Thursday, August 27, 2009

”பூவண்ணம்” ஷோபாவுடன் நடந்தவாறு.......

பழைய சினிமா பாட்டுக்கள் கேட்பது என்பது நம்மின் பழைய பிளாக் & வொயிட் போட்டோ ஆல்பத்தைப் பார்ப்பது போல் ஒரு சுகம்.இந்த பாடல்களில் தூசுபோல் படிந்திருக்கும் நம் வெகுளியான இளமை நினைவுகள்.
”தேன் சிந்துதே வானம்..” இந்தப் பாட்டைக் கேட்குபோது கூடவே பள்ளியின் மதியத்தின் முதல் பீரியட் ஞாபகம் வரும். டீச்சர் யாரும் வராததால் “கட்” அடித்து விட்டு பல்லாவரம் ஜனதா தியேட்டரில் படம். டிக்கெட் விலை 1.05 பைசா.
அடுத்து பழைய சினிமா பாடல்களில் உள்ள கவிதை நயம் அற்புதம்.சிம்பிள் மெட்டு.இனிமையான இசை.தமிழ் உச்சரிப்பு.
எனக்குப் பிடித்த பழைய பாடலகள் நிறைய இருக்கிறது.இப்போதைக்குச் சில பாடல்கள்.
_____________________________________________________________

.”பூ வண்ணம் போல நெஞ்சம்..”
அழியாத கோலங்கள் -1979-சலீல் செளத்ரி-ஜெயசந்திரன்-சுசிலா

ராஜாவின் முன்னோடி சலீல் செளத்ரி.Colourful music.


கல்லூரிக் காலத்தில் இந்த பாடலில் பிரதாப்பை வெட்டிவிட்டு நான உள்ளே போய் பாடல் முழுவதும் ஷோபாவுடன் நடந்து வந்திருக்கிறேன்.கால் வலிக்கிறது.

ஷோபா! செக்சியான மூக்குத்தி குத்திய முகம்.(காட்டன்?) புடவையில் ஒரு தேவதைப் போல் நடந்து வருவார்.(காட்டன்) புடவை புடவைதான்!ஒரு அடுத்தவீட்டுப்பெண் லுக் ஷோபாவிற்கு.


திருஷ்டி அசட்டுப் பிரதாப்போத்தன்.



அற்புதமான பின்னணி இசை. பட காட்சியும் பாடலும் இணைந்து போகும்.
பாலுமகேந்திரா.....................வாச்சே!

ஆடியோ



வீடியோ

________________________________________________

”ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது ”
மதன மாளிகை-1976 -எம்.பி.சீனுவாசன் -ஜேசுதாஸ்-சுசிலா

One of my favourite song!

ஜேசுதாஸ் சூப்பர்.ஜேசுதாசின் இனிமை சுசிலாவிடம் இல்லை.எம்.பி.சீனுவாசன் திறமையான இசையமைப்பாளர்.ஆனால் பிரகாசிக்கவில்லை.

ஏரியிலே ஒரு காஷ்மீர்

________________________________________________

2. “காதலின் பொன்வீதியில் காதலன் பண் பாடினான்”
பூக்காரி-1973- MSV-ஜானகி-டிஎம்எஸ்
பாட்டின் கவிதை நயம் பாருங்கள்.நல்ல இசை.பாட்டினோடு தொடர்ந்து வரும் மிருதங்கம்.இனிமையான ஹம்மிங். எல்லாம் பொருந்திவருகிறது.
ஜானகி- ஒரு மாதிரி கீச் இனிமை.
________________________________________________



3.”தேன் சிந்துதே வானம்.....”
பொண்ணு தங்க மனசு-1973-SPB-ஜானகி- ஜி.கே.வெங்கடேஷ்

இனிமையான சிம்பிள் மெட்டு.இசைஞானி ராஜாவிற்கு இந்தப் பாட்டின் கம்போசிங்கில் முக்கிய பங்கு உண்டு. ராஜாவின் மணத்தை இந்தப் பாட்டில் உணரலாம்.ராஜா ஜி.கே.வெங்கடேஷூக்கு அப்போ ”அசிஸ்டெண்ட்”.




________________________________________________



"அன்பு மேகமே இங்கு ஓடிவா”
எங்கம்மா சபதம் -1973-வாணி-SPB-விஜய பாஸ்கர்

வாணியின் குரல் இனிமை.விஜய பாஸ்கர் நல்ல இசையமைப்பாளர்.




________________________________________________

"உன்னோடு என்னொன்னவோ ரகசியம்”
தூண்டில் மீன் - 1977 - வி.குமார் -ஜெயசந்திரன்,சசிரேகா

அற்புதமான பின்னணி இசை.கவிதை நயம்.




________________________________________________

சந்தாவோ ஓ சந்தா (Chanda o Chanda)-1971-லதா-ஆர்.டி.பர்மன்


ஒரு இந்தி பாட்டு. எங்கோ ஒரு லவுட் ஸ்பீக்கரிலிருந்து காற்றில் மிதந்து வந்து சின்ன வயதில் மனதை பாதித்தது.இருபது வருடங்கள் கழித்துதான் விவரங்கள் தெரியும்.ஆச்சரியம். இது 1968 வெளி வந்த பாலசந்தரின் ”எதிர் நீச்சல்” படத்தின் ரீமேக்.இந்த பாட்டு “தாமரைக் கன்னங்கள்...தேன் மலர்”..இன் இந்தி பதிப்பு.அதில் டூயட் இதில் சோலோ.

வீடியோவில் அந்த காட்சியில் ஒருவர் பேப்பர் படிக்கிறார். தமிழில் மேஜர் பேப்பர் படிப்பார்.


இதில் பல்லவி முடிந்து அற்புதமான கிடாரின் strumming அடுத்து ராஜா டைப் புல்லாங்குழல். எப்படி? Inspiration? Coincidence?

________________________________________________

”கங்கை நதியோரம் ராமன் நடந்தான்”
வரப்பிரசாதம்-1976-ஆர்.கோவர்த்தன் -வாணி-ஜேசுதாஸ்

கவிதை நயம். இனிமையான குரல்கள்.



________________________________________________

"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்”-நான் ஏன் பிறந்தேன் - 1972-TMS
இசை-சங்கர் கணேஷ்

TMS இன் குரல்.

இந்தக் கால “நான் பாடும் மெளனராகம் கேட்கவில்லையா”.

தமிழ் உச்சரிப்புப் பாருங்கள். இதில் கவிதை நயம் பாருங்கள்.


என் பள்ளிகூட நோட்டில் எழுதி வைத்து அடிக்கடி படிப்பேன் அப்போது.
________________________________________________

16 comments:

  1. "poovannam" pattu- is it not jayachandran?

    ReplyDelete
  2. இனியதொரு இசைப்பகிர்வு.

    ReplyDelete
  3. ckbhagirathi said...

    //"poovannam" pattu- is it not jayachandran?//

    Yes it is Jayachandran.Thanks. I have corrected.

    Thanks for the visit.

    ReplyDelete
  4. கலெக்‌ஷன்ஸ் அருமை!

    ReplyDelete
  5. நன்றி துபாய் ராஜா

    ReplyDelete
  6. இதில் சில பாடல்கள் என்னுடைய favourite ம் கூட.

    ReplyDelete
  7. நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

    அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

    கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

    நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

    இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

    இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

    முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  8. பதிவு உங்கள் பாணியில் கலக்கல்...
    பூ வண்ணம், தேன் சிந்துதே வானம் மட்டும் கேட்டிருக்கிறேன் சார்.. மற்ற பாடல்கள் இனிமேல்தான் கேட்கவேண்டும் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்...
    //கல்லூரிக் காலத்தில் இந்த பாடலில் பிரதாப்பை வெட்டிவிட்டு நான உள்ளே போய் பாடல் முழுவதும் ஷோபாவுடன் நடந்து வந்திருக்கிறேன்.கால் வலிக்கிறது.//
    அக்மார்க் ரவிஷங்கர் முத்திரை..
    நான் இதே உத்தியை ‘என் இனிய பொன் நிலாவில்’ செய்து பார்த்திருக்கிறேன்..இருவரும் புல்வெளியில் காஃபி குடிக்கையில்....சேம் திருஷ்டி,,,,(என்ன கொடுமை சார் இது...?)
    ராஜாவின் பாடல்களைத்தவிர மற்ற பாடல்கள் என்னுள் நுழைவதற்கு மிகுந்த சிரமப் படவேண்டும்..
    மற்றபடி ஷோபா... எவர்கிரீன்...’செந்தாழம்பூவில் பாடலில் மூன்றாவது சரணம் மற்றும் இடை இசையில் ஷோபா...சூப்பர்...
    ஷோபாவின் முகம் பார்த்தாலே ஒரு இனம் புரியாத சுகம்/சோகம்..
    அதேதான் ‘உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ படத்தில் வரும் ,மோனிஷாவுக்கும்..(அவரும் அப்போதே இறந்துவிட்டார்..)...என் பதின்ம வயதில் சோகம் சொல்லிக் கொடுத்தது அவரின் மறைவு.. வேடிக்கைதானெனினும் உணமை...

    ReplyDelete
  9. தமிழ்ப்பறவை said..

    //நான் இதே உத்தியை ‘என் இனிய பொன் நிலாவில்’ செய்து பார்த்திருக்கிறேன்..இருவரும்//

    உளவியில் ரீதியில் பார்த்தால்அவங்க ஒரு மிடில் கிளாஸ் அழகு.அதான் எல்லோரையும் கவர்ந்திருக்கிறார்.

    //செந்தாழம்பூவில் பாடலில் மூன்றாவது சரணம் மற்றும் இடை இசையில் ஷோபா...//

    அட்டகாசம் அவங்க.பாட்டு சூப்பர்.கண்ணதாசன்.

    உங்கள் பின்னூட்டம் ஷோபாவைப் பற்றி ஒரு பதிவுப் போடத்தூண்டுகிறது. போட்டுடலாமா?

    தமிழ்பறவை இவங்க போட்டோ நெட்டில் எங்கும் கிடைக்கவில்லை. ஒரு பழைய போட்டோதான் இருக்கிறது. ஏதாவது சைட் இருந்தால் சொல்லுங்களேன்.

    கருத்துக்கு நன்றி.

    //”ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது ”//
    //“காதலின் பொன்வீதியில் காதலன் பண் பாடினான்”//
    கேட்டு விட்டுச் சொல்லுங்கள்.இவையெல்லாம் ரசித்துதான் ராஜாவிற்கு வந்தேன்.இரண்டு மூன்று தடவைக் கேட்டால் மனசில் ஒட்டும்.

    நன்றி.

    ReplyDelete
  10. ஓ.கே சார்.. தேடிப் பார்க்கிறேன்.. இல்லாவிடில் ஸ்கிரீன்ஷாட் எடுத்துவிட வேண்டியதுதான் வீடியோவிலிருந்து...
    ஷோபா பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன் சார்.
    பாடல்கள் கண்டிப்பாகக் கேட்டுப் பார்க்கிறேன்..நீங்கள் சொன்னால் சரியாகத்தானிருக்கும்...

    ReplyDelete
  11. நன்றி தமிழ்ப்பறவை.

    ReplyDelete
  12. தமிழ்ப்பறவை said...

    //ஷோபா பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன் சார்//

    சொல்ல மறந்து விட்டேன்.பதிவு கொஞ்சம் லேட்டாகத்தான் வரும்.நேர பஞ்சம்தான்.

    ReplyDelete
  13. பட்டியலிட்டிருக்கிற அத்தனையும் எனக்கும் மிகப் பிடித்த பாடல்கள். ஆனால் இந்த அழகான பாடல்களைத் தந்த இசையமைப்பாளர்கள் (சலீல் செளத்ரி, எம்.பி.சீனிவாசன், ஜி.கே. வெங்கடேஷ், விஜயபாஸ்கர், ஆர்.கோவர்த்தன், வி.குமார்) இத்தனை பேர் இருந்தார்கள் என்று உங்கள் மூலம்தான் அறிந்து கொண்டேன். அதற்காக என் நன்றிகள்.

    சந்தாவோ சந்தா கூட நிறைய முறை கேட்டிருக்கிறேன்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  14. சித்ரன் said...

    // பட்டியலிட்டிருக்கிற அத்தனையும் எனக்கும் மிகப் பிடித்த பாடல்கள். ஆனால் இந்த அழகான பாடல்களைத் தந்த இசையமைப்பாளர்கள் (சலீல் செளத்ரி, எம்.பி.சீனிவாசன், ஜி.கே. வெங்கடேஷ், விஜயபாஸ்கர், ஆர்.கோவர்த்தன், வி.குமார்) இத்தனை பேர் இருந்தார்கள் என்று உங்கள் மூலம்தான் அறிந்து கொண்டேன். அதற்காக என் நன்றிகள்.//

    நன்றி சித்ரன்.முடிந்தால் நான் சுட்டிய தளங்களுக்கு
    சென்று இவர்களின் வேறு பாடல்களையும் கேட்கலாம்.

    //சந்தாவோ சந்தா கூட நிறைய முறை கேட்டிருக்கிறேன்//

    நான் சுட்ட நினைத்தது இதே பாட்டு ஆனால் பாடியவர் கிஷோர்.தவறுதலாக லதா பாடியதை சுட்டிவிட்டேன்.

    நன்றி.

    ReplyDelete
  15. எல்லாமே நல்ல பாட்டு, கேட்கக் கேட்கத் தெவிட்டாதவை, இன்றும் கேட்கச் சுவைக்கும் இனிமை இருக்கிறதென்றால் இவை சாகாவரம் பெற்றவை தானே

    ReplyDelete
  16. நன்றி கானாபிரபா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!