய்த கையோட....இந்த ஜோடி ஒரு குறையும் இல்லாம நல்லா இருக்கனம்...அதுக்கு திருப்பதிக்கு நடந்தே வரேன்... என்னால எப்ப முடிஞ்சுதோ....அப்பன்னு வேண்டிகிட்டேன்.... பாரம் போயிடுச்சு”


முற்றும்


இந்த கதையில் கொஞ்சம் பெப்பர் அண்ட் சால்ட் தூவி, இழுத்து ஒரு ட்ரமாடிக் டிவிஸ்ட்கொடுத்தால் -

முடிவு -2


கால ஓட்டத்தில் கமலா,ஆனந்த், கீதா எல்லோரும் ஏரியா மாறி மாறி ஒருத்தகொருத்தர் தொடர்பு இல்லாமல் இருந்தார்கள்.வேணுமென்றே கமலா அவர்களைத் தவிர்த்தாள்.

கமலா ஐந்து வருடம் கழித்து ஒரு நாள் கீதாவின் வீட்டு போன் நம்பர் கண்டிப்பிடித்து மிகுந்த ஆர்வத்துடன்.....

”ஹலோ,,,கீதா வீடா?’

“ஆமாம். .."

"யாரு பேசறீங்க?’

”அவங்க சன்-இன்-லா சுந்தர்ராமன் பேசறேன்...”

சுந்தர்ராமன்னா.... அகல்யாவோட.....”

“என்னோட வொய்ப்தான்.
அகல்யா அவங்க அம்மாவோட ஷாப்பிங்க் போய் இருக்காங்க”

“நீங்க யாருங்க.......?”

கமலா விறுவிறுத்து போய் எதுவும் பேசாமல் பொட்டென்று போனை வைத்துவிட்டு அவசர அவசரமாக ஆனந்தின் நம்பரை பேய் மாதிரிஅரை மணி நேரம் தேடி கண்டுபிடித்து டயல் செய்தாள்.


“ஆனந்த் வீடா...? ”


“ஆமாங்க...”


“நீங்க யாருங்க பேசறீங்க?”


“ஆனந்த் வொய்ப் அர்ச்சனா பேசறேன்...”


“சாரி...ராங்க் நம்பர்....” கமலா அவசரமாகப் போனை வைத்தாள். கை சற்று நடுங்கியது.


முற்றும்



18 comments:

  1. முதலில் முடித்த விதம் சப்பென்று இருந்தது. இயல்பு என்றாலும் கதைக்கான குறைந்த பட்ச சுவாரசியம் கூட இல்லை.

    ஆனால் இரண்டாவது ட்ராமாடிக் என்றாலும் சுவாரசியம்.!

    ReplyDelete
  2. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //முதலில் முடித்த விதம் சப்பென்று இருந்தது. இயல்பு என்றாலும் கதைக்கான குறைந்த பட்ச சுவாரசியம் கூட இல்லை//

    கருத்துக்கு நன்றி.உண்மைதான் நமக்கு பிடிப்பதை வாசகர்கள் ரசிப்பது இல்லை.

    //ஆனால் இரண்டாவது ட்ராமாடிக் என்றாலும் சுவாரசியம்.!

    கரெக்ட்.இந்த மாதிரி டிவிஸ்ட் கொஞ்சம் நம்பமுடியாமல் இருந்தாலும் சுவராஸ்யம் கூடும்.

    நன்றி ஆதி.

    ReplyDelete
  3. முதல் முடிவில் தெரியாமலும் எந்தத் தவறுக்கும் தான் காரணமாகிப் போய்விடக்கூடாது என்று பரிதவிக்கும் மனநிலை.. 'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது' அடிநாதமாய் ஆகிப்போன நிலை..

    சில அபூர்வ ஆத்மாக்களிடம் மட்டுமே படிந்து போன இந்த நல்ல குணத்திற்கே எனது 'டிக்' மார்க்.

    ReplyDelete
  4. ------------
    முடிவு - 3
    ------------

    "கமலா ஆண்ட்டி, நீங்க என் மேல வெச்ச நம்பிக்கையை காப்பத்ததான் இன்னமும் அகல்யாவோட குடித்தனம் நடத்திட்டிருக்கேன். பொண்ணா அவ பிசாசு. ராட்சசி. தொட்டதுக்கெல்லாம் சண்டை, தகராறு."

    ஆனந்த்தின் புலம்பலைக் கேட்டு நினைத்த மாதிரியே அவன் நல்லவனாய் போனதுக்கு நிம்மதியடைவதா, வருத்தமடைவதா என்று புரியாமல் குழம்பி நின்றாள் கமலா.

    ------------
    முடிவு - 4
    ------------
    "கமலா அத்தை. ஏன் இப்படி ஒரு ஆளை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிங்க? ஒரு சிகரட், தண்ணி, ஸ்டையில்... ஊஹூம். நான் என்னவெல்லாம் கற்பனை பண்ணி வெச்சிருந்தேன். அநியாயத்துக்கு நல்லவரா இருந்தா என்ன சுவாரஸ்யம்?"

    புலம்பும் அகல்யாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வாயடைத்து நின்றாள் கமலா.

    ReplyDelete
  5. இரண்டாவது முடிவு நல்லாவே இல்லை.மசாலா ஓவர். வித்யாசமாக எழுதி வேண்டுமென்ற கண்வென்ஷனலா முடிக்கிற சுகமே தனி ! முதல் முடிவில் யாராவது உப்பு சாப்பிள்ளை என்றால் அந்த முடிவு தனது வெற்றியை அடைந்து விட்டது என அர்த்தம்

    ReplyDelete
  6. *typo சப்பில்லை

    ReplyDelete
  7. முடிவு ஐந்து : நல்ல வேலை கமலா ஆன்டி நான் நினச்ச மாதிரியே நீங்களும் ஆனந்தை நல்லவன் என்று சொல்லிட்டீங்க . எங்க லவ் இப்படி arranged marriage ஆக மாறும்னு நாங்களே எதிர்பார்க்கலை.சத்யாராஜ்குமார் சார் இந்த விளையாட்டு கூட ஜாலியா இருக்கு :P

    ReplyDelete
  8. சூப்பர் ... நீங்க சிறுகதை மன்னன் தான்.

    ReplyDelete
  9. சார் கதை நல்லா இருக்கு...
    முடிவுகள் எல்லாமே ஒவ்வொரு விதத்துல நல்லாத்தான் இருக்கு...
    ஆனாலும் ஆதியின் கருத்தை வழிமொழிகிறேன்...

    தலைப்பு சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  10. ஜீவி said...
    // சில அபூர்வ ஆத்மாக்களிடம் மட்டுமே படிந்து போன இந்த நல்ல குணத்திற்கே எனது 'டிக்' மார்க்.//

    ஒரிஜினலா நகைச்சுவை + யதார்த்தம் குறிப்பிட்ட விகிதத்துல கலந்துதான் எழுதினேன்.யதார்த்தம் தூக்கலாகி விட்டதாக படுகிறது எனக்கு.

    நன்றி

    ReplyDelete
  11. அது ஒரு கனாக் காலம் said...

    // சூப்பர் ... நீங்க சிறுகதை மன்னன் தான்.//

    நன்றி சுந்தர்.

    ReplyDelete
  12. சத்யராஜ்குமார் said...

    முடிவு - 3 & 4 நல்லா இருக்கு. இரணடிலும் இருக்கும் இரண்டாவது பாரா தேவையில்லை என்பது
    என் கருத்து.

    நன்றி.

    ReplyDelete
  13. August 24, 2009 9:37 AM
    Prakash said...

    // இரண்டாவது முடிவு நல்லாவே இல்லை.மசாலா ஓவர். வித்யாசமாக எழுதி வேண்டுமென்ற கண்வென்ஷனலா முடிக்கிற சுகமே தனி ! முதல் முடிவில் யாராவது உப்பு சாப்பிள்ளை என்றால் அந்த முடிவு தனது வெற்றியை அடைந்து விட்டது என அர்த்தம்//

    பிரகாஷ் நன்றி.நீங்கள் சொல்கிற மாதிரி மாக்சிமம்
    I always will try to stick to யதார்த்தம் with
    little drama.

    ReplyDelete
  14. தமிழ்ப்பறவை said...

    //சார் கதை நல்லா இருக்கு... முடிவுகள் எல்லாமே ஒவ்வொரு விதத்துல நல்லாத்தான் இருக்கு... ஆனாலும் ஆதியின் கருத்தை வழிமொழிகிறேன்...//

    நன்றி.

    ReplyDelete
  15. இரண்டுமே நன்றாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  16. ஸ்ரீ said...

    //இரண்டுமே நன்றாகத்தான் இருக்கிறது//

    நன்றி.

    ReplyDelete
  17. Karthik said...

    //S.U.P.E.R.B. :)//

    வாங்க கார்த்திக்.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!