Saturday, October 30, 2010

தமிழுக்கு முகம் இல்லை.. வடமொழிக்கு வாய் இல்லை

கேள்வி: ”தமிழுக்கு முகம் இல்லை.. வடமொழிக்கு வாய் இல்லை” என்கிறார்களே. இதன் பொருள் என்ன?

பதில்: முகம் என்பது வடசொல்.தமிழில் முகம் என்பதைக் குறிக்கத் தனிச் சொல் இல்லை.அதே மாதிரி வட மொழியில் வாய் என்பதற்குத் தனியே ஒரு சொல் இல்லை.முகம் என்பதும் வாக்கு என்பதும் ஆகுபெயர்களாக நின்று வாயைக் குறிக்க வழக்குமேயன்றி, இயல்பான சொல் அல்ல. தமிழில் மூஞ்சி என்ற சொல் உண்டு.அது இழித்துக் கூற உதவுவது.

கேள்வி:நாவிதன் என்ற பெயர் சிகைவினைஞனுக்கு ஏன் வந்தது?

பதில்: இதமான சொற்களைச் சொல்லித் தன் தொழிலைச் செய்வதனால் வந்திருக்க வேண்டும்.சுப காரியங்களை அறிவிக்கும் உரிமை கொங்கு நாட்டில் அவனுக்கு உண்டு.அதனால அப்பெயர் வந்தது என்பதும் பொருந்தும். சுபமான செய்தியைச் சொல்லும் நாவை உடைமையால் நா சுபஸ் என்று வந்து பிறகு நாசுவன் என்று ஆயிற்று.

கேள்வி: ”அண்ணனுக்கு எட்டாதது தம்பிக்கு எட்டும்  என்ன பொருள்?

பதில்: அண்ணன் என்பது மேலுதடு. தம்பி என்பது கீழுதடு. மேலுதடு கீழுதட்டோடு வந்து பொருந்துவதில்லை.கீழுதடே மேலுதட்டை எட்டிப்பொருந்தும். அண்ணன் என்று சொல்லும்போது உதடு ஒட்டுவதில்லை. தம்பி என்னும்போது அவை ஒட்டும்.

கேள்வி: மங்கைப் பருவம் எய்தியவளைத் “திரண்டாள்” என்கிறார்களே அதன் பொருள் என்ன?

பதில்:தெருண்டாள் என்பதே திரண்டாள் என்று விளங்குகிறது.தெளிவு பெற்றாள் என்று பொருள். தான் ஒரு பெண் என்ற அறிவி வரப் பெற்றவரையே அது குறிக்கிறது.

கேள்வி:”தேமேண்ணு இரேன்” என்கிறார்களே: என்ன பொருள்?

பதில்:”தெய்வமே என்று” என்ற தொடரே தேமேண்ணு என்று பேச்சு வழக்கில் சிதைந்துவிட்டது.சும்மா இரு என்ற பொருளில் வழங்குகிறது.

 கேள்வி:குப்பன், குப்பண்ணன், குப்புசாமி என்று பெயர் வைத்துக்கொள்கிறார்ள். அந்தப் பெயர் எதனைக் குறிக்கிறது.?
 
பதில்:பல குழந்தைகள் பிறந்து இறந்து போனால்,பிறகு பிறந்த குழந்தையைக் குப்பையில் புரட்டி எடுத்து குப்பன் என்று பெயர் வைத்து பிறகு மூக்குக் குத்துவார்கள். குப்பையிலிருந்து எடுத்த குழந்தை என்றும் தனக்குப் பிறக்கவில்லை என்றும் ஒரு  பாவனை உண்டாக இவ்வாறு செய்வார்கள்.



நன்றி: கி.வா.ஜ பதில்கள் -அல்லயன்ஸ் பதிப்பகம்.

15 comments:

  1. அருமையான பகிர்வு நண்பா..

    ReplyDelete
  2. நாசுவன், குப்பு - அறியாத தகவல்கள்...

    ஸ்வாரஸ்யம்

    ReplyDelete
  3. நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே.

    ReplyDelete
  4. நன்றி ஸ்வர்ணரேக்கா

    ReplyDelete
  5. நல்ல பகிர்வுங்க.... நன்றி.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு தல...;)

    ReplyDelete
  7. பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

    ReplyDelete
  8. நன்றி சித்ரா

    ReplyDelete
  9. நன்றி கோபிநாத்

    ReplyDelete
  10. அந்நியன் said...

    // பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..//

    வாழ்த்துக்கள்.எனக்கு ஆர்வமில்லை.நன்றி.

    ReplyDelete
  11. நல்ல தொகுப்பு...

    ReplyDelete
  12. சென்ஷி said...

    // நல்ல தொகுப்பு...//

    நன்றி சென்ஷி.

    ReplyDelete
  13. மூஞ்சியைக் குறிக்கும் தமிழ்ச் சொல் இல்லையா? என்னை கொடுமை இது? எங்கள் தமிழாசிரியர் தமிழில் மலர்களின் வெவ்வேருபூக்கும் நிலைகளைக் குறிக்கும் தமிழ் சொற்களைப் பற்றிக் கூறினார். மொட்டு[பூக்காதது], மலர், அலர்[வாடிய நிலை] உட்பட ஆறு சொற்களைக் கூறினார். அப்படியிருக்க, ஒரு மனிதனின் பிரதானமாக இருக்கும் முகத்திற்குத் தமிழ்ச் சொல் இல்லையா? முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து ,அகநக நட்பது நட்பு. -இந்தக் குறளில் வரும் முக என்ற வார்த்தை தமிழ் இல்லையா?

    ReplyDelete
  14. Jayadeva said...

    // மூஞ்சியைக் குறிக்கும் தமிழ்ச் சொல் இல்லையா? என்னை கொடுமை இது?//

    ஆமாங்க.

    // ஒரு மனிதனின் பிரதானமாக இருக்கும் முகத்திற்குத் தமிழ்ச் சொல் இல்லையா? முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து ,அகநக நட்பது நட்பு. -இந்தக் குறளில் வரும் முக என்ற வார்த்தை தமிழ் இல்லையா?//

    முக என்ற சொல் “முக்(mukh)" வடமொழிச் சொல்.
    கோமுக் = பசுவின் முகம்
    பஞ்ச்முகி/முக=ஐந்து முகம்

    ”நீராருங் கடலுடுத்த” என்ற பாடலில் “சீராரும் வதனமெனத்” வதனம் என்பது முகம். வதனமும் வடமொழிச் சொல்தான்.”வதனமே சந்திரபிம்பமே” (எல்லாமே வடமொழிதான்)எம்கேடி பாகவதர் பாடல்.

    நன்றி.

    ReplyDelete
  15. முக தமிழ்ச் சொல்தான் வடவர் திருடிவிட்டனர் (!)

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!