Saturday, February 28, 2009
பதிவர்களே வாழ்த்துக்கள்!
ஒரு பெண்ணின் கர்சீப் - கவிதை
Thursday, February 26, 2009
சின்னத்திரை நட்சத்திரங்கள் -துரதிரஷ்டம்
நான் கடவுள் - படம் - நிறைகள் - குறைகள்
Saturday, February 21, 2009
காக்கைச் சிறகினிலே........... ஒரு கவிதை
Tuesday, February 10, 2009
ரிவால்வர் ரீட்டா- கன் பைட் காஞ்சனா
Monday, February 9, 2009
ஸ்பேம் மெயில் கவிதைகள்
மற்றவை நேரில்
வயது 19
சொந்த ஊர் Coasta-de-reef-uch
அழகாக இருப்பேன்.
நான் ஒரு அனாதை
அப்பாவை விஷம் வைத்து கொன்றார்கள்
அம்மா அப்பாவின் பிரிவால்
கேன்சர் வந்து மரித்து விட்டாள்
100 மில்லியன் டாலருக்கு(420 கோடி) ஒரே வாரிசு
மாமியின் கொடுமை மற்றும்
எனது சிததாப்பாக்களின் சதிகள்
எண்பது வயது மாமாவிற்கு
நான்காம் தாரமாக வற்புறுத்தல்
பிரபஞ்சத்தில் பலகோடி பேர்களில்
நிங்கள் ஒருவர்தான் உத்தமர்
இங்கு வாழ பிடிக்க வில்லை
என்னைத் திருமணம் செய்தால்
நம் இருவர்க்குதான் எல்லா பணமும்
உங்கள் இந்திய முறைப்படி நான் இருப்பேன்
காப்பாற்றுங்கள் ப்ளீஸ்
கவலை படாதே ஸ்டாலினா
தைரியமாக இரு மனதை தளர விடாதே
ரேஷன் கார்டில் உன் பெயர் பதித்து
என் குடும்பத்தில் ஒருத்தியாக
இதோ வந்து விடுகிறேன்
TVS 50 டிக்கு "பஞ்சர்" போட்டு விட்டு................
கே .ரவிஷங்கர்
ஸ்பாம் மெயிலும் - ஒரு பதில் கடிதமும்
நாங்கள் ...HDFC ..வங்கியிலிருந்து
வாடிக்கையாளர் வலை கணக்கு
பாதுகாப்பு மைய அதிகாரிகள்
உங்கள் இணைய வங்கி கணக்கை
யாரோ மூன்றாம் பேர்
உங்களுக்கு தெரியாமல்
உங்கள் கணக்கில் நுழைந்து
வேவு பார்ப்பதை கண்டு பிடித்துவிட்டோம்
உங்கள் பாதுகாப்பை முன்னிட்டு
தங்கள் இணைய கணக்கு சம்பந்தப்பட்ட
எல்லா விவரங்களை உடனே கொடுக்கவும்
உங்கள வலை விலாசத்தை பலபடுத்துவோம்
எல்லாம் ரகசியமாக் வைககப்படும்
உங்கள் மெயிலுக்கு நன்றி!
நான் "கோட்டகயச்சி பாளையம்
கிராம விவசாய அபிவிரித்தி
கூட்டுறவு சங்க வங்கி "யில்
தான் கணக்கு வைத்துள்ளேன்
உங்கள் வங்கியில் அல்ல.
என் இருப்பு Rs.64. 65 உறுதி செய்யப்பட்டது.
மேலும் என்னிடம் இணைய கணக்கு கிடையாது
என்னை "உஷார்" செய்ததர்க்கு நன்றிகே .ரவிஷங்கர்
............................XXXXXXXX.......................
மேல் இரண்டு கவிதைகளும் மறு பிரசுரம் (அக்டோபரில் வெளியிட்டது.)