Saturday, February 21, 2009

காக்கைச் சிறகினிலே........... ஒரு கவிதை

      பித்ரு
 
இடைவிடாத ஓலக்குரலில்
சிறகடித்துப் படபடத்துத்
தன் முகம் பார்த்துக் கொத்துகிறது
ஸ்கூட்டர் கண்ணாடியை காக்கை
இது திரும்பினால் 
அதுவும் திரும்புகிறது
வெளிபறந்தால் 
உள்நோக்கி பறக்கிறது
தலைச் சாய்த்தால் 
அதுவும் சாய்க்கிறது
உற்று நோக்கினால்
அதும் நோக்குகிறது
பீச்சியடிக்கப்பட்ட எச்சத்தில்
முகம் நனைந்த உள் காக்கைக்கு
தெரியவில்லை வெளிக்காக்கையின்
முகம்

7 comments:

  1. நல்லா இருக்கு தல

    ReplyDelete
  2. ரவி,

    ரொம்ப நல்லா இருக்கு. கண்ணாடிகள் பற்றிய கவிதைகள் பொதுவாகவே நல்ல scope கொடுக்கும்.

    //வெளிபறந்தால்
    உள்நோக்கி பறக்கிறது//

    என்ன ஒரு ஆழம் மற்றும் கவித்துவம். மிகப் பிடித்த வரிகள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  3. நன்றி அனுஜன்யா! என் அழைப்பை மதித்துக் கருத்துச் சொன்னதற்கு.

    ReplyDelete
  4. அற்புதமாய் எழுதி இருக்கிறீர் ரவி

    ReplyDelete
  5. வாங்க சுகுமார்.கருத்துக்கு நன்றி.

    மத்த கவிதைகளையும் படிச்சு கருத்துச் சொல்லுங்க!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!