Saturday, February 28, 2009

ஒரு பெண்ணின் கர்சீப் - கவிதை







ஒரு உதிர்ந்த பவழ மல்லி
மலர் போல் கிடக்கிறது 
சாலையின் ஒரத்தில்
நாலாக மடிக்கப்பட்டு 
சலவை வெண்மையுடன்
எந்த வித கசங்களும்
இல்லாமல் அழகான
ஒரு பெண் கர்சிப்
எடுத்துப் பார்க்கிறேன்
ஓரங்களில் வண்ண நூல் 
கொண்டு அழகுப் படுத்தப்பட்டதை
உள்ளங்கையில் வைக்கையில்
கைக்கடக்கமாகி 
ஒரு இறகு போல் மிதக்கிறது 
தைரியமில்லை விரித்து
உள்ளே பார்க்க - பத்திரமாக
பாக்கெட்டில் இருக்கும்
அதன் உரிமையாளர்
வந்து கேட்கும் வரை
 

6 comments:

  1. நல்லா இருக்குத் தல!பிரிச்சா காதல் வந்துடுமா?

    ReplyDelete
  2. நுணுக்கமான உணர்வுகள் :)
    சொல்லப்படாமல் இருப்பதால் சுவை அதிகம். நல்லா இருந்தது.

    ஆமாம் அது என்ன பெண் கர்சீஃப்? கர்சீஃப்க்கு கூட பால் வித்தியாசமா :D Kidding. பெண்மையின் மென்மை கைக்குட்டையிலும் தொத்திகொண்டுவிட்டது போல்.

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி! ஒரு நாள் ஷேர் ஆட்டோவில்
    வரும் போது பக்கத்து சீட்டில் கிடந்தது.நாந்தான்
    கடைசி ஆள்.அப்படியே வைத்து விட்டு வந்து விட்டேன்.

    ReplyDelete
  4. நிஜத்தில் கர்சீப்பை பக்கத்துச் சீட்டில் வைத்தாலும்,கவிதையில் பாக்கெட்டில் வைத்திருப்பது நல்ல கற்பனை.

    "ஒரு உதிர்ந்த பவழ மல்லி" highly poetic!
    It is a Good one Ravi!

    ReplyDelete
  5. நன்றி ஆதித்யா.பிரிச்ச காதல் வந்துடுமா என்பது
    அவரைத்தான் கேட்கனும்

    ReplyDelete
  6. நன்றி அனானி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!