Monday, May 16, 2011

ஆத்தா நீ பாஸ்ஸாயிட்ட! ஆனா ஃபெயிலாயிடாத!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி....அவ(ள்)ன் நாலாறு மாதமாய்
வேண்டி... கொண்டு வந்தானடி ஒரு தோண்டி.... மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடி போட்டு உடைத்தாண்டி...என்று இரண்டாவது முறை முதலமைச்சராகும்போது  செல்வி ஜெயலலிதா & சசிகலா போட்டுடைத்தார்கள். எல்லாம் சிதறியது.

அடுத்து ஆட வந்த  (2006) அய்யா மட்டுமில்லாமல் குடும்பமே கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தது.ஏன் கூத்தாடினோம் என்று  ரூம் போட்டு சிந்திப்பதற்கு  ஓய்வு வேண்டும்(2011) என்று கருணாநிதி  சொல்லிவிட்டு போய்விட்டார்.

            (இலவசமா  எவ்வளவு கொடுத்தேன்... ஒண்ணும் பிரியல பிரதர்ஸ் &சிஸ்டர்ஸ்)


புது ஐஓசி டாங்க் சட்டசபை  பேய் வீடு ஆகிவிடும். 500 கோடி போச்சு.மேடம் கூச்சப்படாம போய் குடி இருங்க.உங்க மரியாதை கூடும்.ஆனா மாட்டீங்க.ஏன்னா அது ஆய்.உங்கள பத்தி எல்லோருக்கும் தெரியும் மேடம்.மகத்தில் பிறந்து ஜெகத்தை ஆள வந்தவங்க. ஐஓசி டாங்கையும் ஆளுங்க.


ஜெயலலிதா மீண்டும் கூத்தாடாமல் தோண்டியை பாதுகாப்பது
நலம்.காரணம் கருணாநிதிக்கு எதிரான ஓட்டுக்கள்தான் முக்கால்வாசி.முதல் ஒரு வருடம் ”அய்யோ கொல்றாங்களே” கைதுகள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே “ Mummy returns .....I am there shortly  Mr.Azhagiri" என்று சொல்லிவிட்டார்.


கைது வாய்தா என்று வழக்கமான காட்சிகள் அடுத்த ஆறு வருடங்களுக்கு திரையில் ஓடி சிரிப்பூட்டும்.திமுகவும் அதிமுகவும் விளையாடும் மங்காத்தா  விளையாட்டு.

உங்களுக்கு அடுத்து யார் என்பதையும் இப்போதே சிந்திப்பது  உத்தமம்.உங்களுக்கும் வயது ஆகிக்கொண்டேபோகிறது.

உங்களுக்கும் கேப்டனுக்கும் பிடிக்காத ஒரே சொல் “லஞ்சம்”. கேட்டவுடன் எங்ளுக்கு  பிடிக்கும் வார்த்தை “ சிரிப்பு மூட்டாதீங்கடா டேய்” 
 
உங்கள் அமைச்சர்களின்  இன்கம்டாக்ஸ் ரிட்டன்களை போட்டோகாபி எடுத்து தனியாக ஒரு பைலில் போட்டுவைத்துக்கொண்டால்  appraisalலில் மார்க் போடுவதற்கு  வசதியாக இருக்கும்.

முக்கியமாக புதிதாக பதவி ஏற்கும் தேமுதிகவின் MLAக்களின் இன்கம்டாக்ஸ் ரிட்டன்களை போட்டோகாபி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் மேடம்.எல்லாம் புதுசு. சும்மா கை துறு துறுவென்று இருக்கும். தேர்தலில்  நிறைய மூதலீடு செய்து இருக்கிறார்கள்.

யார் வந்தால் என்ன ?சென்னையில்  ஆட்டோ மீட்டர்(சூடு இல்லாத) போட்டு ஓட்டுவதற்கு பத்தாயிரம் வருடங்கள் காத்திருக்க வேண்டும்.



11 comments:

  1. உங்களுக்கும் கேப்டனுக்கும் பிடிக்காத ஒரே சொல் “லஞ்சம்”. கேட்டவுடன் எங்ளுக்கு பிடிக்கும் வார்த்தை “ சிரிப்பு மூட்டாதீங்கடா டேய்”


    உண்மையெல்லாம் தெரிஞ்சா
    இப்படித்தானா நண்பா
    நீங்க போட்டு உடைப்பீங்க!!!!!

    ReplyDelete
  2. யார் வந்தால் என்ன ?
    யார் வந்தால் என்ன ?

    ReplyDelete
  3. Ravi,

    Azhagana thalaipu..... indha blog um.. ungal vaarthaiyum.. idhu dhan en karuthum.......

    sirika vechu sindhika vechu irukeenga.... really great.........

    With Love,
    Usha Sankar.

    ReplyDelete
  4. ஜெயலலிதா மீண்டும் கூத்தாடாமல் தோண்டியை பாதுகாப்பது
    நலம்.காரணம் கருணாநிதிக்கு எதிரான ஓட்டுக்கள்தான் முக்கால்வாசி

    ...rightly said!

    ReplyDelete
  5. நன்றி குணசீலன்,சித்ரா, தமிழ்ப்பறவை

    ReplyDelete
  6. ///உங்கள் அமைச்சர்களின் இன்கம்டாக்ஸ் ரிட்டன்களை போட்டோகாபி எடுத்து தனியாக ஒரு பைலில் போட்டுவைத்துக்கொண்டால் appraisalலில் மார்க் போடுவதற்கு வசதியாக இருக்கும்.///

    சிரிப்பாக இருந்தாலும் உடையவர்களை சிந்திக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete
  7. நல்ல விசயம் தான் இருந்தாலும் சில விசயங்களை ஜெ வால் மாற்றிக் கொள்ள முடியாது... ஆனாலும் நல்லது செய்வார் என நம்புகிறேன்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. //ஜெ வால்// அதான் நீங்களே சொல்லீட்டீங்களே சரவணன்... எப்படி குணம் மாறும்...? :)))

    ReplyDelete
  9. ////உங்களுக்கு அடுத்து யார் என்பதையும் இப்போதே சிந்திப்பது உத்தமம்.உங்களுக்கும் வயது ஆகிக்கொண்டேபோகிறது./////

    யார் சொன்னது அப்படின்னு நான் கேட்கவில்லை

    ReplyDelete
  10. நானும் ஆட்டோவுக்கு ஒரு வழி பண்ண மாட்டாரா நம் முதல்வர் என்று காத்திருக்கிறேன்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!