Thursday, March 4, 2010

ஓ...! பரமஹம்ஸ நித்யானந்(ரஞ்சி)தா..!

”என்னைக் கட்டுப்படுத்த முயற்சித்து மீண்டும் மீண்டும் தோற்கிறேனே!!” சரி நம்மால்தான் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று விட்டால், என் ஆசைகள் என்னை வாட்டி, வதைத்துவிடுகின்றன.நான் என்னதான் செய்வது? வீரனாகவும் இருக்க முடியவில்லை. கோழையாகவும் இருக்க முடியவில்லை.

இனி நான் தோற்கக்கூடாது.அதற்கு எனக்கு வழி வேண்டும் என்ற ஆழ்ந்த தேடுதல் உடைய ஒவ்வொருவருக்குமான வெற்றிக்கட்டுரை இது”

- ”இனி தோற்கமாட்டீர்கள்!” பரமஹம்ஸ நித்யானந்தா- பாகம்-137,குமுதம் 24-02-2010

வார வாரம் “குட்டி”க் கதைகளை சொன்னவர் "ஜட்டி”த்தெரிய தோற்றுவிட்டார்.நிஜங்கள் புனைவுகளை விட வினோதமானவை.(Facts are stranger than fiction).

ஞானியும் படகுக்காரனும் என்ற ஒரு ஞானக் கதை மிகப் பிரபலம்.படகுக்காரனுடன் பிரயாணம் செய்யும் ஒரு துறவி அவனிடம் “இது தெரியுமா, அது தெரியுமா,இது படித்திருக்கிறாயா,அது படித்திருக்கிறாயா,என்று இறுமாப்புடன் கேட்பார். அவன் எல்லாவற்றிற்கும்”இல்லை” என்பான்.

ஒவ்வொரு ”இல்லை”க்கும் “அடப்பாவி...பல வருட வாழ்க்கையை வீணடித்து விட்டாயே! தொலைத்துவிட்டாயே என்பார்!”.

கொஞ்ச தூரம் போனதும் “சாமி...உங்களுக்கு நீச்சல் தெரியுமா” படகுக்காரன் கேட்பான். “தெரியாதே...” என்பார்.”இந்த சின்ன விஷயம் தெரியதனால உங்க முழு வாழ்க்கையே அம்பேல் ஆகப்போவுது..படகுல ஓட்டை.தண்ணீ உள்ள வருது. நான் எஸ்கேப்’

எல்லாவற்றையும் உபதேசித்த நித்யானந்தர் "sting operation"என்ற ஒன்று இருப்பது தெரியாமல் நாடோடித் தென்றலாய் உள்ள வந்த ரஞ்சிதா “சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே.... ஓ.... மதி! ஓ....மதி!” பாடுவது(இங்கேயேயும் மேஸ்ட்ரோவா?) உலக முழுவதும் ரீலிசாகி வழித்துக்கொண்டு சிரித்தது உலகம்.













ஆசிரம் என்பதற்கு ரொம்ப ”சிரமம்” எடுத்துக்கொள்ளும் நிலமை என்பார்கள்.

இவர் ரொம்ப ஈசியாகஎடுத்துக்கொண்டுவிட்டார்.துறவு நிலை என்பது அவ்வளவு சுலபம் அல்ல.அதற்குத்தான் பிரம்மச்சரியம்,கிருகஸ்தன்(குடும்பவாழ்க்கை),வானபிரஸ்தம்(காட்டில் மனைவியோடு வாழ்வது), என்று மூன்று நிலைகளில் பயணித்து நாலாவது நிலையான சன்னியாசம்(துறவு) வர வேண்டும்.

அடுத்த உச்சக் கட்ட காமெடி.வாழ்க்கையில் எல்லாவற்றையும் வண்டி வண்டியாக நெட்டுரு செய்து உபதேசித்த போலி சாமியார் விவேகமில்லாமல் ”ஆத்மா” வைவிட “உடம்பு”தான் முக்கியம் என்று தலை மறைவு ஆகிவிட்டார்.

உடம்புதான் “பிரத்யக்‌ஷமாக” கண்ணுக்கு தெரிகிறது அவருக்கு.ரொம்ப நாளாக வெயிட் லிஸ்டில் இருந்து மாட்டிக்கொண்டார்.

எனக்கும் கடவுள் பக்தி உண்டு.என் தாத்தா காலத்திலிருந்து சீரியஸ் முரட்டு பக்தி லெவல் கொஞ்சம் கொஞ்சமாக உருகி “போலிபைனான்ஸ் கம்பெனி” “போலிச் சாமியார்” பற்றிய விழிப்புணர்ச்சியானால் புத்திசாலித்தனமான பக்தியாகி நேரடி கடவுள் பிரார்த்தனைதான்.

1.“இடைத் தரகர்கள் அனுமதியில்லை”

2. “சாமியார்களுக்கு அனுமதியில்லை
கண்டிப்பாக Split A/C சாமியார்களுக்கு”


எங்கள் மனதில் போர்டு மாட்டிக்கொண்டு கிட்டத்தட்ட 20 வருடம் ஆகிவிட்டது.

ஆனால் மறக்காமல் Split A/C  போலி சாமியார்களை டீவியில் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பதுண்டு.வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்.இதற்காக நன்றி செலுத்துவதுண்டு இவர்களுக்கு.

.

6 comments:

  1. ஆனா இந்த முறை செய்தியைப் பார்த்த போது சிரிப்பு வரவில்லை, கூச்சம்தான் வந்தது..

    ReplyDelete
  2. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //ஆனா இந்த முறை செய்தியைப் பார்த்த போது சிரிப்பு வரவில்லை, கூச்சம்தான் வந்தது//

    நான் சொல்வது தினமும் டீவியில் வரும் போலிச் சாமியார்களைப் பற்றி.


    நன்றி.

    ReplyDelete
  3. இன்னமும் மாட்ட வேண்டிய ஆட்கள் நிறைய.

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா! நல்ல பதிவு! **** அது ஜட்டி இல்லை ஸ்வாமி! கௌபீணம்! இவ்வளவு உன்னிப்பாக கவனித்தீரான்னு கேக்காதேயும்! எதேச்சையாக தினகரனில் அந்த ஃபோட்டோவை போட்டுவிட்டு கேப்ஷனாக “இப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டனே”ன்னு போட்டிருந்தார்கள்!

    ReplyDelete
  5. ஸ்ரீ said...

    //இன்னமும் மாட்ட வேண்டிய ஆட்கள் நிறைய//

    ஒரு பக்கம் வேதனையா இருக்கு.

    ReplyDelete
  6. ரவிஷா said...

    //ஹா ஹா ஹா! நல்ல பதிவு! **** அது ஜட்டி இல்லை ஸ்வாமி! கௌபீணம்! இவ்வளவு உன்னிப்பாக கவனித்தீரான்னு கேக்காதேயும்! எதேச்சையாக தினகரனில் அந்த ஃபோட்டோவை போட்டுவிட்டு கேப்ஷனாக “இப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டனே”ன்னு போட்டிருந்தார்கள்!//



    ஹா ஹா ஹாஹா ஹா ஹாஹா ஹா ஹா!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!