Tuesday, February 3, 2009

ஞானக்கதைகள் - 2 - முல்லா நசுருதீன்

முல்லா நசுருதீன் என்பவர் சுபி(sufi) ஞானி. இவர் ஒரு mystic என்றும் சொல்லுவார்கள். அதாவது சித்தர்கள் போல் மறை பொருள் உணர்த்திப்பேசுவார். ஆன்மிக அறிவு விரவிக்கிடக்கும்.இவரைப் பற்றிய கதைகள் ஏராளம். 


எனக்கு மிகவும் பிடித்த கதை.

முல்லாவுக்கு திடீரென்று எதையாவது மறந்து விடுவார். சில நாள் அவருக்கு வித்தியாசமான மறதி வரும். 

ஒரு நாள் எங்கோ போய் விட்டு வரும் வழியில் “ தான் யார்” என்பதை மறந்து விட்டார். எதிரே வந்த தனக்கு அறிமுகமான ஒருவரிடம் “நான் யார் ”தெரியவில்லை. தயவு செய்து சொல்லுங்கள் என்றார். எதிரில் வந்தவர் “அவர்க்கு அவரையே” ஞாபகப் படுத்தி அறிமுகப்படுத்தினார். “ஓகோ அது நான்தானா” என்று கன்பார்ம் செய்துக்கொண்டார்.

மற்றொறு நாளும் இவ்வாறு தன்னை மறந்து விட்டார். கன்பார்ம் செய்துக்கொள்ள, யாரும் தெரிந்தவர் கண்ணில் படவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு இரும்புக் கடையில் நுழைந்தார். கடைக்காரர் “என்ன வேண்டும் உங்களுக்கு?
கேட்டார்.

முல்லா: “நான் கடைக்குள் வந்ததைப் பார்த்தீர்களா?”

கடைக்காரர்: ”ஆமாம்...நீர் வருவதைப் பார்த்தேன்”

முல்லா:  “ இதற்கு முன் என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?”

கடைக்காரர்: “இல்லை”

முல்லா: “அப்படியானல், நான்தான் உங்கள் கடைக்குள் வந்தேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’

கடைக்காரர்:???????????????


உன்னையே நீ அறிவாய்


3 comments:

  1. //முல்லா: “அப்படியானல், நான்தான் உங்கள் கடைக்குள் வந்தேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?//
    அய்யோ..எங்க‌ போய் முட்டிக்கற‌து:‍))))

    ReplyDelete
  2. //முல்லா: “அப்படியானல், நான்தான் உங்கள் கடைக்குள் வந்தேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’//


    என்ன சொல்லுறது? உச்சகட்டம்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!