Tuesday, February 10, 2009

ரிவால்வர் ரீட்டா- கன் பைட் காஞ்சனா

இப்போதெல்லாம்  நிறைய தமிழில் ஆக்‌ஷன் படங்கள் வருகிறது.டெக்னிக்கலாகவும் எங்கோ போய் விட்டோம்.குடும்ப படங்களிலும் ஆக்‌ஷன் கலந்தே வருகிறது. 

நான் ஸ்கூல் படிக்கும் போது ஆக்‌ஷன் படங்கள் கம்மி. ஒரு பக்கம் சிவாஜியின் ”அப்பவே...சொல்லிடேனே.......என்னம்மா.......” என்ற கன்னக் கதுப்பில் வசனம் பேசும் மிகை நடிப்புப் படங்கள்.A.P.நாகராஜனின் பக்தி படஙகள்.எம்ஜியாரின் நிறுத்தி நிறுத்தி “டிஷூம் டிஷூம்” போடும் படங்கள் மற்றும் நிறையக் குடும்பக் கதைகள்.குலமா குணமா, சுடரும் சுறாவளியும், தேனும் பாலும்,என்ன முதலாளி செளக்கியமா?புகுந்த வீடு..... 

முகத்தில் பவுடர் அப்பிக்கொண்டு,தலையில் குருவிக்கூடு விக்,பட்டாப்பட்டி சட்டை, கூர் கருப்பு ஷு போட்டுக்கொண்டு பெரியப்பா அல்லது சித்தப்பாக் களை.அப்போதிருந்த “கட்டிளம் காளை” ஜெய் சங்கர்தான் பிடித்தமான ஆக்‌ஷன் ஹீரோ.சுடரும் சுறாவளியும் படம் பார்த்து விட்டு சுத்தமாகப் பிடிக்கவிட்டாலும் ஆர்ட் பிலிம் பார்த்தோம் என்று பெருமைப் பட்டுக்கொண்டோம். 


அப்போது மூன்றாவது பரிமாணத்தில் ஆகஷன்,மாயா ஜாலப் படங்கள் தெலுங்கிலிருந்து தமிழில் “டப்” செய்யப்பட்டு தியேட்டரில் வந்து தூள் பறக்க ஆரம்பித்தது.அந்த சமயத்தில் எங்களுக்கு அது விறு விறுப்பான படங்கள். ரிவால்வர் ரீட்டா, கன் பைட் காஞ்சனா,கெளபாய் குள்ளன்,மாய மோதிரம்,
பாட்டி சொன்ன கதை,கதவைத் தட்டிய மோகினி பேய்,ஜேம்ஸ் பாண்ட் 777,கப்பல் தீவு காதல் ராணிகள்ஆபாசம் கம்மி.கண்டிப்பாக “பிட்” இணப்புக் கிடையாது.

ஒரு வித்தியாசமான ஜாதியாக இருந்தது."இதுதாண்டா போலீஸ்’ “வைஜயந்தி IPS" போன்ற டப்பிங் படங்களின் முன்னோர் என்று சொல்லலாம்.இந்த படங்கள் ரீலிஸ் ஆகும் தியேட்டர்களுக்கென்றே சில சாமுத்ரிகா லஷ்ணங்கள் உண்டு.தாம்பரம் M.R. தியேட்டர்,பல்லாவரம் ஜனதா, பட்ரோட் ஜெயந்தி,ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி போன்றவை.மூச்சா நாத்தம் அடிக்கும்.சிகரெட்/பீடி பிடிக்கலாம்.விசில் அடிக்கலாம். எங்கு வேண்டுமானலும் உட்காரலாம். பனம் கிழங்கு,கமர் கட்,
ஜவ்வு,முசுண்டை,சமோசா drive in theatre மாதிரி உள்ளேயே விற்பார்கள்.படம் முடியும் தருவாயில் கூட டிக்கெட் கிடைக்கும்.  அடுத்த ஆட்டம்(ஷோ) நிற்பவர்கள் கடைசி சீன்களை பார்க்கலாம்.

ஷோ முடிவதற்க்குள் முன்னேமே ஓடி விடுவோம். “தெரிந்தவர்கள்” யாராவது பார்த்துவிடுவார்கள் என்று.

முதல் நாளே பார்த்து விட வேண்டும். இல்லாவிட்டால் பின்னால் உட்கார்ந்துங்கொண்டு ..த்தா பாரேன்.. இப்ப இன்னா பண்ணுவான்” என்று கதையை சொல்லி “அல்டி”க் கொள்வார்கள்.

போஸ்டரில் கண்டிப்பாக விஜயலலிதா கன் வைத்துக் கொண்டு இருப்பார்.வில்லன் சத்திய நாரயணா கையை விரித்து க் கொண்டு அடி வாங்கும் போஸ். குதிரை ஓட்டும்  மற்றும் சண்டைக் காட்சிகளில் வி.லலிதாவின் “டூப்” தெரியும். “டூப்” சவுரி முடி வைத்துக் கொண்டு குனிந்து குனிந்து முகம் காட்டாமல் ஓட்டுவார்/அடி வாங்குவார்/அடிப்பார். காமெடியன் காலர் வரை பட்டன் போட்டுக் கொண்டு வெத்திலை + சிக்ரெட் கறை தெரிய “நா...நா...” (தெலுங்கில் நேனு நேனு)குதிரையிடம் வசனம் பேசி கமெடிப் பண்ணுவார். நாங்களும் ஏதோ சிரித்து வைப்போம்.

வாய் அசைத்து முடித்தவுடன் வசனம் வரும். அடிக்கடி”புஸ் புஸ் ...” என்ற சத்தத்துடன் end of reel no.  என்று ஏதோ காண்பிக்கும். ரீலை சரியாக வெட்ட வில்லை என்று நினைப்போம்.

கிருஷ்ணா,நரசிம்ம ராஜு,சத்திய நாராயாணா(வில்லன்).ஷோபன் பாபு,காந்தாராவ்,ரேலங்கி,விஜய நிர்மலா,விஜய லலிதா,ஜோதிலட்சுமி,ராஜ நளா மற்றும் பலர் வழக்கமான நடிகர்கள்

விஜய லலிதா படங்கள் ஓடி டப்பிங் இல்லாத நேரடிப்படங்கள் வர ஆரம்பித்தது. இவர் பாலச்சந்தரின்
“நூற்றுக்கு நூறு” படத்தில் கேரக்டர் ரோலில் வருவார்.

கல்லூரியில் படிக்கும் போது கேமரா மன்னன் கர்ணன் ஒரு காட்டு காட்ட ஆரம்பித்தார். அது ஒரு தனிகதை.   

நான் ஸ்கூல் கட் அடித்து முதலில் பார்த்தப் படம் “ரீவால்வர் ரீட்டா”. 

வாழ் நாள் சாதனை?


9 comments:

 1. சுவாரசியமாக நினைவுகள் மலர்ந்திருக்கின்றன.

  ReplyDelete
 2. *** வாழ் நாள் சாதனை? ***

  பின்ன, நிச்சயமா !

  நல்ல நினைவுகள். இப்போ பில்லால நயன் ஆக்ஷன் மாதிரியா இது எல்லாம் ?

  ReplyDelete
 3. Looks like you are from namma pettai. (I lived in Saidapet and Guduvancheri from 77 to 86). Tambaram M.R. Vidya, Pallavaram Janatha, Lakshmi, Chrompet Vetri - do they still exist?
  I was probably a few years behind you - I have heard of Gunfight Kanchana etc., but never seen them...

  ReplyDelete
 4. நல்ல மலரும் நினைவுகள்

  ReplyDelete
 5. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  நட்புடன்
  வலைபூக்கள் குழுவிநர்

  ReplyDelete
 6. //முகத்தில் பவுடர் அப்பிக்கொண்டு,தலையில் குருவிக்கூடு விக்,பட்டாப்பட்டி சட்டை, கூர் கருப்பு ஷு போட்டுக்கொண்டு பெரியப்பா அல்லது சித்தப்பாக் களை//

  நல்லாருக்கு..இப்படிச் சில சித்தப்பாக்கள் நினைவில் வந்தார்கள் இதைப் படிக்கையில்..

  ReplyDelete
 7. கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 8. பளிங்கினால் ஒரு மாளிகையும் விஜய லலிதாதான்:)

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!