Saturday, March 20, 2010

என்.டி.ஆர். டான்ஸ்லு பிசியோதெரபி ஸ்டெப்லு

 டீவியில் சானல் மாற்றிக்கொண்டே வரும்போது  திடீரென புல்லரிக்க வைக்கும்  பழைய தெலுங்கு சினிமா  பாடல்கள் தெலுங்கு சேனல்களில் வரும். என்.டி.ஆரின் ”டான்ஸ்லு” குத்துப் பாடல்கள்.

நம்ம புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த ஆட்டம் ஆட முடியுமா?கையைத்தான் அப்படியும் இப்படியும் ஆட்டுவார்.ஆனால் ”அண்ணவாரு...!கம்புயூட்டர் ஸ்டெப்லு பாக உந்தி !

இந்த வயதில் என்டிஆருக்கு என்ன எனர்ஜி.பின்னி எடுக்கிறார்.இவருக்கு ஈடு கொடுத்து இவருக்கு ”காட்டி காட்டி” பின்னிஎடுப்பவர் ஸ்ரீதேவி.இந்தப் ” பாஸ்ட்லு”பாடல்களைப் பாட மொத்த காண்ட்ராக்ட் மனவாடு எஸ்.பி.பி &  மனவாடி சுசிலா.

ஆனா சுசிலாகாரு( காரி?)  நம்ம ஊர்ல பாடும்போது ”முத்துமணி மாலை” போன்ற ”ஹோம்லிலு” பாடல்கள்தான் பாடுவார்.அஃதே ஸ்ரீதேவியும்.

இந்த பாடலுகென்று சில சாமுத்திரிகா லட்சணங்கள் உண்டு.முந்தானையைப் பிடித்து இழுப்பது,பின் (பெண்)பக்கத்தை கண்டிப்பாக மினிமம் ஐந்து முறைக்கு மேலாக ஆட்டுவது அல்லது காட்டுவது,பிசியோதரபி ஸ்டெப்ஸ்,பெல்பாட்டம்,தொப்பி,கூலிங்கிளாஸ்,கட்கோட்

கண்டப்பாக பாக்கியராஜின் டிரில் மாஸ்டர் ஸ்டெப்ஸ்.

குரூரமான செக்ஸ்ஸும் (crude sex)உச்சக்கட்ட காமெடியும் பாட்டில் கலந்துக் கொடுக்க இவர்களால்தான் முடியும்.கிட்டத்தட்ட ரெண்டேமுக்கால் எக்ஸ்.

சட்டைக்கும்(சில) பட்டன் போடல.மேல இருக்கிற ஜெர்கின்(கட் கோட்) பட்டனும் போடல. தல ...!ஹேர் ஸ்டைல் ஸ்பிகைக்ஸா?


கிழ் வரும் வீடியோவில் எ ன் டிஆர் குறும்பாக கண்ணடிப்பது எப்படி?

NTR & Sridevi in Kondaveeti Simham

 இந்த வீடியோவில் ஸ்ரீதேவிக்கும் என்டிஆருகும் நடக்கும் காதல் உரையாடலைக் கேளுங்கள்.என்டிஆர் ”அம்மா..தொங்கா” சொல்லும் இடம் ” விண்ணைத்தாண்டி வருவயா” காதலையே மிஞ்சுகிறது.

vetagadu அம்மா..தொங்கா

 "ஏ..பில்ல உந்தி..”

Naa Desam - Challa Pallilo  ஜெயசுதா-என்.டி.ஆர்

ஆனால் இப்போது ஆந்திரா இந்த “ஸ்டெப்லு” கூத்தெல்லாம் கடந்து சாப்ட்வேரில் முன்னேறி எங்கோ போய்விட்டார்கள்.


13 comments:

  1. பொறுப்பில்லாமல் இப்படியெல்லாம் டான்ஸ் ஆடி கூத்தடித்தால்தான் ஆந்திராவில் பல இளைஞர்கள் நக்சலைட்டாக மாறிவிட்டார்கள்....

    ReplyDelete
  2. கூடவே காந்தர்வ வேடங்களையும்,விட்டலாச்சார்யாவின் பங்களிப்பையும் சொல்லியிருக்கலாம்.அப்புறம் படத்தில் இருக்கும் டாலடிக்கும் சிவப்பு:)

    ReplyDelete
  3. கந்தாவா காந்தாவா:)

    அப்ப திரைப்படம்,ஹோட்டல்(அமெரிக்காவிலும் மோட்டல்கள் என்று கேள்வி),விவசாயம்ன்னு கொடி கட்டிப் பறக்கிறது?

    ReplyDelete
  4. கருத்துக்கு நன்றி காந்தா.

    ReplyDelete
  5. ராஜ நடராஜன் said...

    // கூடவே காந்தர்வ வேடங்களையும்,
    விட்டலாச்சார்யாவின்பங்களிப்பையும்சொல்லியிருக்கலாம்.அப்புறம் படத்தில் இருக்கும் டாலடிக்கும் சிவப்பு:)//

    காந்தாராவ்,விட்டலா இவர்கள் எல்லாம்
    மாயாஜால படங்ள்தான்.இந்த மாதிரி டான்ஸ் இல்லை என்று நினைக்கிறேன்.

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  6. ஹா..ஹா... காமெடி பதிவுலு...

    ReplyDelete
  7. தமிழ்ப்பறவை said...

    //ஹா..ஹா... காமெடி பதிவுலு.//

    நன்றி

    ReplyDelete
  8. என்னங்க இப்படி பிரிச்சி மேஞ்சிருகீங்க, நல்ல பதிவு நண்பரே உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நன்றி சசிகுமார்.

    ReplyDelete
  10. ஹா ஹா ஹா! படிக்க சிரிப்பாக இருந்தது! அப்போதெல்லாம் சித்ரமாலாவில் தெலுங்கு பாடல்களை மாதத்திற்கு ஒருமுறை போடுவார்கள்! நாங்கள் அதை “ப்ளூ ஃபிலிம்” என்று கிண்டல் செய்வோம்! ஒருமுறை, என்.டி.ஆர். மற்றும் ஜெயப்பிரதாவின் டான்ஸை டி.வி.யில் பார்த்துவிட்டு அதன்பிறகு சித்ரமாலாவை பார்ப்பதை விட்டுவிட்டேன்! அப்பட்டமான உடலுறவு ஸ்டெப்கள்!

    ஸ்டெப்கள் என்றதும் ஞாபகம் வருவது “சலங்கை ஒலி” படத்தில் “வான் போலே” பாட்டிற்கு முன்னால் டைரக்டர் கேரக்டர் “ஸ்டெப்ஸு ஸ்டெப்ஸு” என்று பறப்பான்!

    BTW, தமிழ்படங்களிலும் வந்திருக்கிறது இந்த மாதிரி ஸ்டெப்ஸ்! புலியூர் சரோஜா கோரியோகிராஃபி செய்த பாட்டுக்களிலும் குறிப்பாக முத்து படத்தில் “தில்லானா தில்லானா” பாட்டில் “மண்ணோடு சேராமல் மிதக்கின்றேன் உன்னாலே” வரிகளில் ரஜினியும் மீனாவும் ஆடுவது அப்பட்டமான தெலுங்குலு ஸ்டைலு!

    ReplyDelete
  11. ரவிஷா said...
    //நாங்கள் அதை “ப்ளூ ஃபிலிம்” என்று கிண்டல் செய்வோம்! ஒருமுறை//
    ஆமாம்.எண்டிஆரின் ஒருபுராணப்படம் இருக்கிறது.அதில் ஒரு பாட்டு XXXXX.

    வெயில்,மழை,காரம்,செக்ஸ் எல்லாம் தூக்கல்தான் இங்கு.

    நம்ம எம்ஜியாரும் இதே கேஸ்தான்.இதைப் பற்றியும் பதிவில் எழுதினேன்.பிறகு வேண்டாம் என்று டிலிட் செய்துவிட்டேன்.

    // “சலங்கை ஒலி” படத்தில் “வான் போலே” பாட்டிற்கு //

    நக்கல் விடுவார்கள்.

    // “தில்லானா தில்லானா” பாட்டில் “மண்ணோடு சேராமல் மிதக்கின்றேன் உன்னாலே” வரிகளில் ரஜினியும் மீனாவும் ஆடுவது அப்பட்டமான தெலுங்குலு ஸ்டைலு!//

    கொஞ்சம் நாகரிகமாக இருக்கும்.

    நன்றி

    ReplyDelete
  12. வீடியோக்கள் சோதிக்கின்றன. இருப்பினும் கொடுமையை எழுத்திலேயே புரிந்துகொள்ளமுடிகிறது. :-(

    ReplyDelete
  13. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //வீடியோக்கள் சோதிக்கின்றன//

    யூ டுயூபில் தனியாகப் பார்க்கலாம்.

    நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!