குதிரைகள் என்றதும் சமீபத்தில் படித்த கண்மணி குணசேகரன் சிறுகதைகளில் வரும் குதிரைகள் ஞாபகம் வரும்.தொகுப்பின் பெயர் “பூரணி பொற்கலை”. இதில் வரும் குதிரைகள் கொஞ்சம் சீரியஸ்ஸானவை. கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு பதற்றமடைபவை.கோபம் கொள்பவை.ஆனால் அழகர்சாமியின் குதிரைகளுக்கு சம்பந்தமில்லாதவை.
அழகர்சாமியின் குதிரை அற்புதமான சிறுகதை அல்லது குறுநாவல்( கதை படிக்கவில்லை).அதன் ஜீவனைக் கலைக்காமல் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
குதிரையை மைய்யமாக வைத்து ஒரு வித்தியாசமான கிராமத்துக் கதை. இதில் கிடா மீசை,பரட்டைத் தலை(????),பட்டாபட்டி டவுசர் பாண்டி,வீச்சருவாள் கிடையாது. இரண்டு செக்கச்செவேல் கதாநாயகிகள்.செக்கச்செவேலுக்கு லாஜிக்கும் கொடுக்கிறார்கள்.சினிமாவுக்குத் தேவை.புரிகிறது ஓகே.
இதில் குதிரைக்கு இரட்டை வேடம்.ஒன்று மரக்குதிரை மற்றொன்று உயிருள்ள குதிரை.கிராமத்து மக்கள் நம்பும் இதுதான் அது அதுதான் இது அத்வைதம்.
1982ல் நடக்கும் கதை(போலீஸ் ஸ்டேஷன் காலண்டர் மற்றும் அலைகள் ஓய்வதில்லை).காணாமல் போன கோவில் மர குதிரைக்குப் பதிலாக கிடைக்கும் நிஜ குதிரையை தெய்வம் போல் கொண்டாடுகிறார்கள் மல்லையாபுரம் கிராமத்து மக்கள்.வழக்கமான அபத்தங்களும் ஆச்சரியங்களும் வெள்ளையும் சொள்ளைமானவர்கள் இவர்கள்.
நிஜ குதிரையின் ஓனர் அப்புக்குட்டியின் (குதிரையின் பெயர்) ஆள் அல்லது அழகர்சாமியின் குதிரை என்று ஒருவருக்கொருவர் உயிர்.அந்த ஓனர்(அழகர்சாமி) இந்தக் கிராமத்திற்கு வந்து உரிமை கொண்டாட அதனால் ஏற்படும் பிரச்சனைதான் மீதி கதை.
கொஞ்சமே வந்தாலும் மனதில் நிற்பவர் அப்புக்குட்டி.மிகையில்லாத நடிப்பு.அட்டகாசமான குரல்.குதிரை உயரமே இருக்கிறார். அசலான கிராமத்து மக்கள்.இடையில் ஒரு மெலிதான காதல் கதை.
படத்தின் கழுதை(திருஷ்டி) போலீஸ் ஒற்றனாக வந்து செயற்கை காமெடி பண்ணுவதுதான்.படு மொக்கை/அசட்டுத்தனம்.அடுத்து மலையாள சாமியார்.பக்கத்தில் சிஷ்யனை வைத்துக்கொண்டு தாழ் குரலில் பேசி ஊரை ஏமாற்றுவது எவ்வளவு படத்தில் வந்துவிட்டது. புளித்துப்போனது. மாத்தியோசிக்கலாமே.
“வெள்ளக்காரன் பியூட்டிஃப்ல் ..பியூட்டிஃப்ல்லு சொன்னத கேட்டேன்.அவந்தான் திருடி இருக்கனும்” போன்ற இயல்பான காமெடிகளை இன்னும் கூட தெளித்திருக்கலாம்.
அடுத்த திருஷ்டி கிளைமாக்சில் குதிரை “திடீர்” பஞ்சகல்யாணியாகி எல்லோரையும் துரத்துவது. அது என்ன முரட்டுக்காளையா அடக்க முடியாமல் போவதற்கு? நம்ப முடியவிலல்லை.
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஹோம்வொர்க் செய்திருந்தால் படத்தைக் காவியம் ஆக்கி இருக்கலாம்.
கிட்டத்தட்ட 20 வருடத்திற்குப் பிறகு இளையராஜாவிற்கு அச்சு அசலான கிராமத்துப் படம். டைட்டில் இசை பாலுமகேந்திரா படம் போல இருக்கிறது.அந்நியப்படுகிறோம்.
வித்தியாசமாக கிராமத்து இசையை முயற்ச்சித்திருக்கிறார் என்று கட்டாயம் தெரிகிறது.சில இடங்களில் weird ஆக இருக்கிறது.சில இடங்களில் கிராமத்து உணர்ச்சிகள் இல்லை.
அழகர்சாமி குதிரையுடன் அறிமுகம் ஆகும் பின்னணி அசத்தல்.
கதாநாயகன் அப்புக்குட்டி |
குதிரையை மைய்யமாக வைத்து ஒரு வித்தியாசமான கிராமத்துக் கதை. இதில் கிடா மீசை,பரட்டைத் தலை(????),பட்டாபட்டி டவுசர் பாண்டி,வீச்சருவாள் கிடையாது. இரண்டு செக்கச்செவேல் கதாநாயகிகள்.செக்கச்செவேலுக்கு லாஜிக்கும் கொடுக்கிறார்கள்.சினிமாவுக்குத் தேவை.புரிகிறது ஓகே.
இதில் குதிரைக்கு இரட்டை வேடம்.ஒன்று மரக்குதிரை மற்றொன்று உயிருள்ள குதிரை.கிராமத்து மக்கள் நம்பும் இதுதான் அது அதுதான் இது அத்வைதம்.
1982ல் நடக்கும் கதை(போலீஸ் ஸ்டேஷன் காலண்டர் மற்றும் அலைகள் ஓய்வதில்லை).காணாமல் போன கோவில் மர குதிரைக்குப் பதிலாக கிடைக்கும் நிஜ குதிரையை தெய்வம் போல் கொண்டாடுகிறார்கள் மல்லையாபுரம் கிராமத்து மக்கள்.வழக்கமான அபத்தங்களும் ஆச்சரியங்களும் வெள்ளையும் சொள்ளைமானவர்கள் இவர்கள்.
நிஜ குதிரையின் ஓனர் அப்புக்குட்டியின் (குதிரையின் பெயர்) ஆள் அல்லது அழகர்சாமியின் குதிரை என்று ஒருவருக்கொருவர் உயிர்.அந்த ஓனர்(அழகர்சாமி) இந்தக் கிராமத்திற்கு வந்து உரிமை கொண்டாட அதனால் ஏற்படும் பிரச்சனைதான் மீதி கதை.
கொஞ்சமே வந்தாலும் மனதில் நிற்பவர் அப்புக்குட்டி.மிகையில்லாத நடிப்பு.அட்டகாசமான குரல்.குதிரை உயரமே இருக்கிறார். அசலான கிராமத்து மக்கள்.இடையில் ஒரு மெலிதான காதல் கதை.
(ஹீரோயின் அத்வைதா) |
“வெள்ளக்காரன் பியூட்டிஃப்ல் ..பியூட்டிஃப்ல்லு சொன்னத கேட்டேன்.அவந்தான் திருடி இருக்கனும்” போன்ற இயல்பான காமெடிகளை இன்னும் கூட தெளித்திருக்கலாம்.
அடுத்த திருஷ்டி கிளைமாக்சில் குதிரை “திடீர்” பஞ்சகல்யாணியாகி எல்லோரையும் துரத்துவது. அது என்ன முரட்டுக்காளையா அடக்க முடியாமல் போவதற்கு? நம்ப முடியவிலல்லை.
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஹோம்வொர்க் செய்திருந்தால் படத்தைக் காவியம் ஆக்கி இருக்கலாம்.
கிட்டத்தட்ட 20 வருடத்திற்குப் பிறகு இளையராஜாவிற்கு அச்சு அசலான கிராமத்துப் படம். டைட்டில் இசை பாலுமகேந்திரா படம் போல இருக்கிறது.அந்நியப்படுகிறோம்.
வித்தியாசமாக கிராமத்து இசையை முயற்ச்சித்திருக்கிறார் என்று கட்டாயம் தெரிகிறது.சில இடங்களில் weird ஆக இருக்கிறது.சில இடங்களில் கிராமத்து உணர்ச்சிகள் இல்லை.
அழகர்சாமி குதிரையுடன் அறிமுகம் ஆகும் பின்னணி அசத்தல்.
Yes, it's a good movie. I like it.
ReplyDeletedifferent one in this period.
ReplyDeleteநல்ல விமர்சனம்... வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லா ஆரம்பிச்ச விமர்சனம்...கடைசில ஏன் சார் திடீர்ன்னு முடிஞ்சிடுச்சு? பாதிலயே போஸ்ட் போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்...
ReplyDelete//வித்தியாசமாக கிராமத்து இசையை முயற்ச்சித்திருக்கிறார் என்று கட்டாயம் தெரிகிறது.சில இடங்களில் weird ஆக இருக்கிறது.சில இடங்களில் கிராமத்து உணர்ச்சிகள் இல்லை.//
அதே...அதே...
//இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஹோம்வொர்க் செய்திருந்தால் படத்தைக் காவியம் ஆக்கி இருக்கலாம்//
சரியாகச் சொன்னீர்கள்...இயக்குனரின் முந்தைய இரு படங்களை ஒப்பிடுகையில் இது கொஞ்சம் திரைக்கதையில் தொய்வுள்ளதுதான்...:(
வித்தியாசமாக கிராமத்து இசையை முயற்ச்சித்திருக்கிறார் என்று கட்டாயம் தெரிகிறது.சில இடங்களில் weird ஆக இருக்கிறது.சில இடங்களில் கிராமத்து உணர்ச்சிகள் இல்லை.
ReplyDelete..... உள்ளதை உள்ளபடி சொல்லி, விமரசித்து இருக்கீங்க.
Asathalaana review...!!
ReplyDeleteAthavathu ippo ulla director ellam..raja sir kitta'runthu correct'a tune'a extract pannrathu illa...yetho pottu kudunga'nnu vangidraanga...atha mattum yaaravathu sariya senja...music semma hit thaaan..!!!
அனுபவிச்சு எழுதியிருக்கீங்க
ReplyDeleteநன்றி அனானி
ReplyDeleteநன்றி கட்ஸ்
நன்றி சித்ரா
நன்றி தமிழ்ப்பறவை
ReplyDeleteநன்றி மதுரை சரவணன்
நன்றி கிரண்
அண்ணா..பூவ கேளு சாங்கை எப்படி picturazation பண்ணி இருக்காங்க??
ReplyDeleteஷெனாய் பதிவு பார்த்தேன் அண்ணா..முழுக்க இன்னும் கேட்கலை..வலைச்சரம் க்காக சில பதிவுகள் பார்க்கும்போது நானும் பண்டிட் பாலேஷ் பத்தி சில குறிப்புகள் படிச்சு..ராஜாவும் அவர் ஷெனாய் யும் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும் ஆசை பட்டேன்..அப்போ கூட நினைச்சேன்..எப்படியும் ரவிசங்கர் இது பத்தி சீக்கிரம் பதிவு போடுவாங்கன்னு...வழக்கம்போலே...ம்ம்..என்ன சொல்ல...உங்கள் ரசனைக்கு முன்னாடி நான் ஒண்ணுமில்லை அண்ணா...நிறைய தெரிஞ்சுக்க சந்தர்ப்பம் கொடுப்பதற்கு நன்றி...
//அண்ணா..பூவ கேளு சாங்கை எப்படி picturazation பண்ணி இருக்காங்க??//
ReplyDeleteநல்லா இருக்கு ஆனந்தி.
நன்றி.
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்களின் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!
ReplyDeleteநன்றி ஹெட்மாஸ்டர்.
ReplyDelete