Thursday, September 30, 2010

என்னைப் பேய்கள் படுத்திய பாடு..!

பேய் என்பதும் ஒரு பர்ஸ்னாலிட்டிதான்.அதுவும் மூக்கும் முழியுமாக இருக்கும்.ஆனால் கால்கள் இல்லாத மாற்றுத் திறனாளி ஆளுமை.வீடு?சுடுகாடு,பாழடைந்த இடங்கள்,
பாழடைந்த கிணறு (அது கடைசியாக உயிரை விட்ட இடம்),புளிய மரம்,இத்யாதி இத்யாதி.ரேஷன கார்டு எல்லாம் கிடையாது.

மனிதன் படைத்த திகிலான அதிசயங்களில் ஒன்று.

ஏன் இந்த பர்ஸ்னாலிட்டி?நிறைவேறாத ஆசையால் இந்த ”பேய்” ரோல்.நிறைவேறி இருந்தால்?அல்ப ஆயுசில் இறந்தால் கூட முக்கால்வாசி பேய்தான்.

உடை? இந்தியாவைப் பொறுத்தவரை ஒரே காஸ்ட்யூம்தான் இந்த ஆளுமைக்கு. அது வெள்ளை நிறம்.காஸ்ட்யூம்  என்றாலே யார் வெள்ளை உடை கொடுத்தார்கள் என்று யூகிக்கலாம். சினிமாகாரர்கள்தான்.இதன் பின்னால் வரும் புகையும் வெள்ளைதான்.


தமிழ்ப்பட பேய்

புழங்கும் நேரம் இரவில் 12 முறை அடித்து ஓய்ந்து ரெண்டு முள்ளும்  12.00 மணியில் ஒட்டிக்கொண்டு நின்ற பிறகு.புழங்கும் முக்கால்வாசி பெண் பேய்க்குப்  பின்னால் ஒளிந்து (மரத்துக்கு மரம்)  தொடர்ந்தால திடீர் திடீர் என்று மறையும் தோன்றும். சிவரஞசனி ராகத்தில் soul stirring ஆக பாடிக்கொண்டே செல்லும். பாட்டிற்கு முன்  கட்டாயமாக கொலுசு சத்தம் கேட்கும்.


இந்திப்பட பேய்

இப்படி வரும் பேய்களை மென்மையாக சொன்னால் ”ஆவி”.ஆவி என்று சொன்னால கொஞ்சம்தான் பயம் வருகிறது.

இப்படித்தான் என் தலைமுறையில் ”பேய்”யைப் படம் வரைந்து பாகங்களை குறித்தார்கள்.ஒரு முறை கூட நேரில் பார்த்தது கிடையாது.

முதன் முதலாக ”பேய்” அறிமுகமானது ஒரு துடப்பக்கட்டையின் மூலம்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் என் அக்கா கைக்குழந்தையின் தூளியின் கிழே ஒரு துடப்பக்கட்டையை போட்டு வைத்திருந்தார்கள். எதற்கு என்று கேட்டதற்கு “பேய்/பூதம்” அண்டாமல் இருப்பதற்கு என்றார்கள்.

அப்போது பேய் எப்படி இருக்கும் யோசித்தேன்.அதுதான் உண்மையான கலப்படம் இல்லாத  முதல் யோசிப்பு. இருட்டுதான் யோசனையில் இருந்தது.

பிறகு இந்த பேய் அடிக்கடி வர ஆரம்பித்து அதன் மேல் ஒரு bird”s eyeview கிடைத்தது.

அப்போது டிவி இல்லாத அந்த காலம்.கிரிக்கெட் விளையாடிவிட்டு மணலில் உட்கார்ந்து talks போடுவோம்.முடிவில் பேய் பேச்சு வரும்.இது இல்லாமல் முடியாது.பேச ஆரம்பித்தவுடன் ரொம்ப நெருங்கி வருவோம்.அப்போது பின்னணியில் மயான அமைதி மற்றும் ஒளி டிம் ஆகிவிடும்.ஒரு மாதிரி ஜிவ்வென்று இருக்கும்.

பேசிவிட்டு  தனியாக வீடு திரும்பும்போது  பேய் கூடவே வரும்.நிழல் என் கூட வரக்கூடாது என்று ஏமாற்றி நடந்தால கூடவே திகிலாக வரும்.
 
பேச்சில்  தற்கொலை செய்துக்கொண்டவர்கள் வருவார்கள்.கிரிக்கெட் பீல்டிங்கில் deep extra cover  அல்லது   long leg இருக்கும் இடங்கள் ஒரு வெறிச்சோடிப்போன மரம் மற்றும் பாழைடைந்த கிணறு.அங்குதான் நிறைய தற்கொலை மரணங்கள் நிகழும். அங்கு கைகால் உதறிக்கொண்டே பீல்டு செய்ய வேண்டும். அதை நோக்கி வேணுமென்றே பந்தை அடிப்பார்கள்.

ஒரு தடவை அந்தப் பாழும் கிணற்றில் விழுந்தப் பந்தை எடுக்க எட்டிப் நடுக்கத்தோடு பார்த்தேன்.அலறினேன். பேய்?  உள்ளே  ஒரு பெண்ணைப் பார்த்து.முதன் முறையாக பேய் பார்க்கவிட்டாலும்  ஆய் போய்க்கொண்டிருந்த பெண்ணின் பிருஷ்டத்தைப் பார்த்து.என்ன சொல்லுவதென்று தெரியாமல் திரு திருவென்று விழித்துவிட்டு ஓடிவிட்டேன்.

அடுத்து பேச்சில் வருவது சுடுகாடு மற்றும் எரியும் பிணங்கள். என் பள்ளிக்கு (குரோம்பேட்டை)அருகே ஏரி. பக்கத்தில் மயானம்.எரியும் புகை பள்ளியை சுழ்ந்து சதை வேகும் நாற்றம் குடலைப் புடுங்கும்.”எரியும் போது கை கால்கள் எழும்” என்பதுதான் மைய பேச்சு.

அது எழுந்துப் போய் பேய் ஆகிவிடாமல் இருக்க வெட்டியான் அதை அடிப்பார் என்று கதைப்போம்.
 
அடுத்து வந்த வருடங்களில் ”பீஸ் சால் பாத்” “ஒரு விரல்”” யார் நீ” ”கும் நாம்””படகோட்டியும் பதிமூன்று பேய்களும்” ”சைக்கோ”" மூலம் பல பேய்கள் அறிமுகமாகி பயமுறுத்த ஆரம்பித்தது. பேய்யைப் பற்றிய முழு உருவம் கிடைத்தது.

நாய் நடு இரவில் ஊளையிட்டால் பேய் உலாத்துகிறது என்று சொல்லி பயமுறுத்தினார்கள்.

ஒரு  அருமையான ”பேய்”பாட்டு.பாடுபவர் வாணி ஜெயராம்.படம் “துணிவே துணை”.இசை எம் எஸ் வி.
 


பேய்யை நம்ப மறுத்து அடித்து பேசும் நாராயணனை “ டேய் .. இவ்வளவு பேசரயே,... நைட் ஷோ  ”யார் நீ”(டெண்ட் கொட்டகையில்) பாத்துட்டு வரவழில இருக்கிற  சுடுகாடு  (அப்போ பொணம் எரிஞ்சிட்டு இருக்கணம்) மரத்துல சாக்ஸ்பீசால  பெயர எழுதிட்டு காலைல அந்த டிக்கெட் காட்டுவயா?’ என்போம்

இப்போ அந்த சவாலை ஏற்க நான் தயார்.ஆனால் பகல் நேரத்தில்.ஏன் வெட்டியானை இந்த நைட்ஷோ பேய்கள் ஒன்றும் செய்வதில்லை. யாருமே அப்போது யோசித்ததில்லை.

அடுத்து கட்டுக் கதைகள். பீடி பற்ற வைக்க ”பொட்டி இருக்கா” கேட்ட பேய், 1000 பாத்திரங்களை துலக்கிய  பேய்,லவ்வரை இரவில் கொஞ்சும் பேய், வண்டிகளை நிறுத்தும் பேய்,பேய் பிடித்த நபர்கள்,மொட்டை மாடியில் கொலுசு சத்தம் பேய்கள்.யாரும் வாங்காத haunted house பேய்கள், ஆங்கில ஹாலிவுட் பேய்கள்....பக்கத்துணையுடன் பி.டி.சாமியின் பேய் கதைகள்.

மிக முக்கியமான இரவு 12 மணிக்கு தண்டவாளத்தைக் கிராஸ் செய்யும் முனியம்மா பேய்.

 டெயில் பீஸ்:

எழுத்தாளர் புதுமைப்பித்தனை ““பேய் .. இருக்கிறதா ? இல்லையா” என்று கேட்டதற்கு அவர்  பதில்:

 “பேய் இருக்கா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேயை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது, அது மட்டும் உண்மை” என்று கூறினார்.

Monday, September 27, 2010

கலைஞர் டிவி/குறும்பட விமர்சனம்/26-09-10

இன்றைய (26-09-10) தினம் மூன்று குறும்படங்கள்தான் பார்க்க முடிந்தது. நடுவில் கேபிள் டிவி ஆபரேட்டரிடம் பவர் இல்லை.நான் தவற விட்டது பரிசு வாங்கிய படம். ஹெல்மெட் அணிவது பற்றி பிரசாரம்?


இன்றுடன்  சீசன் - 2 வில் அறிமுக சுற்று முடிகிறதாம். மொத்தம் 36 இயக்குனர்கள் கலந்துக்கொண்டார்களாம். அடுத்த வாரம் ”போட்டி” வாரம் ஆரம்பம்.அதாவது நடுவர்கள் சொல்லும் தலைப்பில் பட எடுக்க வேண்டும்.அது எந்த வகையிலும் இருக்கலாம்.சவால்தான்.தன் செல்லமானதை விட்டு மாத்தி யோசிக்க வேண்டும்.

குறும்படத்தை நான் ரசிப்பது ஒரு சுவராசியமான சிறுகதையை ரசிக்கும் மனநிலைதான்.

  போனவாரம்

இந்த வாரம்:

தலைப்பு: வியூகம்  இயக்குனர்: சுரேஷ் பாபு

ஒருவனை என்கவுண்டரில்”போட்டுத் தள்ள” மற்றொருவனுக்கு அசைன்மெண்ட் தரப்படுகிறது. வியூகம் அமைக்கப்பட்டு போட்டுத் தள்ளப்படுகிறான்.நாம் நினைப்பதுப் போல கட்ட பஞ்சாயத்து என்கவுண்டர் அல்ல.இது போலீசால் “off the record" ஆக செய்யப்படும் என்கவுண்டர்.

அதான் சஸ்பென்ஸ்ஸாம்????

இந்த சஸ்பென்ஸ் முடிச்சு சரியாகப் போட்டு அவிழ்க்கப் படவில்லை.இங்குதான் நிறைய ஹோம் வொர்க் செய்ய வேண்டும்.எல்லாம் ஒரே மூஞ்சியாக இருப்பதால் சற்று குழப்பம். சமோசா வெளிபக்கம் நல்லா இருக்கு. ஆனால் உள்ளே மசாலா சரக்கு சரியில்லை. ஓகே ரகம்.

தலைப்பு: இங்கேயும்  இயக்குனர்: எஸ்.கல்யாண்

ஒரு பெரிய காலனி. நடுவில் பூங்கா. குழந்தைகள் விளையாடுகிறார்கள்.

பூங்கா பெஞ்சில் வெள்ளைக் கலர் சூடிதார் அணிந்த பெண் (அந்த காலனியை சேர்ந்தவள்) உட்கார்ந்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.முகத்தில் வருத்தம்.பிளாஷ் பேக் ஓடுகிறது. வீட்டில் அப்பா, இவள் ஒரு பையனுடன் சுற்றுவதாகசந்தேகப்பட்டுத் திட்டுகிறார்.இவள் மறுக்கிறாள்.அடுத்து வேறு ஒரு நாள் பிளாஷ் பேக் ஓடுகிறது அன்றும் அப்பா சந்தேகப்பட்டு திட்டுகிறார்.அன்றும் அழுகையோடு மறுக்கிறாள். அதுதான் உண்மை.

பிளாஷ் பேக் முடிந்ததும் அவள் அதே வருத்தத்தோடு பேசுகிறாள் “காதல் தோல்வி அடைந்தால்தான் தற்கொலை செய்துக்கொள்வார்கள்.ஆனா நானோ யாரையும் காதலிக்கவில்லை என்பதை நம்ப மறுத்த அப்பாவின் சந்தேகத்தினால்  மனமுடைந்து தற்கொலைச் செய்து கொண்டு ஆவியாக இந்தப் பூங்காவில் உட்கார்ந்திருக்கிறேன்”.

ஆம் அவள் ஒரு  ஆவி.

பேசி முடிந்ததும் அவள் பக்கத்தில் ஒரு இளைஞன் வந்து உட்காருகிறான்.அவனைப் பார்த்து அதிர்கிறாள்.”ஆமாம்.. உன் மேல் இருந்த காதலால் உன் பிரிவைத் தாங்க முடியாமல் நானும் தற்கொலைசெய்துக்கொண்டுவிட்டேன்”.

வித்தியாசமான கரு. படபிடிப்பும் உயிர்துடிப்பாக இருந்தது.பழைய பேய் படங்களில் பேய்க்கு யூனிபார்ம் வெள்ளைப் புடவை.இதில் முதன்முதலாக பேய்க்கு வெள்ளை சூடிதார் துப்பட்டா.மாத்தி யோசித்திருக்கிறார் இயக்குனர்.

இசை நன்றாக இருந்தது.

எனக்கு ரொம்ப பிடித்தது இந்த குறும்படம்.

தலைப்பு: தலைப்புச் செய்தி  இயக்குனர்:பிரபாகரன்

செல் போன் மிஸ்யூஸ் செய்யப்படுவதால் நான்கு இளைஞர்கள்  ஒரு துணை நடிகையின் கொலையில் (அவளுக்கு தொல்லைக் கால்கள் வருகிறது) அனாவசியமாக விசாரிக்கப்பட்டு அடி வாங்குகிறார்கள்.

காமெடியாக எடுக்கப்பட்டிருந்தது.ஹீரோ நடிப்பு நன்று.

இவர்கள் மீது தவறில்லை என்று ரிலீஸ் ஆகி வரும் போது ஒருவர் “எனக்கு நிறைய பெண்களிடமிருந்து தொல்லைக் கால்கள் வருகிறது” என்று புகார் கொடுக்க பின்னணியில்  அந்தப் பெண்களை போலீஸ் பெண்டு எடுக்கும் குரல் கேட்கிறது.


இதுவரை பார்த்தப் படங்களை பற்றி யோசிக்கும் போது  சில படங்களில் உள்ளே ஓடும் முக்கியமான இழையை மெயிண்டன் செய்யாமல் விட்டு விடுகிறார்கள்.  அதற்குப் பதிலாக ஓவர் ஸ்டைல் காட்டுகிறார்கள்.

அடுத்து கடைசியில் டிவிஸ்ட் கொடுக்கும் படங்களில் டிவிஸ்டுக்கு உண்டானதை நன்றாக பில்ட் அப் கொடுத்து டிவிஸ்டுஐ அவிழ்க்க வேண்டும்.

இது பல படங்களில் மிஸ்ஸிங்.



Friday, September 24, 2010

இளையராஜா -King of Soulful Melodies

இளையராஜா, முன்னால் இசை மேதைகளிடமிருந்து அடுத்தக் கட்டத்திற்கு இசையைக் கடத்தும்  அவரின் அறிமுக வருடங்களை கவனித்தால் சில விஷயங்கள் பிடிபடும்.


அப்போது இவர் இ”ளை”யராஜா இல்லை.சொந்த கையெழுத்து.


1.அவர்கள் மாதிரி பாட்டின் ஜீவனை(soul)/இனிமையை(மெலடி?)/உணர்ச்சிகளை நிலைநிறுத்திக்கொண்டு  இன்னும் மேலே தூக்குகிறார்.அதனால் இன்னும் கூட அவர் பாடல்கள் soulful and lilting one(சுகமான/இனிமையான) அண்ட் எமோஷன்ஸ் பொங்கி வழிகிறது.

(அது என்ன soulful அல்லது soul stirring பாட்டுக்கள்? நாம் ஐந்து புலன்களின் மூலமாகத்தான் எதையும் உணர்கிறோம்.ஆனால் இந்த ஐந்து புலன்களையும் மீறி சில படைப்புக்கள் நம்மில் அல்லது நம மனதில் (ஆத்மா?)  சில ஆழமான உணர்ச்சிகளை கிளறிவிடுகிறது அல்லது படுத்தி எடுக்கிறது)

உதாரணம்: ”கண்டேன் எங்கும் பூமகள்”.It is haunting melody of S.Janaki.

2.அவரின் மிகப் பெரிய பலமான இடை இசைக் கோர்ப்புகள்(rich orchestration)
பாட்டின் ஜீவனை(soul)/இனிமையை(மெலடி?)/உணர்ச்சிகளைஅணைத்தவாறு இனிமையாக அடுக்கப்படுகிறது.

3.ஹம்மிங் மற்றும் பாட்டின் சங்கதிகளை வித விதமாக கொடுப்பது.மாத்தி யோசி கான்செப்ட்.

சங்கதிகள் என்பது ஒரு பாட்டின் ராகம் பொதிந்த ஒரு வரியை/வார்த்தையை/சொல்லை விதவிதமாக இம்புரூவைஸ் செய்து பாடுவது.இது கர்நாடக இசையில் மிகுந்து காணப்படும்.இது பாடகர்களின் கற்பனை வளத்தைப் பொருத்து அமையும்.

கிழ் உள்ள ஆடியோவில் ”பண்டூரிதீ கோலு இகவைய்யா ராமா” என்ற ஒரு பாட்டின் வரியை எப்படி கிட்டத்தட்ட 14 தடவை பாடி ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாடலில் இம்புரூவைஸ் செய்து ராகத்தின் அழகை வெளிப்
படுத்துகிறார் ஒரு பெண்மணி.ராகம் ஹம்சநாதம்.

ராஜா இதே ராகத்தில் “சொர்க்கமே என்றாலும் நம்ம”பாட்டைப் போட்டுள்ளார்.

நன்றி: ராகசுரபி


 
இதே முறையில் ஆனால் இது மாதிரி இல்லாமல் ராஜா சினிமாவில் மெட்டை விதவிதமாக போட்டு அசத்துகிறார்.பாட்டின் வரிகளில் improvisation காட்டுவது. சிம்பிளாக சொன்னால்மெட்டில் kaizen  போடுவது.


உதாரணம் நிறைய இருக்கு. 1.பொன்மானே கோபம் ஏனோ (அழகாக வளைத்துப் பாடுவது) 2. என்னுள்ளே என்னுள்ளே(இதில் ”எதுவோ மோகம்”..1.எதுவோஓ...... 2.ஓ.....  3. மோ..ஒ...கம் என்று வரும் 3.தம் தம் தனனம்
4.நான் என்பது நீ அல்லவோ 5.தும்பி வா துமபக்குடத்தில்

பின்னால் கொடுக்கப்பட்ட பாடல்கள் எல்லாம் ராஜாவின் ஆரம்ப கால பாடல்கள்.முக்கியமாக எல்லாம் லைவ் ரிக்கார்டிங்.பிட்டுகளை வைத்து  உட்கார்ந்த இடத்தில் ஒட்டுப் போடுவது அல்ல.

இந்த இசைக்கோர்ப்பெல்லாம்அப்போது பிரமிக்க வைக்கும் விஷயங்கள்.
முதல் தடவை நடக்கும் விஷயங்கள்/சோதனை முயற்சி போன்றவை.இப்போது பழக்கிவிட்டார் ராஜா.பழகியும்விட்டோம்.

(அப்போது கேட்கும் போதெல்லாம் எம் எஸ் விஸ்வநாதனிடமிருந்து( என் முன்னால் மேஸ்ட்ரோ..ஏன் இப்பவும்தான்) வெகு விரைவில்  ராஜாவால் ஹைஜாக் செய்யப்படுவேன் என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கும்)

அப்போதிருந்த புளித்துப்போன  தமிழ் இசையால் நிறைய இந்திப் பாடல் மோகம் தமிழ்நாட்டில் இருந்தது. அதில் நானும் ஒருவன்.

ஆடியோ வசதி அவ்வளவாக இல்லாத அப்போது இந்த பாடல்கள் டீக்கடைகளிலும்,
கல்யாண மண்டபங்களிலும்,திருவிழாக்களிலும் ,பிளாட்பார நரிக்குறவர் வைத்திருக்கும் டிரான்ஸிடர்களில் காற்றில் மிதந்து வந்து மனதை படுத்தும். அசர வைக்கும்.காரணம் புதுவித இசை.

ரசிப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம். இந்தப் பாடல்களில்  வைரமுத்துவின் டார்ச்சர் வரிகள் இல்லை. நான் இவரின் 80% பாடல்களை  ரசிப்பதில்லை. காரணம் தி.ராஜேந்தரின் எதுகை மோனை டைப்.இலக்கிய நயம் இல்லாமல் ஓவர் லோக்கலைஸ்டு.இதற்கு இளையராஜாவும் பொறுப்பேற்கிறார்.

பின் வரும் பாடல்களின் வரிகள் காதுக்கு இதமாக இருக்கும்.

ஒன்றை ரசிப்பதற்கு அதன் கூட வாழ வேண்டும் என்று சொல்வார்கள்.பின் வரும் பாட்டுக்கள் soulful and lilting melodies of Maestro.வாழந்துப் பாருங்கள்.

இசைக்கோர்ப்புகளில்  எல்லா வித நாதங்களும் மேல் நாடு+ நம் நாடு கலந்துக் கட்டியாக ஒரு மேதமைத் தன்மையோடு  வருகிறது. வந்தாலும் பாட்டின் மணம்/ மூட் மாறாமல் இருப்பது ஆச்சரியம்.Still it has a local flavour..!

இளையாராஜாவின் மீது அப்போதையக் குற்றசாட்டுக்கள்  “ இவர் இசைக்கோர்ப்பில் பாடலை முழ்கடித்து சிதைக்கிறார்”  “ பாடலை தேவைக்கு மேல் அழகுப் படுத்துகிறார்” என்பது.

பாடலை ஆழ்ந்துக் கேட்பவர்களுக்குத் தெரியும் எது உண்மை என்று.கிழ் வரும் பாடல்களே சாட்சி.

(சமீபத்தில் “மழையே தூவும் மழையே”(ஈரம்) நல்ல மெலடிப் பாட்டு.வித்தியாசமான இசை நாதங்கள் வரும்.ஆனால் இசைக்கருவிகள் பாட்டை ”போட்டுத் தள்ளி” விட்டது.

”ஒரு வானவில் போலே” (காற்றினிலே வரும் கீதம் -1978)

மென்மையான  இசை,சுகந்தமான  சிம்பிளான மெட்டு.ஜெயசந்திரன்/ஜானகி குரல்கள் அருமை.ஜெயசந்திரன் என்ன ஒரு அருமையான பாடகர்.


Oru vanavil pole | Music Codes

எங்கும் நிறைந்த இயற்கையில் (இது எப்படி இருக்கு -1978)

00.54-2.12 இனிமை.பெரிய பல்லவி.பெரிய பாட்டு.வித்தியாசமான மெட்டு+இசை+பாடியவர்கள் எல்லாமே சூப்பர். இனிமையான டியூன்.
அருமையான வரிகள்.It is very close to my heart.


Engum Niraintha | Musicians Available

கண்ணன் ஒரு கைகுழந்தை(பத்ரகாளி -1976)

குழந்தையின் தூளி அசைவதைப் போல ஆரம்பிக்கும் இசை.
 

கீதா.... சங்கீதா...(அன்பே சங்கீதா -1979)

ஜெயசந்திரன்  வழக்கம் போல அருமை. ஜென்ஸி இணையும் இடம் அருமை.

ஜென்ஸியின் வித்தியாசமான குரல்.ரொம்ப மூக்கால் பாடுகிறாரோ?எனக்குப்பிடித்திருக்கிறது.

அப்போதைய கனவு காதலிகளின் பேஷனான பெயர்கள் கீதா,சங்கீதா,உஷா,ராதா.......



ஏதோ நினைவுகள் நெஞ்சிலே(அகல் விளக்கு -1979)

 மேதமை பொருந்திய இசை. ஷைலஜா குரல் அருமை.



கண்டேன் எங்கும்(காற்றினிலே வரும் கீதம்-1978).
ஜானகியின் Soul stirring ஹம்மிங் முடிந்து விரட்டும் வயலின்கள் செயற்கையான கீ போர்ட் வயலின் இல்லாமல் உண்மையான வயலின்கள்.ஓவர்லாப்பிங் ஹம்மிங் புதுசு.பின் வரும் ஆடியோவில் இல்லை.

 ”வண்ணக்கிளியே ஏக்கம் ஏனோ...” கம்பி இழைக் கீச்சுக் குரல் haunting melody.Hats off  to S.Janaki . இந்த மாதிரி பாட்டுகளுக்கு  ராஜா போட்ட பிள்ளையார் சுழி இது என்று நினைக்கிறேன்.

நேரடியாக கேட்காமல் காற்றில் மிதந்து வந்து கேட்டால் ஏக்கத்தை உண்டாக்குகிறது.

நன்றி திரு.ராமசாமி:

ரசிகர் 
திரு ராமசாமிக்கு எழுதிய  ராஜா கடிதம்:




தென்னமரத்துல தென்றல் அடிக்குது (லஷ்மி -1979)

ராஜாவின் முதல் டூயட் சாங்?சுசிலா குரலில் எவ்வளவு இளமை.”பட்டு கழுத்துல முத்து தெறிக்குது ... பொண்ணு சிரிக்கையில”.அருமையான வரிகள்.யார் எழுதியது?சிலோன் ரேடியோவில் அடிக்கடிப் போடுவார்கள்.



சித்திர செவ்வானம் (காற்றினிலே வரும் கீதம்-1978)

ஒரு ஆச்சரியம் இதுவும் “புதிய பூவிது பூத்தது”ம் ஒரு ராகத்தில் போடப்பட்ட பாட்டு.  இரண்டு இசைக்கோர்ப்புகளும் வெவ்வேறானவை.



சின்ன கண்ணன் அழைக்கிறான்(கவிக்குயில் -1977)
ஏகாந்தமான புல்லாங்குழல் கிளாசிகல் இளையராஜா.அற்புதமான ஆரம்ப 0.22-0.30 சிதார்(?) வருடலுடன்  தபலாவும் புல்லாங்குழல் சேரும் ஜங்ஷன் அருமை.

பாட்டின் இசைக்கு ஏற்ற்படி பாடல் வரிகளும் இசைத்தன்மையோடு காற்றில் புல்லாங்குழல் நாதம் போல் நீந்துகிறது.வாலி?




ஒரு நாள் உன்னோடு ஒரு(1977-உறவாடும் நெஞ்சம்).

0
.39-0.54 வயலின்அட்டகாசம்.0.49 - 0.54 அதே வயலின் புல்லாங்குழலுடன் சிறு உரையாடல். அடுத்து வரும் வருடங்களில் ஒரு இசை மேதை  தமிழ் நாட்டில் விஸ்வரூபம எடுப்பதற்க்கான  “அறிகுறிகள்” காட்டிய பாட்டு.வெஸ்டர்ன் கிளாசிகல் பரிசோதனை முயற்சி?



மஞ்சள் நிலாவுக்கு ஒரே(முதல் இரவு-1977)
 

முதல் ரயில் டியூன் பாட்டு?வித்தியாசமான மெட்டு.ரயில் ஓடும் சத்தம் வருவதற்கு இரண்டு உப்புத்தாள்களை ஒன்றோடு ஒன்று தேய்ப்பார்கள் அப்போது.”ஊ ஊ ஊ ஊ ஊஊ “ வித்தியாசமான ஆனால் சிம்பிளான ஹம்மிங்.




டெயில் பீஸ்:
மேல் தொகுத்துள்ள பாட்டுக்கான படக் காட்சிகள் எப்படி? சிலது குமட்டிக்கொண்டு வருகிறது.

Monday, September 20, 2010

கலைஞர் டிவி-19-09-10 - குறும்பட விமர்சனம்

 தொகுப்பாளினி கீர்த்தி இந்த வாரமும் அழகான உடையில் வந்து அசத்தினார்
 
எல்லாவற்றிலும் ”மெசேஜ்” எதிர்பார்த்து இன்னும் “நீர்குமிழி” காலத்தில் இருக்கும் கே.பாலசந்தர் இந்த வாரமும் ரீமோட் நீதிபதி. குறும்படம் எடுப்பவர்கள் கடைசியில் “ இந்தக் கதையின் மூலம் அறியப்படும் நீதி” என்று டைட்டில் போட்டு குறும்படத்தை முடிக்கலாம்.

நடுவர் தாத்தாக்கள்(மதன்/பிரதாப் போத்தன்) வழக்கமான தங்கள் சூட்டுகளில் வந்து விமர்சித்தார்கள்.அவர்களுக்கு புரியாவிட்டால் மறு முறை பார்க்கும் வசதி இருப்பது அவரது பேச்சின் இடையே தென்பட்டது.ஆனால் தொலைக்
காட்சிப் பார்பவர்களுக்கு அந்த வசதி இல்லை.

நேற்று கேடிவியில் “சீவலப்பேரி பாண்டி” படம் பார்த்தேன். ஒரு ஆச்சரியம் அதை இயக்கியவர் பிரதாப் போத்தன்.


போவதற்கு முன்.....

இந்த வாரம் ஒரு அப்பட்டமான காப்பி அடித்த குறும்படம் திரையிடப்பட்டது.பின்னால் பார்ப்போம்.

படம்: மாயக்கண்ணாடி இயக்குனர்: பிரின்ஸ்

சினிமாவில் முதலாளியாகவும் தொழிலாளியாகவும் (அதிகாரம்/அடிபணிதல்) ரோலில் நடித்தவர்கள் நிஜ வாழ்வில் அப்படியே எதிர்மறையாக இருப்பதுதான் கதை.

முதலாளியாக நடித்த துணை நடிகர் கூலி உயர்வு கேட்கும் தொழிலாளியாக நடித்த ஹீரோவை படபிடிப்பில் தவறாக காலில் எத்தி எல்லோரிடமும் திட்டு வாங்கி படபிடிப்பு முடிந்து, அதனால் குறைந்த பேட்டா வாங்குகிறான்.
படபிடிப்பில் தொழிலாளி என்ன வசனம் பேசினானோ அதே வசனத்தை முணு முணுத்தபடி  வீடு திரும்புகிறான்.

படபிடிப்பில் காலைப் பிடித்துக் கெஞ்சுவது மாதிரி உண்மையிலும் வைத்திருக்கலாம்.படம்தான் பார்க்கிறவர்களுக்குப் புரிகிறதே ஏன் கடைசியில் கோனார் நோட்ஸ்?

பிடித்திருந்தது.

 படம்: நண்பன் வாங்கி தந்த (லட்)டீ இயக்குனர்: மணிகண்டன்

நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன் காதலித்து ஒரு பெண்ணுடன் ஓடிவிட அதனால் மற்றவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் லத்தியால் பெண்டு எடுக்கப்பட்டு நொந்து போய் ரீலீஸ் ஆகிறார்கள். ரீலீஸ் கூடஇரண்டு குடும்பமும் சமாதானமாகி விடுவதால்தான்.அவர்கள் சமாதானம் இவர்கள்?

அடி வாங்கும் ஒருவன் “ பொண்ண கண்ணால கூட பாத்தது இல்ல” என்று சொல்லியபடி வெளிவருவது சூப்பர்.அவர் நடிப்பும் அருமை.லோகேஷன் மற்றும் படபிடிப்பு நன்று.பிடித்தும் இருந்தது.

 படம்: அன்பின் வலி அது இயக்குனர்:ஆளி பிரகாஷ்

இது நெட்டில் பார்த்த ஒரு ஆங்கில குறும்படத்தின் காப்பி.

பகல் நேரம். ஆடகள் புழக்கம் குறைவான வயல்வெளி. ஒரு திசையில் நாய் குரைக்கும் சத்தம் அதை தொடர்ந்து வலியில் கத்தும் குரல்.ஒருவர் அருவாளுடன் சத்தம் வந்த திசையை நோக்கி திகிலுடன் போகிறார்.கேமராவும் தொடர்கிறது.

மீண்டும் நாய் குரைக்கும் சத்தம் .

ஓலம் அதிகமாகி ஒரு இடத்தில் அகட்டிய கால்கள் காட்டப்பட்டு ரத்தம் வழிகிறது.அதைப் பார்க்கிறார் அருவாள் மனிதர். வாயடைத்துப்போய் ஓடி சோளக்கொல்லை பொம்மையில் இருக்கும் புடவைத்துணியை எடுத்து வந்து அந்த கால்களின் மேல் போத்துகிறார்.

சஸ்பென்ஸ் உடைகிறது.

அது ஒரு on the way  பிரசவம்.அகட்டிய கால்கள் பக்கத்தில் உள்ள பெண்மணி அப்போதுதான் பிறந்த குழந்தையை கையில் வைத்து இருக்கிறார்.

நடுவர்கள் யாரும் இதன் ஒரிஜனலைப் பார்த்ததாக தெரியவில்லை.இதற்கு கேமராவிற்கு உண்டான பரிசு கிடைத்தது.

படம்: 7 குறுக்கு 2 நெடுக்கு இயக்குனர்:அழகு ராஜா

சவ ஊர்வலத்தில்  ட்ரம்பெட்(requiem  என்னும் இறந்தவர்களுக்கு அல்லது அவர்களின் ஆத்மாவிற்கு வாசிக்கும்  இசை) வாசிக்கும் விளிம்பு நிலை இளைஞனின் காதல் தோல்வி கதை.

காதலிக்க ஆரம்பித்து அதை சொல்ல முடியாமல் தவித்து கடைசியில் தன் செல் நம்பர் கொடுத்து பேசச் சொல்கிறான். ஆனால் அவளிடம் இருந்து நோ ரெஸ்பான்ஸ்.அவள் தன் நண்பியின் திருமணத்திற்குப் போய்விடுகிறாள்.

இரண்டாவது  நாள்  ஒரு சவ ஊர்வலத்தில்  ட்ரம்பெட் வாசித்தப்படியே   வழியே போகும் போது  ஒன்றைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.கை வாசிக்க முடியாமல் நடுங்குகிறது.அது ரோடில்  “நீத்தார் அஞ்சலி” போஸ்டரில்  இவள் காதலியும் அவள் நண்பியும் ஒரு விபத்தில் இறந்த செய்தியுடன்.

இவன் வாசித்துக்கொண்டிருக்கும்  சவ ஊர்வலம் அவளுடையதுதான்.

துக்கத்தில் வாசிக்க முடியாமல் போக இவனை துரத்தி விடுகிறார்கள்.  மறு நாள் இரவு தனியாக போய் அவள் சவக்குழியைத் தோண்டி  அவளுக்கு requiem வாசிக்கிறான்.

மற்ற சாவுகளை இவன் அலட்சியமாக பார்க்க இவள் சாவு இவனைப் படுத்துகிறது.

முடிவை யூகித்து விடலாம் என்றாலும் கரு வித்தியாசமாக இருந்தது.வழக்கமாக சாவு கானா பாட்டு இல்லாமல் டிரம்பெட் வித்தியாசம்.

தலைப்பு வித்தியாசமான தலைப்பு.பிணம் எடுக்கும் பாடையைக் குறிக்கிறது.அவனின் செல் காலர் டியூனும் “சாவு ட்ரம்பட் இசை”.சூப்பர்.

எல்லாமே நன்றாக இருந்தது. எனக்குப் பிடித்தது.

சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது நண்பன் வாங்கி தந்த (லட்)டீ.


Tuesday, September 14, 2010

சூப்பர்..super..சூப்பர்..super..சூப்பர்..super..சூப்பரப்பு.!

படம் ”சூப்பரா” இருக்குங்க,”சூப்பரா” ஒரு சீன்/பாட்டு பாத்தோம், ”சூப்பர்” டிஸ்கவுண்ட், ”சூப்பர்”  சேல்,” ”சூப்பர்”ஆட்டம்,”சூப்பர்”பதிவு”சூப்பர்”கிக்  ”சூப்பர்” கலெக்‌ஷன்,”சூப்பர்” பிகர்,”சூப்பர்” ஹிட், ஏர்டெல் “சூப்பர்” சிங்கர் இப்படியாக இந்த சொல்லை  லெப்ட் அண்ட் ரைட் பொழுது விடிஞ்சி பொழுது போனால் இதையே போட்டுத் துவைத்து எடுக்கிறோம்.

பேசிப்பேசியே  எல்லோரும் Superintendent ஆகிவிட்டோம்.

கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாகத்தான் இந்த சொல் ”சூப்பர்” லோல் படுகிறது என்பதாக என் யூகம்.

இதன் உண்மையான அர்த்தம் தெரியாமல்  superficialலாக எல்லாவற்றிக்கும் உபயோகிக்கிறோம்.பல இடங்களில் சும்மா பில்ட் அப் கொடுக்க உதவுகிறது.இதைப் பெற்றுக்கொண்டவர் சாதா மகிழ்ச்சியை விட சூப்பர் மகிழ்ச்சி ஆகிறார். சினிமா வட்டாரங்களில் இது அதிகம்.

அர்த்தம் என்று பார்த்தால் “வழக்கத்தை விட”என்றுதான் இதன் அகராதி அர்த்தம். வழக்கமாக “ஸ்டார்”கள் இருக்கிறார்கள் ஆனால் ரஜினி “சூப்பர் ஸ்டார்” அதே மாதிரி ” பாஸ்ட்  டிரெயின்” ”சூப்பர் பாஸ்ட் டிரெயின்”.

சுப்பராயான்களில் பெஸ்ட் சுப்பராயன் “சூப்பர்” சுப்பராயன்?


இந்தப் பொருளில்தான் நாம இதை  பெரும்பாலும் பயன் படுத்துகிறோமா?  இதன் அர்த்தம் நீர்த்துப்போய் “நல்லா இருக்கு” என்பதற்கு இணையாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.சாதாரண பேச்சு வழக்கில் “அத விட சூப்பர் என்னன்னா...” என்பது அடிக்கடி காணலாம்.

இதற்கு  சரியான இணை “ரொம்ப நல்லா இருக்கு”(அருமை?அற்புதம்?) .நாம் தமிழர்கள் அதனால் “சூப்பர்”என்றுதான் சொல்லுவோம். இது சிம்பிளாகவும் வசதியாகவும் இருக்கிறது. வாய் ரொம்ப வலிக்காது.இதன் அருகில் இருக்கும் ஸ்லாங்குகள்  ”செம்ம” “தூள்” “அட்டகாசம்” “பட்டைய கிளப்பிட்ட”.
 
இதன் மூலம் (லோகல் மூலம்) "superb" என்பதாக என் யூகம்.மூலம்
சினிமாக்காரர்கள். சூப்பருப்(பு) என்றால் ஏதோ காசிமேடு கெட்ட வார்த்தைப்போல் இருக்கிறது என்று “பி”யை எடுத்து  சைலாண்டாக்கி சூப்பர் ஆகிவிட்டார்கள்.
சூப்பர்..!இது எல்லா தர மக்களும் பேச வசதியாகவும் நாகரிகமாகவும் மற்றும் ”ஆங்கிலம் பேசும் பெருமை”யும் இருக்கிறது.

90களில் சூப்பருக்கு இணையாக ”தூள்” ”அமக்களம்””பின்னிட்டான்”.ஆனால் இது குறிபிட்ட வட்டத்தில்தான் பேசப்படும்.இதற்கு சமீபமாக ”கிளாசா” ”ஏஒன்”“ஏகிளாஸ்””எக்ஸ்லெண்ட்” பல வட்டங்களில் பேசப்பட்டதுண்டு.

80களில் மாணவர்கள் மற்றும் படித்த வட்டாரங்களில்  எதற்கெடுத்தாலும்  “fantastic" .சொல்லும்போது சிவாஜி கணேசன் உச்சரிப்பு.

ஒரு கவுண்டமணி ஜோக்:

கவுண்டமணி காதலியின் அப்பா: ஏண்டா... என் பொண்ணயே லவ் பண்றீயா? உண்டவீட்டுக்கே ரெண்டகம் பண்றீயா?

கவுண்டமணி: உண்ட வீட்டுக்கே ரெண்டகம்ன்னு எல்லோரும் சொல்றீங்க.அப்படின்னா என்னய்யா மீனிங்?

கவுண்டமணி காதலியின் அப்பா: எனக்கு தெரியாது. எல்லோரும் சொல்றாங்க. நானும் சொல்றோன்.

 கவுண்டமணி(நொந்துக்கொண்டே): ஏன்யா தெரியாததெல்லாம் சொல்றீங்க...?



Monday, September 13, 2010

கலைஞர் டிவி-குறும்படம் (12-09-10)

இந்த வாரம் குறும்படம் என்பதை விட “அருண் படம்”என்று சொல்லலாம். போட்டியில் கலந்துக்கொண்ட மூன்று குறும்பட இயக்குனர்கள் பெயர் அருண்.


தொகுப்பாளினி கீர்த்தி “கடல் கன்னி” உடையில் அசத்தினார். இந்த வாரம் சிறப்பு விருந்தினர் யாரும் இல்லை. என்னை யாரும் கூப்பிடவும் இல்லை(?).



போனவாரம் 5-9-10

படம்:பிரேதயா இயக்குனர்: அருண் வரதன்


சாவுக்குப் பிறகு வாழ்வு உண்டு என்று நம்பாத ஒரு பெண் மனைவியான பின் தன் சாவுக்கு(கொலை) பிறகு வாழ்வு உண்டு தெரிந்துக்கொள்வதுதான் கதை.


Life after death என்ற வித்தியாசமான கரு.


கணவன் தன் மூதாதையர் வாழ்ந்த வீடு என்று ஒரு அரதப்பழசான வீட்டிற்கு அழைத்துப்போய் ஒவ்வொரு மனைவிகளையும் கொல்கிறான். அவ்வாறே தானும் கொல்லப்படுவதை இறந்த பிறகு ஆவியாக பார்க்கிறாள்.


இயக்குனர் கேரளாவானதால் மனைவி பேச்சில் கேரள நெடி.வழக்கமான திகில் கதைக்கு உண்டான நடு ராத்திரி,மர்மமான சாவு,வெள்ளை உடை, புகை, கைகள்,”வீல்” கத்தல்.மாத்தி யோசிங்க..!


மேக்கிங்? ஏதோ மிஸ்ஸிங்.


பிரேதயா.... மனைவி பிரேதம் ஆனா பிறகு தெரிந்துக்கொள்வதாலா?


படம்: ஈசல் இயக்குனர்: அருண் ராஜா காமராஜ்


புரிந்துக்கொள்ளாத short tempered (காதலி " fuck" என்று பேசும் இடங்களில் வசனம் muting (டிங்)செய்யப்பட்டுள்ளது) காதலி, காதலனை “செத்துத் தொலை” என்று சபிக்க காதலன் மன உளைச்சலுக்கு ஆளாகி பைக்கில் வேகமாகப்போய் ஒரு முன் பின் தெரியாத இளைஞன் மீது மோதி முபிதெஇ சாகிறான்.காதலன் சாகவில்லை. சாவதற்கு சற்று முன்தான் அந்த முபிதெஇ செல்லில் ” ஐ லவ் யூ” (வேறு ஒரு பெண்)சொல்லி காதல் மலர்ந்த தருணம்.


இரண்டு காதல்களை மாறி மாறி குழப்பாமல் காட்டி அசத்தி இருந்தார். இறந்தவனின் காதலியை காட்டாமல் இருந்தது வித்தியாசம். ஆனால் ஏன் அவர் தமிங்கிலிஷ் பேசுகிறார்.


அருமையான படபிடிப்பு அண்ட் இசை.நடித்தவர்களும் அருமை.இறந்துப் போன காதலன் நடிப்பு அருமை.


எனக்குப் பிடித்தது.


படம்: பயத்திற்கு அப்பால் இயக்குனர்:கார்த்திக் பாலாஜி


Muscular Dystrophy (தசைகளை சுருங்க வைத்து மனிதனை இயங்கவிடாமல் முடக்கும் கொடுமையான நோய்) நோய் வந்த இளம் பெண் இனிமேல் வாழ்க்கை அவ்வளவுதான் என்று தன்னைப் ”போட்டுத்தள்ளும்படி”(???) கூலிப்படையிடம் பணம் கொடுக்கிறாள்.


ஆனால் அதன் தலைவன்(மிகவும் வயதானவர்) மறுக்கிறார்.பிடிவாதம் பிடிக்கிறார். அவரின் இளம் சிஷ்ய ரவுடிகள் அவரைப் படுத்தி ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள்.இரண்டு நாள் கழித்து அவளுக்கு அந்த நோய் இல்லை(தவறான டாக்டர் ரிப்போர்ட்) என்று தெரிய வருகிறது. உடனேகூலிப்படைத் தலைவரை சந்தித்து சொல்லவரும்போது அவர் இறந்துக் கிடக்கிறார்.


சரி அப்புறம்...?அங்கயே படம் முடிகிறது. பார்வையாளரின் யூகத்திற்கு சஸ்பென்ஸாக விட்டுவிடுகிறார்.


உயிர் துடிப்பான படத்தின் லோகேஷன்.ஆட்கள்.இசை.தற்கொலை செய்துக்கொள்ளாமல் தன்னைப்போட்டுத் தள்ளச்சொல்லும் பெண்ணின் வெகுளித்தனம் நன்றாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.


எனக்குப் பிடித்தது.


படம்: சின்னக்களவாணி இயக்குனர்:அருண்


புளுகுண்ணி காதலன் எல்லாமே ஓசியில் வாங்கி காதலிக்கும் இவன் தனக்கென திருடும் செல்லும் திறந்த சாக்கடையில் விழுந்து நொந்துப்போவதுதான் கதை(?????).


செல்லை மையப்படுத்தி கதையை நகர்த்தி அது சாக்கடையில் விழுந்து நொந்துப்போவது போல் காட்டி இருக்கவேண்டும்.

சுமார்.


காமெடி:


குறும்படத்திற்கு இசையும் முக்கியம் என்று காரமாக பேசிய மதன் இன்றைய குறும்படங்களின் சிறந்த இசைப் பற்றி குறிப்பிடவில்லை.

Sunday, September 12, 2010

மாலையில் யாரோ இனி மனதோடு?-ஸ்வர்ணலதா

கேரளாவிலிருந்து வந்து தமிழில் கூவிய குயில்களில் ஒன்று இன்று தன் இனிமையான கூவுதலை நிறுத்திவிட்டது.அறிமுகத்தில் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” பாரதியார் பாட்டைப் பாடி பாரதியைப் போலவே இளம் வயதில் மறைந்துவிட்டது. அந்த குயில் செல்வி ஸ்வர்ணலதா.

மெலடி குயினின்  உயிர் நுரையீரல் பிரச்சனையால் இன்று பிரிந்தது.

இசை மேதை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனால் முதலில்”நீதிக்குத்தண்டனை”(1987) படத்தில் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா”  பாடுவதற்கு வாய்க்களிப்பட்டார்.அப்போது அவருக்கு வயது 14.அந்தப் படத்தில் “சின்னஞ்சிறு” பாட்டை ராதிகா பாடுவதற்குப் பிளேபேக்காக இவர் பாடினார்.



பின்னர் மேஸ்ட்ரோவின் பாடல்களைப் பாடி உச்சக்கட்டத்திற்குப்போனார்.முக்கியமான பாட்டு “போவோமா ஊர்கோலம்”(சின்னத்தம்பி).”ராக்கம்மா கையத்தட்டு””ஆட்டமா நீரோட்டமா” ”மாலையில் யாரோ”என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

.அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இவருக்கு வாய்ப்பளித்து முன்னணியில் இருக்க வைத்தார்.”போறாளே பொன்னுத்தாயி”(கருத்தம்மா)”எவனோ ஒருவன் இருக்கின்றான்”(அலைப்பாயுதே) வித்தியாசமாக “அக்கடான்னு நாங்க”(இந்தியன்).

”போறாளே பொன்னுத்தாயி”ப் பாட்டுக்கு அவார்ட் வாங்கினார்.

இன்னும் நிறைய இசையமைப்பாளர்களின் பல பாட்டுக்களைப் பாடி உள்ளார்.சிலது சிறந்தது.பலது இறந்தது.

”சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” பாட்டு கேட்க:




வட இந்திய பாடகி ஷ்ரேயா கோஷலின் குரல் ஸ்வர்ணலதாவின் சாயலைக்கொண்டது.

பல  பதிவர்கள்   ஸ்வர்ணலதா வாழும் காலத்திலேயே அவரைப் பற்றி நிறைய பதிவுகள் எழுதி அவருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.


 என்னால் மறக்க முடியாத பாடல் மூன்று:

1.என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி

2. மாலையில் யாரோ - ஷத்ரியன்

3. ஊர் அடங்கும் வேளையிலே  - புதுப்பட்டி பொன்னுத்தாயி

ஸ்வர்ணலதா தன் குரலிலேயே என் அபிமான ”மாலையில் யாரோ”வை பாடுகிறார்.

Thursday, September 9, 2010

முரளி -ஒரு ஜீவன் மறைந்தது-எனக்காக அழ வேண்டாம்

கருப்பு ஒரு அழகு.காந்தல் ஒரு ருசி. ஏதோ ஒரு தி.ஜானகிராமன் கதையில் இந்த வரிகள் வரும்.கஞ்ச கருப்பு இல்லாமல்  நடிகர் முரளி ஒரு சாதா கருப்புதான்.ரஜனியும் கருப்புதான். ஒரு வசீகரம் இருக்கும்.முரளியிடம் ஒரு இன்னசெண்ட் முகபாவம் உண்டு.ஓவர் தம்மடித்த மாதிரி உதடுகள்.



இவரை Poor man"s Rajnikant என்பார்கள்.ரஜனி மாதிரி மோசமான தமிழ் உச்சரிப்பு இவரிடம் கிடையாது.
  
”இதயம்”(1991) படத்தின் மூலம் என்னைப் பாதித்தவர் முரளி.உளவியல் ரீதியில் பார்த்தால் கிட்டத்தட்ட  மனதில் காதலை  பூட்டி வைத்து உருகும் 1980 இளைஞர்களின் மனதை பிரதிபலித்தார்.(ஸ்டெப் கட்டிங் ஹேர் ஸ்டைல்) அப்படத்தில்..காதலில் கண்ணியம் இருந்தது.அதனால் ஹிட் ஆயிற்று.

சில காலம் ” மைக்மோகன்”னிடருந்து  மைக்கைக் கடன் வாங்கி ”மைக் முரளி”  யாகப் பாடல்களை பாடினார்.மிடில் கிளாஸ் கதாநாயகனாக வந்து தாக்கத்தை ஏற்படுத்தி மறைந்து விட்டார்.வருத்தம்தான்.

இப்ப இருக்கும் காலக்கட்டத்தில் இவர் மாதிரி உருவம் உள்ளவர்களுக்கு ஏத்த மாதிரி படங்கள் இப்ப இருக்கிறதா?

Wednesday, September 8, 2010

இளையராஜா-ஸ்ரீஏடுகொண்டல ஸ்வாமி டூயட் - பி.பி..ஸ்ரீநிவாஸ்


ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாளும் பத்மாவதி தாயாரும் பாடும் டூயட்.ஹிந்தோள் ராகம்? தெரிஞசா சொல்லுங்க பதிவர்களே..!

அருமையான தெலுங்கு மெலடி.மேஸ்ட்ரோவும் ஜானகியும் பாடுகிறார்கள். படம்: ஸ்ரீஏடுகொண்டல ஸ்வாமி.தமிழில் ஏழுமலையானின் மகிமை.படத்தில் கண்ணழகி பானுப்ரியா அண்ட் அருண்கோவில்.மற்ற பாடல்களும் இனிமை.


ஆரம்ப வயலின் இசை அருமை.நடுவில் வயலின் 2.58-3.15 அண்ட் 3.25-3.28 புல்லாங்குழல் அருமை.பெருமாளுக்கு தனி பக்தி இசைக்கோர்ப்பு?

தெலுங்குப் பக்திப் பாடல்களில் வரும் உணர்ச்சியை இப்பாடலிலும் காணலாம்.



என் அபிமான வெல்வெட் குரல் பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மேஸ்ட்ரோவின் இசையில் ஒரே ஒரு பாட்டுப் பாடியுள்ளார்.கிட்டத்தட்ட 30 வருடம் ஆகிவிட்டது.இன்னும் இனிமை மாறவில்லை. படம்: கடவுள் அமைத்த மேடை.(1979).
 


மேஸ்ட்ரோ இசையில்  இவர் குரலில் பாட்டு கேட்பது வித்தியாசமாக இருக்கிறது.

ரசிக்க வைக்கும் வரிகள்.

0.19-0.30 இசையில் ததும்பும் உணர்ச்சிகளை கவனிக்கவும்.பழையகிளாசிக் மேஸ்ட்ரோ  இசை.”தென்றலே நீ பேசு” பி.பி.ஸ்ரீனிவாஸ்காரு எடுக்கும் இடம் இனிமை.சிவரஞ்சனி ராகம் சாயல் சில இடஙகளில்.

”வார்த்தைகள் தேவையில்லை... அன்பை நாம் பாராட்ட” அருமையான இடம்.




ஏழுமலையான் மகிமை தமிழ் பாடல்கள் கேட்க:
(தெலுங்குப் பாடலின் தமிழ் வெர்ஷன் “எந்த ஜன்மம்”)

ஏழுமலையானின் மகிமை

ஸ்ரீஏடு கொண்டல சாமி சாங்கஸ் டவுன்லோட்

இளையராஜா - ஸ்ரீஏடுகொண்டல ஸ்வாமி டூயட் - பி.பி..ஸ்ரீநிவாஸ்


ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாளும் பத்மாவதி தாயாரும் பாடும் டூயட்.ஹிந்தோள் ராகம்? தெரிஞசா சொல்லுங்க பதிவர்களே..!

அருமையான தெலுங்கு மெலடி.மேஸ்ட்ரோவும் ஜானகியும் பாடுகிறார்கள். படம்: ஸ்ரீஏடுகொண்டல ஸ்வாமி.தமிழில் ஏழுமலையானின் மகிமை.படத்தில் கண்ணழகி பானுப்ரியா அண்ட் அருண்கோவில்.மற்ற பாடல்களும் இனிமை.


ஆரம்ப வயலின் இசை அருமை.நடுவில் வயலின் 2.58-3.15 அண்ட் 3.25-3.28 புல்லாங்குழல் அருமை.பெருமாளுக்கு தனி பக்தி இசைக்கோர்ப்பு?

தெலுங்குப் பக்திப் பாடல்களில் வரும் உணர்ச்சியை இப்பாடலிலும் காணலாம்.



என் அபிமான வெல்வெட் குரல் பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மேஸ்ட்ரோவின் இசையில் ஒரே ஒரு பாட்டுப் பாடியுள்ளார்.கிட்டத்தட்ட 30 வருடம் ஆகிவிட்டது.இன்னும் இனிமை மாறவில்லை. படம்: கடவுள் அமைத்த மேடை.(1979).
 


ராஜா இசையில்  இவர் குரலில் பாட்டு கேட்பது வித்தியாசமாக இருக்கிறது.

ரசிக்க வைக்கும் வரிகள்.

0.19-0.30 இசையில் ததும்பும் உணர்ச்சிகளை கவனிக்கவும்.பழையகிளாசிக் இளையராஜா இசை.”தென்றலே நீ பேசு” பி.பி.ஸ்ரீனிவாஸ்காரு எடுக்கும் இடம் இனிமை.சிவரஞ்சனி ராகம் சாயல் சில இடஙகளில்.

”வார்த்தைகள் தேவையில்லை... அன்பை நாம் பாராட்ட” அருமையான இடம்.




ஏழுமலையான் மகிமை தமிழ் பாடல்கள் கேட்க:
(தெலுங்குப் பாடலின் தமிழ் வெர்ஷன் “எந்த ஜன்மம்”)

ஏழுமலையானின் மகிமை

ஸ்ரீஏடு கொண்டல சாமி சாங்கஸ் டவுன்லோட்

பள்ளியில் பேன்சி டிரஸ் போட்டி - குழந்தைகள்

ரொம்ப நாளாக மனதில் இருந்த விஷயம் "தி ஹிந்து" வில் பத்தியாக வந்து விட்டது.அதில் சொல்லாத விஷயங்களும்  இருக்கிறது.

மாறுவேடம் என்றால் நினைவுக்கு வருவது  அந்த கால மன்னர்கள்,மந்திரிகள் “ மாதம் மும்மாரி பொழிகிறது” “மக்கள் குற்றம்  குறையில்லாமல் சுபிட்சமாக வாழ்கிறார்கள்” என்ற பீலாவை  அப்படியே மன்னர் நமப மாட்டார். ஒரு random  checkingக்காக மாறு வேடம் அணிந்து குடி மககளி்டம் கலந்து ரேஷன்(?)கடையில் எல்லாம் கிடைக்கிறதா Express Mallலில் பார்க்கிங்  பீஸ் எவ்வளவு என்று சோதிப்பார்.அப்பறமதான் ஓகே ஆவார்.

முதல்வர்(மன்னர்) கலைஞர் மாறுவேடம் பூண்டு கோபாலபுரத்திலிருந்து பொடிநடையாக போயஸ் கார்டன் பக்கம் போய் “ எங்க சீப் செகரெட்ரி .. ஸ்ரீபதி எவரிதிங் ஓகே என்கிறாரே “ என்று சொல்ல உடனே புரட்சித் தலைவி ஜெயலலிதா “ மைனாரிடி திமுக அரசு...” என்று ஆரம்பிக்க....

சரி பதிவுக்கு வருவோம.

பள்ளி/அபார்ட்மெண்ட் விழாக்களில் குழந்தைகளின் மாறுவேடப்போட்டியை(பேன்சி டிரஸ்) பார்க்கும் போது “என்ன அரைத்த மாவையே அரைக்கிறார்கள்” என்று தோன்றும். அடுத்தக் கட்டத்திற்கு நகரவில்லையா என்று?

நாரதர்,கம்பர்,ஒளவையார்,யேசு,சரஸ்வதி,திருவள்ளுவர் மற்றும் பலர்.... லேட்டஸ்ட்டாக அப்துல் கலாம் போன்ற வேடங்களிலேயே குழந்தைகள் மேடையில்  தோன்றி சூட்டிகையாக வசனம்/ஸ்லோகம் பேசி மேடையின் அந்தப் பக்கம் மெதுவாக இறங்குவார்கள்.பெற்றொர்கள் புல்லரிப்பார்கள்.சிறந்த வேடத்திற்குப் பரிசு கிடைக்கும்.


போட்டோ உதவி நன்றி “தி ஹிந்து”

எதற்கு இந்தப் போட்டி?

1.மேடைப் பயத்தைப் போக்க
2..புனைந்த வேடங்களின் சிறப்பை அறிந்துக்கொள்ள
3.இது ஒரு கலை
4.பொறுமை (/வேர்வை/கீரிடம்/விக்/டோப்பா/அரிக்கும் உடைகளை சுமப்பது)
5.உற்சாகம்/getogether/freak out
6.போட்டி மனபான்மை
7.தன்னம்பிக்கை
8.பெற்றோர்களின் ஆர்வத்தைத் தூண்ட
9.தானும் விழாவில் பங்கெடுக்கிறேன்

இதெல்லாம் பின்பற்றப்படுகிறதா? எது எப்படியோ......சிம்பிளாக சொன்னால்

தன் செல்லக் குழந்தையை ஏதோ ஒரு வேடத்தில் அழகுப்படுத்தி ,மேடையில் ஏற்றி, தானே போட்டோ(so cute....!) எடுத்து  ரசித்து பிறகாலத்தில் பெரிசான குழந்தை ரசிப்பதற்கு என்ற காரணமும்.பொழுதுபோக்கு?

சில காலமாக பல பள்ளிகள் மாறு வேடப் போட்டிகளை ஆதரிப்பதை நிறுத்தி விட்டார்கள்.

காரணம்?

இதில் குழந்தைகளை விட பெற்றோர்களின் திறமைகள்தான் ”மாறு வேடம்” இட்டு இருப்பதாக ஆய்ந்திருக்கிறார்கள்.அவர்கள்தான் மெனக்கெட்டு எல்லாம் செயகிறார்கள்.குழந்தைகளிடம் creativity இல்லை..அடுத்து ”போங்காட்டம்”ஆடும் நிறைய பெற்றோர்கள். மாறுவேட ஒப்பனையை தொழில்முறை கலைஞர்களிடம் அவட்சோர்ஸ் செய்து பரிசு வாங்கிவிடுவது.இதில் இரண்டு பேரிடமும் creativity இல்லாமல் போய்விடுகிறது.

வாடகைக்கு எடுக்கப்படும் ஆரோக்கியமற்ற உடைகள்,அனாவசிய செலவு,தன் முறை வருவதற்குள் பிஞ்சுகள் வேர்த்து விறுவிறுத்தல்  என்று இன்னும் சில காரணங்கள்.

சில பள்ளிகள் இதை போட்டியாக இல்லாமல் ஒரு நிகழ்ச்சியாக நடத்துகிறார்கள்.இதையும் தவிர்க்கிறார்கள் சில பள்ளிகள்.

குழந்தைப் பருவத்தில் போடும்  மாறுவேடங்கள் பிற்காலத்தில் வாழ்க்கையில் போடப்போகும் வித விதமான மாறுவேடங்களுக்கு ஒருமுன்னோட்டம்?

Monday, September 6, 2010

குறும்பட விமர்சனம் - கலைஞர் டிவி - 05-09-10

குறும்பட விமர்சனம் - கலைஞர் டிவி - 05-09-10

                            
இந்த வார சிறப்பு விருந்தினர் - ஆர்.கே.செல்வமணி

இந்த வாரமும் ஓகே ரகம்தான்.

 போன வாரம்

1.படம்:"கானல்"  இயக்குனர்: சுப்பராஜு - காதல் கதை

இளம் புகைப்படக் கலைஞனின் காதல் தோல்வியடைந்து (காதலியின் அப்பா எதிர்ப்பு)தற்கொலை செய்துகொள்வதுதான் கதை.

புகைப்படக் கலைஞன் கேமரா மூலம் மென்மையாக சொல்லப்பட்டது. காதலன் காதலி நடிப்பு அருமை.வழக்கமாக ஸ்டைலான குர்தி சல்வாருடன் தலையை கலைத்து விட்டுக்கொண்டு காதில் பேஷன் நகைகள் கையில் செல்போன் இல்லாத புடவைக் காதலி வித்தியாசம்.

அடுத்த வித்தியாசம் கரும்பு சாப்பிட்டபடி காதலியுடன் உரையாடல்.பாடல் கூட உண்டு.வித்தியாசமாக "குட் நைட்" மஸ்கிட்டோ விஷம் குடித்து சாகிறார்.அதையே தன் காமிராவில் எடுத்துக்கொள்கிறார்.

எனக்குப்பிடித்திருந்தது.

"நீ கோபத்துல கூட அழகா இருக்க". ஈஸ்ட் இண்டியா கம்பெனி காலத்திலிருந்து காதலன் சொல்லும்  இத்துப்போன வசனம். மாத்தி யோசிங்கப்பா..?

2.படம்:"என் உயிர் சக்தி"  இயக்குனர்: ராகேஷ் - காதல் கதை

அம்மா இல்லாத வளர்ப்பு மகனின் முதலாம் ஆண்டு திருமண நிறைவு.அன்று எப்படி தன் காதலை ஜெயித்து அப்பாவிடம் சம்மதம் வாங்கிக் காதலி சக்தியை (பக்கத்து வீடு) திருமணம் செய்துக் கொண்டேன் என்பதுதான் கதை.

காதலியை யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்து கடைசியில் காதலி ஒரு ஆண்.இது ஒரு ஒரினப்புணர்ச்சிக் காதல்.ரொம்ப போல்டு தீம்.இயக்குனரின் முதல் குறும்படம்.

என்னால் ரசிக்க முடியவில்லை.காரணம் ஒரு அதிர்ச்சி மதிப்பு(shock value)மற்றும் டிவிஸ்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.

அப்பாவிற்கும் மகனுக்கும் நடக்கும் உரையாடலில் பின்னணியில் ஏன் காந்தி படம் fade outல்  காட்டப்படுகிறது.

3. படம்:"ரவ்லெட்"(Roulette) இயக்குனர்:ஸ்ரீகாந்த் - பொது

ஒருவன் தன்னைப் புத்திசாலியாக நினைத்துக்கொண்டு ஏமாறுவதுதான் கதை.இது பிரிட்டிஷ்
எழுத்தாளர் சகியின் சிறுகதை. நான் சிறுவயதில் படித்தக் கதை.

பார்க்கில் ஒரு இளைஞன் உட்கார்ந்துக்கொண்டு பேப்பரில் கிராஸ் வேர்டு புதிர் போட்டுக்கொண்டிருக்கிறான்.பக்கத்தில் ஒரு வயதானவர்.சிறிது நேரத்தில் அவர் எழுந்துப் போய்விடுகிறார்.

அந்த இடத்திறகு வேறு ஒரு இளைஞன் வந்து "ஊருக்குப் புதுசு" என்றும், லாட்ஜில் தங்கி இருந்து சோப் வாங்க வெளியே வந்து லாட்ஜின் அட்ரசை மறந்துவிட்டதாக சொல்லி நூறு ரூபாய் பணம் கேட்கிறான். நம்ப முடியாமல் சில கேள்விகள் கேட்டு கடைசியில் வாங்கிய சோப்பைக் காட்டினால் நூறு ரூபாய் பணம் தருவதாக சொலகிறான்.

அதையும் தொலைத்துவிட்டதாகச் சொல்கிறான். பணம் தர முடியாது என்று சொல்ல அவன் போய் விடுகிறான்.அவன் போனதும் அவன் உட்கார்ந்த இடத்தின் பெஞ்சுக்குக் கிழே ஒரு கேரி பாக்கில் ஒரு லைப்பாய் சோப்பு கிடக்கிறது.

ஆஹா... இவனைத் தவறாக நினைத்துவிட்டோமே வருத்தப்பட்டு  அவனைத் தேடிக் கண்டுபிடித்து சோப்பை கொடுத்து நூறு ரூபாய் பணமும் கொடுக்கிறான்.

கொஞ்ச நேரம் கழித்து அந்த வயதானவர்  வருகிறார்.அவன் அருகில் வந்து எதையோ தேடிவிட்டு, அவனைப் பார்த்து " லைப்பாய் சோப்பு ஒன்னு கேரி பாக்கல வச்சுருந்தேன்.."

நன்றாக எடுக்கப்பட்டு இருந்தது. குறும்படத்தைச் சொந்த கதையில் எடுப்பது நல்லது.

4. படம்:"சிக்கிக்கு சிக்கிக்கிச்சு"  இயக்குனர்: ராஜேஷ்குமார்  -காதல் கதை

கதை அழகில்லாத இளைஞன் ஒருவனுக்கு ஒருத்தியை  காதலித்து தன் பைக்  பில்லியனில் அவளை உட்கார வைத்துக் கொண்டு ஊர் சுற்ற வேண்டும் என்பது லட்சியம்.

எந்தப் பெண்ணும் சிக்கவில்லை...ஒரு நாள் ICICI கிரெடிட் கார்ட் விறகும் பெண் பூஜா போனில் பேச அவளையே காதலிப்பதாக சொல்கிறான்.அவளும் ஒகே என்கிறாள்..இரண்டு நாள் கழித்து அவளை ஆவலோடு ச்சந்திக்கிறான்.ஆனால் அவள் கருப்பாக கண்ணாடி அணிந்து அவலட்சணமாக இருக்கிறாள்.

நொந்துப் போகிறான்.இருந்தும் ஓகே என்கிறான்.பூஜா தன் அழகைப்  பல முறைச்சொல்லிஉண்மையாக காதலிக்கிறாயா என்று கேட்கிறாள்.ஆமாம் என்கிறான்.

அவனின் நேர்மையில் மகிழ்ந்துப் போய் "நான்  பூஜா அல்ல..!" என்று சொல்ல பின்னால் உண்மையான பூஜா (முதல் பூஜாவே பெட்டர்)) வருகிறாள்.உன் காதலின் நேர்மையை டெஸ்ட் செய்யத்தான் இது மாதிரி நாடகம் என்கிறாள்."நீ பாஸ் செய்துவிட்டாய் அதனால் உன்னைக் காதலிக்கிறேன்" என்கிறாள்.

நீதி???

சிக்கி "திடீர்" நேர்மை செட்டாகவில்லை.சுமார் படம்.

சிறப்புப  படமாக  என் உயிர் சக்தி தேர்ந்த்தெடுக்கப்பட்டது.

Thursday, September 2, 2010

ரசித்த கவிதை- ஆத்மாநாம்

 திருஷ்டி

பானைத்தலை சாய்த்து
புல் பிதுங்கும் கைகளோடு
சட்டைப் பொத்தான்  வெடிக்க
தொப்பையில் புல் தெரிய தனியாய்
யாருன்னைத் தூக்கில் போட்டார்
சணல்  கயிற்றால் கட்டிப் போட்டு
உன் காற்சட்டை தருவேன்
சென்றுன் எதிரியைத் தேடு

--------------------------------------------
நன்றி:ஆத்மா நாம்  படைப்புக்கள்  - காலச்சுவடு


படிப்பவர்களே....

" சணல்  கயிற்றால் கட்டிப் போட்டு"- இந்த இடம் புரியவில்லை .என்ன அர்த்தம்?

Wednesday, September 1, 2010

Bobby படம் தமிழ் நாட்டைப் படுத்திய பாடு

1973-74லில் தமிழ் நாட்டில் காதுகுத்து முதல் கல்யாணம் வரை முதலில் கடவுள் வாழ்த்தாக ”வினாயகனே வினை” (சில சமயம் பாதியிலேயே ரிக்கார்ட்பிளேட்டை புடுங்கி விடுவார்கள்) போட்டுவிட்டு அடுத்து அவசரமாக “பாகர் சே செய்க்கோ அந்தர்..... ஹம் தும் ஏக் கம்ரே  மேன் பந்த் ஹோ” இதற்கடுத்து எல்லோரும் ஆவலாக எதிர்பார்க்கும் ”மே ஷாயார் தோ நஹி” ஷ்ஷ்ஷ்ஷ் என்ற சத்தத்துடன் ஆரம்பிக்கும். 


பாட்டைப் போட்டுவிட்டு சவுண்ட் சர்வீஸ்காரர் இடுப்பில் கைவைத்து எல்லோரையும் ஒரு முறைப் பார்த்து புன்னகைப்பார்.ஜனங்கள் பதிலுக்குப் புல்லரிப்பார்கள்.

செந்தமிழ் மாநாடு கொண்டாடிய தமிழ் நாடு புல்லரித்து,புளாங்கிதம் அடைந்து இரும்பூது எய்தது Bobbyயின் பாடல்களைக் கேட்டு.படத்தையும் பார்த்து. இந்தியாவே புரட்டியது?

நானும்பள்ளிமாணவனாக புல்லரித்தேன்.எங்கள் வீட்டு வேலைகாரியும் ஹம் செய்துக்கொண்டே பாத்திரம்  தேய்ப்பார்.

பாட்டின் வரிகள்/வசனங்கள் யாருக்காவது புரிந்திருக்குமா?

அட Bobbyகளா..!


Bobby என்ற பெயர் ஜெர்மனி மூலம் என்று யூகிக்கிறேன்.

பாடல்களில்  “அக்கார்டியன்”(Accordian) இசைக்கருவி நாதங்கள் நிறைய இருக்கும். (இது நம்மூர் ஹாண்டி digitalized ஹார்மோனியம் தான்) காரணம் படத்தின் நாயகி கோவா ஆங்கிலோ இந்திய பெண்.பெயர் Bobby Braganza.

ஏன் Bobby படுத்தியது?


காரணம்  பிரஷ்னஸ்.

அப்போது “டக் டக் டக் இது  மனதுக்குத் தாளம்” என்று பாடல் போட்டு நம்மவூர் இளசுகள்(சிவாஜி-வாணிஸ்ரீ/எம்ஜியார்-கே.ஆர்.விஜயா) நிறைய காதல் செய்துக் கொண்டிருந்தார்கள்.இதைத் தவிர இன்னும் சில இளசுகள் ”டோப்பா” வைத்துக்கொண்டு கருப்பு வெள்ளையில் பவுடர் அப்பிக்கொண்டு காதல் செய்தார்கள்.

 









கே.வி.மகாதேவன்/ விஸ்வனாதன் போன்றவர்களின்  தேய்பிறை இசை அலுத்துப்போனவர்களுக்கு இதன் இசை பிடிததுப் போனது. அப்போதே கல்லூரி மாணவர்கள் இந்தி இசையைக் கேட்டு காலரைத் தூக்கி விட்டுகொள்வார்கள். தமிழ்ப் பாடல்கள் கேட்டால்அவமானமாக நினைத்தார்கள்.மன்சாயே கீத்,பினாகா கீத் மாலா, பூல் குலே குல்ஷன்... போன்ற நிகழ்ச்சிகளுக்கு தமிழ் நாட்டில் ரசிகர்கள் அதிகம்.

ஆனால இது...?

இளசு/தளிர் வயசு காதல்.ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா.இருவரும் பிஞ்சு தக்காளிப் போல இளசுகள்.(ரிஷிகபூரை டிம்பிள் கபாடியா முதன் முதலாக சந்திக்கும் இடம் மனதைக் கவரும் இடம்)  சுண்டினால ரத்தச்சிவப்பு பஞ்சாபி வெள்ளைத் தோல் நாயகர்கள்.ரிஷிகபூர் சட்டையை மீறி தெரியும் புசு புசு முடி.கலர் படம்.ரிச் இசை.ரிச்சான கலர்.ரிச் லொகேஷன்ஷேன்.

மிக மிக மிக முக்கியமாக டிம்பிள் சீனுக்கு சீன் அணிந்த கவர்ச்சி உடைகள்.அதற்காகவே அவர் கோவா ஆங்கிலோ இந்தியப் பெண்ணாகப் படத்தில் படைக்கப்பட்டார்.படம் முடிந்ததும் ”அய்யோ அம்மா” என்று பல இளைஞர்கள் அலறிக்கொண்டு வெளியே வந்தார்கள்.


தன் படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு எல்லாம் பெரிதாக இருக்க வேண்டும் என்று ராஜ்கபூர் விரும்புவாராம்.ஜீனத் அமனும் (சத்தியம் சிவம் சுந்தரம்) அவர் கண்டுப்பிடிப்பு.
 
இதன் பின்னணி இசையும் ஒரு காரணம்.ஆட்டுக்கார அலமேலு படத்தில்  சங்கர் கணேஷ் சுட்டு அடித்திருப்பார்.Mujhe Kuch Kehna Hai என்ற பாடல் எஸ்.ஏ.ராஜ்குமார் சுட்டு ஒரு படத்தில் போட்டிருப்பார்.ஆனால் இப்போது யோசித்தால் டிபிக்கல் இந்தி இசை.

இசை லஷ்மிகாந்த் பியாரிலால்.ராஜ்கபூரின் பெரிய தயாரிப்பு.இதில் பாடும் ஷைலேந்திரா சிங் புது முகம்.அருமையான குரல்.எனக்குப் பிடித்தப் பாடல்கள் மூன்று.

கதை?

ஒரு சாதாரண காதல் கதை.”முதல் பார்வைக் காதல்” கதை.ஒரு ஏழை பெண்ணுக்கும் பணக்கார இளைஞனுக்கும் மலரும் காதல்.வீட்டில் எதிர்ப்பு.கடைசியில் சேர்வார்கள்.

சென்னை மிட்லெண்ட் தியேட்டரில் ஓடு ஓடு என்று மராத்தான் ஓட்டம் ஓடியது.இத்ன் லாபத்தில்தான் “லியோ” மினி தியேட்டர் கட்டினதாக சொல்வார்கள்.படுத்திய படுத்தலில் குமுதம் இதன் கதையை தொடராக வெளியிட்டது. இதன் பாதிப்பில் லஸ் கார்னரில்  ஒரு துணிக் கடையின் பெயர் Bobby.சட்டைக்கு Bobby காலர் (நாய் காது டைப்) அப்போது பேஷன்.ரிஷிகபூரின் ஹேர்ஸ்டைலை முக்கியமாக கிருதாவை வரவழைக்க முயன்று தோல்வி அடைந்தேன்.

சுஜாதா மிஸ் தமிழ் தாயே நமஸ்காரம் புத்தகத்தில் (பின்னாளில் படித்தது) ஒரு கவிதையை சுட்டி இருந்தார்.அது.....

கார்டு கவர்களில்
இந்தி எழுத்தை
நன்றாய் அடித்து
மசியால் மெழுகி
அஞ்சல் செய்யும்
தனித்தமிழ் அன்பர்
”பாபி” பார்த்ததும்
இருடிக் கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
(ரகரமும் டகரமும் மொழி
முதல் வாரா)
அருமையாக நடித்தனர்...
என எழுதுகிறராம்

ரிஷிகபூரின் அடுத்தப் படம் “ரபூ சக்கர்”.கதாநாயகி நீட்டு சிங்.ஓடவில்லை.காரணம் பாபியின் ஹேங் ஓவர் தெளியாமல் இருந்ததுதான்.
 
இதற்கு பிறகும் இந்திப்பட மோகம் மூணு நாலு வருஷம் இருந்தது.

பாடல்கள் கேட்க:

Bobby

அப்போது மத்தியான வேளைகளில் தமிழ்(மலையாள?) டீக்கடைகளில் ட்ரான்சிஸ்டரில் இரைச்சலுடன் காற்றில் அலைந்துவரும்  லதா மங்கேஷ்கரின் பாட்டு காதில் இன்னும் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது.